Saturday, January 31, 2009

அரசியலாகும் முத்துக்குமரனின் உடல்: ஆர்ப்பரிக்கும் மாணவர்கள் - தமிழ்வின்(www.tamilwin.com)

அரசியலாகும் முத்துக்குமரனின் உடல்: ஆர்ப்பரிக்கும் மாணவர்கள்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2009, 09:37.33 AM GMT +05:30 ]

தமிழீழ மக்களுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணம் செய்த அன்புச் சகோதரன் முத்துக்குமரன் அவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மாணவர்களை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் அபிலாசைகளிற்காக பயமுறுத்துவதாக தெரியவருகிறது.

தனது உடலை வைத்து போராட்டத்தை கூர்மைப்படுத்தும் படி மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விட்டுச் சென்ற தன் தோழமையின் பணி தொடர துடிக்கும் மாணவர்களை அந்த பணியை தொடராது தடுப்பதற்காக இந்த சதி திட்டம் நடாத்தப்படுகிறது.

உலகிலேயே மாணவ சக்தியால் சாதிக்க முடியாதது ஒன்றுமே கிடையாது. அந்த மாணவ சக்தி கிளர்ச்சி கொண்டால் தமிழீழத்தில் பாதி உரிமை கிடைத்துவிடும். இவ்வளவு காலமாக தமிழீழம் என்றால் என்ன? ஏன் அந்த மக்கள் போராடுகிறார்கள்? என்று தெரியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அது எப்படி என்றால் தமிழக மக்களுக்கு தமிழீழத்தின் உண்மை செய்திகள் செல்வதில்லை என்பது தான் உண்மை. அரசியல்வாதிகள் தாம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக மக்களையும் மாணவர்களையும் பயன்படுத்துகிறார்களே தவிர மக்களுக்காக என்பது அரைக்கரை வாசியாகவே இருக்கிறது.

அந்தவகையிலே இன்று நம் முத்துக்குமாரின் வீரமரணம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று தமிழீழப் பிரச்சனையை உணர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த வீரமரணத்தை அறிந்து மக்கள் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். தமிழீழ தற்கொலைப்படையான கரும்புலிப்படைக்கு நிகரான ஒரு மரணத்தை இன்று தமிழகத்தில் நிகழ்த்தியிருக்கிறார் முத்துக்குமரன்.

அரசியல் வாதிகளே! மாணவ சக்தியை பயன்படுத்துங்கள். இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிட்டீர்கள் என்றால் நீங்கள் தமிழினத்திற்கு செய்யும் துரோகமாக மாணவர்களாலும் அவர்களால் உருவாகும் எதிர்கால சமூகத்தாலும் சித்தரிக்கப்படுவீர்கள்.

கட்சி, அரசியல் என்ற பாகுபாட்டை தூக்கியெறிந்து நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுபடுங்கள். முத்துக்குமாரின் அஞ்சலி நடக்கும் நிகழ்விடத்தில் மாணவர்கள் கூறுகிறார்கள் தன் உடலை வைத்து போராட்டத்தை கூர்மைப்படுத்த எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்குள்ளதால் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் தலையிடாமல் மாணவர்களாகிய எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு குறுக்கிட்ட அரசியல்வாதிகள் "நீங்களெல்லாம் என்ன செய்து கிழித்தீர்கள் ஈழப்பிரச்சனை பற்றி பேசுவதற்கு" என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் செய்வதறியாது திகைத்து போய் இருக்கிறார்கள்.

என்ன தோன்றுகின்றது என்றால் அரசியலால் சாதிக்க கூடியவற்றை அரசியலால் சாதியுங்கள். மாணவர்களால் சாதிக்க கூடியவற்றை மாணவர்களால் சாதியுங்கள். எல்லோருடைய நோக்கமும் தமிழீழம் கிடைக்க வேண்டும்.

தமிழீழ மக்கள் நிம்மதியுடன் வாழவேண்டும் என்றிருந்தால் போட்டி போடாதீர்கள். நெல்லை எந்த இயந்திரத்தில் குத்தினோம் என்கிறது நமக்கு முக்கியம் கிடையாது நமக்கு தேவை பயன் தரக்கூடிய அரிசி.

ஆகவே, தமிழர்களாகிய நாம் நமக்குள்ளேயே பிரிவினையை வளர்க்காமல் அன்பு சகோதரன் முத்துக்குமரனின் கனவு நனவாக பாடுபடுவோம்.

நன்றி : தமிழ்வின்

Wednesday, January 28, 2009

இலங்கை ராணுவத்துக்கு உதவி: சோனியாவே பின்னணி?

இலங்கை ராணுவத்துக்கு உதவி: சோனியாவே பின்னணி?

தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை மத்திய அரசு புறக்கணித்து, சிங்கள ராணுவத்தின் தமிழின அழித்தொழிப்புக்கு ராணுவ உதவிகளையும் செய்து வருகிறது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பின்னால் இருப்பது காங்கிர தலைவர் சோனியா காந்திதான் என்ற உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தின் ஒருமித்த கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்த இந்திய அரசு, பிரபாகரன் பிடிபடுவார் என்று இலங்கை அரசு அறிவித்து வருவதைத் தொடர்ந்து, பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவதற்காக இப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா உத்தரவுப்படி இலங்கை செல்வதாக செய்திகள் கூறுகின்றன.

முல்லைத் தீவுப் பகுதியில் கடந்த சில நாட்களில் 300க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்துள்ளது. இலங்கையிலுள்ள அய்.நா. சபையின் ஒருங்கிணைப்பு அதிகாரி நீல்புனே, இதைத் தெரிவித்த நிலையிலும், இந்தியா, இதைக் கண்டிக்கவில்லை.


மேலும் காண

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாநிலைப்போராட்டம் முடிவு

ஈழத்தமிழர் படுகொலையை நிறுத்தக்கோரி செங்கல்பட்டில் 14 சட்டக்கல்லூரி மாணவர்கள் (22.01.2009) முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நான்காம் நாளாகிய 25.01.2009 அன்று கெம்புக்குமார் மற்றும் ஆறுமுக நயினார் ஆகிய இருவரும் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கும் போராட்டத்தினை தொடர்ந்தனர்.

ஏழாம் நாளாகிய இன்று(28.01.2009) அதிகாலை 5 மணிக்கு காவல்துறை மிரட்டி கைதுசெய்கிறோம் என்று சொல்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறவைத்தனர்.ஆனால் அந்த மாணவர்கள் சிகிச்சை பெறும் மருந்து ஊசிகளை பிடிங்கி எறிந்தனர். அங்கேயும் உண்ணாநிலையை தொடர்ந்தனர்.

இத்தகவலறிந்த செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் திரண்டு வந்து அம்மாணவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மருத்துவமனைக்கு வெளியில் ஒன்று கூடி ஈழத்தமிழருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.

அதன் பின்னர் தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவராக வந்து அம்மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கல்பாக்கம் பாவலரேறு தமிழ்வழி தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகள் வந்து மாணவர்களுக்கு வாழ்த்துதெரிவித்து போரைநிறுத்தக்கோரியும் தலைவர் பிரபாகரன் வாழ்க என்றும் முழக்கமிட்டனர்.

பின்னர் மாலை 5.30 மணியளவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து போராடுவதாக உறுதியளித்ததன் பேரில் உண்ணாநிலைப் போராட்டத்தினை மாணவர்கள் கைவிட்டனர். பின்னர் உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தினை முடித்துவைத்தார்.



போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விவரம்:
1) திருமுருகன்
2) இராச்குமார்,
3) மணிவேல்
4) விசயகுமார்
5) இராசா
6) பிரவீன்
7) முனீசுகுமார்
8) ஆறுமுகநயினார்
9) சுரேசு
10) கெம்புக்குமார்
11) பிரபு
12) மூர்த்தி
13) இராசதுரியன்
14) முஜீபீர் ரகுமான்
இம்மாணவர்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் கடைசி வரை தகவல்தொழில்நுட்பத்துறை மாணவர்கள் செந்தில் , அருண்சோரி , சிறிராம் , பெரியார் திராவிடர்கழகத்தின் ஆ.பாரதிராசா , காஞ்சிபுரம் மக்கள் மன்ற மகளிர் மகேசு , இராஜேசுவரி , தமிழ்மகிழ்நன் (த.ஒ.வி.இ) , செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள்.



மேலும் படங்கள் காண : http://picasaweb.google.com/barat82

நிழற்படங்கள் : ஆ.பாரதிராசா

Friday, January 23, 2009

வன்னிமக்களின் அவலம்



நன்றி : www.tubesea.com

விசுவமடு வில் தமிழனின் நிலை - 21.01.2009

விசுவமடு 21.01.2009

Thursday, January 22, 2009

காங்கிரஸ் கூறுவதிலும் 'நியாயம்' இருக்கிறது! - பெரியார்முழக்கம்(22.01.2009)

ஏ.கே. அந்தோணிக்கு கருப்புக்கொடி: 50 கழகத்தினர் கைது
( பெரியார் முழக்க இதழை PDF முறையிலும் மின்னஞ்சலிலும் பெற இதில் இணையவும் பெரியார்முழக்கம் )
கோவை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற கழகத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். ஈழத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நிகழ்த்தி வரும் இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகம் வரும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப் படும் என்று பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஜன.8 ஆம் தேதி சென்னை வந்த பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 1000க்கும் அதிகமான கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி வந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு கழகம் கருப்புக்கொடி காட்டியது.
இதற்கிடையில் ஜன.18 ஆம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கோவைக்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார். கோவை வரும் செய்தி அறிந்த கழகத்தினர், உடனே கருப்புக்கொடி போராட்டத்துக்கு தயாரானார்கள். அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிகழ்ச்சி முடித்து விமானம் மூலம் திருவனந்தபுரம் போக விமான நிலையம் போகும் வழியில் பகல் 12 மணியளவில் பீளமேடு ஹோப்° கல்லூரி அருகே கருப்புக் கொடி களுடன் திரண்டனர். ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டனர்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் கோபால் (கோவை மாநகர செயலாளர்), திருப்பூர் துரைசாமி (கோவை-வடக்கு மாவட்டக் கழகத் தலைவர்), வெள்ளியங்கிரி (பொள்ளாச்சி நகர கழக செயலாளர்), பன்னீர்செல்வம் (தமிழ்நாடு மாணவர் கழகம்), திருப்பூர் முகில்ராசு, யாழ். நடராசன் (உடுமலை நகர கழகத் தலைவர்) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் கருப்புக்கொடியுடன் திரண் டனர். தோழர்கள் கருப்புக்கொடியுடன் திரண்ட செய்தி அறிந்து, அமைச்சர் ஏ.கே.அந்தோணி வேறு பாதையில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்தக் கோரியும், மத்திய அரசின் துரோகத்தையும் கண்டித்து தோழர்கள் முழக்கமிட்டனர். காவல்துறை அனைவரையும் கைது செய்தது. மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் பிணையில் விடுதலை
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோர் 31 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு உயர்நீதிமன்றம் 19.1.2009 அன்று பிணை வழங்கி உத்தரவிட்டது. பிணை மனுவை கழக வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோ ஆகியோர் தாக்கல் செய்தனர். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது ஒரு குற்றமல்ல என்று வழக்கறிஞர் துரைசாமி வாதிட்டார்.

உயர்நீதிமன்ற நீதிபதி டி.சுதந்திரம் அவர்கள் முன் மனு விசாரணைக்கு வந்தது. ரூ.10 ஆயிரத்துக்கு சொந்த பிணைத் தொகையும், அதே தொகைக்கு இரு நபர் பிணை உறுதியும் வழங்கி, பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். காவல்துறை அழைக்கும் போது விசாரணைக்கு வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுகள் தேச விரோதமானவை என்று குற்றம்சாட்டப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் இரு முறையும், மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு முறையும் பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப் பட்டது. செவ்வாய் அல்லது புதன் கிழமை சிறையிலிருந்து விடுதலையாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கூறுவதிலும் 'நியாயம்' இருக்கிறது!

காங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அண்மைக்காலத்தில் தோன்றிய விடுதலை சிறுத்தைகளால் வீழ்த்த முடியாது என்று, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சன் பேசியுள்ளார்.
உண்மை தான். காங்கிரசை வெளியி லிருந்து வீழ்த்துவதற்கு அக்கட்சி எவரையும் அனுமதிக்காது. அந்த உரிமையை காங்கிரசாரே தங்களின் 'ஏகபோகமாக' வைத்துக் கொண்டுள்ள னர். தமிழ்நாட்டில் 1967 இல் கடையை கட்டிக் கொண்ட காங்கிர° கட்சி, இன்னும் கோட்டைக் கதவைத் தட்டிக் கொண்டுதான் நிற்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. என்று மாநில கட்சிகளின் தோளின் மீது சவாரி செய்து, அவர்கள் கருணையோடு வழங்கும் இடங்களில் தான் 125 ஆண்டு காங்கிர° போட்டி யிட்டு வருகிறது.
சத்தியமூர்த்தி பவன் வரலாற்றி லேயே முதல்முறையாக வேறு ஒரு அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுகூட அண்மையில்தான் நடந்திருக்கிறது. அந்த உரிமையையும் காங்கிரசாரே தங்கள் கைகளை விட்டுப் போய்விடா மல் தேசபக்தியோடு பாதுகாத்து வைத் திருந்தனர். சத்தியமூர்த்திபவனிலே நடந்த கட்சிக் கூட்டங்களிலே அரிவாள் வெட்டு விழுவதும், கட்சி மேலிடப் பார்வையாளர்களை உள்ளாடையுடன் உதை கொடுத்து ஓட வைப்பதும், தமிழக காங்கிரசாரின் தேசபக்தி திருப்பணிகளாகவே நிகழ்ந்து வந்துள்ளன.
இப்படி எல்லாம் 'உட்கட்சி ஜன நாயகத்தை' ஆயுதங்களுடன் கட்டிக் காத்து காங்கிரசை மக்களிடமிருந்து தனிமைப் படுத்தி வரும் காங்கிரசார், பிற கட்சியின் மூலம் அழிவதற்கு அனுமதிப் பார்களா? ஒரு போதும் மாட்டார்கள். அண்மையில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல்களில்கூட, சில மாநிலங் களில் காங்கிர° கட்சி தோற்றதற்குக் காரணம் கட்சிக்குள் நிகழ்ந்த உட்பகை தான் என்று அவர்கள் கட்சியின் தலைவர் சோனியாவே கூறியிருக்கிறார்.
எனவே, தோழர் திருமாவளவன் - காங்கிரசை காணாமல் ஒழித்திடும். காங்கிரசாரின் முயற்சிகளைத் தட்டிப் பறித்துவிடக் கூடாது என்பதே நமது கோரிக்கை. பெரியவர் சுதர்சனத்துக்கு எவ்வளவு கோபம் வருகிறது, பாருங்கள்.
கைதைக் கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் ஆகியோரை விடுவிக்கக் கோரி திருச்சியில் வழக்குரைஞர்கள் ஜன.9, வெள்ளிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர் த. கங்கைசெல்வன் தலைமை வகித்தார். பேரவையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மதி, சோழர், இளமுருகு, பானுமதி, கனகராஜ், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி, பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி அளிப்பதை உடன் நிறுத்த வேண்டும். தமிழக மக்களை ஏமாற்றும் மத்திய அரசின் போக்கைக் கண்டிக்கிறோம்.
தீக்குளிக்க முயன்ற 3 கழகத்தினர் கைது
ஈழத்தில் தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்கு துணை போகும் இந்திய பார்ப்பன அரசின் துரோ கத்தைக் கண்டித்து, தீக்குளிக்க முயன்ற 3 கழகத் தோழர்களை போலீசார் சுற்றி வளைத்து, தடுத்து கைது செய்தனர். கடந்த 16 ஆம் தேதி பகல் 11 மணியளவில் நடந்த இந்த சம்பவம், கோவையில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. திடீரென்று, கோவை ஆட்சியர் அலு வலகம் முன் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த மூன்று கழகத் தோழர்கள் கையில் பெட்ரோலுடன் வந்து உடல் முழுதும் கொட்டிக் கொண்டு, இந்திய பார்ப்பன அரசின் துரோகத்தை எதிர்த்து முழக்கமிட்டு தீக்குளிக்க முயன்றனர்.
300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பாய்ந்து சென்று தோழர்களை மடக் கிப் பிடித்து கைது செய்தனர். கழகத் தோழர்கள் ஈரோடு பெரியார் ஜெகன், திருப்பூர் கழகத் தோழர்கள் கோபிநாத், சம்பூகன் என்கிற சண்முகம் ஆகிய மூவரும் கைது செய்யப் பட்டனர்.
தோழர் திருமாவை ஆதரித்து கழகத்தினர் குவித்த தந்தி
மறைமலைநகரில் ஈழத் தமிழர் களுக்காக பட்டினிப் போராட்டத்தை நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து ஆடை போர்த்தி, ஆதரவினை வெளிப்படுத்தினர். புதுவை கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமை யில் 100க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், தோழர் திருமாவளவனை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு முழுதுமிருந்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தோழர்கள் நூற்றுக் கணக்கான தந்திகளை தோழர் திருமா வளவனுக்கு அனுப்பினர்.
'போர் நிறுத்த' அணி
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக கூட்டணி அரசியலை யும் கடந்து உண்மையான பங்களிப்போடு, தொடர்ந்து போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தி வருகிறார். ஈழத் தமிழர் போராட்டம் கடும் நெருக்கடிக் குள்ளாகியுள்ள சூழலில், பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி உருவாக்கி வைத்த தேக்கத்தை தகர்ப்பதிலும் வெற்றி பெற் றுள்ளார். இதற்காக தமிழின உணர்வாளர்கள் தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் என்றென்றும் நன்றி கூறி வாழ்த்துவார்கள்.
அய்ந்து நாள் பட்டினிப் போராட்டத்தை முடித்த நிலையில், ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தமிழக கட்சிகள், இயக்கங்கள் ஒரே அணியாகத் திரள வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்மொழிந் துள்ளார். இது பாராட்டி வரவேற்று செயல்படுத்த வேண்டிய ஆக்கப்பூர்வமான யோசனையாகும். இப்போது ஈழத் தமிழர்களுக்கு எதிரான துரோகத்தில் வெளிப் படையாக தங்களை அடையாளப்படுத்திடும் கட்சிகள் காங்கிரசும், ஜெயலலிதாவும் தான்! (ஜெயலலிதா கட்சி யிலுள்ள பல உணர்வுள்ள தமிழர்களே, ஜெயலலிதாவின் துரோகக் கருத்துகளை ஏற்கவில்லை என்பதே உண்மை)
ஜெயலலிதா தலைமையில் கூட்டணி சேர்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை, ஜெயலலிதாவின் துரோகக் கருத்துகளை இந்தப் பிரச்சினையில் ஏற்காமல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தங்களது உறுதியான கருத்துகளை வெளிப்படுத்தியும், போராடியும் வருகிறார்கள். வழக்கம் போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது பார்ப்பன அடையாளத்தையே இப்பிரச்சினையில் வெளிப்படுத்தி வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களைக் கொன்று குவிப்பதும், ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதும் ஒன்றுதான் என்ற பார்வை அக்கட்சிக்கு இல்லை. தேசிய சுயநிர்ணய உரிமைக்காக மக்களோடு போராடும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்திடும் ஏகாதிபத்திய நாடுகளின் குரலையே இக்கட்சியும் எதிரொலிக்கிறது.
தி.மு.க.வைப் பொறுத்த வரை அதன் இரட்டை வேடம் வெளிப்படையாகவே அம்பலமாகி வருகிறது. தமிழின உணர்வு என்ற தளத்தில் கால் பதித்து நிற்கும் தி.மு.க., அந்த உணர்வுகளுக்கு எதிரான துரோகம் காங்கிரசிலிருந்து வெளிப்படும்போது, 'கூட்டணி ஆட்சி அதிகாரம்' என்பதற்கே முன்னுரிமை தந்து, மீண்டும் மீண்டும் பழைய வரலாற்றுப் 'பெருமை'களைப் பேசி, அதற்குள் தன்னை முடக்கிக் கொள்ளவே விரும்புகிறது.
இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி வெளிப்படையாக இழைக்கும் துரோகத்தைக் கண்டிப்பதற்கான வார்த்தைகளை முதலமைச்சர் கலைஞர் இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறார். தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்தும் என்ன பயன்? டெல்லிக்கு அடிமை ஆட்சியாகத் தானே இருக்க வேண்டியிருக்கிறது? இத்தனைக்கும் மத்தியில் நடப்பது கூட்டணி ஆட்சிதான். காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும், பார்ப்பன ஆட்சி அதிகாரமே நாட்டை வழி நடத்துகிறது! முடிவுகள் எடுப்பதும், செயல்படுத்துவதும் 'அவாள்'கள் தான்.
தமிழக முதல்வர் கலைஞர் தம்மிடம் உள்ள அதிகாரத்தை இந்திய தேசிய ஆட்சியின் துரோகத்துக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் எழுச்சிகளை அடக்கவே பயன்படுத்துகிறார். அவரிடம் உள்ள அதிகாரம் மத்திய அரசை பணிய வைக்க பயன்படவில்லை. உண்மையைச் சொன்னால் தி.மு.க. ஆட்சி - வரலாற்று துரோகத்தை சுமந்து நிற்கிறது. தி.மு.க.வின் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.
இந்த நிலையில் - 'வாழ்வா, சாவா' போராட்டத்தில் நிற்கும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் உரிமைக் குரல் தமிழகத்திலிருந்துதான் எழுந்தாக வேண்டும். இதற்கு ஆதரவான மக்கள் எழுச்சியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும். வெளிப்படையான துரோக சக்திகள் ஒருபுறம்; ஆட்சி அதிகாரத்துக்காக அடங்கிப் போய் நிற்கவே விரும்பும் சக்திகள் மறுபுறம்; இந்தத் தடைகளுக்கு இடையே ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யவும், அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக இயக்கங்களை நடத்திச் செல்லும் அணுகுமுறைகளை உருவாக்கிடவும் வேண்டிய நேரம் இது. பிரச்சினையை தடம்புரளச் செய்துவிடாமல் போர் நிறுத்தம் கோரும் கட்சிகள், இயக்கங்கள், ஓரணியாகி - மக்கள் இயக்கத்தை நடத்துவதன் மூலம் துரோக சக்திகளை மக்கள் மன்றத்தில் பலமிழக்கச் செய்ய வேண்டும்! தோழர் திருமாவளவன் முன்மொழிந்துள்ள கோரிக்கை செயலாக்கம் பெற வேண்டும்.
சங்கராச்சாரி மடத்துக்குள் தலித் சிற்பிகளின் சிலை

தலித் சிற்பிகள் வடித்தசிலைகளே சங்கராச்சாரி மடத்துக்குள்ளும் இருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திய பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த சிற்பி ராசனின் சமூகப் புரட்சியை ஏடுகள் பலவும் வெளியிட்டு வருகின்றன. 'குமுதம் ரிப்போர்ட்டர்' ஏடு வெளியிட்டுள்ள அவரது பேட்டி இது.
கோயில்களுக்குள் நுழைந்து சாமி கும்பிடக் கூட தலித்துகளுக்கு பல இடங் களில் தடையிருக்கும் இந்தக் காலகட்டத் தில் கருவறைகளுக்குள் கம்பீரமாக நிற்கும் தெய்வத் திருவுருவச் சிலைகளை இன்று தலித்துகள் தயாரிக்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் தகவல் அல்லவா? அப்படி சிலை வடிக்கும் வேலைகளில் தலித்துகளைத் தயார்படுத்தி சைலண்டாக ஒரு புரட்சியை நடத்தி வருகிறார் ராஜன் என்பவர்.
தஞ்சை மாவட்டம் சுவாமி மலையி லிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள திம்மக்குடியில் சிலை செய்யும் பட்டறை வைத்திருக்கிறார் அந்த அற்புத மனிதர் ராஜன். சிலை செய்யும் தொழில் ஆன்மிகம் கலந்தது என்றா லும், ராஜன் ஒரு பழுத்த பெரியார்வாதி என்பது ஆச்சரியம் கலந்த ஆனந்தம். சிலை செய்வதில் இருக்கும் ஐதீகங்களை உடைத்து, முற் போக்காக சிலை வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இவர்.
அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் ஆச்சரியம் விலகாமல் திம்மக்குடிக்கு விரைந்தோம். இதோ அவரே நம்மிடம் பேசுகிறார்:
"திருச்சி ஸ்ரீரங்கம்தான் என் சொந்த ஊர். பதின்மூன்று வயதிலேயே பெரியார் கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். யாராவது என்னிடம், 'நீ என்ன சாதி? மதம்?' என்று கேட்டால், 'மனுஷ சாதி. திராவிட மதம்' என்றுதான் சொல்வேன். ஆனால், என் குடும்பத்தவர்கள் ஆன்மிகத் தில் ஊறிப் போனவர்கள். அதனால் என்னை அவர்கள் கண்டிக்க, வீட்டில் தினம் தினம் சண்டை சச்சரவுதான்.
1978 இல், என் பத்தொன்பது வயதில், பி.யூ.சி. முடித்தேன். அப்போது சுவாமிலை யில் சிலை செய்யும் கலை செழிப்பாக இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கே போய் அந்தக் கலையைக் கற்றுக் கொள்ள ஆர்வமானேன். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த என் அப்பா, 'இதற்காகவா உன்னைப் படிக்க வைத்தேன்?' என தாம்தூமென்று குதித்தார். கோபமான நான், என் பி.யூ.சி. சான்றிதழைக் கிழித்தெறிந்து விட்டுக் கிளம்பத் தயாரானேன். 'நீ எங்களை மீறிப் போனால் மீண்டும் திரும்ப வராதே' என்றார் அப்பா. 'சரிப்பா' என்று செருப்பைக்கூட உதறித் தள்ளிவிட்டு இங்கே வந்து விட்டேன். இன்றைக்கு முப்பத்தொன்பது வருஷங்கள் ஆச்சு. இன்னும்கூட நான் வீட்டுக்குப் போக வில்லை" என்று கூறி நிறுத்திய ராஜன் தொடர்ந்தார்.
"78 இல் சுவாமிமலை வந்த நான் மூன்று வருட காலம் சிலை செய்யும் கலையைக் கற்றுக் கொண்டு 81 ஆம் வருடம் கும்பகோணத்தில் தங்கியிருந்து சிலை செய்ய ஆரம்பித்தேன். நான் செய்த சிலைகள் பிரபலமாகி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பித்தன. சிலைகளுக்கான தேவை அதிகமானதால் எனக்கு ஆட்கள் அதிகமாகத் தேவைப்பட்டார்கள். அப்போதுதான் சிலை வடிக்கும் தொழிலில் பெரியாரிசத்தைப் புகுத்தி சாதி ஒழிப்புச் செய்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.
அதனால் தலித்துகளைப் பயன்படுத்தி சிலை வடிக்கத் தீர்மானித்தேன். அதுவரை விவசாயக் கூலிகளாக வெட்டியான்களாக, பறை அடிப்பவர் களாக இருந்த தலித்துகளை அழைத்து சிலை செய்ய சொல்லித் தந்தேன். 'இந்தத் தொழில் நமக்கு ஒத்து வருமா?' என்றுஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அவர்கள், பிறகு ஆர்வத்துடன் கற்றுக் கொண் டார்கள். 'தலித்துகள் சிலை செய்வதா?' என்று ஆரம்பத்தில் பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, என் முயற்சியை மழுங்கடிக்கப் பார்த்தாலும் நான் மசிந்து கொடுக்கவில்லை.
இதுவரை முந்நூறு தலித்துகளுக்கு சிலை செய்ய கற்றுத் தந்திருக்கிறேன். அதில் முக்கால்வாசிப் பேர் இன்று தனிப் பட்டறை அமைத்து சிலை செய்து வருகிறார்கள். அவர்களை இந்தத் தொழிலைச் செய்ய விடாமல் தடுக்க முயன்ற சிலரது முயற்சி எடுபடாமலேயே போய்விட்டது. இன்று தலித் சிற்பிகள் தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். இதே சுவாமிமலையில் கண்ணன் என்பவரும், பட்டீ°வரத்தில் சுந்தர் என்பவரும் பெரிய அளவில் சிலை செய்யும் பட்டறை வைத்திருக் கிறார்கள். இவர்கள் இருவருமே தலித்துகள்.
கும்பகோணம் நீதிமன்றம் அருகிலுள்ள கோயிலில் உள்ள ஐயப்பன் சிலையை ஒரு தலித்து தான் செய்தார். பெருந்துறை சிவன் கோயில், சென்னை, கோவை, சேலம், மதுரையிலுள்ள கோயில் கள், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, மொரீஷியஸ் போன்ற நாடுகளிலுள்ள கோயில்களில் எல்லாம் என் பட்டறையில் பணிபுரிந்த தலித்துகள் செய்த சிலைகள் இருக்கின்றன. நாங்கள் சங்கராச்சாரி யாரின் ஸ்ரீ மடத்திற்கு நூற்றுக்கணக்கில் மகாமேரு செய்து தந்திருக்கிறோம். அந்தப் பணியில் பாதிக்குப் பாதி ஈடுபட்டவர்கள் தலித்துகள்தான்.

நடராஜரின் 108 தாண்டவத்தில், 103-வது தாண்டவமான அதோ தாண்டவத்தை' சிலையாகச் செய்பவர்கள் செத்து விடுவார்கள் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. அந்தத் தாண்டவத்தின் அமைப்பை ஒரு புத்தகத்தில் யதேச்சையாகப் பார்த்த நான், 83 ஆம் ஆண்டு நாலரை அடி உயரத்தில் மும்பை கோயில் ஒன்றுக்கு அதைச் செய்து கொடுத்தேன். ஆனால், இன்றுவரை நான் இறந்து போகவில்லை. அதே மாதிரி சில தலித்துகளும் அந்த தாண்டவச் சிலையைச் செய்திருக்கிறார்கள். அதில் ஒரு சிலை என் மியூசியத்திலும், இன்னொன்று என் பட்டறை யிலும் இருக்கிறது.
என் பட்டறை மற்றும் மியூசியத்தைப் பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த், நடிகர் முரளி, இசைஞானி இளையராஜா போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். இதில் இளையராஜா வந்தபோது நடராஜர் சிலையைப் பார்த்து அதிசயமாகி, 'இதை நான் தொட்டுப் பார்க்கலாமா?' என்றார். 'தொடுவதற்குத் தானே சிலை?' என்று நான் சொன்னதும் கண்கலங்கிப் போனார்.
தலித்துகளுக்கு நான் சிலை செய்யக் கற்றுத் தந்தததால் ஏதோ பூமியைப் புரட்டிப் போட்டு சாதனை செய்துவிட்டதாக நினைக்கவில்லை. மனிதர்களைப் பிடித்து ஆட்டி, அலைக்கழிக்கும் சாதிப் பேயை ஏதோ கொஞ்சம் வேப்பிலையடித்து விரட்டியிருப்பதாக நினைக்கிறேன். என் மியூசியத்தைப் பார்க்க வந்த ஒருவர், 'இவ்வளவு நாத்திகம் பேசும் நீங்கள் ஏன் ஆத்திக சமாசாரமான சிலைகளைச் செய்கிறீர்கள்' என்று கேட்டார். அதற்கு நான், 'இவ்வளவு ஆத்திகம் பேசும் நீங்கள் சிலை செய்ய வேண்டியது தானே? ஏன் என்னைத்தேடி வருகிறீர்கள்? இது ஒரு தொழில். இதில்கூட நாத்திக கருத்து களைப் பரப்ப முடியும்' என்று நான் சொன்னதும் வாயடைத்துப் போனார்.
கடவுள் விஷயத்திலும் மறை முகமாக இப்படி சாதிகளை ஒழிக்க முடிகிறபோது, மற்ற தொழில்கள், விஷயங்களிலும் மனம் ஒப்பி முயற்சி செய்தால் சாதியை முழுமையாக ஒழித்து விடலாம்" என்ற நமக்கு நம்பிக்கை ஊட்டினார் ராஜன்.
அவரது பட்டறையின் மேலாள ரான கார்த்திகேயனிடம் பேசினோம்.
"இங்கே வேலை பார்ப்பதை ஒரு பாக்கியமாக நினைக்கிறோம் சார். ராஜன் கல்யாணமே செய்து கொள்ள வில்லை. கேட்டால், 'நான் பெரியார் கொள்கையைத் திருமணம் செய்து விட்டேன். எனக்கு எதற்கு இரண்டா வது தாரம்? என்பார். ஆரம்பத்தில் வீட்டில் வைத்துச் சிலை செய்து வந்த அவர், 1990 இல் இந்த இடத்தை வாங்கி இங்கே பட்டறை அமைத்தார். 'இந்த இடம் நாலைந்து பேர் தூக்கு மாட்டிச் செத்த இடம். இங்கே அவர்களின் ஆவி உலவுது, பேய் பிறாண்டுது' என்றெல் லாம் சிலர் கதைகளை அள்ளி விட் டார்கள். அதைப் புறந்தள்ளிவிட்டு இந்த இடத்தை வாங்கிப் பட்டறை அமைத்தார். ராஜனுக்கு ரேஷன் கார்டு கூட கிடையாது. ரேஷன் கார்டு வாங்கப் போனபோது, 'என்ன மதம்?' என்று கேட்டிருக்கிறார்கள். இவர், 'திராவிட மதம்' என்றிருக்கிறார். கடுப்பான அவர்கள், 'ஒழுங்கா மதத்தைச் சொல்லுங்க. இல்லாவிட்டால்,ரேஷன் கார்டு கிடைக்காது' என்றிருக்கிறார்கள். 'அப்படியொரு ரேஷன் கார்டே எனக்கு வேண்டாம்' என்று கூறிவிட்டு இவர் வந்துவிட்டார். அதுபோல வாக்காளர் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை. அதனால் ஓட்டுரிமை யும் இவருக்கு இல்லை.
பல நாட்டுச் சுற்றுலா கையேடு களில் ராஜன் சாரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஒரு முறை பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்து எங்கள் மியூசியத்தைப் பார்த்துவிட்டுச் சென்ற சிலர், அந்த நாட்டின் ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ராஜனைப் பற்றிய ஒரு பாடத்தை இடம்பெறச் செய்து விட்டார்கள். அதுபோல சென்னையில் உள்ள விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் தரும் மாநில விருதை ஐந்து முறை இவர் வாங்கியிருக்கிறார். லண்டனில் 97 ஆம் ஆண்டு 'ஆர்ட் அண்ட் ஆக்ஷன்'என்ற பெயரில் நடந்த சிலை வடிக்கும் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து எட்டாயிரம் பேர் கலந்து கொண்டார்கள். அதில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு ராஜன் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.
தற்போது மாநிலம் முழுவதும் உள்ள சமத்துவபுரங்களில் தமிழக அரசு நூறு பெரியார் சிலைகளை வைக்கப் போகிறது. அதில் தஞ்சை மாவட்டத் திலுள்ள ஆறு சமத்துவபுரங்களுக்கு பெரியார் சிலை செய்து தரும்படி எங்களிடம் கேட்டிருக்கிறார்கள்" என்றார் அவர்.
ராஜனின் பட்டறையில் பாண்டு ரங்கன் என்ற தலித்தும் சிலை செய்யப் பழகி வருகிறார். ஏகரத்தைச் சேர்ந்த அவரிடம் பேசினோம். "கூலி வேலை பார்த்து வந்த நான், இப்போது நான்கு வருடங்களாக இங்கே தொழில் கற்று வருகிறேன். அடுத்த வருடம் தனியாகப் பட்டறை போடப் போகிறேன். இந்தத் தொழிலைச் செய்வதை நினைத்தால் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கும் சார். கோயில்களிலும் கருவறைகளிலும் நுழைந்து சிலை எப்படி இருக்கிறது என்று எங்களைப் பார்க்கக்கூட விடாத இந்த சமூகத்தில், என் இன ஆட்கள் செய்த சிலைகள் முக்கிய கோயில் களிலும், கோயில் கருவறைகளிலும் இருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாங்கள் தொட்டுத் தடவி, செதுக்கி, கூர் நேர் பார்த்து அங்குல அங்குலமாக வடித்துத் தரும் சிலை களை மற்றவர்கள் வணங்குகிறார்கள் எனும்போது மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. எல்லா எதிர்ப்பையும் மீறி எங்களுக்கு ஒரு நம்பிக்கையும், திடமும் கொடுத்து இந்தத் தொழிலில் ஈடு படுத்தியவர் ராஜன் அய்யா தான். எங்களுக்கு அவர் இன்னொரு பெரியாராகத் தெரிகிறார்" என்றார் பாண்டுரங்கன் நெகிழ்வுடன்.
நன்றி : 'குமுதம் ரிப்போர்ட்டர்' 11.1.2009

தீஸ்டா செதல்வாட் - விளக்கம்
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் மதவன்முறையாளர்கள்

'காம்பட் கம்யூனலிசம்' ஆசிரியரும், மதவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் போராளியுமான தோழர் தீ°டா செதல்வாட் டிச.11 அன்று 'மதச்சார்பற்றோர் மாமன்றம்' சார்பில் சென்னையில் ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி.

இப்போது டிசம்பர் 6, 1992க்கு வருவோம். பாபர் மசூதியின் இடிப்பு. அந்த ஒரேயொரு பயங்கரவாதச் செயல், மென்மேலும் பயங்கரவாதம் பரவுவதற்கும் தனிமைப் படுத்துதல் அதிகமாவதற்கும் வழி வகுத்தது. ஆனால் 1985க்கும் 1992-வுக்கும் இடைப்பட்ட காலத்தின் வரலாற்றை நாம் பார்ப்போமேயானால், ரத யாத்திரை நடத்தப்படட இடங்களிலெல்லாம், குறிப்பாக இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட விரும்புகிறேன். மீரட்டில் ஹாஷிம் புரா என்ற இடத்தில் 1987, மற்றும் 89-ல் இரண்டு நிகழ்ச்சிகள் ரதயாத்திரையின்போது நடந்தன. ஐம்பத்தோரு முஸ்லிம் சிறுவர்கள் ஆயுதம் தாங்கிய உத்தரபிரதேச ஊர்க்காவல் படையினரால் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சாட்சிகள் தொலைந்து விட்டனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி வேண்டி குரல் எழுப்பிக் கொண்டுள்ளனர்.
ம.பி. மாநிலம் பகல்பூரில் சந்தேரி, லொகாயன் என்ற இரண்டு கிராமங்கள். ஒரே இரவில் எண்ணற்ற மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சென்ற ஆண்டு சிலர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். ஆனால் கத்தி, லத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் யாரும் திட்டம் தீட்டியவர்களல்ல. வெறுப்பை உருவாக்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் எய்யப்பட்ட வெறும் அம்புகள்தான்.
1992க்கு வருகிறோம். வெறுப்பு கர்நாடகத்தையும் விடவில்லை. இப்படிப்பட்ட மத வெறுப்பு உள்ளே வர தென்னிந்தியா அனுமதிக்காது என்றே என்னைப்போன்ற வரலாற்று மாணவர்கள் நம்புகிறோம். 1980களிலும், குறிப்பாக 1992லும் நாம் பார்த்தோம், டிசம்பர் 92லும், ஜனவரி 93-யிலும் மும்பை போன்ற ஒரு மாநகரில், காவல்துறையினரின் ஒரு சார்புத் தன்மை கொண்ட முகத்தை, பெரும்பான்மை சமூகத்தவருக்கு ஆதரவாக இருந்ததையும், சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்கு எதிராக இருந்தததையும் நாம் பார்த்தோம். 1980கள் முழுதும் இதுதான் நிகழ்ந்தது. அதன் பிறகு 92ல் மசூதி இடிப்பு. பின் திட்டமிடப்பட்ட படுகொலை பம்பாயில் நிகழ்ந்தது. அப்போது அது பம்பாய்தான். மும்பை ஆகவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற சிறீ கிருஷ்ணா விசாரணை ஆணையமும் கூறிவிட்டது.
நண்பர்களே, 1984, 1992, 2002களில் குஜராத். இடையே, 1998லிருந்து இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தவர் தெளிவாகத் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டனர். 1998லிருந்தே, ஒரிசாவும் கர்நாடகாவும் குறிவைக்கப்பட்டன. ஒரே ஆண்டில் 48 தாக்குதல்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ நிறுவனங்களையும், குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என்பதை அகில இந்திய கத்தோலிக்க ய+னியனோடு சேர்ந்து நாங்கள் பதிவு செய்தோம். 1998ல், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஏன் தமிழ்நாட்டின் ஊட்டியிலும் ஒரு தாக்குதல் நிகழ்த்தப் பட்டது. குஜராத்தில்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் அது நடந்தது. ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்தப்பட்ட முறையில் வித்தியாசம் இருந்தது. ஆனால், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் கிறிஸ்தவ சமுதாயம் செய்து கொண்டிருக்கும் சேவைகளையெல்லாம் மீறி, தூரமாக இருக்கும் பகுதிகளில் கூட ஆதிவாசிகளுக்கு கிறிஸ்தவ சமுதாயத்தினர் செய்த சேவைகளையெல்லாம் கூட மதமாற்றம் செய்யப்படுகிறது என்று சொல்லி அந்த சமூகத்தை கொச்சைப்படுத்தும் வேலை நடந்தது. எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தினரின் சேவைகள் இருந்தாலும், அந்த சமுதாயமும் மதமாற்றம் செய்கிறது என்று சொல்லி கேவலப்படுத்தப்பட்டது. மறுபடியும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறியது. குற்றவாளிகள் திரிந்து கொண்டிருக்க நாம் அனுமதித்தோம்.
2002ல் என்ன நடந்தது, தொடர்ந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் நாமனைவரும் அறிவோம். முடிந்துபோன கதை அல்ல இது. ஆண்டுதோறும், அதிக எண்ணிக்கையில் படுகொலைகள் ஒரு சமூகமும், அரசும், நாடும் அனுமதிக்குமானால், குற்றவாளிகளை தண்டனைக் குரியவர்களாக அடையாளம் காட்டாது விடுமானால், பெரிய அளவில் தனிமைப் படுத்துதலையும், காழ்ப்புணர்வையும் தேக்கி வைக்க உதவும். ஒரு சமூகம் என்ற அளவிலும், அரசாங்கம் என்ற அளவிலும் நாம் இதைச் சரி செய்யத் தவறிவிட்டோம். அப்படி ஒன்று நடந்தது என்று கூட நாம் ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.
குஜராத்தில் வெகுகாலத்துக்கு திட்டமிட்டு சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துதல், குஜராத் நகர்ப்புறத்தை ஒரு சமுதாயத்தினர் வாழும் பகுதியாக ஒதுக்கி வைத்தல், பாடப்புத்தகங்களில் சிறுபான்மை சமூகத்தினரை கேவலப்படுத்தி எழுதுதல்... இந்தக் காரியங்கள் யாவும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு குறைந்தது ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செய்யப்படடன. இனப்படுகொலை ஒரு இரவில் நடப்பதல்ல. அது ஒன்றும் மேஜிக் அல்ல. அது ஒரு திட்டமிடப்பட்ட செயல். மௌனமாக இருப்பதன் மூலம் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததை பெரும்பான்மை சமூகம் ஒத்துக்கொள்கிறது. குஜராத் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
கம்ய+னலிசம் காம்பாட் ஆங்கில பத்திரிக்கையின் இனப்படுகொலை பற்றிய இதழின் தமிழாக்கத்தை வெளியிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது சென்னையில் இருக்கும் தோழர்களால் வெளியிடப்பட்டது. அதை நான் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமென்றே தமிழில் கொடுத்தேன். ஏனெனில் குஜராத்தில் ஒரு நிவாரண முகாமில் அவர் முதல்வர் மோடிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். நிவாரண முகாமுக்குள் செல்லக்கூடாதென எனக்கு மாவட்ட அதிகாரி சொல்லி இருந்தார். எனவே, நான் புர்கா அணிந்து உள்ளே சென்று தமிழ் இதழை அப்துல் கலாமிடம் கொடுத்தேன்.
குஜராத் பெஸ்ட் பேக்ரியில் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கு பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் எங்கள் குழு 67 வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டுள்ளது. நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இன்றுகூட, சிறப்பு புலனாய்வு குழு, முன்னாள் சிபிஐ இயக்குனர், சென்னையைச் சேர்ந்த திரு. ராகவன் அவர்கள் தலைமையில் கோத்ரா, குல்பர்க், நரோடாகாம், நரோடா பாட்டியா, ஓட், மற்றும் சர்தார் பூர் படுகொலைகளை மறுபுலனாய்வு செய்து கொண்டிருக்கிறது.
வழக்கை உயிருடன் வைத்திருக்க மூன்று நான்கு ஆண்டுகளாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தோடு போராட வேண்டியிருந்தது. காலம் கடந்து விட்டது, இந்த வழக்குகள் எல்லாம் குஜராத்திலேயே அழுகிச் சாகட்டும் என்று தடுப்பதற்கு தன் சக்தியையெல்லாம் பயன்படுத்தியது குஜராத் அரசு. ஆனால் குஜராத்தில் பயங்கரமான சூழலில் வாழும் 468 சாட்சிகள் இன்னும் துணிச்சலோடும் மனசாட்சியோடும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. தங்களது பண்ணை நிலத்தில் கூடாரம் அடித்துக் கொண்டு வசிக்கும் அவர்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் துணிச்சல் நீடித்திருக்க எங்களில் சிலர் எங்களால் ஆனதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதுவரை அவர்கள் எந்த அச்சுறுத் தலுக்கும் பணிந்துவிடவில்லை. உங்களைப்போன்ற மக்களின் ஆதரவுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
பெஸ்ட் பாக்டரியில் குடும்பமே உயிருடன் எரிக்கப்பட்டபோது உயிர் பிழைத்த ஒரே பெண் - ஜாஹிரா தான் சாட்சி;. அவரை மிரட்டி, ஆட்சியாளர்கள் பொய் சாட்சி கூற வைத்தனர்.
ஜாஹிராவை நான் பழிசொல்ல மாட்டேன். பெரியதொரு விளையாட்டில் அவர் ஒரு பகடைக்காய் மட்டுமே. வடோதரா என்ற பி.ஜே.பி எம்.எல்.ஏ செய்த காரியம் அது. தூக்கி எறிவதற்கு ரொம்ப எளிமையானது பணம்தான். பலவீனமான இளம்பெண் என்ன செய்வாள்? உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான ஒரு முறையீடு என்னிடம் இன்னும் உள்ளது. பொய்சாட்சி சொன்னதற்காக அவளுக்கு ஒரு ஆண்டு தண்டனை கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கு லஞ்சம் கொடுத்த பா.ஜ.க. தலைவர் மது ஷிவாசுக்கு ஒரு மாதம் கூட தண்டனை கொடுக்கவில்லை. நமது அமைப்பில் எங்கோ தவறு உள்ளது. இப்படியெல்லாம் பேசியதால் நீதிமன்றத்தின் கோபத்துக்கு நான் ஆளாகி இருக்கிறேன்.
குஜராத்துக்குப் பிறகு, ஒரிசாவும் கர்நாடகாவும் வந்துள்ளன. ஒரிசாவில் பயங்கரம் இன்னும் தொடர்கிறது. 35000 பேருக்கு மேல் நிவாரண முகாமில் உள்ளனர். ஜூலை மாதத்திலிருந்து இதுவரை நான் மூன்று முறை அங்கு சென்று வந்துவிட்டேன்.
குஜராத்தில் இன்னும் கும்பல் கும்பலாக கல்லறைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நேசத்துக்கு உரியவர்களின் உடல்களை கேட்டுப் பெறுவதற்கும் முடியாமல் இருக்கின்றனர். குஜராத்தில் படுகொலைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் கேமராக்கள் அங்கிருந்து நகர்ந்துவிட்டன. சிறுபான்மை சமூகத்தின் செல்வாக்குள்ளவர்கள் சமரசம் செய்து கொண்டுவிட்டனர். இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன். சாட்சிகளும், பாதிக்கப்படடவர்களும்தான் இப்போது களத்தில் தனியாக உள்ளனர். நாம் இதையெல்லாம் கேட்பதற்கு ஒரு மேடையைத் தயார் செய்தோமெனில், காயங்களை மறுபடியும் திறப்பதாக நாம் குற்றம் சுமத்தப்படுகிறோம். நான் கேட்கிறேன், ரத்தத்தை ஓடவிடாமல் தடுத்துவிட்டால், எந்தக் காயமாவது குணமடையுமா?
ஒரிசா பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசே முன் நின்று நடத்திய பயங்கரவாதம்தான் குஜராத்தில் அரங்கேறியது. கிறிஸ்தவர்கள் மீதும், தலித்துகள் மீதும் நடத்தப்பட்டது பயங்கரவாதச் செயல்பாடுகள். பெண் குழந்தைகளைக் கருவில் கொல்வதும் பயங்கரவாதச் செயல்பாடுதான். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறோம் இன்று. ஆனால் நாம் எங்கே தொடங்கி எங்கே முடிக்கிறோம்?
கடந்த 15 ஆண்டுகளில் நான்கு முக்கிய சீர்திருத்தங் கள் வேண்டுமென்று நாம் கேட்டு கொண்டிருக்கிறோம். ஒன்று, காவல்துறை சீர்திருத்தம். அது தொடர்பான சட்டதிட்டங்கள் எல்லாம் நமது காலனிய முதலாளியாக இருந்த பிரிட்டிஷாரால் வகுக்கப்பட்டவை. அவை நமது அடிமை மனப்பான்மை கொண்ட மக்கள் தொகையை அடக்கியாள்வதற்காக, நம் அரசியல் சாசனம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. நமது காவல் துறையை நாம் அரசியல் சாசன ரீதியாக அமைக்கவோ, ஜனநாயகப்படுத்தவோ இல்லை. எனவே காவல் துறையினர் மக்களுக்கு சேவை செய்யவில்லை. மாறாக, மக்களை அடக்கியாளவே அவர்கள் விரும்புகின்றனர். இந்த உறவு முறை மாற வேண்டும். சட்டம் மாற வேண்டும்.
ஓய்வு பெற்ற நமது மூத்த காவல்துறை அதிகாரிகளும், 1975லிருந்து 1999 வரையிலான நேஷனல் போலீஸ் கமிஷன் அறிக்கைகளும் காவல்துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பலமாக சிபாரிசு செய்துள்ளன. ஆனால் நமது அரசியல் கட்சிகள், அது யாராக இருந்தாலும், காவல்துறை மீது உள்ள கட்டுப்பாட்டை இழக்க விரும்பவில்லை.
காவல்துறை சீர்திருத்தத்துக்கான கோரிக்கையை மக்கள் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். இது ஒரு அறிவுஜீவித்தனமான கோரிக்கை அல்ல. இது நமது பாதுகாப்பு தொடர்பான விஷயம். சார்பு எதுவும் இல்லாமல் காவல்துறை நடக்க வேண்டும் என்பதற்காக. சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக. காவல்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதற்காக. எனவே பொதுமக்கள் அமைப்புகள் இந்த கோரிக்கையை நிச்சயம் முன்வைத்துப் போராட வேண்டும்.
இரண்டாவது, நீதித்துறைச் சீர்திருத்தம். நீதித்துறை கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று நாம் இந்த சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டும். நிதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். இந்திய நாட்டின் குடிமகன் எனற நிலையில், ஒருமுறை ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதென்றால், நீதிபதியின் நோக்கத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லையெனில், அந்த தீர்ப்பை விமர்சனம் செய்யும் உரிமை எனக்கு இருக்க வேண்டும்.
(தொடரும்)

கோவை சிறையில் தா.பாண்டியன் தோழர்களை சந்தித்தார்

தேசிய பாதுகாப்புக்கு களங்கம் விளைவித்ததாகவும், கலவரம் ஏற்படும் வகையில் பேசியதாகவும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமான், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களை பார்த்துவிட்டு வெளியே வந்த தா. பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், மணியரசன் ஆகியோர் தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் பேசியதாக கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 முறையாக பிணை மறுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு களங்கம் விளைவித்ததாகவும், கலவரம் ஏற்படும் வகையில் பேசியதாகவும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தந்த புகாரின் பேரில் சில நாட்கள் கழித்து இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கொடுத்த புகாரை முறையாக விசாரித்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யவில்லை. புகாரை விசாரிக்காமலேயே பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்று கூறினார்.

லண்டனில் கடவுள் பிரச்சாரத்துக்கு பதிலடி
'கடவுளை மறுத்தால் நரகத்தில் துன்பம் அனுபவிக்க வேண்டும்' என்று மக்களை எச்சரித்து, கிறிஸ்தவ மத நிறுவனங்கள் லண்டனில் விளம்பரப் பலகைகளை வைத்திருந்தன.

இந்த மதவெறிப் பிரச்சாரத்துக்கு எதிராக பிரபல நகைச்சுவை பெண் எழுத்தாளரான ஏரியன்ஷெரைன் களமிறங்கினார். மக்களிடம் நன்கொடைகளை திரட்டினார். ஒவ்வொருவரிடமும் அவர் கேட்டது
5 பவுண்ட் மட்டும். "கடவுள் என்று ஒன்று இல்லை. எனவே கவலையை நிறுத்துங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குங்கள்" என்ற வாசகங்களை பேருந்துகளில் விளம்பரமாக வெளியிட்டார். தனது உடையிலும் அதை பொறித்துக் கொண்டார். வாசகம் பொறித்த பேருந்து ஒன்றின் முன் அவர் நிற்கும் காட்சி.
மறைவு
மதுரை மாவட்ட பெரியார் பெருந் தொண்டர் கைவண்டி கருப்பு அவர் களின் மகனும், கழகத் தொண்டரு மாகிய க. திராவிடமணி (30) 8.12.2008 அன்று மரணமடைந்தார். மதுரை மாவட்ட கழகத் தோழர்களும், தோழமை அமைப்புத் தோழர்களும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். எந்த மூடச் சடங்குமின்றி உடல் அடக்கம் நடந்தது.
நன்கொடை
புதுச்சேரி மாநிலம் அரியாங் குப்பம், மணவெளி, கழகச் செயல்வீரர், இரா. வேல்முருகன்-அருணா இணை யர்களின் மகள் இரா. வெண்ணிலா முதலாம் ஆண்டு பிறந்த நாள் 15.12.2008 சிறப்பாக கொண்டாடப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 அளிக்கப்பட்டது. (நன்றி-ஆர்)
வந்த கடிதம்
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 25.12.2008 இதழ் கண்டேன். பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது என் நெஞ்சில் தேனாய் இனித்தது. பெரியார் நூல்களை அரசுடைமையாக்கிட நாம் மக்கள் இயக்கம் கட்ட வேண்டும். பெரியார் நூல்களை ஆதிக்கவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியது ஒவ் வொரு உண்மையானப் பெரியார் தொண் டரின் நீங்காக் கடமையாகும். 'வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக அரங்கேறிய தீக்குளிப்பு நாடகங்கள்' என்ற விடுதலை இராசேந் திரனின் இரங்கலுரை அற்புதம்.
- தங்க. சங்கரபாண்டியன்,
சென்னை - 600 103.
விடியல் எப்போது?
- தமிழேந்தி -

கொடுமைகள் முற்றும் தொலையுமா இங்கு?
கொஞ்சம்நீ எண்ணடா தோழா! - இந்த
அடிமைத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற வரைநம்
அல்லல்கள் தீருமா தோழா!
வாக்குப் பொறுக்கும் திராவிடக் கட்சிகள்
வஞ்சகம் கொஞ்சமோ தோழா! - நாளும்
தூக்கிச் சுமக்கிறார் காங்கிரசுக் கழுதையை
சொரணையே இல்லையே தோழா!
தேசிய இனங்களைச் சிதைப்பவ ரோடா
தேர்தலில் கூட்டணி தோழா! - விலை
பேசியே பெற்ற அன்னையை விற்றும்
பிழைப்பது பிழைப்போ தோழா!
அம்மவோ... எத்தனை உயிர்க்கொலை அங்கே!
அழுகுரல் தொடருதே தோழா! - சே... சே...
பம்மாத்து அரசியல் பண்ணிப் பிழைப்பதா?
பச்சை நரித்தனம் தோழா!
ஏங்கி ஏங்கியே ஈழத்திற் கழுகிறோம்
இங்கென்ன நிலையடா தோழா! - நாளும்
வீங்கிப் பெருக்கும் மார்வாரி குசராத்தி
வேட்டைக்குத் தீர்வென்ன தோழா!
துடிக்கிற சோதரன் கண்ணீர் துடைக்கவும்
சொந்தக்கை வேண்டுமென் தோழா! - முற்றி
வெடிக்கிற தேசிய விடுதலைப் புரட்சிஓர்
விடியலைக் காட்டுமென் தோழா!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடரும் மாணவர்களின் வகுப்பு புறக்கணிக்கும் போராட்டம்


ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை இராணுவ தாக்குதலை நிறுத்தக்கோரியும், தாக்குதலுக்கு துணை போகிற இந்திய அரசைக்கண்டித்தும் வகுப்புகளைப் புறக்கணிக்க அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மற்றும் பார்க் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிக்கண்ணா கல்லூரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி மாணவர் அன்சாரி தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல் பார்க் கல்லூரி மாணவர்கள் ராசேசு குமார் தலைமையில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்லடம் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விரு ஆர்ப்பாட்டங்களிலும் தமிழ்நாடு மாணவர் கழக
அமைப்பாளர் ந.பன்னீர்செல்வம், திருப்பூர் நகர பொறுப்பாளர் கார்த்திகேயன், மற்றும் பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, January 20, 2009

பெரியார் திக தலைவர் மற்றும் தமிழுணர்வாளர்கள் விடுதலை




பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி , தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் & இயக்குநர் சீமான் மற்றும் ஆகியோரை நிபந்தனையில்ல பிணையில் விடுதலை செய்யக்கோரி நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இன்று மாலை 7 மணியளவில் மூவரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்தனர்.

அவர்களை வரவேற்க பெரியார் திராவிடர் கழகத்தினர் திரளாக கோவை கு.இராமகிருட்டிணன் மற்றும் தலைமைக்கழக உறுப்பினர் வெ.ஆறுச்சாமி தலைமையில் சிறை வாயிலில் கூடி இருந்தனர். தாரை தப்பட்டை முழங்க பட்டாசுகள் வெடிக்க மூவரும் ஊர்வலமாக மக்கள் திரளுடன் கோவை காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் பெரியார் திராவிடர்கழகத்தின் அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் பொதுமக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் சிறை அனுபவங்களையும் சென்னை உயர் நீதிமன்றமானது தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தங்களுக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கியமை பற்றியும் விளக்கிகூறினார்கள்.

வரவேற்பு ஏற்பாட்டினை தமிழ்நாடு மாணவர்கழக பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வில் கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டு மூவரையும் வரவேற்றனர்.

வீரவணக்கம்! வீரவணக்கம்! வீரவணக்கம்!

வீரவணக்கம்! வீரவணக்கம்! வீரவணக்கம்!

பெயர் : ப.சண்முகசுந்தரம் (பெங்களூர் தமிழ்சங்கத்தலைவர் )
பிறப்பு : 22.05.1939
இறப்பு : 20.01.2009

இன்று அதிகாலை 1 மணியளவில்.

தந்தை பெயர் : பழனியப்பன்
தாய் பெயர் : இராமாபாய்

மகன் பெயர் : ச.மணிவாணன்
மகள் பெயர் : ச.செல்வதேவி


ப.சண்முகசுந்தரம் பற்றி:

பெங்களூர் தமிழ்சங்க நிறுவனரும் 2006 முதல் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

கர்நாடகவாழ் தமிழ்மக்கள் வாழ்வுரிமைக்காக போராடியவர்.
பெங்களூரில் பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவள்ளுவர் சிலையினை திறக்க தொடர்ந்து போராடிவந்தவர்.


தீவிர தமிழீழ ஆதரவாளர்.

இவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக பெங்களூர் தமிழ்சங்க அலுவலகத்தில் நண்பகல் 12 முதல் 5 மணிவரை வைக்கப்படுகிறது.

மாலை 5 மணிக்கு மேல் பெங்களூர் இராஜாஜிநகர் அரிச்சந்திரா காடு சுடுகாட்டில் உடல் எரியூட்டப்படுகிறது. தமிழர்கள் அனைவரும் அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

http://bangaloretamilsangam.com:8080/bangaloretamilsangam.com/cmembers.jsp



இவருக்கு

பெரியார் பாசறை வீரவணக்கம் செலுத்துகிறது.


IBC : இவரது மரண அறிவிப்பை உலகளாவிய தமிழ் ஒலிபரப்பு ஊடாகவும் கேட்கலாம்.

http://www.ibctamil.net/?p=303

http://www.ibctamil.net/live.asx

Monday, January 19, 2009

மாணவர்களே! எழுந்து நில்லுங்கள் போதும்!

மாணவர்களே! எழுந்து நில்லுங்கள் போதும்!

  • 6 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள்.

  • இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் நூற்றுக்கணக்கானோர் பலியாகப் போகிறார்கள்

  • இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழ் இனப் படுகொலை நடந்து வருகின்றது.

  • அதற்கு இந்திய அரசு ஓடி, ஓடி உதவி வருகின்றது.

  • அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, வணிகர்கள் முதல் திருநங்கைகள் வரை எல்லோரும் பட்டினி கிடந்து பார்த்துவிட்டார்கள்.

  • தமிழக சட்ட சபையில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; முதல்வர் பிரதமரிடம் முறையிட்டார்.

ஆனால்,

    • தமிழினப் படுகொலை தொடர்கின்றது .

    • உலக நாடுகளைப் போல் இந்தியாவின் மெளனமும் தொடர்கின்றது.

    • அரசியல் கட்சிகள் கை கழுவிவிட்டன.

  • நாம் இன்று வேடிக்கைப் பார்த்திருந்தால், இன்னும் 100 ஆண்டுகள் கழித்து, “ உலகின் மிகப்பெரிய கல்லறை இலங்கை; அங்கும் தமிழர்கள் வாழ்ந்தார்கள்” என்று வரலாறு சொல்லும். ஏதாவது ஒரு புத்திசாலி மாணவன் கேட்கக் கூடும், “ கூப்பிடும் தூரத்தில் 6.5 கோடி தமிழர்கள் வாழ்ந்தார்களே, அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று .

நம்புங்கள், உங்களின் ஒருமித்த சிறு அசைவால் பல உயிர்களை காக்க முடியும்.

உரக்கச் சொல்லுங்கள் உலகுக்கு

நீங்கள் இனப்படுகொலைக்கு எதிரானவர்கள் என்று!

இன்னும் நம் உணர்வுகள் மலுங்கிவிடவில்லை என்று!

தமிழர் நாதியற்று போகவில்லை என்று!

21 ம் தேதி முதல் வகுப்பை புறக்கணிப்பீர் !



அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு

கடந்த 6 மாதத்தில் போர் என்ற பெயரில் மறைக்கப்பட்ட உண்மைகள்.

  • வீட்டுக்குள் இருந்தால் குண்டுகளால் சாவு நிச்சயம் என்று நம்முடைய ஊரோடு நாம் இடம்பெயர்ந்து காட்டிலும், பதுங்குகுழியிலும் வாழ்ந்தால்

  • பள்ளி கட்டடங்கள் பாதுகாப்பு இல்லாதவை என்று மரத்தடிகளில் நம் வீட்டு பிள்ளைகள் பாடம் கற்றால்

  • 3 மாதத்திற்கு மேலாக காட்டிற்குள் பழம், இலை, தழைகளை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தால்

  • நாம் விட்டு சென்ற வீடும், பசு மாடுகளும் ‘கிளஸ்டர்’ குண்டுகளால் அழிக்கப்பட்டால்(கிளஸ்டர் குண்டுகள் ஐ.நா. வால் தடை செய்யப்பட்டவை).

  • திடீரென்று வந்த இராணுவக்காரர்கள், நான்காவது தெருவில் உள்ள நம் நண்பனை ‘தமிழன்’ என்ற ஒரே காரணத்திற்காக சுட்டுவிட்டு போனால்

  • நம் ஊரை விட்டு ஓடும் போது, குணடு வெடித்து சிதறிய குழந்தை ஒன்றின் இடது கை ஒன்றை மிதிக்க நேர்ந்தால்

  • காட்டில், நம் பக்கத்து வீட்டுக்காரர் பாம்பு கடித்து துடிக்கக் கண்டால்.

  • அவரை தூக்கிச் சென்று சேர்த்த மருத்துவ மனையில் பாம்புக் கடிக்கு மருந்து இல்லாமல், அவர் சாகக் கண்டால்.பிணங்களை அடக்கம் செய்ய வழியில்லாமல், அங்கங்கே விட்டு விட்டு இடம்பெயர்ந்தால்.

  • கிறுத்துமஸூக்கு முன்னும், பின்னும் நம் பக்கத்து ஊரில் உள்ள தேவாலயத்தில் குண்டு வீசப்பட்டால்..

  • நாம் ஓடி ஒளிந்த ஒரு ஊருக்குள் நம்மைப் போல் 4.5 லட்சம் மக்கள் தஞ்சம் புகுந்து இருந்தால்.

  • இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் 500 பேர் பலியாகலாம் என்ற நிலையில்.

  • இதை உலகுக்கு சொல்ல ஒரு பத்திரிக்கையும் இல்லை என்ற சூழ்நிலையில்

இது தான், இலங்கையில் தமிழர்களின் இன்றைய நிலை. இதை நாம் அறிந்தால் துடித்து விடுவோம் என்றே நம் ஊடகங்கள் நமக்கு இதை மறைக்கின்றன. துடிப்போமா????

உண்மைகளை அறிய / வரலாற்றை அறிய

இந்த வலை தளங்களை பாருங்கள். / http://www.tamilnation.org/tamileelam.htm
http://www.puthinam.com/ - புதினம் / www.blackjuly83.com
http://www.tamilwin.com/ - தமிழ்வின் / www.tamilcanadian.com
http://www.sankathi.com/ - சங்கதி /
http://www.tamilnaatham.com/ - தமிழ்நாதம் /
http://www.pathivu.com/ - பதிவு /
http://www.nitharsanam.com/ - நிதர்சனம் /

சீமான், கொளத்தூர் மணிக்கு ஜாமீன் - ஐகோர்ட்

சீமான், கொளத்தூர் மணிக்கு ஜாமீன் - ஐகோர்ட்



விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.


அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள்.


கைது செய்யப்பட்ட டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு அசோகன் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.


இந்த நிலையில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் சார்பில் வக்கீல் பா.பா.மோகன் ஈரோடு மாஜிஸ்திரேட்டு 1 வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டிருந்தார்.


சீமான் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன ஊர்வலங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சீமானுக்கு ஜாமீன் கிடைக்குமா என்று அவருடைய ஆதரவாலர்கள் வருத்தத்துடன் இருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.


இந்நிலையில் ஜாமீன் கேட்டு மூவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Thursday, January 15, 2009

இலங்கை போரை உடனே நிறுத்த வற்புறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரியார் திகவினர் மூவர் தீக்குளிக்க முயற்சி

இலங்கை போரை உடனே நிறுத்த வற்புறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரியார் திகவினர் மூவர் தீக்குளிக்க முயற்சி

( 15.01.2009)

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

அதோடு தீயை அணைக்கும் கருவிகளையும் கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

இன்று விடுமுறை நாள் என்பதால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. திடீரென மதியம் 12.40 மணியளவில் 3 திசைகளில் இருந்து 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்து கையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த காவலர்கள் ஓடிச்சென்று அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.

இதையடுத்து தீக்குளிக்க முயன்ற 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.

அவர்களது விபரம் :-

1. தோழர் பெரியார் ஜெகன் (30),ஈரோடு மாவட்ட பெரியார் திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர்,

2. தோழர் சம்பூகன் என்ற சண்முகம் ,.பெரியார் தி.க. திருப்பூர் நகர செயலாளர்.

3. தோழர் கோபிநாத் (26), திருப்பூர் பெரியார் திராவிடர்கழகம்..

கைதான 3 பேரும் பந்தயச்சாலை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் வெ.ஆறுச்சாமி நிருபர் களிடம் கூறியதாவது:-

இலங்கையில் சிங்கள ராணுவம் விமானத்தில் குண்டு களை வீசி கொடூர மான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

5 லட்சம் தமிழர்கள் சாவின் விழும்பில் உள்ளனர். அவர்கள் முல்லைத் தீவில் பதுங்கி உள்ளனர். தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசை வற்புறுத்தியும் இதுவரை இந்திய அரசு போர் நிறுத்தம் செய்ய சொல்ல வில்லை.

மவுனமாக இருந்து வரும் மத்திய அரசை தமிழக அரசில் கட்சி தலைவர்கள் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும்.

மத்திய அரசு போர் நிறுத்தம் செய்ய சொல்லும் வரை நாங்கள் எந்த பண்டிகையும் கொண்டாட மாட்டோம். மேலும் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்கும் போராட்டம் நடத்துவார்கள். என்று கூறினார்.


இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Wednesday, January 14, 2009

இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா...! - ஆனந்த விகடன்'

இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா...!
'ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம்' என்ற பெயரில், நிராயுத பாணிகளான அப்பாவித் தமிழர்களின் ரத்தத்தைத் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறது இலங்கை ராணுவம். 'ஒரு தமிழனைக் கொன்றால் நூறு சிங்கள ஓட்டு கிடைக்கும்' என்பதே தங்கள் சூத்திரம் என இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இப்போது, 'புலிகளின் கோட்டை எங்கள் கைவசம்' என்ற கொக்கரிப்பையும் கேட்க முடிகிறது. கோட்டையைப் பிடிக்கும் அந்த முயற்சியில் அப்பாவித் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் வேட்டையாடப்பட்டார்களோ!இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ராஜினாமா மிரட்டல், சர்வ கட்சிக் கூட்டம், டெல்லிப் பயணம் என்று தமிழகத் தலைவர்கள் எடுத்துக் கொண்ட எந்த முயற்சிக்குமே மத்திய அரசு கடைசி வரை செவி சாய்க்கவில்லை. நம் ராணுவ அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி தரும் தகவலையும் மத்திய அரசு மறுக்கவில்லை.

'மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கொடுத்த வாக்குறுதியைக்கூடத் தந்திர மாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது டெல்லி.இதையெல்லாம் பார்க்கும்போது, 'புலிகளை நாங்கள் முழுவதுமாக ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களைத் திசை திருப்பும் வகையில் கண்ணாமூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்' என்று மத்திய அரசோடு எழுதப்படாத 'புரிந்துணர்வு ஒப் பந்தம்' ஒன்றைப் போட்டிருக்கிறதோ இலங்கை அரசு என்ற பலமான சந்தேகம் தான் எழுகிறது!நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விஷயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை!'இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமோ?' என்று பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் தழுதழுத்த குரலில் எழுப்பிய கேள்வி, தமிழ் மக்களின் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!
நன்றி: 'ஆனந்த விகடன்' தலையங்கம் 14.1.09

கிளிநொச்சி வீழ்ச்சி நிலையானதா? - பெரியார் முழக்கம்

கிளிநொச்சி வீழ்ச்சி நிலையானதா?
தமிழர்களின் அரசியல் தலைநகரமாக கம்பீர மாக நின்ற கிளிநொச்சி, இப்போது ராணுவத்தின் பிடியில். இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்தபோது, சில நாய்கள் மட்டுமே தென்பட்டன. மக்கள் முழுதும் வெளியேறி விட்டார்கள். மக்களும் புலிப்படையும் இல்லாத மண்ணைப் பிடித்துள்ளது, சிங்கள ராணுவம்.

கிளிநொச்சியின் வரலாறு என்ன? முதலாவது ஈழப்போரில் யாழ் மாவட்டம் முழுதும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தபோது, கிளிநொச்சி நகரம் மட்டும் ராணுவத்தின் வசம் இருந்தது. இலங்கை ராணுவ தளபதி டென்சில் கொப்பேகடுவ - 1984 இல் கிளிநொச்சியில் முகாமிட்டு, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழி நடத்தி வந்தார். 1985 இல் கிளிநொச்சியில் ராணுவம் முகாமிட்டிருந்த காவல் நிலையத்தில் குண்டுகள் நிரப்பிய வாகனங்களை செலுத்தி, புலிகள் பெரும் தாக்குதலை நடத்தினர். ராஜீவ் காந்தி தமிழர்களைக் கொன்று குவிக்க அனுப்பி வைத்த இந்திய ராணுவமும், கிளிநொச்சியில் கடும் பாதிப்புகளை உருவாக்கியது.

இந்திய ராணுவம் வெளியேறிய பிறகு, ஈழத்தில் இரண் டாம் கட்டப் போர் தொடங்கியது. கிளிநொச்சி யைப் பிடிக்க விடுதலைப்புலிகள் தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியபோது, இலங்கை ராணுவம் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி, ஆணையிறவுக்கு தப்பிச் சென்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப் பகுதியும் புலிகள் கட்டுப் பாட்டில் வந்தது.1996 இல் சந்திரிகா பிரதமராக இருந்தபோது கிளிநொச்சியை மீட்க 'சஞ்ஜெய' என்ற பெயரில் மூன்று கட்ட ராணுவ நடவடிக்கைகளை மேற் கொண்டார். கிளிநொச்சி மீண்டும் வரும் நிலையில் ஆக்கிர மிக்கப்பட்டது. 1997 இல் விடுதலைப் புலிகளின் கடற்படை வலிமை பெற்றது. ராணுவம் யாழ்ப்பாணக் கடல் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு புலிகள் தாக்குதல்கள் நடந்தன. எனவே யாழ்ப்பாணத்துக்கு தரைவழிப் பாதையைத் தேட ஆரம்பித்த ராணுவம், 'ஜெயசிங்குறு' என்ற ராணுவ தாக்குதலை மேற்கொண்டது.

வவுனியாவி லிருந்து கிளிநொச்சி வரையுள்ள தரைவழிப் பாதையை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்பதே, இந்தத் தாக்குதல் நோக்கம். 'ஏ9' பாதை வழியாக ராணுவம் தாக்குதலுக்கு வந்தபோது, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளே அனுமதித்தனர். வழியிலுள்ள மாங்குளம் என்ற ஊரைக் கடந்து, கிளிநொச்சிக்கு ராணுவம் எதிர்ப்பே இன்றி நுழைந்து அங்கே முகாமிட்டது. ராணுவத்தின் மற்றொரு பிரிவு எதிர்ப்பே இன்றி மாங்குளம் வந்தது. உள்ளே நுழைய விட்டு ராணுவத்தினரை வெளியேற முடியாமல் சுற்றி வளைத்து, விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவம் பலத்த உயிர்ச் சேதத்துடன் பின்வாங்கி ஓடியது. புலிகள் நடத்தி அத்தாக்குதலுக்கு 'ஓயாத அலைகள்-2' என்று பெயர்.

மீண்டும் கிளிநொச்சி புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1999 நவம்பரில் விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் - 3 தாக்குதல் தொடங்கியது. ஆணையிறவு புலிகள் வசமானது. விமானப்படை, தரைப்படை, கப்பல் படை என்று முப்படையினரும் முகாமிட் டிருந்தும், ஆனை யிரவை ராணுவத்தால் தக்கவைக்க முடியவில்லை.இந்தியாவின் ராணுவ உதவிகள், ராணுவ பயிற்சிகள், ராணுவ ரீதியான ஆலோசனைகளோடு 'ராடார்' கருவிகளைப் பொருத்தி, உளவுத் தகவல்களையும் சிங்கள ராணுவத்துக்கு வழங்கி வரும் நிலையில் சீனா, பாகி°தான், இந்தியாவின் ராணுவ உதவியோடு சிங்கள ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துள்ளது.இந்திய ராணுவம் சென்றிருந்தபோது விடுதலைப்புலிகள் இடம் பெயர்ந்த முல்லைத் தீவில் மீண்டும் புலிகள் மக்களோடு இடம் பெயர்ந்துள்ளனர்.

நன்றி : பெரியார் முழக்கம் 15.01.2009

Friday, January 9, 2009

உண்மையான செய்திகளை வெளியிட்ட தளங்களுக்கு நன்றிகள் பல.

தமிழ்நாட்டுத்தமிழரின் தமிழுணர்வை சிலர் வியாபாரப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதற்கு நடுவில் செய்திகளை ஆய்வு செய்து உண்மையான செய்திகளை வெளியிட்ட தமிழ்வின் மற்றும் மீனகம் தளத்திற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்வின் செய்தி :

மன்மோகங்சிங்குக்கு கறுப்புக்கொடி பெரியார் தி.கவினர் 700 பேர் கைதாகி விடுதலை
[ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 08:56.52 AM ] []
ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை நிறுத்துமாறு விடுத்த கோரிக்கையை மதியாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையின் தடையை மீறி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத்தினர் 700க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]

மீனகம் செய்தி :

'இந்தியப் பிரதமருக்குக் கருப்புக் கொடி பெரியார் திராவிடர்கழக துணை தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் 700 தோழர்கள் கைது
ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை நிறுத்துமாறு தமிழக மக்கள் விடுத்தக் கோரிக்கையை மதியாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையின் தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் திராவிடர்கழகத்தினர் 700க்கும் மேற்ப்பட்டோர் பெரியார் திராவிடர்கழக மூத்த தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் கைது செய்யப்பட்டனா.

மேலும்


நன்றி:
தோழமையுடன்
அகரன்

Thursday, January 8, 2009

இந்தியப் பிரதமருக்குக் கருப்புக் கொடி பெரியார் திராவிடர்கழக பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் தலைமையில் 700 தோழர்கள் கைது

ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை நிறுத்துமாறு தமிழக மக்கள் விடுத்தக் கோரிக்கையை மதியாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையின் தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் திராவிடர்கழகத்தினர் 700க்கும் மேற்ப்பட்டோர் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் கைது செய்யப்பட்டனா.

சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராகவும், தமிழக மீனவர்களைக் கண்மூடித்தனமாக சுட்டுக்கொள்வதைக் கண்டித்தும் தமிழகம் கட்சிகளைக் கடந்து ஒருமித்தக் கண்டனக் குரலைத் தெரிவித்து வருகிறது.

தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உடனே போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொட்டும் மழையில் இலட்சக்கணக்கான தமிழர்கள் மனித சங்கிலியாக அணிவகுத்து சிங்கள இராணுவத்தின் இனப்படுகொலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வலிமையாக வெளிப்படுத்தினர்.

ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி வருகிறது.

சிங்கள இராணுவத்தின் தமிழினப்படுகொலையோ தொடர்ந்து நீடிக்கிறது.

மத்திய ஆட்சித் தலைமை பொறுப்பில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு குறிப்பாக தமிழக காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருந்தும் கூட தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்கள்.

தமிழக மீனவர் படுகொலையை, ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையைத் தடுக்கவோ கூட முன்வராததோடு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி போகிறார்கள் என்றும், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவதே கூட சட்ட விரோதம் என்றும், பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும் ஆளாளுக்கு
அறிக்கைகளை அளித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி சர்வதேச பிரச்சினைகளில் மாநில அரசுகளோ, கட்சிகளோ தலையிட உரிமையில்லை என்று பேட்டி அளிக்கிறார். சிங்கள இராணுவத்துக்கான பயிற்சி தொடரும் என்கிறார்கள் . ஏன் ? இராணுவ உதவிகளும் கூட தொடர்ந்து அளிக்கப்படும் என்கிறார்கள்.

அதோடு ஈழச்சிக்களைக் காரணம் காட்டி 1990 ல் தி.மு.க. அரசைக் கலைக்க பின்புலமாக இருந்தவரும், தொடர்ந்து ஈழப்பிரச்சினையில் தமிழின விரோதப் போக்கை கடைபிடித்து வருபவரும், மும்பை தாக்குதலின் வழியாக தனது தகுதியின்மையைக்மெய் காட்டியும் உள்ள எம். கே. நாராயணனை பாதுகாப்பு ஆலோசகராக பிடிவாதமாக தொடர்ந்து வைத்துக்கொண்டும் உள்ளனர்.

மத்தியில் ஆட்சி செய்வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றாலும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களே போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சித் தலைமை தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக்குழு பிரதமரை நேரில் சந்தித்து பேசும் 04.12.2008க்குப் பின் மூன்று நாட்களுக்குள் இணக்கமான முடிவேதும் தெளிவாக அறிவிக்கப்படாவிடில் 08 /12/08 மேல் தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு அவர்களின் தமிழன விரோத போக்கை அம்பலப்படுத்தவும் அவர்கள் மீது தமிழக மக்களுக்கு வெறுப்புணர்வை வெளிப்படுத்தவும் அவர்கள் அரசு சார்ந்த, சாராத எந்நிகழ்ச்சிக்கு வந்தாலும் கருப்புக் கொடி காட்டுவதென பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் 01.12.2008 அன்று அறிக்கை வெளியிட்டனர்.

இதனிடையே 19.12.2008 அன்று தலைவர் கொளத்தூர் மணி தமிழகக்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வந்திருந்தார்.

இதனால் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் ஏற்பாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பெரியார் திராவிடர்கழக தோழர்கள் திரளாக இன்று (08.01.2009) காலை 8. மணியளவில் சென்னை கவர்னர் மாளிகை முன்பு தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருமணமண்டபத்தில் சிறைவைக்கப்பட்டு மதியம் 1 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் புதுவை மாநில பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் லோகு.அய்யப்பன் தலைமையில் புதுவையிலிருந்து 150 க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும், கோவையிலிருந்து மாநகர அமைப்பாளர் தோழர் இ.மு.சாஜித் ஒருங்கிணைப்பில் 170 க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும் , சேலம் ஈரோடு பகுதியிலிருந்து தோழர் இராம.இளங்கோவன் ஒருங்கிணைப்பில் 300க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும் , மதுரையிருந்து 120 க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும் ,மற்றும் பல பகுதியிலிருந்தும் திரளாக பெரியார் தி.க. தோழர்கள் கலந்துகொண்டனர்.

இதில் தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் ந.பன்னீர் செல்வம் தலைமையில் திரளான மாணவர்களும் , ஏனைய பிற அமைப்பின் தலைவர்களும், சென்னையில் வேறொரிடத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்திருந்த தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கடைசி நேரத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இவ்வார்ப்பாட்டத்தில் பங்குகொண்டார்.
செய்தி : பெரியார் பாசறை செய்தித்தொகுப்பு
நிழற்படங்கள் : வே.மதிமாறன்