Thursday, April 16, 2009

ஈழத்தமிழர் மீதான நச்சுவாயு தாக்குதலைக்கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்


ஈழத்தமிழர் மீதான நச்சுவாயு தாக்குதலைக்கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009, 05:57.06 PM GMT +05:30 ]
ஈழமக்களை இத்தாலி சோனியா ஆதரவுடன் இந்தியப்படையின் துணையுடன் நச்சுவாயு குண்டுகளை கொன்றுக்குவிக்கும் சிங்கள இந்தியப்படையினை கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று (16.04.2009) மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பெரியார் திக மாவட்டச்செயலாளர் தலைமையில் ஆதித்தமிழர் பேரவையின் க.கண்ணன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தினை துவக்கிவைத்தார். தொடர்ந்து பெரியார் திக மாவட்ட பொருளாளர் செல்லத்துரை கண்டன உரையாற்றினார். வழக்கறிஞர் பொன்ராசு சிறப்புரையாற்ற பெரியார் திராவிடர் கழகத்தின் தமிழக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றினார். அருட்திரு பணி. சுந்தரிமைந்தன் அவர்கள் நிறைவுரையாற்ற பெரியார் திக மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு அவர்கள் நன்றியுரையாற்றி முடித்துவைத்தார்.


இவ்வார்ப்பாட்டத்தில் பெரியார் திக தமிழக செயற்குழு உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் , மாநகரத்தலைவர் சா.த.பிரபாகரன் , மாநகர செயலாளர் க.மதன் , மாநகர துணைத்தலைவர் ரவி சங்கர் , மாநகர துணைச்செயலாளர் கனகராசு , தமிழ்நாடு மாணவர் கழக அகரன் , புரட்சிகர இளைஞர் முன்னணியின் சுஜித் , மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் தா.மி.பிரபு , ஆதித்தமிழர் பேரவை வே.மனோகரர் , பெரியார் திக பால்.அறிவழகன் மற்றும் திரளான தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

pdk_16042009_004[காணொளி]ஈழமக்களை இத்தாலி சோனியா ஆதரவுடன் இந்தியப்படையின் துணையுடன் நச்சுவாயு குண்டுகளை கொன்றுக்குவிக்கும் சிங்கள இந்தியப்படையினை கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று (16.04.2009) மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

16 April 2009
[விரிவு]

PDK protest against using chemical weapons on Tamils

PDK protest against using chemical weapons on Tamils

[ Video Inside ] Protest was organised by PDK in Tuticorin,Tamil Nadu against the usage of the chemical weapons in Vanni by Sinhala and Indian Forces. The protest held i...
http://www.yarl.com/forum3/index.php?showtopic=56155

அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு

அம்பேத்கர் பிறந்த நாள் அன்று பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் பெரியார் திக தொண்டர்கள் மாலையிடு முழக்கமிட்டனர்.


இந்நிகழ்வில் மாநகரத்தலைவர் சா.த.பிரபாகரன் ,மாவட்ட பொருளாளர் செல்லத்துரை , மாநகர செயலாளர் க.மதன் , மாநகர துணைத்தலைவர் ரவி சங்கர் , மாநகர துணைச்செயலாளர் கனகராசு , தமிழ்நாடு மாணவர் கழக அகரன் , மாநகர செயலாளர் பால்.அறிவழகன் , மாவட்ட அமைப்பாளர் பால.சுப்பிரமணியன் , பெரியார் பிஞ்சுகள் வசந்த் , பி.யாழ் புலேந்திரன் , பிரபாகரன் , மதன்குமார் மற்றும் தோழர்கள்.

ஈழத்தில் நிரந்தர போர்நிறுத்தம் வேண்டி சேலத்தில் பேரணி

சேலம் ஆத்தூரில் 14.4.09 மாலை 4.30 மணிக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வலியுறுத்தி பேரணி நடத்தினர்.நகரம் முழுக்க நான்கு கி.மீ சுற்றி பரப்புரை நடத்திய பேரணி இறுதியில் பேருந்து நிலையத்தை அடைந்தது.

peranipsd

perani2psd

நிறைவுரை ஆற்றிய புதுகோட்டை பாவாணன்,ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் விசவாயு தாக்குதலை சுட்டிக்காட்டி பேசியவர், “இந்தியா தரும் ஆயுத உதவியால் தான் அங்கு ஈழ தமிழர்கள் படுகொலை செய்யபடுகின்றனர். சோனியாவே ராகுலே பிரியங்காவே நீங்கள் நீடூழி வாழனும் அப்பொழுது தான் அங்கே மலரபோகும் ஈழத்தை உங்களால் பார்க்கமுடியும் வயிறேரியுங்கள் ஈழம் மலர்ந்தே தீரும் தமிழக மக்களே ஈழ தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் தோற்கடிப்போம்” என்றார்.

pavaananpsd

meetingpsd

இவரின் எழுச்சி உரையை பொதுமக்கள் திரளாக திரண்டிருந்து கேட்டனர்.


செய்தி வந்துள்ள ஏனைய தளங்கள்...

newindianews

மீனகம்
Sunday, April 12, 2009

ஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள இந்திய இராணுவத்தினை கண்டித்து கோவை இராணுவ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


ஈழத்தில் தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்கள இந்திய இராணுவத்தினை கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று காலை கோவையில் பேரணி மற்றும் இராணுவ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர்.


இவ்வார்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி , பொள்ளாச்சி மனோகரன் , தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் ந.பன்னீர்செல்வம் , பொள்ளாச்சி பிரகாசு , திருப்பூர் அங்ககுமார், ஈரோடு இராம.இளங்கோவன் , நாத்திகஜோதி , சேலம் மார்ட்டின் , டேவிட் மற்றும் மாணவர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Wednesday, April 8, 2009

சேலத்தில் ஈழத்தமிழர் மீதான படுகொலையை கண்டித்து பெரியார் திக பேரணி ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்கள் மீது உலகநாடுகள் தடை செய்யப்பட்ட இரசாயன எறிகுண்டுகளை ஏவி வன்கொடுமை தாக்குதல் மேற்கொண்டுள்ள சிங்கள காடையர்களையும் அவர்களுக்கு துணை போகும் இந்திய அரசை கண்டித்தும் இக்கொடுமைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் முதல்வர் கருணாநிதி அரசை கண்டித்து கண்டன ஊர்வலம் ஆர்ப்பாட்டம் பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் சேலம் தீயணைப்பு நிலையத்தில் துவங்கி கண்டன முழக்கங்களுடன் பழைய பேருந்து நிலையம் மத்திய தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழினம் அனாதையாகி விட்டதா,

உலகில் தடைசெய்யப்பட்ட இரசாயன குண்டுகளுக்கு ஆயிரம் ஆயிரமாய் தமிழர்கள் பலியாகிரார்களே சிங்களர்களுக்கு ஆயுதம் வழங்கிவிட்டு தமிழர்களிடம் வாக்கு கேட்கவரும் காங்கிரசே போரை நிறுத்து,

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு,

சிங்கள இராணுவத்தை வழிநடத்தி செல்லும் இந்திய இராணுவ வல்லுனர்களை திரும்பபெரு,

தேர்தல் களம்காணும் அரசியல் கட்சிகளே ஈழப்போர்களத்தில் எம் இன தமிழர்களும் குழந்தைகளும் பிணமாவதை எதிர்த்து குரல் கொடுங்கள்

உணர்ச்சியுள்ள தமிழர்களே ஈழத்தில் போரை நிறுத்தும்வரை போராட வாருங்கள்

என முழக்கமிட்டு ஊர்வலமாக வந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க மாவட்ட செயலாளர் அ.சக்திவேல் தலைமை தாங்கினார். மற்றும் தோழமை அமைப்புகள் கலந்துகொண்டனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான பெரியார் திராவிடர் கழக செய்திகள் தளங்களில்

செய்திகளை வெளியிட்ட அனைத்து தளங்களுக்கும் நன்றி

1) சங்கதி:

08.04.2009
களத்தில் நின்று மோதும் புலிகளை சமாளிகக முடியாது திராணியற்று திணறும் சிங்கள இராணுவம், வழக்கம் போல தனது குள்ளநரித் தனத்தை வெளிபடுத்தியுள்ளது.


2) தமிழ்வின்

ஈழத்தமிழர் மீதான நச்சுக்குண்டு தாக்குதலை நடத்தும் இந்திய சிங்கள அரசைக்கண்டித்து தமிழகத்திலும் புதுவையிலும் போராட்டங்கள்
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2009, 07:34.21 AM ] []
ஈழத்தமிழர்கள் மீது தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை வீசும் இந்திய சிங்கள கூட்டு தமிழின அழிப்பைக்கண்டித்து தமிழ்நாட்டிலும் , புதுச்சேரியிலும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. [மேலும்]

3 ) மீனகம்

இந்திய இராணுவத்தின் நேரடியான ஆதரவோடு ஈழத்தமிழர்கள் மீது இரசாயன குண்டுகளை வீசுவதைக்கண்டித்து தமிழகத்திலும் புதுவையிலும் போராட்டங்கள்tn_07042009_006களத்தில் நின்று மோதும் புலிகளை சமாளிகக முடியாது திராணியற்று,திணறும் சிங்கள ராணுவம்,வழக்கம் போல தனது குள்ளநரித் தனத்தை வெளிபடுத்தியுள்ளது. சிறீலங்காவின் கொடூரத் திட்டத்திற்கு உதவியாக, இந்தியாவும் நேரடியாக இரசாயன விச வாயு குண்டுகளை வழங்கியுள்ளது.

4 ) TAMILNATIONAL :

PDK protested against the usage of chemical weapons

PDK protested against the usage of chemical weapons

[ Kovai Ramakritnan ]Periyar Dravida Kazhakam protested today at 5.00 PM, in front of ICRC, Coimbatore against the usage of chemical weapons by Sinhala army on Tamils, they say the chemical weapons were...
இந்தியாவின் நேரடித் தலையீட்டில், இரசாயன விச வாயு குண்டுகளை வீசி தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறீலங்கா அரசைக் கண்டித்து பெரியார் தி.க ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில்

களத்தில் நின்று மோதும் புலிகளை சமாளிகக முடியாது திராணியற்று,திணறும் சிங்கள ராணுவம்,வழக்கம் போல தனது குள்ளநரித் தனத்தை வெளிபடுத்தியுள்ளது. சிறீலங்காவின் கொடூரத் திட்டத்திற்கு உதவியாக, இந்தியாவும் நேரடியாக இரசாயன விச வாயு குண்டுகளை வழங்கியுள்ளது.

இரசாயன விச வாயு குண்டுகளை வீசி தமிழினப் படுகொலையை நடத்தும் இந்திய,இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியை கண்டித்து புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஏப்ரல்- 07 ந் திகதி காலை 11மணியளவில் புதுவை மாநகரின் மய்யப் பகுதியான அண்ணாசிலையருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சில மணி நேர இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், 100 க்கும் மேற்பட்ட பெரியார் தி.கவினர் கலந்துக்கொண்டனர்.


கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில பெரியார் தி.க தலைவர். லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். தந்தைபிரியன்,விஜயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரா.மங்கையர் செல்வன்(மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்புத் தலைவர்), கோ.சுகுமாரன்(மக்கள் உரிமை கூட்டமைப்பு) ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


லோகு.அய்யப்பன் தனது தலைமையுரையில், ஈழத்தமிழர்கள் மீது ராஜபக்சே அரசு நடத்தும் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்தும், தமிழகத்தை ஒரு மாநிலமாக உள்ளடக்கிய இந்தியா, தமிழினத்திற்கு செய்யும் வரலாற்றுத் துரோகத்தையும் விளக்கிப் பேசினார்.

மேலும், இத்தாலி.சோனியாவின் காங்கிரஸ் கட்சியை மண்ணைக் கவ்வ செய்ய உணர்வாளர்கள் தீவிரக் களப்பணியாற்ற வேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார்.

கோவையில்

பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் 07.04.2009 மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் வே.ஆறுச்சாமி அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் ந.பன்னீர்செல்வம் , உடுமலை கருமலையப்பன், பொள்ளாச்சி மனோகரன், திருப்பூர் அங்ககுமார், ப.பிச்சுமணி , ச.மணிகண்டன் மற்றும் பல கழக தோழர்களும் தமிழுணர்வாளர்களும் , மாணவர்களும் திரளாக பங்கேற்றனர். PUCL பொன். சந்திரன், காந்தி கதர் கிராமம் மார்கண்டன் , CPI(ML) வழக்கறிஞர் முருகேசன் மற்றும் அபுபக்கர் ஆகியோர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்திய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்குமான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.ஈழத்தமிழர்களின் துயரை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக நச்சுவாயுவினால் கொல்லப்பட்டது போல வேடம் அணிந்திருந்தனர். ஆர்ப்பாடாதில் பேசிய தோழர்கள், எந்தபோரிலும் நடந்திராத கொடுமைகள் ஈழத்தில் நடப்பதாகவும், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட நச்சுவாயு ஆயுதங்களை சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது பயன்படுத்தி இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும் அந்த ஆயுதங்களை கொடுத்தது இந்திய அரசுதான் என தங்களின் கண்டன குரலெழுப்பினர்.மேலும், இந்த எல்லா கொடுமைகளுக்கும் துணைபோகும் மத்திய காங்கிரஸ் அரசுக்கும் அதை கண்டிக்காமல் இருக்கும் கருணாநிதிக்கும் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் தங்களின் வாக்குகள் வழியாக தகுந்த பதிலளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.தோழர் கு. இராமகிருடிணன் தமது கண்டன உரையில், பாலஸ்தீனின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பொழுது உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தது அதனால் இஸ்ரேல் தமது ராணுவத்தை திரும்பப்பெற்றது, ஆனால், அப்பாவி தமிழ் மக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்தும் தாக்குதலை உலக நாடுகள் கண்டிக்காமல் இருப்பதற்கு காரணம் இந்தியா தான், இந்தப்போரில் தலையிட்டு அதை முடிவுக்கு கொண்டுவர நினைக்கும் உலக நாடுகளை இந்திய தடுத்துவருகிறது என்றுக் கூறினார். மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு சீக்கியர்களுக்கு நடைபெற்ற கொடுமைக்கு காரணமான காங்கிரஸ் காரர் ஜகதீஷ் டைடலேரை அவ்வழக்கிலிருந்து விடுவித்தமை பற்றிய தமது கேள்விக்கு சரியான பதில் தராத இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது ஒரு சீக்கிய பத்திரிக்கையாளர் தமது பாதணியை வீசினார். அதுபோல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டிக்காமல் சிறிலங்கா அரசுடன் நட்பு பாராட்டும் காங்கிரஸ் காரர்கள் தமிழக மண்ணில் கால் வைத்தால் நம் செருப்புகள் கொண்டுதான் வரவேற்க வேண்டும். இனி இப்படி கூடிப்பேசி பயனில்லை, எல்லாதமிழர்களும் செயலில் ஈடுபடவேண்டும். ஒவ்வொரு தமிழனும் காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் எதிரான தத்தமது கண்டனத்தை வெளிப்படுத்தவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய காங்கிரஸ் அரசுக்கும், அதை பதவிக்காக ஆதரித்து தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கருணாநிதியையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தூத்துக்குடியில்

நேற்றுக்காலை பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் வழக்கறிஞர்களும் , தமிழுணர்வாளர்களும் ஈழத்தமிழர்கள் மீது தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை போடுவதை தடுக்கக்கோரி மன்மோகன் சிங் கிற்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடாத்தினார்கள். இந்நிகழ்வில் வழக்கறிஞர் சங்க தலைவர் தா.மி.பிரபு , வழக்கறிஞர்கள் இக்னேசியஸ் , பொன்ராசு மற்றும் திரளாக பலர் கலந்துகொண்டனர்.


இதர தளங்களில் செய்திகள் :

தமிழ்வின்

மீனகம்

TAMILNATIONAL

சங்கதி


Thursday, April 2, 2009

புதுவை பெரியார் திகவினர் சீமானுக்கு வரவேற்பு

இன்று காலை (02.04.2009) தோழர் இயக்குநர் சீமானை நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக புதுச்சேரி நீதிமன்றம் அழைத்து வந்த போது அங்கு பெரும் திரளாக திரண்டிருந்த பெரியார் திராவிடர் கழக தோழர்கள் புதுச்சேரி மாநில தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் இயக்குனர் சீமானை வாழ்த்தியும் தமிழ் தேசிய தலைவர் மாவீரன் வே.பிரபாகரனை வாழ்த்தியும் நீதிமன்ற வளாகத்திலேயே குரல் எழுப்பினர். தமிழீழஆதரவாளர்கள் பலரும் வந்திருந்தனர்.


செய்திகள் வந்துள்ள தளங்கள் :

TAMILNATIONAL

யாழ்

தமிழ்வின்