Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Sunday, June 17, 2012

ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]

[காணொளி] சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு வாசகர் வட்ட நிகழ்வில் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் விளக்கமளித்து உரையாற்றியுள்ளார்.




http://www.periyarthalam.com/2012/04/20/eelam-tamil-tamilar-dravidar-kolathurmani-periyardk/

Sunday, May 27, 2012

கடைக்கோடித்தமிழனின் விடுதலைக்கும் ஆயுதம் திராவிடமே: கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், அப்துல் சமத் உரை

திராவிட இயக்க நூற்றாண்டான இன்று திராவிடர் இயக்க போராட்டத்தால் முன்னேறிய பலர் திராவிடர் இயக்க செயல்பாட்டை மறந்துவிட்டும் மறைப்பதற்கும் முயற்சித்து வருகின்றனர். திராவிடம் தான் தமிழர் விடுதலைக்கு எதிரானதாகவும், ஈழத்தமிழர் அழிவுக்கு காரணமே திராவிடர் இயக்கம்தான் என்று மேடையில் பேசி இந்தியப் பார்ப்பனிய அரசுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தெளிவினையும் வரலாற்றையும் அளிக்கும் வகையில்




http://www.periyarthalam.com/2012/05/01/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/

Friday, May 25, 2012

[video]இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: ஆனூர் செகதீசன், கு.இராமகிருட்டினன், விடுதலை க.இராசேந்திரன்

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: ஆனூர் செகதீசன், கு.இராமகிருட்டினன், விடுதலை க.இராசேந்திரன் உரை



Thursday, May 24, 2012

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: கொளத்தூர் மணி [Video]

[Video] இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: கொளத்தூர் மணி உரை


http://www.periyarthalam.com/2012/05/21/periyardk-voice-for-tamileelam-election-19052012/

Wednesday, September 2, 2009

பெரியாரிய குடும்ப துணைநல ஒப்பந்த விழா

வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தவிழா அழைப்பிதழ்




இணையர்கள்:

சி.ஆ.காசிராசன் - ச.கோமதி

விழாவினை நடத்திவைப்பவர் :
கொளத்தூர் தா.செ.மணி
(தலைவர் , பெரியார் திராவிடர் கழகம்)

இடம் : சோனா மகால், கோட்டூர் சாலை, பாளையங்கோட்டை.

நாள்: 06.09.2009 ஞாயிறு காலை 9.00 மணி

பெரியார் திராவிடர் கழகத்தின் நெல்லை மாவட்டச்செயலாளரும் தலைமைக்கழக உறுப்பினருமான சி.ஆ.காசிராசன் அவரது துணைநல ஒப்பந்த விழாவிற்கு அனைத்து தமிழுணர்வாளர்களையும் பெரியார் பாசறை வலைப்பூவின் வழியாகவும் தூத்துக்குடி , திருநெல்வேலி பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாகவும் அழைக்கிறோம்.

தொடர்புக்கு :

+91 98650 13393 - தூத்துக்குடி பால்.பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர், பெரியா திராவிடர் கழகம்.

+91 97914 26240 - நெல்லை ராசா, பெரியார் திராவிடர் கழகம், திருநெல்வேலி.

Saturday, August 1, 2009

தே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்ட கழக பொதுச்செயலாளர் விடுதலை





ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ஆயுத தளவாட வாகனங்களை வழி மறித்து மறியல் செய்ததற்காக, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழக பெரம்பளூர் மாவட்டப் பொறுப்பாளர் லட்சுமணனும் இன்று விடுதலை ஆனார்கள்.

கோவை நடுவண் சிறையிலிருந்த அவர்களை இன்று காலை (01.08.2009) பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி தலைமையில் தமிழுணர்வாளர்கள் பலர் சிறை வாயிலில் திரண்டிருந்து எழுச்சியோடு வரவேற்றார்கள்.

சிறையிலிருந்து விடுதலை ஆன இருவரும் கோவை காந்திபுரத்தில் இருந்த தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் படிப்பகம் சென்றனர்.

கட்சி அமைப்பு வேறுபாடின்றி அனைத்து தமிழுணர்வாளர்களும் சிறை வாயிலில் திரண்டிருந்தது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் ஈழத்துப்போராளிகளுக்கு உதவியதாக ஏற்கெனவே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர்.

இதர இணையங்களில் :


ஐபிசி தமிழ் இலண்டன்


மீனகம்

சிறிலங்காவிற்கு ஆயுதங்கள் கொண்டு சென்ற வாகனங்களை தாக்கிய தமிழுணர்வாளர்கள் இராமகிருட்டிணன் லெட்சுமணன் விடுதலை

Monday, July 27, 2009

பெரியாருக்கு இன்று விடுதலை

பெரியாரை வணிகமாக்கியவர்களிடமிருந்து பெரியாரை விடுதலை செய்து மக்களிடம் கொண்டு செல்ல போராடிய பெரியார் திக வினருக்கு வெற்றி.

பரந்த மனப்பான்மையற்ற ( குறுகிய புத்தியுடைய ) வீரமணி திகவினரிடமிருந்து பெரியாரை விடுதலை செய்ய போராடிய பெரியார் திகவினருக்கு பெரியாரின் குடியரசை விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்ற வாரம் பெரியார் திகவினரின் "இனி என்ன செய்யப்போகிறோம்?" குறுந்தகட்டினை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரியார் திராவிடர் கழகம் தமிழ்மக்களின் விடுதலை நோக்கி பெரியாரின் பாதையில்...........

Saturday, July 25, 2009

வீரமணி திக வினரே உங்களுக்கு பரந்த மனப்பான்மையே இல்லையா? - உண்மையைக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி

பெரியார் எழுத்துப் பேச்சுகளைத் தொகுத்து பெரியார் திராவிடர் கழகம் குடிஅரசுதொகுப்புகளை வெளியிடக் கூடாது என்று தி.க. தலைவர் கி.வீரமணி தொடர்ந்துள்ள வழக்கு ஜூலை 20 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை எடுத்த உடனே நீதிபதி தி.க. வழக்கறிஞர் வீரசேகரனைப் பார்த்து உங்களுக்கு பரந்த சிந்தனையே (BROAD THINKING) இல்லையா?” என்று கேட்டார்.

வழக்கறிஞர் வீரசேகரன் - பாரதியின் கவிதைகளில் திரிபுகள் வந்ததுபோல், பெரியார் கருத்துகளும் திரிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்கே - வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார்.

மீண்டும் நீதிபதி, நான் கேட்ட கேள்விக்கு, பதில் இல்லையே! உங்களுக்கு பரந்த சிந்தனை இல்லையா?” என்று கேட்டார்.

குடிஅரசுவெளியீட்டுக்கு, நீதிமன்றம் விதித்த தடையைத் தொடர வேண்டும் என்று, தி.க. வழக்கறிஞர் கேட்டார். தடையின் கெடு முடிந்துவிட்டது. இப்போது தடைவிதிக்க முடியாது; வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்; முதல் வழக்காக இதை விசாரிப்பேன்என்று நீதிபதி கூறினார்.

கழக சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோ ஆஜரானார்கள்.

-----------------

நேர்மையோடு கேள்வி கேட்ட நீதிபதி சந்துரு அவர்களுக்கு பெரியார் பாசறை தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Friday, February 13, 2009

Monday, February 2, 2009

தமிழக மாணவ உலகிடம் மண்டியிடும் ஈழத்தமிழன்

தமிழக மாணவ உலகிடம் மண்டியிடும் ஈழத்தமிழன் PDF Print E-mail
Monday, 02 February 2009
எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவ நண்பர்களே !

"தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்"

முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு,
உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்!
மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்!

அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும் ஆட்லரியாலும் அடித்து நூற்ருயிர்கள் உடல் சிதறிப் போனதும் ஆயிரக்கணக்கில் குற்றுயிராய் கிடப்பதுவும் அறிந்திருப்பீர்கள். இன்னும் தொண்டு நிறுவனங்களுக்கு தடை, சுதந்திர ஊடகம் இல்லை,

கொலைக்களத்தில் குரல் கொடுக்க யாருமற்ற ஏதிலிகளாய் நாம் உங்கள் முன்னே மண்டியிட்டு நிற்கிறோம்.

யார் வந்தார் எமை அணைக்க ?
யார் வந்தார் எமை பார்க்க?
யார் வந்தார் எமை தூக்க ?

நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா? நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?

சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாய் போய்விட்டது.
மரண படுக்கையில் என் இறுதி ஆசையை கேட்கிறேன் சகோதரா ! சாக முன் ஒரு முறை விடிவு மணியை கேட்க வேண்டும் நான்.

தொப்புள் கொடி உறவுகளே கூப்பிடு தூரத்தில் தானே உள்ளீர்கள். எங்கள் குரல் இன்னுமா கேட்கவில்லை.இல்லை இல்லை கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் முத்துகுமரன் ஒருவன் முளைவிட்டிருக்க மாட்டான்.

இந்திய படை வீரர்கள் முன்னணி களத்திலே ,
இந்திய போர் கப்பல் பருத்தித்துறைக் கடலிலே,
இந்திய உளவு விமானங்கள் முல்லைத்தீவு வான் பரப்பிலே.

சிறீலங்காவுடன் என்றால் விடுதலை புலிகள் என்றோ வெற்றி சூடி ஈழம் முடித்தே விடுவார்கள்.ஆனால் நாம் போராட வேண்டியதோ இந்திய வல்லரசின் துணையுடன் வரும் சிறீலங்கா இராணுவத்தோடல்லவா.

இது தாங்க முடியாத தம்பி தியாக சிகரம் முத்துக்குமரன் தன்மீது தீமூட்டி இதனை கொணர்ந்து இன்று இது காட்டுத்தீயாக பரவி தமிழகம் எங்கும் எழுச்சிக்கோலம் பூண வைத்துள்ளது.

மாணவ நண்பர்களே!

உங்கள் கைகள் தான் கறை படியாதவை
உங்கள் உணர்வுகள் தான் நேர்மையானவை
நீங்கள் தான் நாளைய தமிழகத்தின், தமிழீழத்தின் சிற்பிகள்.

உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
உங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும்
உங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும்

ஓயாது ஒலியுங்கள்
நீங்கள் ஓய்ந்தால்
நாங்கள் வீழ்வது மட்டுமல்ல
நாளை இருக்கவும் மாட்டோம்

இதனை எழுதும் போதும் குண்டுகள் கூவுகின்றன.

இப்போது உங்கள் கைகளில் மட்டும் தான் எங்கள் வாழ்வின் நொடித்துளிகள்.

கந்தக காற்றதனே சொந்தமென ஆகி
கண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகி
வந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம்
வாழ்வோ சாவோ இனிஎல்லாம் உம் கையில்.

உங்களை நம்பி இன்னும் வன்னியில் சாவுக்குள் வாழ்கின்றோம் எமக்கு ஓர் இனிய விடியல் பிறக்குமென்று.

ஒலிக்குமா உங்கள் குரல்
கிடைக்குமா உங்கள் கரம்

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,
சாவின் மடியில் உள்ள ஈழ தமிழர் சார்பில்
நான்


http://tamiloosai.com/index.php?option=com_content&task=view&id=10061&Itemid=68

Monday, January 19, 2009

மாணவர்களே! எழுந்து நில்லுங்கள் போதும்!

மாணவர்களே! எழுந்து நில்லுங்கள் போதும்!

  • 6 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள்.

  • இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் நூற்றுக்கணக்கானோர் பலியாகப் போகிறார்கள்

  • இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழ் இனப் படுகொலை நடந்து வருகின்றது.

  • அதற்கு இந்திய அரசு ஓடி, ஓடி உதவி வருகின்றது.

  • அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, வணிகர்கள் முதல் திருநங்கைகள் வரை எல்லோரும் பட்டினி கிடந்து பார்த்துவிட்டார்கள்.

  • தமிழக சட்ட சபையில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; முதல்வர் பிரதமரிடம் முறையிட்டார்.

ஆனால்,

    • தமிழினப் படுகொலை தொடர்கின்றது .

    • உலக நாடுகளைப் போல் இந்தியாவின் மெளனமும் தொடர்கின்றது.

    • அரசியல் கட்சிகள் கை கழுவிவிட்டன.

  • நாம் இன்று வேடிக்கைப் பார்த்திருந்தால், இன்னும் 100 ஆண்டுகள் கழித்து, “ உலகின் மிகப்பெரிய கல்லறை இலங்கை; அங்கும் தமிழர்கள் வாழ்ந்தார்கள்” என்று வரலாறு சொல்லும். ஏதாவது ஒரு புத்திசாலி மாணவன் கேட்கக் கூடும், “ கூப்பிடும் தூரத்தில் 6.5 கோடி தமிழர்கள் வாழ்ந்தார்களே, அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று .

நம்புங்கள், உங்களின் ஒருமித்த சிறு அசைவால் பல உயிர்களை காக்க முடியும்.

உரக்கச் சொல்லுங்கள் உலகுக்கு

நீங்கள் இனப்படுகொலைக்கு எதிரானவர்கள் என்று!

இன்னும் நம் உணர்வுகள் மலுங்கிவிடவில்லை என்று!

தமிழர் நாதியற்று போகவில்லை என்று!

21 ம் தேதி முதல் வகுப்பை புறக்கணிப்பீர் !



அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு

கடந்த 6 மாதத்தில் போர் என்ற பெயரில் மறைக்கப்பட்ட உண்மைகள்.

  • வீட்டுக்குள் இருந்தால் குண்டுகளால் சாவு நிச்சயம் என்று நம்முடைய ஊரோடு நாம் இடம்பெயர்ந்து காட்டிலும், பதுங்குகுழியிலும் வாழ்ந்தால்

  • பள்ளி கட்டடங்கள் பாதுகாப்பு இல்லாதவை என்று மரத்தடிகளில் நம் வீட்டு பிள்ளைகள் பாடம் கற்றால்

  • 3 மாதத்திற்கு மேலாக காட்டிற்குள் பழம், இலை, தழைகளை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தால்

  • நாம் விட்டு சென்ற வீடும், பசு மாடுகளும் ‘கிளஸ்டர்’ குண்டுகளால் அழிக்கப்பட்டால்(கிளஸ்டர் குண்டுகள் ஐ.நா. வால் தடை செய்யப்பட்டவை).

  • திடீரென்று வந்த இராணுவக்காரர்கள், நான்காவது தெருவில் உள்ள நம் நண்பனை ‘தமிழன்’ என்ற ஒரே காரணத்திற்காக சுட்டுவிட்டு போனால்

  • நம் ஊரை விட்டு ஓடும் போது, குணடு வெடித்து சிதறிய குழந்தை ஒன்றின் இடது கை ஒன்றை மிதிக்க நேர்ந்தால்

  • காட்டில், நம் பக்கத்து வீட்டுக்காரர் பாம்பு கடித்து துடிக்கக் கண்டால்.

  • அவரை தூக்கிச் சென்று சேர்த்த மருத்துவ மனையில் பாம்புக் கடிக்கு மருந்து இல்லாமல், அவர் சாகக் கண்டால்.பிணங்களை அடக்கம் செய்ய வழியில்லாமல், அங்கங்கே விட்டு விட்டு இடம்பெயர்ந்தால்.

  • கிறுத்துமஸூக்கு முன்னும், பின்னும் நம் பக்கத்து ஊரில் உள்ள தேவாலயத்தில் குண்டு வீசப்பட்டால்..

  • நாம் ஓடி ஒளிந்த ஒரு ஊருக்குள் நம்மைப் போல் 4.5 லட்சம் மக்கள் தஞ்சம் புகுந்து இருந்தால்.

  • இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் 500 பேர் பலியாகலாம் என்ற நிலையில்.

  • இதை உலகுக்கு சொல்ல ஒரு பத்திரிக்கையும் இல்லை என்ற சூழ்நிலையில்

இது தான், இலங்கையில் தமிழர்களின் இன்றைய நிலை. இதை நாம் அறிந்தால் துடித்து விடுவோம் என்றே நம் ஊடகங்கள் நமக்கு இதை மறைக்கின்றன. துடிப்போமா????

உண்மைகளை அறிய / வரலாற்றை அறிய

இந்த வலை தளங்களை பாருங்கள். / http://www.tamilnation.org/tamileelam.htm
http://www.puthinam.com/ - புதினம் / www.blackjuly83.com
http://www.tamilwin.com/ - தமிழ்வின் / www.tamilcanadian.com
http://www.sankathi.com/ - சங்கதி /
http://www.tamilnaatham.com/ - தமிழ்நாதம் /
http://www.pathivu.com/ - பதிவு /
http://www.nitharsanam.com/ - நிதர்சனம் /

Tuesday, December 30, 2008

தமிழகம் வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கிற்கு கறுப்புக்கொடி: பெரியார் திராவிடர் கழகம்

தமிழகம் வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கிற்கு கறுப்புக்கொடி: பெரியார் திராவிடர் கழகம்