Monday, October 25, 2010

இணையங்களில் தூத்துக்குடி தென் திருப்பேரை பெரியாரியல் விளக்க கூட்ட நிகழ்வு

newindianews:


மந்திரமா? தந்திரமா? [வீடியோ இணைப்பு]
[ திங்கட்கிழமை, 25 ஒக்ரோபர் 2010, 06:00.44 AM ] []
தூத்துக்குடி அருகே தென் திருப்பேரை என்னும் ஊரில் பெரியாரிய கொள்கைகளை விளக்கும் வகையில் மக்களிடம் மூட நம்பிக்கைகளை போக்க பெரியார் திராவிடர் கழகத்தின் பால்.அறிவழகன் அவர்கள் நடத்திய மந்திரமா? தந்திரமா? நிகழ்வினை நடத்தியுள்ளார். [மேலும்]

மீனகம்:

மந்திரமா? தந்திரமா? [காணொளி இணைப்பு]

pdk23102010007

தூத்துக்குடி அருகே தென் திருப்பேரை என்னும் ஊரில் பெரியாரிய கொள்கைகளை விளக்கும் வகையில் மக்களிடம் மூட நம்பிக்கைகளை போக்க பெரியார் திராவிடர் கழகத்தின் பால்.அறிவழகன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? நிகழ்வினை நடத்தியுள்ளார். மேலும் »

செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி


---
பெரியார் திராவிடர் கழகம் ,

தூத்துக்குடி ,

தொடர்புக்கு : +91 98650 13933

Saturday, October 23, 2010

பெரியாரியல் கொள்கை விளக்க கூட்டம்





சாதி மதங்களை ஒழிக்கும் பெரியாரின் மனிதநேயப்பணி முடிக்க பெரியாரியல் கொள்கை விளக்க கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரையில் 23.10.2010 சனிக்கிழமை மாலை 6.00 நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு ஆழ்வை ஒன்றிய செயலாளர் இரா.உதயகுமார் தலைமையேற்றார், ஆழ்வை ஒன்றிய செயலாளர் நாத்திகம் பா.முருகேசனார், தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் வெ.பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன், மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார், மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வின் இறுதியில் சாமியார்களின் பித்தலாட்டத்தை விளக்கும் மந்திரமா? தந்திரமா ? நிகழ்வினை பால்.அறிவழகன் நடத்தினார்.

நிகழ்வில் க.மதன், சா.த.பிரபாகரன், அமிர்தராசு, அகரன், நெல்லையிலிருந்து மாவட்டச்செயலாளர் சி.ஆ. காசிராசன், தமிழ்ப்புலிகள் அமைப்பின் நெல்லை பொறுப்பாளர் மாயா தோழர்களுடன் கலந்துகொண்டார்

இந்நிகழ்வின் முழுச்செலவினையும் அருணா ஒலி-ஒளி அமைப்பக உரிமையாளர் கடம்பா முருகன் ஏற்றுக்கொண்டார். தோழர்களுக்கு இரவு உணவினை ஆழ்வை ஒன்றிய செயலாளர் உதயக்குமார் குடும்பத்தினர் தங்கள் இல்லத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.















Friday, October 8, 2010

ஏதிலி முகாம் மக்களை வெளிநாட்டிற்கு அனுப்ப முயன்றதாக பெரியார் திகவின் புதுவை மாநிலத்தலைவர் கைது




தமிழகத்திலுள்ள ஈழ ஏதிலிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப முயன்றதாக பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத்தலைவர் லோகு. அய்யப்பன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.



பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன் 1995-ல் ராவணன் பகுத்தறிவு இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். 2001-ல் ஜெயலலிதாவுடன், வீரமணி கூட்டணி அமைத்தபோது வெளியேறிய கொளத்தூர் மணி, கோவை.ராமகிருஷ்ணன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் பெரியார் திராவிடர் கழகத்தை உருவாக்கினர்.

இதற்கு கொளத்துர் மணி தலைவரானார். அப்போது பெரியார் திராவிடர் கழகத்துடன் தனது ராவணன் பகுத்தறிவு இயக்கத்தை லோகு.அய்யப்பன் இணைத்துக்கொண்டார்.

2005-ல் பிரான்சு நாட்டிற்கும், 2006-ல் இலங்கைக்கும் சென்று பலரை லோகு.அய்யப்பன் சந்தித்து வந்துள்ளார்.

இதன்பின் இயக்குனர் சீமானுடன் லோகு.அய்யப்பன் நெருங்கிப்பழகி வந்தார். இயக்குனர் சீமான் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது நாள்தோறும் இவரது வீட்டிலிருந்து உணவு வழங்கி லோகு.அய்யப்பன் தனது நட்பை வெளிப்படுத்தினார்.

செய்தி: மாலைமலர்

Sunday, October 3, 2010

அக் 2 செயல்படாத தீண்டாமை ஒழிப்பு பிரிவினை இழுத்து மூடும் போராட்ட காணொளி

அக் 2 செயல்படாத தீண்டாமை ஒழிப்பு பிரிவினை இழுத்து மூடும் போராட்ட காணொளி


Saturday, October 2, 2010

periyardk_oct02_clip0.wmv



தமிழ்நாட்டில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புபிரிவின் திருச்சி அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது. குழந்தைகள் பெண்கள் உட்பட 3000 இளைஞர்கள் கைதாயினர்.


திருச்சி வேர் அவுஸ் கிறிஸ்தவக் கல்லறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திருச்சி பழையகோவில் பங்குக்கு உட்பட்ட பகுதிகளான உப்புப்பாறை, செங்குளம் காலனி, சத்தியமுர்த்தி நகர் பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாயினர்.

சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளின் தோழர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாகி உள்ளனர். திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபம், சௌடீஸ்வரி மண்டபம், பீமநகர் பாலாஜி மண்டபம், கே.கே. நகர் காவல்துறை சமுதாயக்கூடம் ஆகிய மண்டபங்களில் கைதான தோழர்கள் அடைத்துவைக்கப்பட்டனர். மண்டபங்களில் இடம் இல்லாததால் திருச்சி நகரைத் தாண்டி தோழர்களை அழைத்துச்சென்று நடுரோட்டில் இறக்கிவிட்டது போலீஸ். கைது கிடையாது, வீட்டுக்குச் செல்லுங்கள் என திருப்பி அனுப்பினர்.

தோழர்கள் தங்களை அவசியம் கைது செய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுடன் போராடியபிறகு புதிது புதிதாக மண்டபங்களை தேர்வுசெய்து அவற்றில் தோழர்களை அடைத்தனர். பீம நகர் பகுதியிலும் கருமண்டபம் பகுதியிலும் தோழர்கள் தங்களை அவசியம் கைது செய்யவேண்டுமென வலியுறுத்தி நடுரோட்டில் மறியல் செய்யத் தொடங்கிய பிறகே அனைவரையும் காவல்துறை கைது செய்தது. கைது எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட உளவுத்துறை அதிகாரிகள் பெரும் முயற்சி செய்தும் தோல்வியடைந்தனர்.



கடவுளை மறமனிதனை நினை