Tuesday, August 26, 2008

பாலை குறுந்தகடு - தமிழ்ப்பாவலர் வ.ஐ.ச.செயபாலன்

தோழர்களே கடந்த 4ம் பக்கல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய துறையினரால் தமிழ் பாவலர் வ.ஐ.ச.செயபாலன் அவர்களின் பாலை குறுந்தகடு வெளியிடப் பட்டது. குறுந்தகட்டை பாலுமகேந்திரா வெளியிட்டுவைத்தார். பாடல்கள்பற்றியும் பாடல்களை பாடிய பாவலரின் துணைவியார் வாசுகி அம்மையாரின் குரல் வளம்பற்றியும் இயக்குநர் பாலுமகேந்திராவும் கவிஞர் மேத்தாவும் கவிஞர் நா முத்துக்குமாரும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் டாக்டர் வி.அரசுவும் பேசினார்கள். இசை இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் என்று சிலர் கருத்துரைத்தார்கள். இந்த தயாரிப்புக்கு இந்தியப் பணம் உரூவா 1,50,000 ஒன்றரை இலட்சம் உரூவா செலவாகிற்று. ஆனந்த விகடனில் பாலை விமர்சனக் குறிப்பு இடம்பெற்றுள்ளது. குறுந்தகட்டை நமது வலைப்பூ ஊடாக உலகத்தமிழருக்கு வழங்குகிறோம். பாடல்கள் பிடித்திருந்தால் உங்கள் அன்பளிப்பை தமிழ் பாவலர் வ.ஐ.ச.செயபாலன் அவர்களின் வங்கிக் கணக்கிற்க்கு அனுப்புங்கள் நன்றி.

இந்திய விலைப்படி உரூவா 100/-

தமிழகத்தோழர்கள் பணம் செலுத்தி குறுந்தகடுனை பெற்றுக்கொள்ளலாம்.


நன்றி.பாலை குறுந்தகடு = வ.ஐ.ச.ஜெயபாலன்
அன்புக்குரிய தமிழ் இசை, கவிதை ஆர்வலர்களுக்கு,
நலம் இத்தோடு எனது பாலை இசைத் தொகுப்பு இணைத்துள்ளேன். யாரும் தரவறக்கம் செய்துகொள்ளலாம். மிகுந்த சிரமத்துக்கிடையில் நானும் எனது மனைவியும் கடன் பட்டு தயாரித்த இசைத் தொகுப்பு. உங்களுக்கு பாடல்கள் பிடித்திருந்தால் மட்டும் வசதிஉள்ளபோது உங்கள் அன்பளிப்பை எனது வங்கிக் கணக்கிற்க்கு அனுப்பவும். உங்கள் கரிசனை மேலும் இலக்கியப் பணிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்.
AC No: 0532 51 18328
Shanmugampillai Jayapalan
Postbanken, Norway

visjayapalan@gmail.com
00919941484255
அன்புடன்
.ஜெயபாலன்
பாடல்களை எழுத்துவடிவிலும் ஒலி வடிவிலும் தரவேற்றம் செய்துள்ளேன்

பாடல் - 1


புலரும் வேளையில் யன்னல் ஓரமாய்
கவிதை பாடுகின்ற தாரோ
பூக்கள் சிந்திடும் முல்லைப் பந்தரில்
பாக்கள் சூடுகின்றதாரோ - குயிலே


துயரம் தீயெனச் சுட்டபோதிலும்
சுடரும் பொன் உந்தன் வாழ்வு
பொழுது புலர்ந்தது எழுக கவிஞனே
என்று பாடுகின்றதாரோ - குயிலே


வசந்தம் உன்னிடம் சொன்ன சேதிகள்
எனக்கு சொல்லலாகாதா
கசந்த போர்க்களம் நாண மானிடம்
சேர்ந்து பாடக் கூடாதா - குயிலே


http://www.gmobil.net/paalai/01- pularum_Velayil.mp3

பாடல் - 2கண்ணம்மா இந்த பனிகொட்டும் இரவினிலே
இலையற்ற தனிமரமாய் உன்னையே நினைத்திருந்தேன்

என்று உன் பூவிரல்கள் தீண்டிடுமோ என்று
ஏங்கிடும் வீணையைப் போல் துயருறுதே நெஞ்சம்பூத்திடும் கனவினில் கானகங்கள் என்றும்
புலர்ந்திடும் வசந்தத்தின் கற்பனைகள்
தேற்றும் உன் காதலில் பாரதியின்
சிந்துகள் பாடிடும் ராத்திரிகள்
http://www.gmobil.net/paalai/02 - Track 2.mp3

பாடல் -3வெண்பனி மீது பொன்மலர் சூடும்
செங்கதிரோனை வாழ்த்துகிறோம்
கண்பனி சூடி எம் நினைவோடு
ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம்

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே


பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று
பாசத்தில் வாடும் நெஞ்சங்களே
பனியையும் மீறி பசுமையில் நிமிரும்
பைன்மரம் போன்ற சிங்கங்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரேபூமியில் என்றும் அகதிகள் என்று
புழுதி மண் போல சுழலுவதோ
தாயகம் மீண்டு துயர்களை வென்று
தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே
http://www.gmobil.net/paalai/03 - Track 3.mp3

பாடல் - 4


மேலை அணைகளிலே கிழிந்து
மெலிந்த காவேரியாய்
ஏழைக் கவிமனசு ஒடிய
உன்மத்தம் கொண்டதென்ன


ஈழக்கரைகளிலே நலிந்து
ஏங்கிடும் அகதிகள் போல
வாழத்துடிக்குதடி நெஞ்சு வா
எனும் மந்திரச் சொல் கேட்டு


கண்ணில் மனசு உதிர உனது
காதலில் நான் எரிந்தேன்
உன்னில் உயிர் படர அதனை
உரித்துரித்தே எறிந்தாய்


ஐம்புல சிப்பியுள்ளே தைத்து
அறுத்திடும் விழிச்சுடரே
செம்புலப்பெயல் நீராய் நாங்கள்
சேர்ந்திடல் தர்மமடி
http://www.gmobil.net/paalai/04 - Track 4.mp3பாடல் - 5
வெண்பனி கொட்டும் காலையில் நாங்கள்
பள்ளிக்குப் போகையிலே
சின்னமுயல் என் அருகினில் வந்து ஹாய்
என்று சொல்லியது

ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
சின்ன முயலே சின்ன முயலே
பள்ளிக்கு போகலையா
முயல்களின் பள்ளி புல்வெளி தானே
உனக்கிது தெரியலையா
ஐயையோ புரியலையா
புல்வெளி எங்கும் வெண்பனி போர்வை
சாப்பிட ஏதும் இல்லை
அம்மா தந்த ரொட்டியில் பாதி
தந்திட தடையும் இல்லை
எமக்கினி கவலை இல்லை
http://www.gmobil.net/paalai/05 - Track 5.mp3


பாடல் - 6


மாரி மழைக்கரத்தால்
பாய் விரிச்ச பச்சைப்புல்லு
பச்சைப்புல்லு சூடிக்கொண்டு
பவுசு காட்டும் வண்ணப்பூவு
சிட்டாகப் பறந்து வந்து
சிந்து பாடத் துடிக்குதடி
நீ எட்டாது போன பின்பும்
உன்னை நெஞ்சு நினைக்குதடிகூதலாம் குழவிக் கூடு
குலைந்து போன வாடைக்காலம்
காதலாம் தங்கத் தோணி
கவிழ்ந்து போன வாழ்க்கைக் கோலம்
வண்டாகப் பறந்து வந்து
மலர்ச் சோலை நடுவினிலே
உன்னை எண்ணி உபவாசம்
இருக்கிறதே இன்பம் கண்ணேநாளை ஒரு நாளையிலே
நடை வரம்பில் கோல மயில்
ஏழை என்னைக் காணக் கூடும்
இதயம் கொஞ்சம் நோகக் கூடும்
யார் மீதும் குற்றம் இல்லை
கோபம் கொள்ள ஞாயமில்லை
ஆலாய் விழுது விட்டு
அறுகாக வேர் பரப்பி
மூங்கிலாய்த் தோப்பாகி
வாழ வேண்டும் எந்தன் கண்ணே
http://www.gmobil.net/paalai/06 - Track 6.mp3

பாடல் - 7


பொன்னாய் உருகும் மாலையிலே - முடி
புனைந்து அரசாளும் சூரியனேதென்றல் காற்றின் மோகனமாய் - ஒரு
சிறு குயில் அழைப்பது கேட்கலையாவானவில் கிண்ணத்தில் மது ஏந்தும் -இள
வாசமலர்களின் கனவுகளோ
வண்ணங்களாலே விண் திரையில் - நீ
வார்க்கிறதெல்லாம் கவிதைகளோ
http://www.gmobil.net/paalai/07 - Track 7.mp3


பாடல் - 8


பயிரோ மழைக்கேங்கும் -கொடும்
பாலையோ நதியிடம் யாசிக்கும்ஏழையின் காவியங்கள்
உயிர்த்திட உன்னிடம் கையேந்தும்உயிரினில் இனித்திடவும்
உருக்கிடும் துயரெல்லாம்
அன்பே காதலால்
கருகிடவும்

யாழினை எடுத்தேனடா கண்ணா கண்ணா
இனி நதியென பெருகட்டும்
கவிதை என்றாய்

என் வாழ்க்கையின் தவப்பயனே -சொன்ன
மந்திர வார்த்தைகள் மறந்தனையோ

வானுக்குள் மதிபோல - அந்த
மதியினுள் சுடரும் செங்கதிர்போல

உன் யாழுக்குள் தேன்போல
என் ஊனுக்குள் உயிரானாய்
உள்ளத்தில் ஒளிர்கின்ற கவியானாய்
வீணுக்குள் தள்ளுவையோ - என்னை
விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ
http://www.gmobil.net/paalai/08 - Track 8.mp3

பாடல் -9


கள்ளெனக் கொட்டுதடி வள்ளி
கால வெளியினில் போதைநிலா
அள்ளுது வா வா என
அழைத்திடும் பூங்குயில் கவிமனசைவாழ்வென்னும் இனிப்பையெல்லாம் அள்ளி
வார்க்குதே வசந்தத்தின் தேன் இரவு
மூழுதே மேனி எங்கும் தாபமாம்
இன்ப வேள்வியின் மோகனத்தீநினைவென்னும் நெருஞ்சி முள் பாலையிலே
நில்லென்று சொல்லி நீ போனதெங்கே
துணை வரும் நிலவுக்கே தெரியுமடி
என் நெஞ்சத்தில் நீயன்றி யாருமில்லை
http://www.gmobil.net/paalai/09 - Track 9.mp3

பாடல் - 10


இனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை
இனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை
இனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்
இனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடுஜாதி மத பேதமின்றி
செந்தமிழர் கூடி
நீதி நெறியோடு என்றும்
வெற்றி வாகை சூடி
பாங்கொலிக்கும் பள்ளி
பாடும் கோவில் மணிகள்
மங்களமாய் எங்களது
மண்ணில் வாழ்வு எழுகசிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு
http://www.gmobil.net/paalai/10 - Track 10.mp3

Sunday, August 24, 2008

செப்.17 இல் - 27 தொகுதிகள் - ‘குடிஅரசு’ முன்பதிவுத் திட்டம்-

ஆய்வாளர்கள், தமிழின உணர்வாளர்களின் நீண்டகால விருப்பம் செயல்வடிவம் பெறுகிறது।பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் முழுமையாகத் திரட்டி சிதைக்காமல் தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன் பெரியார் திராவிடர் கழகம் பெருமையுடன் ஒப்பளிக்கிறது!தமிழ்நாட்டின் வரலாற்றோடு பிணைந்து நிற்கும் பெரியாரின் ‘எழுத்தும் பேச்சும்’ கால வரிசைப்படி தொகுப்புகளாக, உங்கள் கரங்களில் தவழ இருக்கிறது.தமிழகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய பெரியாரின் புரட்சிகர பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஏட்டில், புதைந்து கிடந்த பெரியார் சிந்தனைகளை தேடிப் பிடித்து,1925 முதல் 1938 முடிய சுயமரியாதை இயக்கக் காலம் முழுவதும் தொகுக்கப்பட்டு 27 தொகுதி களாக, வெளிவர இருக்கின்றன.ஒவ்வொரு தொகுதியும் 400 பக்கங்களுக்கு மேல்!ரூ.5400 விலையுள்ள இத் தொகுதிகள் முன் பதிவு திட்டத்தின் கீழ் ரூ.3500-க்கே உங்களுக்கு கிடைக்கும்.ரூ.3500 முன் பணம் அனுப்பி, முன் பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி தேதி, ஆக°ட் 31.வரைவோலையாகவோ (டிராப்ட்), பணவிடை வழியாகவோ (மணியார்டர்) மட்டும் அனுப்ப வேண்டும். காசோலைகள் (செக்) அனுப்ப வேண்டாம்.பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி - 27 தொகுதிகளும் வெளி வருகின்றன.ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இடம் பெற வேண்டிய அரிய தொகுப்பு!இந்தத் தொகுதிகளை நீங்கள் விரும்பும் நூலகத்துக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும், ஆய்வு மய்யங்களுக்கும் நினைவுப் பரிசுகளாக நீங்கள் வழங்கி, என்றென்றும் நிலைக்கும் புகழுக்குரிய கடமையை ஆற்றலாம்.ஏற்கனவே கழகத்தால் வெளியிடப்பட்ட மூன்று தொகுதிகளும், பல புதிய சேர்க்கை களோடு, கூடுதல் பக்கங்களில் இப்போது, இத் தொகுதிகளோடு இணைத்து, மீண்டும் வெளியிடப்படுகிறது.தமிழின உணர்வாளர்களே! பெரியாரிய லாளர்களே! சமூக மாற்றத்துக்கு உழைக்கும் தோழர்களே!முன்பணம் செலுத்தி, உங்கள் தொகுதிளை உறுதி செய்து கொள்ளுங்கள்!

அனுப்ப வேண்டிய முகவரி: வரைவோலையாகவோ (D.D), பணவிடையாகவோ (எம்.ஓ.) அனுப்பலாம்.‘T.S. Mani’ என்ற பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும்.மேட்டூர் அணையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலைகளாக இருத்தல் வேண்டும்.காசோலை (Cheque) ஏற்க இயலாது.- பெரியார் திராவிடர் கழகம்

Friday, August 22, 2008

இந்த வாரக் குட்டு- ஓ பக்கங்கள் - ஞாநி-குமுதம் 27-08-2008

இந்த வாரக் குட்டு- ஓ பக்கங்கள் - ஞாநி-குமுதம் 27-08-2008

இந்த வாரக் குட்டு

பெரியாரின் எழுத்து, படைப்புகள் எதுவும் இன்னும் நாட்டுடைமையாக்கப்படாமல் இருப்பதற்காக, `பெரியார் பல்கலைக்கழக மாணவமணி' கலைஞர் கருணாநிதிக்கும், `பல்கலைக்கழகத்தின் மொத்தக் குத்தகைதாரர்' கி.வீரமணிக்கும் இ.வா.குட்டு.

குடியரசு இதழ் தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடக் கூடாது என்றும், உரிமை தன்வசம் உள்ள அமைப்பிடமே உள்ளது என்றும் வீரமணி எச்சரிக்கை விடுத்திருப்பது ஓர் அற்பமான செயல்.

தன் கருத்தைத் தனக்குப் பின்னரும் பரப்புவதற்காகவே கடும் உடல் நலக் குறைவுடன் சிக்கனமாக வாழ்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றார் பெரியார். அவற்றை விட மிகப் பெரிய சொத்து அவருடைய கருத்துகள். அவை மக்களின் பொதுச் சொத்து. எவரும் அவற்றை வெளியிட்டுப் பரப்பலாம் என்ற நிலையை உடனடியாக தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இலவச டி.வி பெட்டி தருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய்களை வீணாக்கும் அரசு, வீரமணிக்கு ஒரு கோடி ரூபாயாவது கொடுத்து, பெரியாரை விடுவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளுக்குள் கலைஞர் கருணாநிதி செய்யத் தவறினால், மீண்டும் குட்டுவேன். செய்தால் 129 பூச்செண்டுகள் அளிப்பேன்.

இந்த வாரக் குட்டு

பெரியாரின் எழுத்து, படைப்புகள் எதுவும் இன்னும் நாட்டுடைமையாக்கப்படாமல் இருப்பதற்காக, `பெரியார் பல்கலைக்கழக மாணவமணி' கலைஞர் கருணாநிதிக்கும், `பல்கலைக்கழகத்தின் மொத்தக் குத்தகைதாரர்' கி.வீரமணிக்கும் இ.வா.குட்டு.

குடியரசு இதழ் தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடக் கூடாது என்றும், உரிமை தன்வசம் உள்ள அமைப்பிடமே உள்ளது என்றும் வீரமணி எச்சரிக்கை விடுத்திருப்பது ஓர் அற்பமான செயல்.

தன் கருத்தைத் தனக்குப் பின்னரும் பரப்புவதற்காகவே கடும் உடல் நலக் குறைவுடன் சிக்கனமாக வாழ்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றார் பெரியார். அவற்றை விட மிகப் பெரிய சொத்து அவருடைய கருத்துகள். அவை மக்களின் பொதுச் சொத்து. எவரும் அவற்றை வெளியிட்டுப் பரப்பலாம் என்ற நிலையை உடனடியாக தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இலவச டி.வி பெட்டி தருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய்களை வீணாக்கும் அரசு, வீரமணிக்கு ஒரு கோடி ரூபாயாவது கொடுத்து, பெரியாரை விடுவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளுக்குள் கலைஞர் கருணாநிதி செய்யத் தவறினால், மீண்டும் குட்டுவேன். செய்தால் 129 பூச்செண்டுகள் அளிப்பேன்.

பெரியாரின் எழுத்து, படைப்புகள் எதுவும் இன்னும் நாட்டுடைமையாக்கப்படாமல் இருப்பதற்காக, `பெரியார் பல்கலைக்கழக மாணவமணி' கலைஞர் கருணாநிதிக்கும், `பல்கலைக்கழகத்தின் மொத்தக் குத்தகைதாரர்' கி.வீரமணிக்கும் இ.வா.குட்டு.

குடியரசு இதழ் தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடக் கூடாது என்றும், உரிமை தன்வசம் உள்ள அமைப்பிடமே உள்ளது என்றும் வீரமணி எச்சரிக்கை விடுத்திருப்பது ஓர் அற்பமான செயல்.

தன் கருத்தைத் தனக்குப் பின்னரும் பரப்புவதற்காகவே கடும் உடல் நலக் குறைவுடன் சிக்கனமாக வாழ்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றார் பெரியார். அவற்றை விட மிகப் பெரிய சொத்து அவருடைய கருத்துகள். அவை மக்களின் பொதுச் சொத்து. எவரும் அவற்றை வெளியிட்டுப் பரப்பலாம் என்ற நிலையை உடனடியாக தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இலவச டி.வி பெட்டி தருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய்களை வீணாக்கும் அரசு, வீரமணிக்கு ஒரு கோடி ரூபாயாவது கொடுத்து, பெரியாரை விடுவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளுக்குள் கலைஞர் கருணாநிதி செய்யத் தவறினால், மீண்டும் குட்டுவேன். செய்தால் 129 பூச்செண்டுகள் அளிப்பேன்.

கடலூர்.வீரமணியின் கண்ணியம் பாரீர்! - ஈரோட்டுக்கண்ணாடி

முக்கிய அறிவிப்பு
தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துகள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்துணையும் அவர்களால் 1935-இல் உருவாக் கப்பட்டு, 1952இல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும் (Intellectual Properties).இவைகளை அச்சில் வெளியிட்டு விளம்பரமும், வருவாயும் தேட தனிப்பட்ட சிலரும், சில இயக்கங் களும், பதிப்பகங்களும் முயலுவதாகத் தெரிய வருகிறது!அப்படிச் செய்வது சட்ட விரோதமாகும்.மீறி அச்சிட்டு நூலாகவோ, மற்ற ஒலிநாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கி.வீரமணி ஆயுள் செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
(நன்றி:விடுதலை 12/08/2008- பக்கம் 6)
தண்ணீரில், தத்தளிப்பவன் கட்டுமரமென நினைத்து..முதலையை பற்றியது போல்அந்தோ, பெரியார் மறைந்தாரே...என்று கலங்கி நின்று, தத்தளித்த பெரியார் தொண்டர்கள்- கடலூர்.வீரமணியை தலைவராக் ஏற்றுக்கொண்டார்கள்.1983 -ல் தொடங்கிய ஈழப்போராட்டம், தமிழின உணர்வை வீறுக்கொண்டெழச் செய்தது. நம் இனப்போராட்டத்திற்கான தளபதி என கருஞ்சட்டைகளால் அடையாளப்படுத்தப்படடார் வீரமணி. 1991- இராசீவ் மரணத்திற்குப்பின், தமிழர் தளபதியின் வாள் உறையிலிருந்து பூனைக்குட்டிக்கள் வெளிவரத்தொடங்கின. பெரியார் நிறுவனங்களின் பாதுகாப்பிற்கான , தளபதியின் இராசதந்திரம் என மனதைத் தேற்ற வேண்டியதாகியது. இவரின் "இராசதந்திரம்" குறித்து ,மேலும் தெரிந்துக்கொள்ள, இன்றும் பெரியாரியல் குடும்பமாகவே, வாழ்ந்துவரும் கவிஞர்.குயில்தாசன் - அற்புதம் அம்மாவையும்(பேரறிவாளனின் பெற்றோர்) கேட்டுப் பார்க்கலாம். பார்ப்பன எதிர்ப்பையே அடியுரமாகக் கொண்டு வளர்ந்த திராவிடர் கழகத்தின் -தாய் கழகத்தின் பொதுச்செயலாளர் என்று பீற்றிக்கொள்ளும் வீரமணி, பார்ப்பன ஜெயலலிதாவிற்கு" சமுக நீதி காத்த வீராங்கனை" பட்டம் தந்த போது தான் வீரமணியின் சுயநலத்தை, கருஞ்சட்டைத்தொண்டர்கள் முழுதாக புரிந்துகொண்டனர்.

ஊழல் வழக்கில் சிறையிலிருந்த பார்ப்பன ஜெயலலிதாவை சிறையில் சந்திப்பதும்,அவருக்கு பிறந்த நாள் லாவணி பாடுவதுமாக, அய்யாவின் பணி முடிக்க ஆவன செய்தவர் தான் இந்த கடலூர்.வீரமணி.

தமிழ்நாடு தமிழருக்கே ! என தேசிய சுயநிர்ணய உரிமைக்கான சங்க நாதம் செய்த பெரியாரின் சொத்திலிருந்து, பார்ப்பன பி.ஜே.பி யின் கார்கில் கபட நாடகத்திற்கு நிதி வழங்கிய இவரின்,பெரியார் பார்வையை என்னவென்று புகழ்வது????

௨000 ஆம் ஆண்டில், ஜெயலலிதா ஆதரவு போதையிலிருந்த வீரமணி, அன்றைய கலைஞர் ஆட்சி ஒழிய வேண்டும், கருநாடகத் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும், கலைஞருக்கு அவமானம் நேர்ந்து- ஜெயாவின் மனம் குளிர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.சமரச முயற்சியில் ஈடுபட்ட தோழர். கொளத்தூர்.மணிக்கு முட்டுக்கட்டையிட்டதுடன், 30ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரியக்கமே மூச்சாகக் கொண்டு உழைத்த அவரை தி.க வை விட்டு நீக்கி தமிழின வரலாற்றில் தனது துரோகத்தையும் முறையாக பதிவு செய்துகொண்டார்.

பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு, கலைஞராலேயே, "போயஸ் தோட்டத்து பூசாரி" என புகழப்பட்டவர் தான் வீரமணி.

தான் வழிப்பட்டு வந்த ஜெ. யின் கடைக்கண் பார்வை, பெரியாரின் சொத்துக்களின் விழுந்தவுடன் கருப்புச்சட்டை மாட்டிக்கொண்டு, "சண்டித்தனம்" எதுவும் செய்யாமல் கோபாலபுரத்திற்கு நடையை கட்டினார்.

இப்படியாக போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரத்திற்கும் ஏன், சத்தியமூர்த்தி பவனுக்கும் கூட அரசியல் தரகில் ஈடுபட்ட வீரமணி பெரியார் தத்துவப் பிரச்சாரத்தை முழுதாக மறந்தாலும், பெரியாரின் " தமிழர் தலைவர்" பட்டத்தை தனது பெயருடன் ஒட்டி வைத்துக் கொண்டார்.

பெரியாரின் எழுத்துக்கள், திடலில் செல்லரித்து கிடக்க... இவரின் " வாழ்வியல் சிந்தனைகள்" பள பள புத்தகமாக வெளிவருகின்றன.

1925_1938வரையிலான குடிஅரசு- 27தொகுதிகளாக பெரியார் திராவிடர் கழகத்தால் வெளிவர இருக்கிறது என செய்தி அறிந்து இடியோசை கேட்ட அரவமாக சீறுகிறார் கடலூர்.வீரமணி.

தன் செய்யத்தவறிய " வரலாற்றுக்கடமையை" கொளத்தூர்.மணி கையில் எடுத்துக்கொண்டதை, சகிக்கமுடியாமல், பொறாமையில், பொச்செரிச்சலில் தான் மேற்கண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெரியாரின் எழுத்துக்கள் வெளிவரக்கூடாது என காவிக்கூடாரங்கள் கூக்குரலிட்டால் அர்த்தம் புரிகிறது.

  • பெரியாரின் குடிஅரசு வெளிவரக்கூடாது ; மக்களிடம் சென்று சேரக்கூடாது என்று கருப்புச்சட்டை வீரமணி சொல்வது ஏன்?

  • விளம்பரமும், வருவாயும் தேட குடிஅரசுதொகுதி வெளியிடுவதாக கூறும், வீரமணியே, 1973முதல்2008வரை இதற்குத் தான் நூல்கள் வெளியீட்டிர்களா?

  • 2003வரை தி.க வின் பொதுசெயலாளராக இருந்த நீங்கள், தோழர்.கொளத்தூர்.மணியை தலைவராகக் கொண்டு பெரியார் தி.க செயல்பட தொடங்கியவுடன், தனக்குத் தானே தி.க தலைவராக முடிசூட்டிக்கொண்டு, பெரியார் நாற்காலியை துண்டுப் போட்டு பிடித்துக்கொண்டது ஏன்?

  • கொளத்தூர்.மணி பெரியார்.தி.க தலைவரானதால், தி.க தலைவரான நீங்கள், அவரைப்போல, குடும்ப சொத்தை அடமானம் வைத்து, பெரியார்- குடிஅரசை அவர் வெளியீடுவது போல் வெளியிடத் தயாரா?

  • பார்ப்பனர் அல்லாதார், வேதம் படிக்கக்கூடாது; கேட்கக்கூடாது என்கிறது....மனுநீதி பார்ப்பனீயம்! பெரியாரின் எழுத்துக்களையும் மறைப்பொருளாக்கி,திடல் வாழ் ஒரத்த நாட்டுப் பார்ப்பனர்களின் பாதுகாப்பில் பெரியார் நூல்களை செல்லரிக்க விடுவது தான் உங்கள் நவீன பார்ப்பனீயமா?
  • குடிஅரசு ஏட்டின் துணை ஆசிரியராக இருந்த கலைஞரின் ஆட்சியில், தி।க தலைவரின் தூண்டுதலின் பேரில் குடிஅரசு தொகுதிகள் வெளியிடுவதற்காக தோழர்.கொளத்தூர்.மணியின் மீது "சட்டபூர்வ நடவடிக்கை" எடுக்கப்படுவது எந்த பெரியார் தொண்டருக்கும் கிடைக்காத பெருமையை அவருக்குத் தேடித் தரும்.
நன்றி- http://erottukannadi.blogspot.com/index.html#8092210017512559020

Tuesday, August 12, 2008

மானமிகு தலைவருக்கு கருப்புச்சட்டைக்காரனின் மனம் திறந்த மடல்- அனுப்பிய ஆண்டு 2002

மானமிகு தலைவருக்கு கருப்புச்சட்டைக்காரனின் மனம் திறந்த மடல்- அனுப்பிய ஆண்டு 2002

மானமிகு தலைவருக்கு கருப்புச்சட்டைக்காரனின் மனம் திறந்த மடல்

மதிப்பிற்குரிய மானமிகு தலைவரே,
வணக்கம். உங்களின் வீராப்புமிக்க அறிக்கைகளை படித்து நெகிழ்ந்து போனேன். மதசார்பற்ற அணியின் அச்சாணியே தாங்கள்தான் என்பதும், அன்னை தி.மு.க வின் கொள்கை பரப்பும் செயலாளர் என்பதுவும் தமிழகம் 2 ஆண்டுகளுக்கு மேலாக அறிந்து வந்து கொண்டிருக்கிறது. என்னதான் பெரியார் சொன்னாலும் கேட்காத தமிழக மக்கள் உங்களின் வார்த்தையினை கேட்டு பச்சை தமிழச்சியை! உங்கள் பாசமுள்ள சகோதரியை தமிழக முதல்வராக்கியது உங்களுக்கு தமிழகத்திலுள்ள மக்கள் செல்வாக்கையே காட்டுகிறது. ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திட்டம் தமிழகத்தில் வந்திட தாங்கள் சொன்னால் யாரும் கேட்பது இல்லையே ஏன்? இந்த மக்கள் செல்வாக்கை வைத்து தாங்கள் மந்திரியாக - ஆசைப்படுகிறார்களாம் உரத்தநாடு தோழர்கள் ? இது உண்மையா? இல்லை கொள்கை தடுக்கும் என்கின்றீர்களா? கண்டிப்பாக இராது.
பழைய பச்சை அட்டை குடியரசில் பெரியார் அன்றே சொல்லியுள்ளார் "குறிப்பிட்ட காலத்திற்கு பின்னால் திராவிடர் கழகம் தேர்தலில் நிற்கும் தோழர்கள் மந்திரிகளாக பவணிவருவார்கள்" என்று சொல்லிவிடுங்கள் உங்களை யார் எதிர்த்து கேட்பார்கள்? குடியரசு இதழ் அதுவும் பழைய பச்சை அட்டை குடியரசு தமிழ்நாட்டில் யாரிடம் உண்டு. எல்லாவற்றையும் விடுதலையில் விளம்பரபடுத்தி தாங்கள்தான் வாங்கிவிட்டீர்களே பின் எப்படி இருக்கும். கவலை வேண்டாம். தேர்தல் கட்சிகள் நடத்தும் கலந்தாய்வில் முத்தாய்ப்பாய் உங்கள் முகம் தெரிகிறது. சமுதாய கட்சிக்கு அங்கு என்ன வேலை ? என எனக்கு கேட்க தோன்றுகிறதா? இல்லையே. செயலை செய்து முடிப்பதற்கு முன்பே பாராட்டி பட்டம் எல்லாம் தருகின்றீர்களே. தாங்கள் பட்டம் வழங்கும் நிறுவனமா நடத்துகின்றீர்கள்? 69% இடஒதுக்கீட்டிற்கு 31(C) சட்டம் தந்து இந்தியாவிற்கே வழிகாட்டிய தலைவர் என தாங்களுக்கு அன்று சுவரொட்டியெல்லாம் ஒட்டினேன். அந்த 69% இடஒதுக்கீடு இன்னும் நடைமுறைக்கு வரவில்லையாமே?. 31(C) சட்டம் என்னானது.
தாங்கள் கொண்டுவந்த சட்டம் என்பதால் தி.மு.க காரர்கள் செயல்படுத்தவில்லை போலும். இப்பொழுதுதான் உங்கள் அன்பு சகோதரி ஆட்சியாயிற்றே இந்தாண்டே 69% இட ஒதுக்கீடு கொண்டுவர சொல்லுங்கள். சமூக நீதி காத்த வீராங்கனையல்லவா? செய்வார்? தாங்கள் நம்புகின்றீர்களோ என்னவோ? நான் நம்புகிறேன் ஏனெனில் சிந்தனைச்செல்வி ஆட்சிக்கு வந்தால் பெரியார் பணி எல்லாம் முடிந்துவிடும் இனி நமக்கு வேலை இல்லை. என 1995 இல் திருச்சி பெரியார் மாளிகையில் அன்றைய துணைப்பொதுச்செயலாளரும், இன்றைய பொருளாளரும் உங்கள் வகுப்பறை தோழருமான அந்த நபர் பேசியதை நான் மறக்கவில்லை. வழக்கறிஞர்-படிப்பை முடித்தவர், நிறைய அரசியல் தெரிந்தவர் அதுவும் உங்கள் நண்பர் பேசியது தவறாக இருக்குமா? அப்படி தவறாக பேசியிருந்தால் தாங்கள்தான் கண்டித்திருப்பீர்களே!
தாங்களிடம் ஒரு முக்கிய விடயம் முன்பு விடுதலை உண்மையில் விளம்பரமாகும் குடும்ப நலநிதி, திராவிடன் நலநிதி இரண்டும் கழக நிறுவனம் இல்லையாமே?! தாங்கள் பினாமி பெயரில் நடத்துகின்றீர்களாமே, கணினி மென்பொருள் நிறுவனம் பெரியார் திடலிலிருந்து அடையாறுக்கு உங்கள் மகனின் நிறுவனமாக மாறிவிட்டதாமே? உண்மையா? பணத்திற்காக கொள்கையை விட்டுவிடுவீர்களாமே. அதனால்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொள்கையை மட்டும் எடுத்துக்கொண்டு மக்கள் பணி செய்கிறது என பாமரன் கூட கூறுகின்றானே.
பணம் , புகழ் , பாராட்டிற்கு மயங்காத பெரியார் சீடர்கள் பலர் இருக்க இவற்றிற்கு மயங்கி வாய் உளருவது ஏன்? நிரந்தர முதல்வர் 5 லட்சம் ரூபாய் கொடுத்த போது " உயிருள்ளவரை நன்றி மறக்க மாட்டேன் " என சொன்னது ஏன்? தங்கக்கடற்கரை சாலையில் கப்பல் வீடு தந்ததற்கு "சமூகநீதி காத்த வீராங்கனை"என்ற பட்டம் தந்தீர்கள். பெரியார் விருது கொடுத்து உங்களை கௌரவித்த போது பாப்பாத்தியின் உருவில் பெரியாரையே பார்த்தீர்களாமே. ஆத்திகர்கள் கூட இப்படி உளறியது கிடையாது. ஏன்? எதற்கு?எப்படி? என பெரியார் கேள்வி கேட்டு பரிசோதிக்க சொன்னார். நானும் ஏன்? எதற்கு?எப்படி? பார்ப்பன பெண்ணிடம் பெரியாரை கண்டார் என கேட்டுப்பார்க்கிறேன் விடை தெரியவில்லை. கடந்த 1999 முதல் தங்களது தொடர் அறிக்கைகள் எல்லாம் புத்தகமாக வந்துள்ளதாம் திடல் தோழர்கள் சொன்னார்கள். நான் இரண்டொரு அறிக்கையினை மட்டுமே விடுதலையில் படித்தேன். அது எல்லாம் எவ்வளவு கருத்தாளம் கொண்டது.பெரியார் பிறந்த நாள் விழா 2000ம் வருடம் நடத்திய பொழுது பெரியார் விழா 2000 என பெயரிட்டு பெண்ணுரிமை காக்கும் புண்ணியவதிதான் தலைமை ஏற்க வேண்டும் என தாங்கள் முடிவு செய்தது எவ்வளவு பொருத்தம்.
இந்திய அரசு பணி அலுவலர் திருமதி.சந்திரலேகா முகத்தில் திராவகம் வீசியது, முன்னாள் தமிழக பெண் அமைச்சர் சுப்புலட்சுமியை கைது செய்து கொடுமைப்படுத்தி பெண்கள் நலம் காத்த நங்கையல்லவா? அது போகட்டும் பெரியார் விழா முடிந்த மறுநாளே, அந்த சனியன் தொலைய திருநள்ளாரில் சனியன் கோவிலில் பூசை செய்தாராமே உங்கள் சகோதரி, பத்திரிக்கையில் செய்திபடித்தேன். அந்த பூசை பொருள் எல்லாம் உரத்தநாடு பகுத்தறிவாளர்கள் வாங்கி கொடுத்ததும், கருப்புப்பூனை படை பாதுகாப்பு இதற்கு சரியல்ல என்று கருதி தாங்கள் உரத்த நாடு கருஞ்சிறுத்தை படை பாதுகாப்பை கொடுத்தீர்களாமே!!!? இதை எல்லாம் பகுத்தறிவு என்று எப்படி சொல்கின்றீர்கள்.
ஒருமுறை சென்னையில் திரு.மு.கருணாநிதி அவர்கள் பெரியார் முன்னிலையில் பேசும் போது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என சொன்னபோது தந்தை பெரியார் தனது கை தடியால் மேடையில் தட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம் ... அன்று அவருக்கு (பெரியார்) கோபம் வந்தது. இன்று நீங்கள் செய்யும் கேவலமான ஈன செயலை கண்டால் பெரியார் தனது கைத்தடியால் உங்களையல்லவா ஓட ஒட அடித்திருப்பார்? பெரியாரை கேவலப்படுத்த மானமிகு தலைவரே பெரியார் தொண்டர்களையா அடகு வைக்க வேண்டும். தன்னலம் பாராது தனது சொந்த பணத்தை கொண்டு பெரியார் பணிமுடிக்கும் பெரியார் தொண்டர்கள் சேவையை தாங்கள் போன்றோர் செய்யும் கெடுமதி செயலால் கேவலப்படுத்தாதீர்கள். பலரும் தலைமை ஏற்க இயலாது. அது அதிகார வரம்பை மீறும் செயல் என்பதால் தலைவர் என ஒருவரின் பின் தொடர்வது வழக்கம். அந்த தலைமையே தடம் மாறினால் அவரை தூக்கி எறிவதும் தொண்டனின் கடமை. தாங்கள் தடம் மாறுகின்றீர்கள் என்பதை மட்டும் அறிவு நாணயத்தோடு சொல்ல விரும்புகிறேன்.
மானுட நேயம்தான் பெரியாரின் கொள்கை. இந்த மாபெரும் பணிக்காக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஓய்வு அறியாது சுற்றி பணியாற்றி , தன் வாழ்வில் சுகத்தைவிட துக்கங்களையே சந்தித்த மாபெரும் தலைவனின் பெயரில் வியாபாரம் செய்யும் பார்ப்பன தொண்டர் மானமிகுவே தாங்களிடம் சேவை என்பது தேவை என ஆகிவிட்டதே ஏன். உயர்நிலை பதவி முதல் கடைநிலை பதவி வரை எல்லாவற்றிற்கும் தமிழன் வர வேண்டும் என சொல்லும் தாங்கள் தமிழர்களை ஆட்சி செய்ய மட்டும் ஒரு பாப்பாத்தி வர வேண்டும் என துடிப்பதன் காரணமென்ன? அந்த கன்னட பாப்பாத்தி திடல் நாயகர் தாங்களுடன் கைகுலுக்கி கொண்டதால் சூத்திரச்சியாகிவிட்டாரா? அப்படியானால் காஞ்சிமடம் சென்று , பாத பூசை செய்து தாங்கள் பார்ப்பானாக மாறிவிடமுடியுமா? பார்ப்பான் என்னிலையிலும் தன் குணத்தை விட்டுக்கொடுக்கமாட்டான் என்று பல மேடைகளில் பேசினீர்களே. பார்ப்பாத்தி மட்டும் விட்டுக்கொடுப்பாளா?
குருவாயூர் கோவிலுக்கு யயனை குட்டி கொடுப்பதுவும், அதனை பராமரிக்க லட்சங்கள் பலகொடுப்பதும்தான் பகுத்தறிவு என்கிறதா திடல் கூட்டம்? இதனை கண்டித்து விடுதலையில் ஒருவரி கூட எழுத இயலவில்லையே ஏன்? இதுதான் பார்ப்பன விசுவாசமா? தமிழகத்தில் எல்லா குக்கிராமங்களிலும் பெரியார் கொள்கை பரவி விட்டதாக சொல்லி தில்லியிலும் , அமெரிக்காவிலும் முகாமிட்டு பெரியார் பணி செய்யும் தாங்கள்தான் உண்மையான பெரியார் தொண்டர்! பெரியார் எழுதிய பாதி நூல்களை பதிப்பு இல்லாமல் செய்துவிட்டீர்கள். பெரியார் என்னும் சொல்லை அரசியலில் வியாபாரமாக்குவார்கள், தாங்களோ அவரையே வியாபாரமாக்கி வெற்றிக்கொண்டுவிட்டீர்கள். டர்பன் மாநாட்டில் சாதியையும்-இன ஒதுக்கல் போன்று விவாதிக்க வேண்டும் ஐ.நா. மன்றம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் திரண்டு தனது கண்டனத்தை இந்திய அரசிற்கு தெரிவித்தது தாங்கள் அறிக்கையோடு நிறுத்திக்கொண்டீர்களே ஏன்? போராட களம் இறங்கவில்லை? , அன்பு சகோதரிகள் உங்கள் புதிய பார்ப்பனக்கூட்டாளிகள் கோபித்துக்கொள்வார்கள் என்பதற்காகவா போராட்ட அறிவிப்பு ஏதுமில்லை? தி.மு.க ஆட்சியால் விலைவாசி உயர்வை கண்டித்து வெகுண்டு எழுந்தீர்களே! இப்பொழுது நியாய விலைக்கடையில் மண்ணெண்ணையை மறந்துவிட்டார்கள். அரிசி 12 கிலோ என பல ஊர்களில் வழங்குகிறார்களே இது பற்றி வாய் திறப்பதில்லையே ஏன்?
வல்லம் பொறியியல் கல்லூரி, வளாகம் , ஊறுகாய் , பப்படம் , அப்பளம், மாடு வளர்ப்பு மையம் என மக்களுக்கு தொண்டு செய்வதாக சொல்லி கனடா நாட்டு உதவி பெற்று அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் நடத்துகின்றீர்களாமே உண்மையா? சாதியில்லை என சொல்லும் திராவிடர்கழகத்தில் கோட்டூர் சின்னையாபுரத்து சாதி சங்க தலைவர் மதுரைக்காரர் தென்மாவட்ட பிரச்சார செயற்குழுவிற்கு தலைவராமே!? என்னவாயிற்று சாதிமறுப்பு கொள்கை? சாதிமறுப்பை, சாதியிடமே சரணடைய வைத்துவிட்டீர்களே இது உங்களின் மகத்தான சாதனைதான். " தோழர் வெண்மணியை திடலில் வைத்து ஒரு பெண் என்றும் பாராமல் அடித்து உதைத்து கேவலப்படுத்தி பெரியார் சொன்ன பெண்ணுரிமையை பெரியார் திடலிலேயே சிறை வைத்துவிட்டீர்களே...?
பெரியார் சொன்ன சாதிமறுப்பு கொள்கை கனவாகிவிட்டது. பெண்ணுரிமை, பேசாமடந்தையாகிவிட்டது பார்ப்பனீய எதிர்ப்பு பார்ப்பனரின் பாதத்தில் மண்டியிடுகின்றது. பிரச்சார நிறுவனமோ கல்வியை வியாபாரமாக்கி பணம் பார்க்கிறது. பெரியார் சொன்ன சிக்கனம். இன்று குளிர்சாதன அறையில் மதிமயங்கிவிட்டது. மாற்று கட்சியின் ஊதுகுழலாய், ஏவல் நாயாக கருப்புச்சட்டை தோழனை மாற்றி காட்டிய மானமிகுவே உங்கள் போன்று இதுவரை பார்ப்பனீயத்திற்கு காவடி தூக்கிய அடிவருடிகளை தமிழகம் கண்டிருக்காது. கொள்கை எல்லாம் காற்றில் பறக்க அமெரிக்காவிற்கு விமானத்தில் பறக்கும் பார்ப்பன விசுவாசியே பெரியார் கொள்கை காத்திட புறப்பட்ட வீரர்கள் தன்னலம் கருதா பெரியார் பணி செய்யும் தோழர்கள் கைகோர்த்து உருவாக்கியுள்ள " தந்தை பெரியார் திராவிடர் கழகம்" பெரியாரின் பணி முடித்தே தீரும். அதுவும் அணு அளவு கூட கொள்கை பிறளாது. அன்று மானமிகு தலைவரே உங்களை பெரியார் கரும்படை மன்னிக்காது. தமிழகம் , ஒடுக்கப்பட்டோர் என வரிசையாய் பெரியாரின் படைகலன்கள் உங்கள் முகத்திரையினை கிழிக்கும். அதுவரைதான் உங்கள் கொட்டம். "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" அணிவகுக்கிறது. துரோகிகளே உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். எதிரிகளையும், துரோகிகளையும் தனியே நின்று பெரியார் கரும்படை வெல்லும்.

அழியட்டும் துரோக கும்பல்
அமையட்டும் பெரியார் காலத்து தமிழகம்


- தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோன்றிய பின்பு 2002 இல் மானமிகு வீரமணிக்கு தூத்துக்குடி பெரியார் பாசறை தோழர்கள் அனுப்பிய மடல்.

Sunday, August 10, 2008

சிங்கள அரசின் தாக்குதலை கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் சிங்கள அரசினைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்ட செய்திகளை சங்கதி இணையதளத்தில் காண இங்கே சொடுக்கவும்

http://www.sankathi.com/live/content/news_full.php?subaction=showfull&id=1218347109&archive=&start_from=&ucat=3&

Saturday, August 9, 2008

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள அரசைக் கண்டித்தும் பாதுகாக்கத் தவறிய இந்திய அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள அரசைக் கண்டித்தும் பாதுகாக்கத் தவறிய இந்திய அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(09.08.2008) மாலை 5 மணியளவில் தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி பெரியார் திராவிடர்கழக நகரத்தலைவர் தோழர் கோ.அ.குமார் தலைமையேற்க மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு மற்றும் ஆழ்வை ஒன்றிய செயலாளர் தோழர் நாத்திகன் இ.சேதுராமசாமி முன்னிலை வகிக்க ஆதித்தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் தோழர் க.கண்ணன் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!
பெரியார் தி.க. ஆர்ப்பாட்டம்!
தமிழக மீனவர்களை
சுட்டுத்தள்ளும் சிங்கள காடையரை
கண்டித்து ஆர்ப்பாட்டம்!
இந்திய அரசே! இந்திய அரசே!
மீனவர்கள் மீதான தாக்குதலை
வேடிக்கை பார்க்காதே! வேடிக்கை பார்க்காதே!
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!
மீனவர்கள் படுகொலையை
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!
தமிழக அரசே! தமிழக அரசே!
மீட்டெடு! மீட்டெடு!
கச்சத்தீவை மிட்டெடு!
சிங்களவன் கடலிலே
மீனவர்களை சுடுகிறான்
தடுக்க வேண்டிய இந்திய அரசு
மௌனம் கலைவது எப்போது!
இந்தியாவில் பயிற்சி பெற்று
இந்தியாவில் ஆயுதம் வாங்கி
இந்தியனையே கொல்லுறான்
தடுக்க வேண்டிய இந்திய அரசு
சிங்களக்காரன் விருந்துக்குப்போகிறான்
தமிழக மீனவர்களுக்கு
பாதுகாப்பிற்கு
ஆயுதம் வழங்கு! ஆயுதம் வழங்கு!
கொடுக்காதே! கொடுக்காதே!
தமிழக மீனவர்களை
சுட்டுத்தள்ளும் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்காதே! ஆயுதம் கொடுக்காதே
இந்திய அரசே! ஆயுதம் கொடுக்காதே!
பயிற்சி அளிக்காதே! பயிற்சி அளிக்காதே!
தமிழக மீனவர்களை
சுட்டுத்தள்ளும் சிங்களவனுக்கு
பயிற்சி அளிக்காதே! பயிற்சி அளிக்காதே!
கச்சத்தீவு தமிழர்நிலம்
தமிழர் உரிமையை நிலைநாட்டிட
தமிழர்களே அணிதிரள்வீர்!
பெரியார் திராவிடர்கழக தலைமைக்கழக பேச்சாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.
அவரை தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.தமிழரசன் , உலக திருக்குறள் பேரவையைச் சேர்ந்த தோழர் மோ.அன்பழகன் மற்றும் பெரியார் தி.க.வின் மாவட்ட துணைத்தலைவர் தோழர் வே.பால்ராசு ஆகியோர் தங்களது கண்டனத்தினை மக்கள் மத்தியில் பதிவு செய்தனர்.
இறுதியாக கிறித்தவ வாழ்வுரிமை இயக்கத்தினை சேர்ந்த பனி.சுந்தரிமைந்தன் கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பாக நிறைவுரை வழங்கினார். பெரியார் தி.க. நகர துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன் தனது கண்டனத்தை பதிவு செய்து நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் பெரியார் திராவிடர்கழகத்தின் மாவட்டச்செயலாளர் சா.க.பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச்செய்லாளர் தோழர் க.மதன், நகரச்செயலாளர் பால்.அறிவழகன் , மாணவரணி தோழர் வ.அகரன், தோழர் சி.அமிர்தராசு, தோழர் கே.சந்திரசேகர் ,சு.மகராசன் , தலைமைக்கழக உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன், நெல்லை இராசா, நெல்லை அரியமுத்து போன்றோர் கலந்துகொண்டனர்.
மேலும் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சி।சுஜித், ஆதித்தமிழர் பேரவை மாவட்டசெயலாளர் தோழர் இரா.வே.மனோகர், தோழர் மு.சேகுவேரா, தோழர் அ.செந்தில்குமார், தோழர் ச.காளிமுத்து மற்றும் திரளாக தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


செய்தி: வ.அகரன்
நிழற்படம்: பால்.அறிவழகன்