Saturday, May 30, 2009

பெரியார் திக தோழர் ஆ.பாரதிராசாவின் தந்தையார் மரணம்

பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் ஆ.பாரதிராசா அவர்களின் தந்தையார் இன்று (30.05.2009) சனிக்கிழமை மாலை மரணமடைந்துள்ளார். அவரது அடக்கம் நாளை (31.05.2009) ஞாயிறு மாலை 4 மணியளவில் அவரது ஊரான தூத்துக்குடி மாவட்ட, ஒட்டப்பிடாரத்திலுள்ள முப்பிலிப்பட்டியில் நடைபெறும். தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.

தொடர்புக்கு:

ஆ.பாரதிராசா : +91 99625 62332

Friday, May 29, 2009

20000 மக்கள் கொல்லப்பட்டு அடையாளமில்லாமல் அழிக்கப்பட்டதற்கான ஆதாரம்

Expose of the hidden massacre; 20,000 Tamil civilians killed in days

E-mail Print PDF

[Video Inside] Times photographs expose Sri Lanka’s lie on civilian deaths at beach - by Catherine Philp and Michael Evans.

On Wednesday evening the Sri Lankan delegation at the United Nations Human Rights Council in Geneva was celebrating after its victory in fending off an investigation into alleged war crimes committed by its army.

மேலும் படங்களை காண: http://tamilnational.com/news-flash/1183-the-hidden-massacre-20000-killed.html

ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்தற்காகவும், பெரியார் திக பொதுச்செயலாளரை தே.பா.ச. கைது செய்த இந்திய அரசைக்கண்டித்து தூத்துக்குடியல் ஆர்ப்பாட்டம்


ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காகவும் பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை கு.இரமகிருட்டிணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த இந்திய அரசைக்கண்டித்தும் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

audio: http://download822.mediafire.com/015cthxmkzug/andmitdydoy/pdk28052009.mp3



இன்று(28.05.2009) மாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி 1 ஆம் நுழைவு வாயில் காந்திசிலை அருகில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் முன்னிலையில் ஆதித்தமிழர் பேரவையின் சு.க.சங்கர் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தினை தொடங்கிவைத்தார்.



புரட்சிகர இளைஞர் முன்னணியின் இரா.தமிழரசன், இந்தியப்பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆ.மோகன்ராசு ஆகியோர் கண்டன உரையாற்றிய பின்னர் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றினார்.



அவரது தனது உரையில் ஈழத்தமிழரையும் தமிழக மீனவர்களையும் கொன்ற இராசபக்சேவுக்கு ஆதரவாக ஐநாவில் ஓட்டளித்த இந்திய அரசையும் அதற்கு ஆதரவான கருணாநிதியையும் கண்டித்து உரையாற்றினார். தன் மகன்களுக்காக பதவி வாங்க விமானம் மூலம் தில்லி சென்று பேசும் கருணாநிதி இலட்சக்கணக்கான என் தமிழ் மக்கள் செத்துக்கொண்டிருப்பதை தடுக்க காகிதத்தில் எழுதி அனுப்புவதேன் என்று கருணாநிதியின் உண்மை உருவை மக்களுக்கு எடுத்துக்கூறினார்.



ஈழத்துக்கு ஆதரவாக செயல்படும் தமிழுணர்வாளர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைப்பதையும் ஈழமக்களை கொல்ல இந்தியா வாகனம் மூலம் அனுப்பிய கனரக ஆயுதங்களை தடுத்து நிறுத்திய பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் மேல் தேசிய பாதுகாப்பு சட்டத்தினை பாய்ச்சிய இந்திய அரசைக்கண்டித்தும் உரையாற்றினார்.



இந்நிகழ்வில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கத்தின் அருட்திரு பணி.சுந்தரிமைந்தன் அவர்கள் நிறைவுரையாற்றினார். பெரியார் திராவிடர் கழகத்தின் செ.செல்லத்துரை நன்றியுரையாற்றினார். நிகழ்வில் பெரியார் திக வின் சா.த.பிரபாகரன், கோ.அ.குமார், அறிவுபித்தன், வே.பால்ராசு, க.மதன், வ.அகரன், ரவிசங்கர், கனகராஜ், ஆதித்தமிழர் பேரவையின் வே.மனோகர்,கண்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் லெனின், சுஜித் மற்றும் திரளான தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.


இணையத்தில் செய்திகாண:
www.ibctamil.co.uk
மீனகம்

Thursday, May 21, 2009

பெரியாரிய போராளி நாத்திகன் இ.சேது இராமசாமி வீரவணக்க நிகழ்வு

தூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் ஆழ்வை ஒன்றிய செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மாவட்டத்தலைவரும் ஆன நாத்திகன் இ.சேது இராமசாமி அவர்களின் வீரவணக்க நிகழ்வு.

நாள்: 21.05.2009

Tuesday, May 19, 2009

பெரியார் தொண்டர் சேது இராமசாமி உலக வாழ்வை நிறைவு செய்துவிட்டார்

தூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் ஆழ்வை ஒன்றிய செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மாவட்டத்தலைவரும் ஆன பெரியார் தொண்டர் கருப்புச்சட்டை சேது இராமசாமி நேற்றிரவு(19.05.2009) உலக வாழ்வை நிறைவு செய்தார். அவரது இறுதி ஊர்வலம் நாளை காலை 8 மணியளவில் தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் முதல் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தொடங்குகிறது.












--

பெரியார் திராவிடர் கழகம்,
தூத்துக்குடி .

தொடர்புக்கு:
கோ.அ.குமார், பெரியார் திக தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் : +919952412667,

வெ.பால்ராஜ் , மாவட்ட துணைத்தலைவர் : +919943286674

Monday, May 4, 2009

பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி இன்று விடுதலை

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்ட தமிழுணர்வாளரும் பெரியார் திக தலைவருமான கொளத்தூர் மணி அவர்கள் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் “ஈழம் எரிகிறது” என்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு பேசினார். அப்போது இந்திய இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிராக பேசியதாக திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த மார்ச் 2-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் திண்டுக்கல் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்நிலையில் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து கொளத்தூர் மணியின் தம்பி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் பேரில் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதனைதொடர்ந்து கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கேட்டு திண்டுக்கல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வக்கீல் கணேசன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதி பசீர் அகமது விசாரித்து, கொளத்தூர் மணிக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். அதில் 3 மாதத்திற்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொளத்தூர் மணி நேரில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்று நீதிபதி பசீர் அகமது கூறியுள்ளார்.

வெள்ளியன்று(மே 1) கோர்ட்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அவரின் ஜாமீன் உத்தரவு இன்று 4-ந் தேதி (திங்கட்கிழமை) கோர்ட்டு மூலம் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது. இன்று மாலை 4 மணியளவில் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.