Wednesday, June 24, 2009

ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள் (2)

ஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:

கொரியா

ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த காலத்தில் கொரிய தேசியம் ஒடுக்குமுறைக்குள்ளானது. கொரிய மொழி, கலாச்சாரம் சிதைக்கப்பட்டன. கொரியாவின் கலாச்சார சொத்துகள் ஜப்பானால் சூறை யாடப்பட்டன. 1900களின் தொடக்கத்தில் கொரிய விடுதலை இயக்கங்கள் வீச்சோடு எழுந்தன. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உட்ரோ உல்சன், பாரி° அமைதி மாநாட்டில் சுய நிர்ணய உரிமை தொடர்பாக ஆற்றிய உரையானது கொரிய மாணவர்கள் மத்தியில் விடுதலைக் கிளர்ச்சியைத் தீவிரமாக்கியது. அத்தகைய எழுச்சிகளுடன் மார்ச் 1 இயக்கம் என்ற இயக்கமும் தீவிரமாக களத்தில் இறங்கியது. மார்ச் 1919 ஆம் நாளன்று கொரி யாவின் 33 தேசியவாதிகள் “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” வெளியிட்டனர். 12 மாதங்களில் இந்தப் போராட்டத்தை ஜப்பானிய ஆதிக்க அரசு ஒடுக்கியது. இந்தப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வலி யுறுத்தி 1500 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. 20 இலட்சம் கொரியர்கள் இவற்றில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஏறத்தாழ 7500 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சுதந்திரப் பிரகடனமே கொரியாவின் விடுதலைக்கும் வித்திட்டது என்று வரலாற்றா சிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

லிதுவேனியா

ஜெர்மனிய துருப்புகள் தனது நாட்டில் நிலை கொண்டிருந்தபோதும் 1918 ஆம் ஆண்டு லிதுவேனியா சுதந்திர நாடாக பிரகடனம் வெளியிட்டு ஜனநாயக கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. அதன் பின்னர் லிதுவேனியா சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. 1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்தபோது சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட முதலாவது நாடு லிதுவேனியாவாகும்.

பிரகடனத்துக்குப் பின்னர் கொரில்லா யுத்தம் நடத்திய பிலிப்பைன்ஸ்

1898 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாளன்று °பெயினின் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக பிலிப்பைன்ஸ் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. ஆனால், பிலிப்பைன்சின் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவும் °பெயினும் இதனை ஏற்க மறுத்தன.

1898 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் செப்டம்பர் 10 வரை முதலாவது தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிலிப்பைன்சின் அரச தலைவராக அகுனல்டோ தெரிவு செய்யப் பட்டார். முதலாவது பிலிப்பைன்ஸ் குடியர சானது 1899ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனிடையே அமெரிக்காவுக்கும் °பெ யினுக்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் °பெயின் வெளியேறிவிட பிலிப்பைன்சில் அமெரிக்கா நின்றது.

1899 ஆம்ஆண்டு அமெரிக்காவும் பிலிப் பைன்° குடியரசுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.

இந்த யுத்தத்தின்போது இடைக்கால உத்தியாக பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, கொரில்லா போர் முறையை கடைபிடிக்க தெரிவு செய்தார். அமெரிக்க இராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப் பட்டது. 1901 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, சில துரோகி களால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் 1901 ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் அமெரிக்காவின் அரசாட்சியை ஏற்பதாகவும் தனது படையினரின் ஆயுதங்களை ஒப்படைப்ப தாகவும் அகுனல்டோ அறிவித்தார். அதன் பின்னரும் பிலிப்பைன்ஸ் விடுதலைக்கான யுத்தம் நடைபெற்றது.

1935 ஆம் ஆண்டு பிலிப்பைன்சுக்கு அரைவாசி சுயாட்சி உரிமை அளித்த அமெரிக்கா, 1946 ஆம் ஆண்டு முழு சுதந்திரம் அளித்தது.

1898 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுதந்திரப் பிரகடனம் ஏற்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் மக்கள் இன்றளவும் சுதந்திரப் பிரகடன நாளை “கொடி நாளாக” கடைபிடித்து வருகின்றனர்.

ஐ.நா. உருவான பின்னர்: வியட்நாம்

1887 இல் தென் கிழக்கு ஆசியாவில் வியட் நாம், கம்போடியா, லாவோ° உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பிரெஞ்ச் இந்தோ சீனா என்கிற ஒன்றியம் உருவாக்கப் பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது இந்தோ சீனத்தில் இருந்த டொன்கின் பகுதியை ஜப்பான் பயன்படுத்த பிரான்சு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தோ சீனா ஒன்றிய ஆளுகையை ஜப்பான் கைப்பற்றியது. 1945 ஆம் ஆண்டு ஆக°ட் மாதம், ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்படும் நாள் வரை இந்த ஆதிக்கம் நீடித்தது.

இந்நிலையில் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் நாளன்று வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை ஹோசிமின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு படையினருக்கும் வியட்நாமியர் களுக்கும் இடையே மோதல் உருவானது.

1946 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாளன்று பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீன கூட்டமைப்பில் வியட்நாம் ஒரு சுயாட்சி பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. வட வியட்நாமில் நிலை கொண்டிருந்த சீன இராணுவத்தை வெளியேற்றும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீனப் படை வெளியேறிய உடன் மோதல் மூண்டது. ஹோசிமின் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தப்பினார்.

1950 ஆம் ஆண்டு மீண்டும் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.

அதே ஆண்டுகளில் ருசியாவின் °டாலின் மற்றும் சீனாவின் மாவோவை ஹோசிமின் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சோவியத் ருசியா மற்றும் சீனாவினால் வியட்நாம் அங்கீகரிக்கப்பட்டது.

கொரில்லா போர் முறை மூலம் பிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வட வியட்நாமிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற வியட்நாமிய குடியரசுப் பிரக டனம் செய்யப்பட்டது. தென் வியட்நாமில் பிரெஞ்சு, பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருந்தன. 1954 ஆம் ஆண்டு அப்பிராந்தியத்திலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற அமெரிக்காவின் தலையீடு தொடங்கியது. அதுவே வியட்நாம் போருக்கும் வழி வகுத்தது.

இஸ்ரேல்

1947 ஆம் ஆண்டு பால°தீனை இரண்டாகப் பிரித்து இ°ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இ°ரேல், ஒரு தலைபட்ச பிரகடனத்தை அறிவித்தது. இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட 11 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா இப் பிரகடனத்தை அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து கௌதமாலா, நிக்கரகுவா, ஊருகுவே ஆகிய நாடுகள் அங்கீகரித்தது. மே 17 ஆம் நாள் சோவியத் ருசியா, இஸ்ரேலை அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகள் இ°ரேலை அங்கீகரித்தன.

பாலஸ்தீன்

1988 ஆம் ஆண்டு பால°தீன் விடுதலை இயக்கத்தின் சட்டவாக்க அமைப்பான பால°தீன தேசிய சபையானது பால°தீன சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைபட்சமாக “அல்ஜைரில்” வெளியிட்டது. மேலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு பாலஸ்தீன பிரதேசமும் இருக்க வில்லை. பாலஸ்தீனப் பகுதிகளில் “ஒரு நடைமுறை அரசாங்கத்தை” அது கொண்டிருக்கவில்லை. தொடக்கத் தில் பாலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்க வில்லை. ஆனால் அரபு நாடுகள் அங்கீ கரித்தன. பால°தீன அரசாங்கத்தை அங்கீகரிக்காத போதும் ஓஸ்லோ ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீன நிர்வாக சபையுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஹமாஸ் இயக்கம், ஜனநாயக முறைப்படியான தேர்தலில் பாலஸ்தீனத்தில் வெற்றி பெற்ற போதும் பல்வேறு நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்தன. நிதி உதவிக நிறுத்தப்பட்டன. ஹமாசின் ஆட்சி யும் கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

சோமாலிலாந்த்

அனைத்துலகத்தினால் அங்கிகரிக் கப்பட்ட சோமாலியாவின் தெற்குப் பகுதியில் ஏடன் கடற்பரப்பை யொட்டி சோமாலிலாந்த் என்ற பெயரில் “நிழல் அல்லது நடைமுறை சுதந்திரக் குடியரசு” பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளன்று சோமாலியாவிலிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்ததாக அந்நாட்டு மக்கள் பிரகடனம் செய்தனர். இதனை அனைத்துலக சமூகமோ பிறநாடுகளோ இதுவரை அங்கீகரிக்கவில்லை.

இதனது எல்லைகளாக மேற்குப் பகுதியில் டிஜிபௌட்டி, தென் பகுதியில் எத்தியோப்பியா, கிழக்கில் சோமாலியா என பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை 3.5 மில்லியனாகும்.

1884 ஆம் ஆண்டில் சோமாலி லாந்த், பிரித்தானியாவின் ஆக்கிரமிப் புக்குள்ளானது. 1898 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியாவில் சோமலிலாந்த் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு காலனி அலுவலகம் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் பிரித்தானியாவிடமிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்தது. ஆனால் 5 நாட்களுக்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் நாள் இத்தாலி ஆக்கிரமித்தது. பிறகு சோமாலிலாந்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதுவும் பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு இன்றைய சோமா லியா நாடு உருவாக்கப்பட்டது.

இப்புதிய சோமாலியாவில் தமது இன மக்களது அபிலாசைகள் நிறை வேற்றப்படவில்லை என்று முன்னைய பிரித்தானிய சோமாலிலாந்த் மக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் 1980களில் சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. 1991 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் காங்கிர°, சோமாலியாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.

1994 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. சோமாலிலாந்தின் தேசியக் கொடி 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாளில் சோமாலிலாந்த் அரசியல் சட்டம் மக்களின் வாக்கெடுப்பின் மூலம் ஏற்கப்பட்டது.

சோமாலிலாந்த் அரசியல் சட்டப் படி, சோமாலிய மொழி ஆட்சி மொழியாகும். பாடசாலைகளிலும், மசூதிகளிலும் அரபி மொழி பயன் படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆங்கில மொழி கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி மற்றும் எத்தியோப்பியாவில் அறிவிக்கப்படாத தூதரகங்களையும் சோமாலிலாந்த் உருவாக்கியுள்ளது. 20-க்கும் மேறபட்ட அமைச்சுப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நடைமுறை அரசாங்கம் இயங்கி வருகிறது.

பெல்ஜியம், கானா, தென்னாப் பிரிக்கா, சுவீடன், ருவாண்டா, நார்வே, கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளிடனும் சோமாலிலாந்த் அரசி யல் உறவுகளைப் பேணி வருகிறது.

2007 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் நாளன்று சோமாலிலாந்துடன் இணைந்து செயற்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சோமாலிலாந்த் சென்றனர்.

அதேபோல் ஆப்பிரிக்க ஒன்றியத் தின் பிரதிநிதிகளும் 2007 ஆம் ஆண்டு சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாள்களில் சோமாலிலாந்துக்கு பயணம் மேற் கொண்டனர்.

எத்தியோப்பியாவின் பிரதமர், 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோமா லிலாந்த் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அரசு தலைவர் ககினைச் சந்தித்து உரையாடினார்.

சோமாலிலாந்த்தை ஆப்பிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்க மறுக்கும் நிலையில் எத்தியோப்பியா, சோமாலி லாந்துக்கான அங்கீகாரத்துக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசியல் நோக்கர்கள் கருது கின்றனர்.

(தொடரும்)

யாரையோ திருப்திப்படுத்த நான் பலிகடாவாகியுள்ளேன்: பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன்ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு நாங்கள் போராட்டம் நடத்தினோம்; பொது ஒழுங்கு பாதிக்கப்பட்டதற்கு எந்த சான்றுமே இல்லை. என் மீது முறைகேடாக யாரையோ திருப்திப்படுத்த - தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போட்டுள்ளது என்று பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அறிவுரைக் கழகத்தின் முன் கூறினார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் 52 நாள்களாக அடைக்கப்பட்டுள்ள கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய அறிவுரை கழகத்தின் முன் ஜூன் 22 ஆம் தேதி பகல் 1.30 மணியளவில் நேர்நிறுத்தப்பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் - கைது செய்யப்பட்ட 3 வாரங்களில் இப்படி அறிவுரைக் கழகத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான அடிப்படை சட்ட காரணங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. முறையான சட்டக் காரணங்கள் இல்லாமல் இருக்குமானால், அறிவுரைக் கழகத்தினரே, விடுதலை செய்யவும் உரிமை உண்டு. ஆனால் தமிழக அறிவுரை கழகத்தினர் அந்த உரிமையை பயன்படுத்தியது இல்லை. அதனால் தான் கழகத் தலை வர் கொளத்தூர் மணி இதே அறி வுரை கழகத்தின் முன் எழுத்து மூலம் அளித்த அறிக்கை யில் இந்தக் கழகத் தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், கழக உறுப் பினர்களான நீதிபதிகள் மீது தாம் கொண்டிருக்கும் மதிப்பு காரணமாகவே கருத்துகளை முன் வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட் டிணன் அறிவுரை கழகத்தின் தலைமை நீதிபதி நடராசன் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். பிறகு தனது பதிலுரையை எழுத்து மூலமாவும் தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் எழுத்து மூலம் தாக்கல் செய்த பதிரை:

நான் பெரியார் திராவிடர் கழகத்தில் பொதுச் செயலாளர். பெரியாரின் உண்மைத் தொண்டன்.

1976 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது அவசர நிலை (Emergency) அமுலில் இருந்த காலத்தில் ‘மிசா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் இருந்தேன். ஆனாலும் மற்ற அரசியல்வாதிகளைப் போல் எந்த அரசியல் ஆதாயமும் தேடிக் கொள்ளவில்லை. பெரியார் சொன்னதுபோல எனது சொந்த காசை செலவு செய்துதான் பொதுத் தொண்டு செய்து வருகிறேன்.

1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலையை அடுத்து கோவையில் வெடிகுண்டு தயாரித்ததாக என் மீது பொய் வழக்கு ஒன்றை தடா சட்டத்தின் கீழ் போட்டு 3½ ஆண்டுகள் சிறையில் வைத்தது அரசாங்கம். ஆனால் 3½ ஆண்டுகள் கழித்து நான் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறி விடுதலை செய்தது. நான் 3½ ஆண்டுகள் சிறையில் இருந்ததற்கு என்ன பரிகாரம்?

இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறை என்ன குற்றம் செய்தததற்கு? இந்திய அரசே! இலங்கைத் தமிழனை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை. அவனை கொல்வதற்கு ஆயுதம் கொடுக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்ததற்கு! தமிழனை முதலமைச்சராக கொண்ட தமிழ்நாடு அரசு என்னை இந்த சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கிறது. ஆள்பவர்களுக்கு தமிழன் என்ற உணர்வு இல்லாமல் போகட்டும். போட்ட உத்தரவு சட்டப்படியாவது செல்லுமா? என்பதை ஆராய்ந்து இந்த முறையாவது நியாயம் வழங்குங்கள்.

1989 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்களை கொன்று விட்டு இந்தியா திருப்பிய இந்திய ராணுவத்தை வரவேற்க மாட்டேன் என்று இன்றைய தமிழக முதலமைச்சரே சட்டமன்றத்தில் கூறினார். இவ்வாறாக ஈழத் தமிழர்களை கொன்ற இந்திய ராணுவத்திற்கு எதிராக சனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்ட கருத்து தெரிவிப்பது வழக்கம் தான். நாங்களும் அவ்வாராகவே ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய ராணுவத்திற்கு எதிராக எங்கள் மனவேதனையை தெரிவித்து வந்தோம்.

இலங்கையில் நடந்த போருக்கு இந்திய அரசு ழுழு அளவில் துணை நின்றது. அன்றாட நடவடிக்கைகளை இந்திய அரசுக்கு தெரிவித்து வந்தோம் என இலங்கை அதிபர் ராஜபக்சேவே கூறியிருக்கிறார். இலங்கையில் ஒரே நாளில் 25000 தமிழர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட போர் குற்றங்களை அய்.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் விசாரிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே வாக்களித்தது இந்திய அரசு.

இவ்வாறாக இந்திய அரசு இலங்கைக்கு வெளிப்படையாகவே கொள்கை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் உதவி வந்தது. இதை எதிர்த்ததால் சூலூர் காவல் நிலைய குற்ற எண் 549/2009-ன் கீழ் நான் உட்பட 44 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காவலில் வைத்துள்ளனர். ஒருவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தடுப்பு காவலில் வைக்கவேண்டும் என்றால் அவரால் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த தடுப்புக் காவல் ஆணையை பிறப்பித்த மாவட்ட ஆட்சியரின் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் எதிலும் நான் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தமாக நடந்து கொண்டதாக யாருமே சாட்சி கூறவில்லை.

அதனால்தான் மாவட்ட ஆட்சியர் அப்போராட்ட செய்திகளை தினமலர், தினத்தந்தி, தினகரன், இந்து பத்திரிகைகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்கிறார். ஆனால், அந்த பத்திரிகைகளில் பொது ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்த நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன். தவறை தவறு என்று சுட்டிக்காட்டிய என்மீது பிறப்பிக்கப்பட்டிருக்கும் தடுப்புக் காவல் ஆணையை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கோவை இராமகிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் சென்னை கடற்கரை சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்துக்குள் உள்ள அறிவுரைக் கழக அலுவலகத்துக்கு 22 ஆம் தேதி பகல் 11 மணியளவில் அழைத்து வரப்பட்டார். முதல் நாளே 21 ஆம் தேதி காலை கோவை சிறையிலிருந்து போலீ° பாதுகாப்போடு வேன் மூலம் அழைத்து வரப்பட்ட பொதுச்செயலாளர் முதல் இரவு புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் கோவை சிறைக்கு வேன் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.

கழகத் தோழர்கள்: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேசவன், உமாபதி, தபசி குமரன், அன்பு. தனசேகரன், அண்ணாமலை, இராவணன், தீபக், சுகுமார், தியாகு, இராசு உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் திரண்டு வந்து பொதுச்செயலாளரை சந்தித்தனர்.

- பெரியார் முழக்கம்

பத்து வருடம் கழித்து நாங்கள் போராளியாக மாறுவோம்: கோவையில் சிறுவர்கள் முழக்கம்

கோவையில் தமிழர் ஆதரவு முன்னணி சார்பாக ஈழ ஆதரவாளர் விடுதலை இயக்க மாநாடு 21.6.09 அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறுவர்கள் பத்து வருடம் கழித்து நாங்கள் போராளியாக மாறுவோம் என்று கூறியது அனைத்து தமிழர்களின் உணர்வுகளை தட்டியெழுப்புவதாக இருந்தது.கொளத்தூர் மணி, வழக்குரைஞர் ரஜினிகாந்த், புதுகோட்டை பாவாணன், திரைப்பட இயக்குநர்கள் சீமான்,ராம், ஆகியோர் பங்கேற்க அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்ட மாநாடு சிறப்பாக நடந்தது.

மாநாடு நடந்துகொண்டு இருக்கும் வேளையில் மளமளவென மேடை ஏறிய ஆத்தூரில் பயிலும் எட்டு வயது சிறுவன் நக்கீரனும்,அவரின் மூன்று வயது தங்கை இனியாவும் மைக் பிடித்து, "நமது தொப்புள் கொடி உறவுகளை அங்கு கொத்து கொத்தாக கொன்று ஒழித்தனர். நாம் கண்டுகொள்ளவில்லை இனி அப்படி இருந்துவிட கூடாது நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் தான் எதிரி இடைக்காலமாக வெற்றி பெற்று உள்ளான். ஆனாலும் நாம் சோர்ந்துவிடக்கூடாது.

இதுவரை ஈழ தமிழர்களுக்காக நடந்த போராட்டம் இனி உலக தமிழர்களுக்கான போராட்டமாக அமைந்துவிட்டது.நம் உறவுகளை காக்க, நமக்கென நாடு அமைய ஒவ்வொரு தமிழக தமிழர்களும் தங்கள் வருமானத்தில் இருந்து பத்து விழுக்காடு நிதியை ஒதுக்கி விடுதலை போராட்டத்திற்கு உதவ வேண்டும்.என் பங்காகவும்,நான் என் நண்பர்களிடம் பெற்ற வகையிலும் ஆறாயிரத்தூ இருநூற்றி பத்து ரூபாயை வழங்குகிறேன்.

'தமிழரின் தாயகம் தமிழ் ஈழ தாயகம்' "

என முழங்கி நிதியை பெரியார் திராவிடர்கழக தலைவர் கொளத்தூர் மணியிடமும், இயக்குநர் சீமானிடமும் கொடுக்க பலத்த கரவொலியுடன். வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும் என்று உணர்வாளர்கள் மத்தியில் இருந்து வீர விடுதலை முழக்கங்கள் முழங்கப்பட்டு அரங்கையே அதிர வைத்தது.

மேலும் சிறுவன் நக்கீரன் "இன்னும் பத்து வருடம் களைத்து நானும் என் தங்கையும் போராளியாக மாறபோகிறோம்" என உணர்வோடு கூறியது தமிழகத்தில் தமிழ் ஈழ ஆதரவு உணர்வு இன்னும் உயிரோடும்,உயிர்ப்போடும் உள்ளது என்பதை நிரூபித்தது. கோவையில் ஒலித்த ஒலி தேசம் கடந்த தமிழர்களை உசுப்பி உள்ளது உலக தமிழ் அரசு அமைய!


Wednesday, June 10, 2009

இராணுவ வாகன மறியல் தமிழ் ஈழ ஆதரவாளர் மீதான வழக்கு நிதி

ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் மீது ‘இராணுவ வாகன’ தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் மீதான வழக்குகளை சந்திக்க பெரியார் திராவிடர் கழகம் வழக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

வங்கி வழியாக வழக்கு நிதி செலுத்த விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். T.S.MANI, ACC NO : 555850503, INDIAN BANK, KOLATHTHUR, SALEM DISTRICT, TAMIL NADU, INDIA


தமிழின உணர்வாளர்களே! வழக்கு நிதி வழங்கிடுவீர்!

மலையாள அதிகாரிகள் பிடியில் ‘இந்திய’ நிர்வாகம்

மத்திய அமைச்சரவையில் கேரள அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகளும், ஏராளமான மலையாள அதிகாரிகளுக்கு மத்திய அரசு பணியும் வழங்கப்பட்டுள்ளது. மத்தியில் மீண்டும் பதவி ஏற்றுள்ள காங்கிரஸ்தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரது பணி காலத்தை நீட்டிப்பதற்கு எடுத்துள்ள முடிவால், நாட்டின் உயர் பதவியில் முத்திரை பதிக்கும் பெருமை கேரளாவுக்கு கிடைத்துள்ளது. இவர்கள் தவிர வெளியுறவு செயலாளர் சிவ் சங்கர் மேனன், பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர், நாடாளுமன்ற செயலாளர் ஜெனரல் பி.டி.ட்டி. ஆச்சாரி குடியரசு தலைவர் செயலாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், உள்துறை செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.பிள்ளை ஆகியோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அதேபோல், தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக செயலாளர் திருமதி சுதா பிள்ளை மற்றும் வணிகத் துறை செயலாளரான அவரது கணவர் கோபால் கிருஷ்ண பிள்ளை ஆகியோரும் மலையாளிகள்தான். இது மட்டும் அல்லாமல், சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய விசாரணை ஆணையத்தின் (என்.ஐ.ஏ.) முதல் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராதா டிவினோத் ராஜூவும் கேரளாவை சேர்ந்தவர்தான். அதோடு வேளாண்மை செயலாளர் டி.நந்தகுமார், சட்டத்துறை செயலாளர் டி.கே.விசுவநாதன், விமான போக்குவரத்துத் துறை செயலாளர் எம்.மாதவ நம்பியார், இஸ்ரோ தலைவரும், விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளருமான ஜி.மாதவன் நாயர் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதேபோல், கனிம வளர்துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன தலைவர் லீனா நாயர் ஆகியோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் . அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் அல்லாமல், அமைச்சர்கள் வட்டத்தை பார்த்தாலும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் இடம் பெற்றுள்ளனர். கேபினட் அமைச்சரவையில் 2-வது முறை ராணுவ அமைச்சராக ஏ.கே.அந்தோணி, வெளி நாட்டில் வாழும் இந்தியர் விவகாரங்கள் துறை அமைச்சராக வயலார் ரவி ஆகியோரும் இணை அமைச்சர் பதவிக்கு இரயில்வே துறையில் இ.அகமது, வேளாண்மை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் கே.வி.தாமஸ், உள்துறையில் முல்லப் பள்ளி ராமச்சந்திரன், வெளி விவகாரத் துறையில் சஷி தரூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தொடர்புடைய எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோணி, விஜய் நம்பியார் (அய்.நா. அதிகாரி), அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் (இலங்கை ராணுவ ஆலோசகர்) ஆகிய அனைவருமே மலையாளிகள் தான்!

-- பெரியார் முழக்கம்