Wednesday, March 25, 2009

கொளத்தூர் மணி கைதைக்கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம்


புதுச்சேரி இராஜா திரையரங்கம் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலையருகில் 20।03.2009 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தோழர் இயக்குனர் சீமான், தோழர் சம்பத் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை கண்டித்து (தேசிய பாதுகாப்புச்சட்டத்தில்) கைகளில் விலங்கிட்டும் வாயில் கருப்பு துணிக்கட்டியும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் பெருமளவிலான தோழர்களும் தோழமை அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

காணொளி: பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கைது செய்யப்பட்டதற்கு காரணமான உரை

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் 26.02.2009 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எரிகிறது ஈழம் என்ற தலைப்பில் உரையாற்றியதால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவ்வுரையின் காணொளிகளை இங்கே காணவும். ராஜீவ் கொலையல்ல! மரண தண்டனை என்றும் , நாள்தோறும் ஈழத்தில் தமிழ் உறவுகள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை காப்பாற்ற எண்ணாமல் TELO , EROS முதலான போராளி அமைப்புகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து ஒன்றாக புலிகளாக போராடிக் கொண்டிருப்பது தெரியாமல் சகோதரச் சண்டை என்று அறிவுக்கு ஒவ்வாமல் மனிதநேயமில்லாமல் கூறிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களை கண்டித்தும், தமிழீழத்தேசிய தலைவர் அவர்களை கைது செய்ய தீர்மானம் இயற்றிய ஜெ.ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை பற்றிய உண்மைகளை ஆதாரத்தோடு வெளிப்படுத்தி உரையாற்றினார்.

இவ்வாறு அரசியல்வாதிகளின் மனிதநேயமற்ற நாடகத்தினை மக்களுக்கு தெளிவாக கூறியதால் தமிழின துரோக அரசானது தமிழுணர்வாளர் கொளத்தூர் மணி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது। ஏற்கெனவே ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தனது தோட்டத்திலேயே ஈழப்போராளிகளை தங்க வைத்து போராளிகளுக்கு பயிற்சி அளித்ததற்காகவும், வேலூர் சிறையிலிருந்து போராளிகள் சுரங்கம் தோண்டி தப்பியதற்கு உதவியதாகவும், கர்நாடக வாழ் தமிழர்களை காக்க போராடியதற்காகவும் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்.


கொளத்தூர் மணி திண்டுக்கல் உரை @ Yahoo! Video


இணையங்களில் காண : தமிழ்வின்

மீனகம்

Tuesday, March 24, 2009

தமிழீழ தனித்தமிழ்நாடு பெறுவதே ஈழத்தமிழர் சிக்கலுக்கு சரியான தீர்வு - கருத்தரங்கம்

தமிழகத்தில் தூத்துக்குடி மாநகரில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணி சார்பில் தமிழீழ தனித்தமிழ்நாடு பெறுவதே ஈழத்தமிழர் சிக்கலுக்கு சரியான தீர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கமும் , ஈழத்தமிழர் துயரப்படக்காட்சியும் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி மண்டபத்தில் 21.03.2009 மாலை 4 மணியளவில் தொடங்கிய நிகழ்வில் ஈழ மக்களின் நிலையை விளக்கும் " எங்கள் குடும்பத்தின் கொலையா ? இல்லை எங்கள் இனத்தின் படுகொலை " என்ற நூல் வெளியிடப்பட்டது. பின்னர் ஈழமக்களின் துயரத்தின் காணொளி காட்டப்பட்டது.

பின்னர் மாலை 7 மணியளவில் " தமிழீழ தனித்தமிழ்நாடு பெறுவதே ஈழத்தமிழர் சிக்கலுக்கு சரியான தீர்வு " என்ற தலைப்பில் தமிழக மக்கள் உரிமைக்கழகம் பி.மி. தமிழ்மாந்தன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழக மீனவர் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பாளி என்ற தலைப்பில் சர்வதேச மனித உரிமைகள் கழக ஜா.பெனடிட் உரையாற்றினார். தமிழீழத்தின் மீதான தாக்குதல் உலகப்போரையும் விஞ்சிய மனித உரிமை மீறல் என்ற தலைப்பில் மக்கள் உரிமைக்குழு அமைப்பாளர் வழக்குரைஞர் இ.அதிசயக்குமார் உரையாற்றினார். சாதியத்தால் சிதையும் தமிழகம் , இன ஒடுக்குமுறையால் சிதைக்கப்படும் தமிழீழம் என்ற தலைப்பில் ஆதித்தமிழர் பேரவையின் தஞ்சை இளமதி உரையாற்றினார்.

இந்தியப்பிடியில் தமிழ்த்தேசியம்

இந்திய சிறிலங்கா கூட்டுச்சதியில் தமிழீழம் என்ற தலைப்பில் தமிழர் தேசிய இயக்க அ.துரையரிமா உரையாற்றினார். தமிழீழ விடுதலை ஆதராவாளர்கள் மீதான ஒடுக்குமுறையும் , தமிழக கட்சிகளின் துரோகமும் என்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். இந்திய நாடாளுமன்றம் தமிழீழ விடுதலையை ஏற்குமா என்ற தலைப்பில் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் செ.ரெ.வெனி.இளங்குமரன் உரையாற்றினார்.


Monday, March 16, 2009

கொளத்தூர் மணி , சீமான் , நாஞ்சில் சம்பத் கைதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க நாஞ்சில் சம்பத், திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோரை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததைக் கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் திண்டுக்கல்லில் 16.03.2009 அன்று மாலை 4.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் துரை.சம்பத் தலைமையில் நகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் க.சூ.இரவணா, ம.தி.மு.க மாவட்டச்செயலாளர் செல்வராகவன், விடுதலைச்சிறுத்தைகள் நகரச்செயலாளர் அன்பரசு, திருச்சித்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் பேட்ரிக் சகாயராஜ், அருட்திரு பிலிப் சுதாகர், தமிழர் தேசிய இயக்க மாநிலத் துணைத்தலைவர் கு.செ.வீரப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி பாண்டியன், சி.பி.ஐ.( எம்.எல்) மாவட்டச்செயலாளர் ஆபிரகாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெ.தி.க நகரத் தலைவர் துரை.சுப்பிரமணி நன்றி கூறினார்.

பெரியார் நம்பி, பழனி நல்லதம்பி, திருச்செல்வம், முருகன், குணா, செம்பட்டி ஆல்பர்ட், பாரத், கிருட்டிணமுர்த்தி உட்பட பல தோழர்களும் கலந்துகொண்டனர்.



Wednesday, March 11, 2009

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணிக்கு ஓராண்டு ஓய்வு

பெரியார் திராவிடர் கழகத்தின செயல்பாடுகளை கண்டு நடுங்கிய தமிழர் விரோத அரசியல் கட்சிகள் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு ஓராண்டு கட்டாய ஓய்வினை அளித்துள்ளார்கள்.

இதற்கு முன்பாக இவர் தனது தோட்டத்தில் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகவும் , போராளிகளுக்கு உதவியதாகவும் கர்நாடக வாழ் தமிழர்களுக்காக போராடியதற்காகவும் 6 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் ஓய்வெடுத்தவர்.

ஈழ வியாபாரிகள் அதிகம் இருக்கும் இவ்வேளையில் உண்மையிலேயே தமிழ்மக்களுக்காகவும் தமிழீழ மக்களுக்காகவும் தமிழகத்திலே போராடும் ஒரே அமைப்பு பெரியார் திராவிடர் கழகம் என்று கணித்த தமிழின விரோத அரசானது சுயநல அரசியல் சாக்கடையில் இறங்காமல் ஓய்வேயில்லாமல் மக்களிடத்திலே பணியாற்றிக்கொண்டிருந்த கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்களை கைது செய்து ஓராண்டு சிறையில் அடைத்துள்ளது.

வரலாறு அவரை விடுதலை செய்யும்.........

Sunday, March 8, 2009

செய்திகளை வெளியிட்ட தளங்களுக்கு நன்றி

08.03.2009
தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பெரியார்திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் இயக்குநர் சீமான் ,நாஞ்சில் சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழீழ ஆதரவாளர்கள் கொளத்தூர் மணி , இயக்குநர் சீமான் கைதைக்கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2009, 10:38.37 AM ] []
தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் இயக்குநர் சீமான் , நாஞ்சில் சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. [மேலும்]


கொளத்தூர் மணி, சீமான், நாஞ்சில் சம்பந்த் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தி, தமிழகம் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.


tn_07_03_09_000[படங்கள் காணொளி இணைப்பு] தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் இயக்குநர் சீமான் , நாஞ்சில் சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து சனிக்கிழமை (08.03.2009) மாலை 6 மணியளவில் தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (more…)

8 March 2009


தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர்மணி, மற்றும் இயக்குநர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

http://www.tamilwin.org/view.php?2a26QVZ4b33Z9EMe4d46Wn5cb0bf7GU24d2YYpD2e0dBZLuIce03g2hF0cc3tj0Cde

http://www.pathivu.com/news/713/54//d,view.aspx

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2336&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

http://meenagam.net/me/?p=2301

http://www.ibctamil.co.uk/?p=2165



தமிழீழ ஆதரவாளர்கள் கொளத்தூர் மணி , இயக்குநர் சீமான் கைதைக்கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் இயக்குநர் சீமான் , நாஞ்சில் சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றக்கோரி குரல் கொடுக்கும் தமிழுணர்வாளர்களை ஆளும் திமுக அரசு தமிழின விரோத் காங்கிரசு கட்சிக்கு ஆதரவாக கைது செய்து சிறையில் அடைத்துக்கொண்டிருக்கிறது. இதைக்கண்டித்து தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் திராவிடர் கழக மாநகர தலைவர் கோ.அ.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கடந்த 2-ந் திகதி அன்று கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு விவரம் வருமாறு:-

ராஜீவ்காந்தி கொலை செய்யப்படவில்லை. அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை. உண்மையில் நாட்டுப்பற்று உள்ள இந்தியன், சமூகநீதி கோரும் பிற்படுத்தப்பட்டவன் எவனாவது ராஜீவ்காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நாம் செய்ய தவறியதை ஈழத்தமிழன் ஒருவன் செய்த போது நாம் உண்மையில் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம். விடுதலைப்புலிகள் செய்திருக்காவிட்டால் அது குற்றம். செய்து இருந்தால் பாராட்டுகிறோம். இல்லையென்றால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும்.

இதே போல் திரைப்பட இயக்குனர் சீமானும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் புதுச்சேரி கூட்டத்தில் பேசிய பேச்சு விவரம் வருமாறு:-

நம் இன மக்களை அழிக்கும் நாட்டிற்கு துணை போவதும் அல்லாமல், அங்கு கிரிக்கெட் விளையாட தனது அணியை அனுப்பியிருக்கிற, ஈன தனத்தை செய்கிற ஒரு தேசத்தை எப்படி நாங்கள் நேசிப்பது? இதை சீமான் கேட்டால், சீமான் இந்திய தேசத்திற்கு எதிரானவன் என்று கைது செய்ய மட்டும் தெரிகிறது. இந்த நாட்டில் இறையாண்மை பேசி திரிகிறவர்களுக்கு, காவிரி நதி நீர் வாங்கித்தர வக்கில்லை, அப்போது எங்கே போனது தேசியம்? இதை கேட்க வக்கற்ற, இந்த காங்கிரஸ்காரர்கள் ராஜீவ் படுகொலையை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்கிறார்கள். புலிகள் வேறு, மக்கள் வேறு அல்ல, யார் புலி? சீமான் புலி. அவன் செத்தால், அவன் தம்பி புலி. இது தான் வரலாறு. அங்கு என்ன நிகழ்கிறது. திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை. கொத்து கொத்தாக கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கான என் மக்கள் செத்து விழுகின்றனர். இது தெரியாதவர்கள், புலிகள் வேறு, மக்கள் வேறு என்கின்றனர்.

மேற்கண்டவாறு இராஜூவ் காந்தியைப்பற்றிய உண்மைகளை மக்களிடம் சொன்னதற்காக இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் கைதைக்கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தினை பெரியார் திக மாவட்டத்தலைவர் சி.அம்புரோசு முன்னிலை வகிக்க கிருத்துவர் வாழ்வுரிமை இயக்கத்தின் பனி.சுந்தரி மைந்தன் துவக்கிவைத்து கண்டன உரையாற்றினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்த்தின் அரிகரன் , ஆதித்தமிழர் பேரவையின் இரா.வே.மனோகர் , மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் வழக்குரைஞர் அதிசயக்குமார் ,உடற்தொழிலாளர் சங்கத்தின் கிருட்டிணமூர்த்தி , பெரியார் திக சி.அம்புரோசு , இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் வழக்குரைஞர் மோகன்ராசு ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இவ்வார்ப்பட்டத்தின் விளக்கவுரையினை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தெளிவு பட விளக்கினார். " ஆளும் கட்சி காங்கிரஸ் ஆனது இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவதைப்போலத்தான் பாரதீய ஜனதா கட்சியும் தனது ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு ஆயுத உதவி வழங்கியதையும் , இராஜூவ் செய்த போபர்ஸ் பீரங்கி ஊழலை மறைக்க இலங்கைக்கு இந்திய இராணுவத்தினை அனுப்பி ஈழத்தமிழர்களை அழித்ததையும் " தனது உரையில் தெளிவுபட விளக்கினார்.

தொடர்ந்து நிறைவுரையாற்றிய வழக்குரைஞர் சங்க தலைவர் தா.மி.பிரபு தனது உரையில் " நான் எப்பொழுதும் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவேன், நான் விடுதலைப்புலிகளின் வழக்குரைஞர் என் மேல் வழக்கு போட இயலுமா...? தூத்துக்குடியில் ஈழத்தமிழர்களுக்காக செயல்படும் தமிழுணர்வாளர்களுக்கு எவ்வித சட்டச்சிக்கல் வந்தாலும் நாங்கள் இலவசமாக வழக்குரைஞர் சங்கம் சார்பில் வாதாடுவோம்" என்று தனது உரையில் கூறினார்.

இவ்வார்ப்பாட்டத்தில் பெரியார் திக மாவட்டத்துணைத்தலைவர் வே.பால்ராசு , மாவட்டச்செயலாளர் பாலசுப்பிரமணியன் , மாநகரச்செயலாளர் பால்.அறிவழகன் , க.மதன் , அறிவுபித்தன் , வ.அகரன் , விடுதலைச்சிறுத்தை கட்சியின் ஆறுமுக நயினார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இறுதியில் பெரியார் திகவின் தூத்துக்குடி மாநகர துணைத்தலைவர் சா.த.பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.

Saturday, March 7, 2009

மகளிர் நாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துக்கள்.



தஞ்சையில் பெரியாரிய தொண்டரின் தாயார் மரணம் - உடல் தானம்

பெரியாரிய தொண்டர் தமிழீழ ஆதரவாளர் தஞ்சை வழக்குரைஞர் கருணாநிதியின் 81 அகவையான தாயார் உடல்நிலை சரியில்லாமல் நேற்று மரணமடைந்தார்.

அவரது தாயாரின் உடல் மற்றும் கண்கள் இன்று மதியம் 2 மணிக்கு மருத்துவமனைக்கு தானம் அளிக்கப்படுகிறது.

திரளான தோழர்கள் அந்நிகழ்வில் பங்கேற்கவும்.

தொடர்புக்கு :

வழக்குரைஞர் கருணாநிதி,
ஈசுவரி நகர்,
MC சாலை .
தஞ்சாவூர்.

கைப்பேசி எண் : +919361178345