Tuesday, March 24, 2009

தமிழீழ தனித்தமிழ்நாடு பெறுவதே ஈழத்தமிழர் சிக்கலுக்கு சரியான தீர்வு - கருத்தரங்கம்

தமிழகத்தில் தூத்துக்குடி மாநகரில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணி சார்பில் தமிழீழ தனித்தமிழ்நாடு பெறுவதே ஈழத்தமிழர் சிக்கலுக்கு சரியான தீர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கமும் , ஈழத்தமிழர் துயரப்படக்காட்சியும் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி மண்டபத்தில் 21.03.2009 மாலை 4 மணியளவில் தொடங்கிய நிகழ்வில் ஈழ மக்களின் நிலையை விளக்கும் " எங்கள் குடும்பத்தின் கொலையா ? இல்லை எங்கள் இனத்தின் படுகொலை " என்ற நூல் வெளியிடப்பட்டது. பின்னர் ஈழமக்களின் துயரத்தின் காணொளி காட்டப்பட்டது.

பின்னர் மாலை 7 மணியளவில் " தமிழீழ தனித்தமிழ்நாடு பெறுவதே ஈழத்தமிழர் சிக்கலுக்கு சரியான தீர்வு " என்ற தலைப்பில் தமிழக மக்கள் உரிமைக்கழகம் பி.மி. தமிழ்மாந்தன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழக மீனவர் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பாளி என்ற தலைப்பில் சர்வதேச மனித உரிமைகள் கழக ஜா.பெனடிட் உரையாற்றினார். தமிழீழத்தின் மீதான தாக்குதல் உலகப்போரையும் விஞ்சிய மனித உரிமை மீறல் என்ற தலைப்பில் மக்கள் உரிமைக்குழு அமைப்பாளர் வழக்குரைஞர் இ.அதிசயக்குமார் உரையாற்றினார். சாதியத்தால் சிதையும் தமிழகம் , இன ஒடுக்குமுறையால் சிதைக்கப்படும் தமிழீழம் என்ற தலைப்பில் ஆதித்தமிழர் பேரவையின் தஞ்சை இளமதி உரையாற்றினார்.

இந்தியப்பிடியில் தமிழ்த்தேசியம்

இந்திய சிறிலங்கா கூட்டுச்சதியில் தமிழீழம் என்ற தலைப்பில் தமிழர் தேசிய இயக்க அ.துரையரிமா உரையாற்றினார். தமிழீழ விடுதலை ஆதராவாளர்கள் மீதான ஒடுக்குமுறையும் , தமிழக கட்சிகளின் துரோகமும் என்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். இந்திய நாடாளுமன்றம் தமிழீழ விடுதலையை ஏற்குமா என்ற தலைப்பில் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் செ.ரெ.வெனி.இளங்குமரன் உரையாற்றினார்.


No comments: