பெரியார் திராவிடர் கழகத்தின் தூத்துக்குடி மாநகர செயலாளர் பால்.அறிவழகன் கரூர் நகரில் கண்ணைக்கட்டி வாகனம் ஓட்டி பிரச்சாரம்.
Monday, August 24, 2009
முள்வேலிச்சிறையிலிருக்கும் மக்களை காக்கக்கோரி கண்ணைக்கட்டி வாகன ஓட்டும் பிரச்சாரம்
பெரியார் திராவிடர் கழகத்தின் தூத்துக்குடி மாநகர செயலாளர் பால்.அறிவழகன் கரூர் நகரில் கண்ணைக்கட்டி வாகனம் ஓட்டி பிரச்சாரம்.
Wednesday, August 19, 2009
பொய் பரப்பும் தி.க. தலைமைக்கு மறுப்பு
பொய் பரப்பும் தி.க. தலைமைக்கு மறுப்பு
மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களுக்கு கழகம் எழுதிய கடிதம், இதோ!
‘குடிஅரசில் பெரியாரின் எழுத்து-பேச்சு தொகுப்புகள் தொடர்பாக கழகம் அறிவித்த, முன் வெளியீட்டுத் திட்டம் குறித்து - மலேசியா, சிங்கப்பூரிலுள்ள பெரியாரியல்வாதிகளுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதினார். கழகத்தின் இணையதளத்திலும் இக் கடிதம் வெளியிடப்பட்டது. ஏதோ கி.வீரமணிக்கு எதிராக வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு கழகம் கடிதங்களை எழுதியதாகவும், அதன் காரணமாகத்தான் கி.வீரமணி, இப்போது நீதிமன்றம் வரை வந்ததாகவும் ஒரு தவறான பிரச்சாரம் தி.க. வட்டாரத்தில் பரப்பப்படுகிறது.
‘நக்கீரன்’ வார ஏடும் இதையே கி.வீரமணிக்கு ஆதரவாக செய்தியாக வெளியிட் டிருக்கிறது. உண்மையில் கழகத் தலைவர் எழுதிய கடிதத்தில் தி.க. வீரமணி பற்றி எந்தக் குறிப்பும் இடம் பெறவில்லை. தங்களது ‘அடாவடி’ நடவடிக்கைகளை நியாயப்படுத்தவே உண்மைக்கு மாறான பிரச்சாரத்தில் தி.க. தலைமை இறங்கி யுள்ளது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மலேசியா, சிங்கப்பூரிலுள்ள பெரியாரியல்வாதிகளுக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும் எழுதிய கடிதத்தை அப்படியே இங்கு வெளியிடுகிறோம்.
அன்புடையீர் வணக்கம்.
தமிழர்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் கொள்கைகள் தமிழ்நாட்டில் மேலும் தீவிரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக துடிப்பும் சமூக அக்கறையும் கொண்ட இளைஞர்களைக் கொண்டு, பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பை தமிழ்நாட்டில் நாங்கள் நடத்தி வருகிறோம்.
1925 ஆம் ஆண்டிலிருந்து பெரியார் பேசியும், எழுதியும், போராடியும் - தமிழர்களுக்காக உழைத்திருக்கிறார். அவரது பேச்சுகள், எழுத்துகள் பெரியார் 1925 இல் தொடங்கி “குடிஅரசு” வார ஏட்டில் தொடர்ந்து வெளி வந்திருக்கின்றன.
ஆனால் - வேதனை என்னவென்றால் காந்தியடிகள், அம்பேத்கர் போன்ற தலை வர்களின் எழுத்துகள், பேச்சுகள் முழுமையாக ஆண்டுவாரியாக தொகுக்கப்பட்டு வெளிவந்ததுபோல், பெரியாரின் கருத்துகள் வெளிவராமலே போய்விட்டது.
இப்போது இந்த முயற்சியில் “பெரியார் திராவிடர் கழகம்” தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்திருக்கிறது. இதற்கான “குடிஅரசு” இதழ்களை எல்லாம், தமிழகம் முழுதுமிருந்தும் அரும்பாடுபட்டு திரட்டியிருக்கிறோம். முதல் கட்டமாக 1925 லிருந்து 1938 முடிய 14 ஆண்டுகளாக வாரம் தோறும் வெளிவந்த “குடிஅரசு” இதழ்களில் பெரியார் எழுதிய கட்டுரைகள், அவரது பேச்சுகளை ஆண்டுவாரியாக தொகுத்து வெளியிடும் பெரும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
20.12.1929 முதல் 10.1.1930 முடிய மலாயா நாட்டில் சிங்கப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து அகில மலாயாதமிழர் மகாநாடு உட்பட 40 இடங்களில் உரையாற்றியமை போன்ற பல்வேறு அரிய செய்திகளும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் பொருட் செலவு உள்ள, கடுமையான முயற்சிகள் தேவைப்படும் திட்டம் இது என்பது உங்களுக்குத் தெரியும்.
1925 லிருந்து 1938 முடிய பெரியார் கருத்துகளை தொகுத்தபோது 400 பக்கங் களுக்கும் கூடுதலாகக் கொண்ட 27 தொகுதிகள் வருகின்றன. இதில் இலாப நோக்க மின்றி அடக்க விலையிலேயே முன் பதிவுத் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும். இதற்காக 40 லட்சம் ரூபாய் வரை நாங்கள் செலவிட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தான் இந்தப் பெரும்பணியின் தேவையையும், அவசியத்தையும் உணர்ந்த தங்களைப் போன்றோரின் உதவியை நாங்கள் நாடி, இக்கடிதத்தை எழுதுகிறோம்.
6 மாத காலத்துக்கு வட்டி இல்லாத கடனாகவோ அல்லது தாங்கள் விரும்பினால் நன்கொடையாகவோ அளித்து உதவ முன் வந்தால், எங்களுக்கு பேருதவியாக அமையும். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தயாரிப்புப் பணிகளை முடித்து பெரியார் பிறந்த நாளான செப்.17 இல் தொகுப்புகள் வெளிவர இருக்கின்றன என்பதையும், தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். நமது சமுதாயத்தின் எதிர்கால இளந்தலைமுறைக்கு தமிழர்கள் கடந்து வந்த போராட்டப் பாதைகளையும், நமது சமூக வரலாற்றையும் புரிந்து கொள்வதற்கு, நாம் விட்டுச் செல்லும் அழிக்க முடியாத சொத்தாக இந்தப் பணி திகழும் என்று கருதுகிறோம்.
தங்களின் பங்களிப்பையும் எதிர்நோக்கி, இந்த மடலை விடுக்கிறோம். தங்களின் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
மலேசிய தி.க. தலைவர் ரெ.சு. முத்தையாவுக்கு மட்டும் தனியாக விரிவான கடிதத்தை கழகத் தலைவர்
கொளத்தூர் மணி எழுதினார். அந்தக் கடிதம் இதுதான்.
மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம்.
உங்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கவே இக்கடிதம் எழுதலானேன். முதலில் எங்களைப் பற்றி சிறு அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன்.
உயர்நிலைப் பள்ளி நாட்களிலேயே பெரியாரிடம் ஈடுபடுத்திக் கொண்ட நான் 1970 முதல் திராவிடர் கழகத்தில் நேரடியாக இணைந்து, 1978 முதல் சேலம் மாவட்ட செயலாளராகவும், 1984 முதல் மாநில அமைப்பு செயலாளராகவும் செயல்பட்டு வந்தவன் ஆவேன்.
2000 ஆண்டின் இறுதியில், சந்தன வீரப்பனால் சிறை வைக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் இராஜ்குமார் மீட்புக்கென அரசு அனுப்பிய தூதுக் குழுவில் சென்ற காரணத்தாலும் (அப்போது தி.மு.க. அரசு - திராவிடர் கழகத் தலைமை ஜெயலலிதா ஆதரவு நிலை எடுத்திருந்தது) முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்ததாலும் வெளியேற்றப்பட்டேன்.
பல்வேறு காலகட்டங்களில் வெளியேற்றப்பட்ட (அ) வெளியேறிய பலர் பெரியாரை ஏற்றுக் கொண்டபின் வேறு வழியில் இயங்க முடியாமல் தமிழ்நாடு திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயர்களில் இயங்கி வந்த திருவாரூர் தங்கராசு, ஆனூர் ஜெகதீசன், வழக்கறிஞர் துரைசாமி போன்ற பல மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலில் அவர்களும் இணைந்து, என்னைத் தலைவராக வும், விடுதலை க.இராசேந்திரன், கோவை கு. இராம கிருட்டிணன் ஆகியோரை பொதுச்செயலாளராகவும் கொண்டு “தந்தை பெரியார் திராவிடர் கழகம்” என்ற பெயரில் “பெரியார் காலத்திய தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்ற முழக்கத்தை முன் வைத்து 11.06.2001 இல் புதிய இயக்கம் கண்டோம்.
பெரியாரியலில் ஆழ்ந்த பிடிப்பும், அதை செயற்படுத்துவதில் மிக்க துடிப்பும், அதற்கென இழப்புகளையும் இடர்பாடுகளையும் பொருட்படுத்தாத துணிவும் கொண்ட எளிய உறுதியான இளம் தொண்டர்களுடன் பெரு வீச்சுடன் தற்போது “பெரியார் திராவிடர் கழகம்” என்ற பெயருடன் இயங்கி வருகிறோம்.
இந்த ஏழாண்டு கால இடைவெளியில்,
• அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கைக்காக காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டத் தில் 865 பேர் கைதானது.
• வேத சோதிடக் கல்வியை மதுரை பல்கலைக் கழகத்தில் நுழைந்ததை எதிர்த்து பஞ்சாங்க எரிப்பு போராட்டத்தை நடத்தி அப்பாடத் திட்டத்தை நிறுத்தியது.
• அறநிலையத் துறையில் பெண்களை நியமிக்காதிருந்த போக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்காடி 23 பெண்களை முதல் கட்டத்தில் பணியமர்த்தச் செய்தமை.
• தனியார் துறையில் இடஒதுக்கீட்டை விளக்கி தமிழகத்தில் முதன்முதலாக தமிழகம் தழுவிய பரப்புரை பயணத்தை நடத்தியமை.
• பெரும்பகுதி தமிழகத்தில் இருப்புப் பாதைகள் இருந்தும் கேரளத்தில் தலைமை இடம் இருந்ததால் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதால், தொடர் போராட்டங்களை எடுத்து சேலம் தொடர் வண்டிக் கோட்டம் அமையச் செய்தமை.
• பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு கோரி பரவலான பரப்புரைகளும், அதில் தடைபடுத்த பரிந்துரைத்த வீரப்ப மொய்லி அறிக்கை எரிப்பு போராட்டத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியுடன் இணைந்து போராடி சுமார் 2000 தோழர்கள் சிறைபட்டமை.
• இலங்கைத் தமிழர்களைக் கொல்லும் சிங்கள படைக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதை எதிர்த்து போராடி வெளியேற்றியதோடு.
• சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து சுமார் 600 தோழர்கள் இந்திய தலைநகர் டில்லி சென்று காயக்கட்டு ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்தி பாதுகாப்பு அமைச்சரிடம் நேரில் சந்தித்து விளக்கி திரட்டப்பட்ட பல இலட்சம் கண்டன கையெழுத்துகளைக் கையளித்தமை.
• திராவிடர் கழகம் நிறுவிய சீரங்கம் பெரியார் சிலை மதவெறி அமைப்பினரால் சேதப்படுத்தப்பட்டபோது, தமிழகமெங்கும் பூணூல் அறுப்புகளும், பார்ப்பன மடங்கள் தாக்கப்படும் நூற்றுக்கணக்கான தோழர்கள் சிறைப்படுத்தப்பட்ட தோடு, ஏழு தோழர்கள் மீது ஓராண்டு வெளியே வர முடியாத தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைதானது - உயர்நீதிமன்றத்தில் வழக்காடி தேசியப் பாதுகாப்பு சட்டத்தை உடைத்தது -
• தீண்டாமையின் கொடிய வெளிப்பாடாய் தமிழகத்தின் சில சிற்றூர்களின் தேனீர் கடைகளில் நடைமுறையில் இருந்த தனிக்குவளை முறையை எதிர்த்து, தனிக்குவளைகளை உடைத்து சுமார் 1000 பேர் கைதானமை -
• சாதியும், இன ஒதுக்கலே என வலியுறுத்தி வீதிகளில் இறங்கிப் போராடிய தோடு மட்டுமின்றி, தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் நடைபெற்ற ஐ.நா. இணை மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு வலியுறுத்தியமை -
• மாவட்டங்கள் தோறும் மூட நம்பிக்கை ஊர்வலங்களோடு நாத்திகர் விழாக்களை நடத்தியது போன்ற தொய்வில்லா செயல்பாடுகளின் ஊடாகவே பெரியாரியலைப் பரப்பவும், பல குழப்பங்களைத் தெளிவாக்கவும் சுமார் 40க்கும் மேற்பட்ட நூல்களையும், “சோதிடப் புரட்டு” என்ற 570 பக்கங்களைக் கொண்ட அரிய ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளோம்.
அதிலும் குறிப்பாக, தமிழர்களின் வரலாற்றில், வாழ்வியலில், சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதும், பெரியாரால் 1925 இல் தொடங்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகாலம் நடத்தப்பட்டதுமான “குடிஅரசு”, “புரட்சி”, “பகுத்தறிவு” ஆகிய இதழ்களில் பதிவாகியுள்ள பெரியாரின் பேச்சுகளும், எழுத்துகளும் சுமார் 80 ஆண்டுகள் கழித்த நிலையிலும் மக்களிடம் முழுமையாக போய் சேராமல் புதைந்து கிடந்த நிலையை மாற்ற 1925, 1926 ஆகிய ஆண்டுகளின் இதழ்களைத் தொகுத்து மொத்தத்தில் சுமார் 1000 பக்கங்கள் கொண்ட மூன்று தொகுதிகளை ஏற்கனவே வெளியிட்டும் உள்ளோம்.
தமிழக சமுதாய இயல் போக்கையே புரட்டிப் போட்ட சுயமரியாதை இயக்கம் முழு வீச்சுடன் இயங்கிய 1925 முதல் 1938 முடிய உள்ள காலத்தில் “குடிஅரசு” ஏட்டில் வெளி வந்துள்ள பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும், ஏற்கனவே வெளியிட்ட தொகுதிகளில் வெளி வராது. இப்போது புதிதாக கிடைத்துள்ள சுமார் 150 பக்க புதிய இணைப்புகளுடனும் சுமார் 400 பக்கங்களைக் கொண்ட 27 தொகுதியாக பெரியாரின் 130 ஆவது பிறந்த நாளை 17.9.2008 அன்று வெளியிட உள்ளோம்.
அதே நாளில் 7.11.1928 இல் தொடங்கி சுமார் 55 இதழ்கள் மட்டுமே வெளிவந்த ‘ரிவோல்ட்’ எனும் ஆங்கில வார ஏட்டில் வெளியாகியுள்ள பெரியார், எஸ்.இராம நாதன், நாகர்கோயில் பி.சிதம்பரம், குத்தூசி குருசாமி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதலிய அறிஞர்களின் தேர்ந்தெடுத்த கட்டுரைகளைத் தொகுத்து சுமார் 800 பக்கங்கள் கொண்ட நூல் ஒன்றையும் வெளியிட உள்ளோம்.
சுமார். ரூ.5800 விலையுள்ள அந்நூற் தொகுதிகளை ரூ.3500 என முன் வெளியீட்டு விலையாக முடிவு செய்துள்ளோம். இந்த எளிய பெரியார் தொண்டர்களின் தோள்களுக்குத் தாங்க முடியாத பெருஞ்சுமையான இந்நூல் வெளியீட்டில் நீங்களும், அங்குள்ள பெரியாரியல் சிந்தனையாளர்கள், தமிழ் இன உணர்வாளர்கள், பொதுநல சிந்தனையாளர்களும், பெரும் அளவிலான முன் பதிவுகள், இயன்ற அளவு நன்கொடைகள் வழியாக ஊக்குவிக்கவும், உதவவும் வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
- புரட்சிப்பெரியார் முழக்கம்
படியுங்கள் சமூக நீதி இதழ் "புரட்சிப்பெரியார் முழக்கம்"
“புரட்சிப் பெரியார் முழக்கம்” ஆண்டு நன்கொடை ரூ.150/-
தொடர்புக்கு: ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41.
+919840940400
தென் மாவட்ட தொடர்புக்கு :
திருநெல்வேலி : +91 98435 03690
தூத்துக்குடி : +91 93633 11618
Saturday, August 15, 2009
மேட்டூரில் தொழிலாளர் கழக பெயர் பலகை திறப்பு விழா- கொடியேற்று விழா
(பதிவு எண். SLM 413/ERD/ 5-12-2006)
பெரியார் படிப்பகம்,
பேருந்து நிலையம் அருகில்
மேட்டூ்ர் அணை - 636401
நாள் : 17-08-2009 திங்கள் மதியம் 1.00மணி
இடம்: அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு,
தலைமை : தோழர் அ. சக்திவேல்,
தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்.
பெயர்பலகை திறந்து வைத்து சிறப்புரை
தோழர் கொளத்தூர் தா.செ.மணி,
தலைவர், பெரியார் திராவிடர் கழகம்.
உழைக்கும் தொழிலாளர்களே இணைவீர் பெரியார் தொழிலாளர் கழகத்தில்!
Thursday, August 13, 2009
முடிந்துவிட்டதா ஈழப்போர்....? - கொளத்தூர் மணி
செய்திகளை வெளியிட்ட சங்கதி , மீனகம் தளங்களுக்கு நன்றி.
மீனகம் தளத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் முடிந்துவிட்டதா ஈழப்போர் உரையின் audio வெளியிடப்பட்டுள்ளது:
http://www.meenagam.org/?p=7674
Saturday, August 8, 2009
தூத்துக்குடியில் முடிந்துவிட்டதா ஈழப்போர் விளக்கப்பொதுக்கூட்டம்
கொளத்தூர் தா.செ.மணி, தலைவர் , பெரியார் திராவிடர் கழகம்.
தூத்துக்குடி பால்.பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர், பெரியார் திக.
தமிழீழ எழுச்சிப்பாடல் பாடுபவர் :
பகுத்தறிவு பாடகர் தஞ்சை இராம.முத்துராமலிங்கம், கழகப்பாடகர், பெரியார் திக
இன்று ஞாயிறு மாலை திருநெல்வேலி பாளையங்கோட்டை பாளை சந்தையில் முடிந்துவிட்டதா ஈழப்போர் விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
படங்கள் : பாலு நிழற்படக்கலையகம்
Friday, August 7, 2009
முடிந்துவிட்டதா ஈழபோர்? விளக்கப்பொதுக்கூட்டம் தூத்துக்குடி & திருநெல்வேலி
சனிக்கிழமை 08.08.2009 அன்று மாலை தூத்துக்குடி
இடம் : 1 ஆம் நுழைவாயில் , காந்திசிலை அருகில்,
ஞாயிறு 09.08.2009 மாலை பாளையங்கோட்டை
இடம் : பாளை சந்தை .
சிறப்புரை :
கொளத்தூர் தா.செ.மணி, தலைவர் , பெரியார் திராவிடர் கழகம்.
தூத்துக்குடி பால்.பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர், பெரியார் திக.
தமிழீழ எழுச்சிப்பாடல் பாடுபவர் :
பகுத்தறிவு பாடகர் தஞ்சை இராம.முத்துராமலிங்கம், கழகப்பாடகர், பெரியார் திக.
இவண்
நெல்லை , தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழகம்
Monday, August 3, 2009
புதுச்சேரி - தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய தமிழக அரசை கண்டித்து வழக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம்
லோகு அய்யப்பன் தனது உரையில் காங்கிரஸ் கட்சியின் தமிழின அழிப்புக்கு துணை போனதை கடுமையாக சாடினார். கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் உரையில் கலைஞரின் முன்பு ஆதரித்ததை பின்பு அதனை ஆதரிக்க மறுப்பது மட்டுமல்லாது அதனை எதிர்கவும் செய்யும் அவரின் செயலை தோலுரித்துகாட்டி பேசினார்
இயக்குநர் சீமான் தனது எழுச்சி உரையில் இனவாத சிங்கள அரசுக்கு துணை போகும் இந்திய அரசை கடுமையாக சாடினார். சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றுவதற்காக வடக்கில் வசந்தம் என்ற பெயரில் மிகப் பெரிய தமிழின அழிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது.. இதற்கு இந்திய அரசு துணை போகிறது. இதற்காக வேளாண் விஞ்ஞானி(?) சாமிநாதன் என்பவரை ஆலோசகராக நியமித்துள்ளது. சீமான் பேச்சினிடையே மழை பெய்தது. எனினும் கொட்டும் மழையிலும் சீமானின் பேச்சை எந்தவொரு சிறு சலசலப்பு எதுமின்றி மக்கள் கொட்டும் மழையிலும் முழுமையாக நனைந்தபடியே உரையை கேட்டு தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினர்.
முன்னதாக தேனிசை செல்லப்பாவால் இன உணர்வு பாடல்கள் எழுச்சியுடன் பாடப்பட்டன.
Saturday, August 1, 2009
தே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்ட கழக பொதுச்செயலாளர் விடுதலை
ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ஆயுத தளவாட வாகனங்களை வழி மறித்து மறியல் செய்ததற்காக, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழக பெரம்பளூர் மாவட்டப் பொறுப்பாளர் லட்சுமணனும் இன்று விடுதலை ஆனார்கள்.
கோவை நடுவண் சிறையிலிருந்த அவர்களை இன்று காலை (01.08.2009) பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி தலைமையில் தமிழுணர்வாளர்கள் பலர் சிறை வாயிலில் திரண்டிருந்து எழுச்சியோடு வரவேற்றார்கள்.
சிறையிலிருந்து விடுதலை ஆன இருவரும் கோவை காந்திபுரத்தில் இருந்த தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் படிப்பகம் சென்றனர்.
கட்சி அமைப்பு வேறுபாடின்றி அனைத்து தமிழுணர்வாளர்களும் சிறை வாயிலில் திரண்டிருந்தது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் ஈழத்துப்போராளிகளுக்கு உதவியதாக ஏற்கெனவே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர்.
இதர இணையங்களில் :