Monday, August 3, 2009

புதுச்சேரி - தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய தமிழக அரசை கண்டித்து வழக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம்

01.08.09 அன்று புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பாக “தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய தமிழக அரசை கண்டித்து வழக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம்” புதுவை பெரியார் திடலில் நடைபெற்றது. புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத்தலைவர் லோகு அய்யப்பன். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,இயக்குனர் சீமான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

லோகு அய்யப்பன் தனது உரையில் காங்கிரஸ் கட்சியின் தமிழின அழிப்புக்கு துணை போனதை கடுமையாக சாடினார். கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் உரையில் கலைஞரின் முன்பு ஆதரித்ததை பின்பு அதனை ஆதரிக்க மறுப்பது மட்டுமல்லாது அதனை எதிர்கவும் செய்யும் அவரின் செயலை தோலுரித்துகாட்டி பேசினார்

இயக்குநர் சீமான் தனது எழுச்சி உரையில் இனவாத சிங்கள அரசுக்கு துணை போகும் இந்திய அரசை கடுமையாக சாடினார். சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றுவதற்காக வடக்கில் வசந்தம் என்ற பெயரில் மிகப் பெரிய தமிழின அழிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது.. இதற்கு இந்திய அரசு துணை போகிறது. இதற்காக வேளாண் விஞ்ஞானி(?) சாமிநாதன் என்பவரை ஆலோசகராக நியமித்துள்ளது. சீமான் பேச்சினிடையே மழை பெய்தது. எனினும் கொட்டும் மழையிலும் சீமானின் பேச்சை எந்தவொரு சிறு சலசலப்பு எதுமின்றி மக்கள் கொட்டும் மழையிலும் முழுமையாக நனைந்தபடியே உரையை கேட்டு தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினர்.

முன்னதாக தேனிசை செல்லப்பாவால் இன உணர்வு பாடல்கள் எழுச்சியுடன் பாடப்பட்டன.

No comments: