முடிந்துவிட்டதா ஈழப்போர் ? நெல்லை தூத்துக்குடியில் விளக்கக்கூட்டம்
செய்திகளை வெளியிட்ட சங்கதி , மீனகம் தளங்களுக்கு நன்றி.
மீனகம் தளத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் முடிந்துவிட்டதா ஈழப்போர் உரையின் audio வெளியிடப்பட்டுள்ளது:
http://www.meenagam.org/?p=7674
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் கடந்த சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் "முடிந்துவிட்டதா ஈழப்போர்..?" என்ற தலைப்பில் விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.



தூத்துக்குடியில் 08.08.2009 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் கழகப்பாடகர் தஞ்சை இராம.முத்துராமலிங்கம் தமிழின மற்றும் தமிழீழ எழுச்சிப்பாடல் பாட மேட்டூர் குமரப்பா தவில் வாசிக்க நிகழ்ச்சி தொடங்கியது.



பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி "முடிந்துவிட்டதா ஈழப்போர்...?" என்ற தலைப்பில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன், மாநகர துணைத்தலைவர் ச.ரவிசங்கர், மாநகர செயலாளர் பால்.அறிவழகன், மாநகர இணைச்செயலாளர் மு.கனகராசு, அறிவுபித்தன், மாவட்ட துணைச்செயலாளர் க.மதன், மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார், மாநகர பொருளாளர் வ.அகரன், மாவட்டப்பொருளாளர் செ.செல்லத்துரை, மாவட்ட அமைப்பாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் மற்றும் கழகத்தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.




இதைப்போல் 09.08.2009 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சந்தை திடலில் நெல்லை மாவட்டச்செயலாளர் சி.ஆ.காசிராசன் தலைமையில் "முடிந்துவிட்டதா ஈழப்போர்...?" விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெல்லை ராசா, தலைமைக்கழக உறுப்பினர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி பெரியார் திராவிடர் கழகத்தினர் இணைந்து சிறப்பாக நடத்தினர்.
No comments:
Post a Comment