Thursday, April 16, 2009

ஈழத்தமிழர் மீதான நச்சுவாயு தாக்குதலைக்கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்


ஈழத்தமிழர் மீதான நச்சுவாயு தாக்குதலைக்கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009, 05:57.06 PM GMT +05:30 ]
ஈழமக்களை இத்தாலி சோனியா ஆதரவுடன் இந்தியப்படையின் துணையுடன் நச்சுவாயு குண்டுகளை கொன்றுக்குவிக்கும் சிங்கள இந்தியப்படையினை கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று (16.04.2009) மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பெரியார் திக மாவட்டச்செயலாளர் தலைமையில் ஆதித்தமிழர் பேரவையின் க.கண்ணன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தினை துவக்கிவைத்தார். தொடர்ந்து பெரியார் திக மாவட்ட பொருளாளர் செல்லத்துரை கண்டன உரையாற்றினார். வழக்கறிஞர் பொன்ராசு சிறப்புரையாற்ற பெரியார் திராவிடர் கழகத்தின் தமிழக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றினார். அருட்திரு பணி. சுந்தரிமைந்தன் அவர்கள் நிறைவுரையாற்ற பெரியார் திக மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு அவர்கள் நன்றியுரையாற்றி முடித்துவைத்தார்.


இவ்வார்ப்பாட்டத்தில் பெரியார் திக தமிழக செயற்குழு உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் , மாநகரத்தலைவர் சா.த.பிரபாகரன் , மாநகர செயலாளர் க.மதன் , மாநகர துணைத்தலைவர் ரவி சங்கர் , மாநகர துணைச்செயலாளர் கனகராசு , தமிழ்நாடு மாணவர் கழக அகரன் , புரட்சிகர இளைஞர் முன்னணியின் சுஜித் , மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் தா.மி.பிரபு , ஆதித்தமிழர் பேரவை வே.மனோகரர் , பெரியார் திக பால்.அறிவழகன் மற்றும் திரளான தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.





pdk_16042009_004[காணொளி]ஈழமக்களை இத்தாலி சோனியா ஆதரவுடன் இந்தியப்படையின் துணையுடன் நச்சுவாயு குண்டுகளை கொன்றுக்குவிக்கும் சிங்கள இந்தியப்படையினை கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று (16.04.2009) மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

16 April 2009
[விரிவு]

PDK protest against using chemical weapons on Tamils

PDK protest against using chemical weapons on Tamils

[ Video Inside ] Protest was organised by PDK in Tuticorin,Tamil Nadu against the usage of the chemical weapons in Vanni by Sinhala and Indian Forces. The protest held i...




http://www.yarl.com/forum3/index.php?showtopic=56155

No comments: