சேலம் ஆத்தூரில் 14.4.09 மாலை 4.30 மணிக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வலியுறுத்தி பேரணி நடத்தினர்.நகரம் முழுக்க நான்கு கி.மீ சுற்றி பரப்புரை நடத்திய பேரணி இறுதியில் பேருந்து நிலையத்தை அடைந்தது.

நிறைவுரை ஆற்றிய புதுகோட்டை பாவாணன்,ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் விசவாயு தாக்குதலை சுட்டிக்காட்டி பேசியவர், “இந்தியா தரும் ஆயுத உதவியால் தான் அங்கு ஈழ தமிழர்கள் படுகொலை செய்யபடுகின்றனர். சோனியாவே ராகுலே பிரியங்காவே நீங்கள் நீடூழி வாழனும் அப்பொழுது தான் அங்கே மலரபோகும் ஈழத்தை உங்களால் பார்க்கமுடியும் வயிறேரியுங்கள் ஈழம் மலர்ந்தே தீரும் தமிழக மக்களே ஈழ தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் தோற்கடிப்போம்” என்றார்.
இவரின் எழுச்சி உரையை பொதுமக்கள் திரளாக திரண்டிருந்து கேட்டனர்.
No comments:
Post a Comment