Wednesday, April 8, 2009

சேலத்தில் ஈழத்தமிழர் மீதான படுகொலையை கண்டித்து பெரியார் திக பேரணி ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்கள் மீது உலகநாடுகள் தடை செய்யப்பட்ட இரசாயன எறிகுண்டுகளை ஏவி வன்கொடுமை தாக்குதல் மேற்கொண்டுள்ள சிங்கள காடையர்களையும் அவர்களுக்கு துணை போகும் இந்திய அரசை கண்டித்தும் இக்கொடுமைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் முதல்வர் கருணாநிதி அரசை கண்டித்து கண்டன ஊர்வலம் ஆர்ப்பாட்டம் பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் சேலம் தீயணைப்பு நிலையத்தில் துவங்கி கண்டன முழக்கங்களுடன் பழைய பேருந்து நிலையம் மத்திய தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழினம் அனாதையாகி விட்டதா,

உலகில் தடைசெய்யப்பட்ட இரசாயன குண்டுகளுக்கு ஆயிரம் ஆயிரமாய் தமிழர்கள் பலியாகிரார்களே சிங்களர்களுக்கு ஆயுதம் வழங்கிவிட்டு தமிழர்களிடம் வாக்கு கேட்கவரும் காங்கிரசே போரை நிறுத்து,

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு,

சிங்கள இராணுவத்தை வழிநடத்தி செல்லும் இந்திய இராணுவ வல்லுனர்களை திரும்பபெரு,

தேர்தல் களம்காணும் அரசியல் கட்சிகளே ஈழப்போர்களத்தில் எம் இன தமிழர்களும் குழந்தைகளும் பிணமாவதை எதிர்த்து குரல் கொடுங்கள்

உணர்ச்சியுள்ள தமிழர்களே ஈழத்தில் போரை நிறுத்தும்வரை போராட வாருங்கள்

என முழக்கமிட்டு ஊர்வலமாக வந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க மாவட்ட செயலாளர் அ.சக்திவேல் தலைமை தாங்கினார். மற்றும் தோழமை அமைப்புகள் கலந்துகொண்டனர்.





No comments: