Wednesday, January 7, 2009

சென்னையில் 500க்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் கைது

இன்று காலை 9 மணியளவில் மன்மோகன்சிங் தமிழக வருகையைக்கண்டித்து சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்த பெரியார் திராவிடர்கழகத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் கைதாகி அரங்கில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

துரோகம் வென்றது! - பெரியார் முழக்கம்

துரோகம் வென்றது!
சிங்கள ராணுவம் கிளி நொச்சியைப் பிடித்து விட்டதைப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங் களும் தேசிய காங்கிரசாரும் தங்களது வெற்றியாகவே மகிழ்ந்து கொண்டாட்டம் போட்டு வருகிறார்கள்! இந்தியாவின் பச்சை துரோகத்துக்கு, தமிழக முதல்வர் கலைஞரும், மவுன சாட்சியாகி, இந்தத் துரோகத்தில், தனது பங்கினையும் பதிவு செய்து கொண்டுள்ளார்.உழைப்பால் உதிரத்தைச் சிந்தி, ஈழத் தமிழர்கள் தங்களுக்கென கட்டமைத்த நிர்வாக தலைநகரம் வீழ்ந்து நிற்கிறது. 3 லட்சம் தமிழர்கள் குடும்பத்தோடு தங்கள் உடைமைகளை அப்படியே விட்டு, தங்களின் பாதுகாப்பு அரணான விடுதலைப்புலிகளோடு இடம் பெயர்ந்து விட்டனர்.மக்கள் நடமாட்டமே இல்லாத கிளிநொச்சிக்குள் புகுந்த ராணுவம், காலி மைதானத்தில் வெற்றிக் கும்மாளம் போடுகிறது. மக்கள் நெரிசலாக இடம் பெயர்ந்த முல்லைத் தீவிலும் சிங்கள விமானங்கள் குண்டுகளைப் பொழிந்து, அ ப்பாவி மக்களை பிணமாக்கி வருகிறது. மக்களையும் விடுதலைப்புலிகளையும் பிரிக்கவே முடியாது. மக்களிடமிருந்தே விடுதலைப்புலிகள் உருவாகி வருகிறார்கள் என்ற உண்மையை 3 லட்சம் மக்களும் தங்கள் தலைவரோடு இணைந்து இடப் பெயர்வு செய்த நிகழ்வின் வழியாக மீண்டும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.'மக்களுக்கு சேதாரமே இல்லாத ராணுவ நடவடிக்கை' என்று ராஜபக்சே அப்பட்டமாக கூறும் பொய்யை மான வெட்கமின்றி பார்ப்பன ஊடகங்கள் புகழ்ந்து எழுதுகின்றன. குறிப்பாக பார்ப்பன 'இந்து', ராஜபக்சேயை சிறப்பு பேட்டி கண்டு வெளியிட்டு, வெற்றிக் களிப்பில் தள்ளாடுகிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை கண் காணிக்க இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச வல்லுநர் களைக் கொண்ட பன்னாட்டுக்குழு, இலங்கையின் மிக மோசமான மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி அங்கு செயல்படவே முடியாது என்று அறிவித்ததை இந்தப் பார்ப்பன ஏடுகள் மறைத்து விடுகின்றன. இனப்படுகொலைகள் நிகழக்கூடிய உடனடி ஆபத்துகள் நிறைந்த உலகின் 8 நாடுகள் பட்டியலில் இலங்கையும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ராஜபக்சேயை ஜனநாயகத்தின் புனிதராக்கி இந்த பார்ப்பன ஏடுகள் பாராட்டு மாலை களைக் குவிக்கின்றன. (காங்கோ, ஆப்கானிஸ்தான், ஈராக், மியான்மார், பாகி°தான், சோமாலியா மற்றும் சூடானின் தார்பூர் பகுதி ஆகியவை மற்ற ஏழு நாடுகள்ஆகும்) இதற்காக இலங்கையைத் தவிர, ஏனைய நாடுகள் அய்.நா.வின் கண்டனத்துக்கு உள்ளாகிய நிலையில் இந்தியா தரும் பாதுகாப்பு அரவணைப்பால், இலங்கை மட்டும் கண்டனத்தி லிருந்து தப்பி வருகிறது. இந்த உண்மை தெரிந்தும் பார்ப்பன ஏடுகள் ஊமைகள் போல் வேடம் தரித்து நிற்கின்றன.போர் நிறுத்தம் கோரி, தமிழக சட்டசபை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இந்தியாவின் அதிகாரிகள் என்.என்.ஜா, கே.பி.எஸ். மேனன், காங்கிரசின் வெளியுறவுப் பிரிவு இணைச் செயலாளர் இராவ்னி தாக்வர் ஆகியோர் கொழும்புக்குப் போய், தமிழக அரசியல்வாதிகளின் கூக்குரலை ஒதுக்கித் தள்ளிவிட்டு, போரைத் தொடருமாறு இலங்கை அரசை வலியுறுத்தி வந்ததைக்கூட இந்தப் பார்ப்பன ஏடுகள் கண்டிக்கத் தயாராக இல்லை. "தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள் கூறுவதை இந்தியா ஒரு போதும் காதில் வாங்காது" என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா திமிருடன் பேசியதை சடங்குக்காக இந்தியா கண்டித்ததே தவிர அவர் கூறியதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை செயலில் காட்டிவிட்டது.'கிளிநொச்சியைப் பிடித்தப் பிறகே எனது கொழும்பு பயணம்' என்று இறுமாப்பு காட்டினார், இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அமைச்சர் வங்காளப் பார்ப்பனர் பிரணாப் முகர்ஜி. கலைஞர் சொன்னாலும் சரி; வேறு எவர் சொன்னாலும் சரி; அசைய மாட்டேன் என்றார்.கிளிநொச்சியை ராணுவம் பிடித்த பிறகுகூட, இந்தியப் பார்ப்பன ஆளும் வர்க்கம் ஓய்ந்துவிட வில்லை. 'ரா' உளவு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு உளவு விமானத்தில் 'ரா' அதிகாரிகள் கடந்த 3 ஆம் தேதி வானத்தில் பறந்து வேவு பார்த்து, சிங்கள ராணுவத் துக்கு இரகசிய தகவல்களைத் தெரிவித்து வரு கிறார்கள். 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு (ஜன.6) இதை அம்பலப்படுத்தியுள்ளது. 40,000 அடி உயரத்தில் பறக்கும் இந்த விமானத்தில் பொருத்தப்பட்ட காமிரா மூலம் பூமியில் உள்ளவர்களை தெளிவாக படம் பிடித்துவிட முடியும். இரவு நேரத்திலும் படம் பிடிக்க லாம். மேகங்கள் சூழ்ந்திருந்தாலும்கூட படம் பிடிக்க லாம். 40,000 அடி உயரத்தில் பறப்பதால், மற்ற விமானங் களின் பாதையில் குறுக்கிடாது பறக்க முடியும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இருக்கு மிடத்தைக் கண்டறிந்து, சிங்கள ராணுவத் துக்கு உளவு கூறவே இந்திய உளவு நிறுவனம் விமானத்தில் கிளம்பியுள்ளது. இலங்கை இராணுவத்தைப் போல் பாலஸ்தீனர் களின் காசா பகுதியில், இஸ்ரேல் யூதவெறி ஆட்சி, குண்டுகளைப் போடுகிறது. அதைக் கண்டித்து உலகம் முழுதும் கண்டனக் குரல் வெடிக்கிறது. பார்ப்பன 'இந்து' ஏடு, இஸ்ரேல் குண்டு வீச்சைக் கண்டிக்கும். ஆனால், இலங்கை குண்டு வீச்சை மட்டும் ஆதரிக்கும். காசா மக்கள் மீது குண்டு விழுந்தால் கண்டனம்; தமிழன் மீது குண்டு விழுந்தால் இவர்களுக்கு, ஆனந்தக் களியாட்டம். ஒவ்வொரு நாளும் நாட்டின் நிகழ்வுகளுக்கெல் லாம், தமது பேனாவை உடனே தூக்கும் கலைஞர், மத்திய அரசின் துரோகத்தைக் கண்டிக்காமல், வாயை இறுக மூடிக் கொண்டு விட்டார். "கிளிநொச்சியைப் பிடித்தால் என்ன; அழித்தால் என்ன? இப்போது திருமங்கலத்தை நாங்கள் பிடித்தாக வேண்டும்" என்று சூளுரைத்துக் கிளம்பி விட்டார். 'வீரப்ப மொய்லி'கள் பிரபாகரனை பிடித்துக் கொண்டு வந்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திமிருடன் பேசுகிறார்கள். போபாலில் விஷ வாயு கசிந்து, பல்லாயிரம் மக்களை உயிர்ப்பலியாக்கி, அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவன் ஆன்டர்சனை, இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க யோக்கியதையற்ற காங்கிரசார், அதே யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு, மீண்டும் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க அனுமதியளித்த மானங் கெட்ட காங்கிரசார், பிரபாகரனை பிடித்து வரச் சொல்லி, ஒப்பாரி வைப்பதுதான் வேடிக்கை; வினோதம்.தமிழர்களின் தாயகப் பகுதியை ராணுவத்தின் பிடிக்குள் கொண்டுவருவது என்ன நியாயம் ?தமிழர்கள் தங்கள் தாயகப் பகுதியில் ஒரு தலை நகரையும், நிர்வாகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி யதை அழிப்பது என்ன நியாயாம்? சிங்களப் பகுதியிலா, அவர்கள் நிர்வாக அமைப்பை உருவாக்கினார்கள்?இலங்கை எங்கள் நாடு என்று கூறிக் கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசுவதை கண்டிக்காதது எவ்வகையில் நியாயம்?'அய்வருக்கும் தேவி - அழியாத பத்தினி' என்று கூறி அதை நம்ப வைத்த பார்ப்பனர்கள் பார்வையில் இவை நியாயங்களாகிவிட்டன! சூடு,சொரணையுள்ள தமிழன் ஒவ்வொருவனும் இந்தப் பார்ப்பன கூட்டத்தையும், தேசிய காங்கிரசை யும், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓட ஓட விரட்டிட சபதமேற்க வேண்டும்! பார்ப்பானின் தேசியத்தையும், பார்ப்பானின் காங்கிரசையும் தோலுரிப்பதே இனி மானமுள்ள தமிழனின் கடமையாக மாறவேண்டும்! வராற்று துரோகத்துக்கு வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டும் காலம் வந்தே தீரும்!
.

Sunday, January 4, 2009

தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசைக்கண்டித்து ஈரோடு சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசைக்கண்டித்து ஈரோடு சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம்

04.01.2009 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசைக் கண்டித்தும், ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை கண்டித்தும், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் காவல்துறை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க.மாவட்ட இளைஞரணி செயலாளர், புதுரோடு சிதம்பரம், தலைமையில் நடைப்பெற்றது. பெரியார்.தி.க. மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன், ம.தி.மு.க வெங்கிடுசாமி, சி.பி.ஐ. ஸ்டாலின்சிவக்குமார், சண்முகம் ஆதித்தமிழர்விடுதலைமுன்னனி, பொன்னுச்சாமி, மற்றும், விடுதலை பழனிசாமி செல்வக்குமார், இறையிலன்மூர்த்தி, உட்பட 34 தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல் துறை கைது செய்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்

இந்திய அரசே! சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதம் கொடுக்காதே!!
மத்திய அரசே! ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யாதே!!
அடக்கிவை! அடக்கிவை! காங்கிரசை அடக்கிவை!
மலரட்டும்! வெல்லட்டும்! விடுதலைபுலிகள் வெல்லட்டும்!!

என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.





Friday, January 2, 2009



முதல் அறிக்கை: 01.12.2008

தமிழகம் வருகை தரும் காங். மத்திய மந்திரிகளுக்கு கறுப்பு கொடி காட்டப்படும் - பெரியார் தி.க.



01.12.2008 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கோவை, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெரியார் திக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் பொதுச்செயலாளர் தோழர் கோவை.கு..இராமகிருட்டிணன் கூட்டாக விடுத்த அறிக்கை:

செய்திக் குறிப்பு :.

சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராகவும், தமிழக மீனவர்களைக் கண்மூடித்தனமாக சுட்டுக்கொள்வதைக் கண்டித்தும் தமிழகம் கட்சிகளைக் கடந்து ஒருமித்தக் கண்டனக் குரலைத் தெரிவித்து வருகிறது.

தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உடனே போரை நிறுத்த

இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொட்டும் மழையில் இலட்சக்கணக்கான தமிழர்கள் மனித சங்கிலியாக அணிவகுத்து சிங்கள இராணுவத்தின் இனப்படுகொலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வலிமையாக வெளிப்படுத்தினர்.

ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி வருகிறது.

சிங்கள இராணுவத்தின் தமிழினப்படுகொலையோ தொடர்ந்து நீடிக்கிறது.

மத்திய ஆட்சித் தலைமை பொறுப்பில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு குறிப்பாக தமிழக காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருந்தும் கூட தமிழ்நாட்டு மக்களின்

உணர்வுகளை சற்றும் மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்கள்.

தமிழக மீனவர் படுகொலையை, ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையைத் தடுக்கவோ கூட

முன்வராததோடு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் தமிழக மீனவர்கள் எல்லை

தாண்டி போகிறார்கள் என்றும், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவதே கூட சட்ட விரோதம் என்றும்,

பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும் ஆளாளுக்கு

அறிக்கைகளை அளித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி சர்வதேச பிரச்சினைகளில் மாநில அரசுகளோ, கட்சிகளோ தலையிட உரிமையில்லை என்று பேட்டி அளிக்கிறார். சிங்கள இராணுவத்துக்கான பயிற்சி

தொடரும் என்கிறார்கள் . ஏன் ? இராணுவ உதவிகளும் கூட தொடர்ந்து அளிக்கப்படும் என்கிறார்கள்.

அதோடு ஈழச்சிக்களைக் காரணம் காட்டி 1990 ல் தி.மு.க. அரசைக் கலைக்க பின்புலமாக இருந்தவரும், தொடர்ந்து ஈழப்பிரச்சினையில் தமிழின விரோதப் போக்கை கடைபிடித்து வருபவரும், மும்பை தாக்குதலின் வழியாக தனது தகுதியின்மையைக்மெய் காட்டியும் உள்ள எம். கே. நாராயணனை பாதுகாப்பு ஆலோசகராக பிடிவாதமாக தொடர்ந்து வைத்துக்கொண்டும் உள்ளனர்.

மத்தியில் ஆட்சி செய்வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றாலும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களே போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சித் தலைமை தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக்குழு பிரதமரை நேரில் சந்தித்து பேசும் 04.12.2008க்குப் பின் மூன்று நாட்களுக்குள் இணக்கமான முடிவேதும் தெளிவாக அறிவிக்கப்படாவிடில் 08 /12/08 மேல் தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு அவர்களின் தமிழன விரோத போக்கை அம்பலப்படுத்தவும் அவர்கள் மீது தமிழக மக்களுக்கு வெறுப்புணர்வை வெளிப்படுத்தவும் அவர்கள் அரசு சார்ந்த, சாராத எந்நிகழ்ச்சிக்கு வந்தாலும் கருப்புக் கொடி காட்டுவதென பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது.

காங்கிரசின் இந்த துரோகத்தை எதிர்க்கும் தமிழின உணர்வாளர்கள் இந்தக் கருப்புக்கொடி போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வருமாறு பெரியார் திராவிடர் கழகம் தோழமையுடன் வேண்டிக்கொள்கிறது.

இவண்

பெரியார் திராவிடர்கழகம்

01.12.2008


அறிக்கை 2: 29.12.2008



Tuesday, December 30, 2008

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல் தூத்துக்குடியில் கருத்தரங்கம்


இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல் என்ற தலைப்பில் தூத்துக்குடியில் மாலை 6 மணியளவில் மாநகராட்சி திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

மக்கள் உரிமைக்குழுவின் அமைப்பாளர் வழக்கறிஞர் தோழர் இ.அதிசயக்குமார் தலைமையேற்றார். பா.ம.க தோழர் அ.வியனரசு முன்னிலை வகித்தார். தோழர் சு.ப.இராமச்சந்திரன் சிறப்பாக இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்தினார்.

பெரியார் திராவிடர்கழக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் , ஆதித்தமிழர் பேரவை இரா.வே.மனோகர் , மீனவர் கூட்டமைப்பின் தமிழ்மாந்தன் , தமிழர் தேசிய இயக்க தோழர் சு.க.மகாதேவன் , ம.தி.மு.க வழக்கறிஞர் தோழர் நக்கீரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள்.

சிறப்புரையாக இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு ஈழ நிலவரங்கள் பற்றியும் இந்தியாவின் அனுகுமுறை பற்றியும் தெளிவாக விளக்கினார்.

பல்வேறு அமைப்புக்களும் , திரளான தமிழுணர்வாளர்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.

தமிழகம் வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கிற்கு கறுப்புக்கொடி: பெரியார் திராவிடர் கழகம்

தமிழகம் வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கிற்கு கறுப்புக்கொடி: பெரியார் திராவிடர் கழகம்


Friday, December 26, 2008

கலைஞர் அவர்களே ஈழவிடுதலைக்கு நீங்கள் ஆதரவா ? எதிர்ப்பா? - தோழர் பால்.பிரபாகரன்





புரட்சிகர தொழிலாளர் முன்னணி , புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் தூத்துக்குடியில் 26.12.2008 வெள்ளிக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர்களான பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி , தமிழ்தேசிய இயக்கப்பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோர் கைதைக்கண்டித்தும், உடனே விடுதலை செய்யக்கோரியும் , சிங்களக் கைக்கூலிகளை கைது செய்யக்கூறியும் தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன . புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.இ.மு தோழர்கள் சுஜித் , பாண்டியன் , திருக்குமரன் மற்றும் புரட்சிகர தொழிலாளர் முன்னணி தோழர்கள் பெரியார் பித்தன் , செந்தமிழ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.



சிறப்புரையாக பெரியார் திராவிடர்கழக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் உரையாற்றும்பொழுது இந்திய நடுவணரசைக்கண்டித்தும் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவோம் என்று பல நாட்களாக சொல்லிக்கொண்டு கிளிநொச்சியை பிடிக்க இந்திய இராணுவ அதிகாரிகளை உடனடியாக அனுப்பியதைப் பற்றி கண்டிக்காத தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களே ஈழத்தமிழர்களை ஆதரிப்போம் விடுதலைப்புலிகளை ஆதரிக்கமாட்டோம் என்று சொல்லுகிறீர்களே ஈழத்தமிழர்களின் ஒரே பாதுகாப்பு விடுதலைப்புலிகள்தான் என்று உலக நாடுகள் ஏற்றுக்கொண்டிருக்கும் பொழுது நீங்கள் ஏன் இப்படி குழப்புகிறீர்கள் ? நீங்கள் ஈழவிடுதலையை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா ? தமிழினத்தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு என்னதான் தீர்வு என்று இது வரை சொல்லியிருக்கிறீர்களா? ஈழப்பிரச்சினையில் செயலலிதாவின் நிலைப்பாடு எதிர்நிலைப்பாடு என்பது அனைவருக்கும் தெளிவாக தெரியும். உங்களின் நிலைப்பாடு என்னவென்று தெளிவாககூறமுடியுமா என்று தமிழக முதல்வரைக்கண்டித்து உரையாற்றினார். மேலும் இந்திய தேசியம் பேசும் காங்கிரசு பற்றாளர்களே காங்கிரசு கட்சி என்பது அன்னிபெசன்ட் என்ற ஆங்கிலேய பெண்மணியால் ஆங்கிலேயர்களுக்கு ஜால்ரா பொடுவதற்காகவும் பார்ப்பனியர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் திராவிடர்களை அடிமைப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி என்பது காங்கிரசு கட்சியின் வரலாற்றை திருப்பிப்பார்த்தால் தெரியும். காங்கிரசு கட்சி அலுவலகத்திற்க்குள் உடைகளோடு சென்றவன் அரை நிர்வாணமாகத்தானே இதுவரை வெளிவர இயலும். நீங்கள் தேசியவாதம் பேசுகிறீர்களா என்று காங்கிரசு கட்சிகளை தோலுறித்தும் தனது கண்டன உரையை சிறப்பாக பதிவு செய்தார்.

தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவையின் தோழர் இரா.வே.மனோகரன் , புரட்சிப்புலிகள் கிட்டுபாலா , தமிழியப்புரட்சி புலிகள் தோழர் நல்லுபாண்டியன் மற்றும் பலர் கண்டன உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பெரியார் திராவிடர்கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு , தோழர் க.மதன் , பால்.அறிவழகன் , வ.அகரன் , பு.இ.மு, , பு.தொ.மு , புரட்சிப்புலிகள் , தலித்திய சமூகநீதி உரிமைப் பேரவை , ம.தி.மு.க, பா.ம.க தோழர்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி : அகரன்

நிழற்படம் : பாலு நிழற்படக்கலையகம்