தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசைக்கண்டித்து ஈரோடு சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம்
04.01.2009 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசைக் கண்டித்தும், ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை கண்டித்தும், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் காவல்துறை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இவ் ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க.மாவட்ட இளைஞரணி செயலாளர், புதுரோடு சிதம்பரம், தலைமையில் நடைப்பெற்றது. பெரியார்.தி.க. மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன், ம.தி.மு.க வெங்கிடுசாமி, சி.பி.ஐ. ஸ்டாலின்சிவக்குமார், சண்முகம் ஆதித்தமிழர்விடுதலைமுன்னனி, பொன்னுச்சாமி, மற்றும், விடுதலை பழனிசாமி செல்வக்குமார், இறையிலன்மூர்த்தி, உட்பட 34 தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல் துறை கைது செய்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
இந்திய அரசே! சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதம் கொடுக்காதே!!
மத்திய அரசே! ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யாதே!!
அடக்கிவை! அடக்கிவை! காங்கிரசை அடக்கிவை!
மலரட்டும்! வெல்லட்டும்! விடுதலைபுலிகள் வெல்லட்டும்!!
மத்திய அரசே! ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யாதே!!
அடக்கிவை! அடக்கிவை! காங்கிரசை அடக்கிவை!
மலரட்டும்! வெல்லட்டும்! விடுதலைபுலிகள் வெல்லட்டும்!!
என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.





No comments:
Post a Comment