Friday, December 26, 2008

கலைஞர் அவர்களே ஈழவிடுதலைக்கு நீங்கள் ஆதரவா ? எதிர்ப்பா? - தோழர் பால்.பிரபாகரன்





புரட்சிகர தொழிலாளர் முன்னணி , புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் தூத்துக்குடியில் 26.12.2008 வெள்ளிக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர்களான பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி , தமிழ்தேசிய இயக்கப்பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோர் கைதைக்கண்டித்தும், உடனே விடுதலை செய்யக்கோரியும் , சிங்களக் கைக்கூலிகளை கைது செய்யக்கூறியும் தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன . புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.இ.மு தோழர்கள் சுஜித் , பாண்டியன் , திருக்குமரன் மற்றும் புரட்சிகர தொழிலாளர் முன்னணி தோழர்கள் பெரியார் பித்தன் , செந்தமிழ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.



சிறப்புரையாக பெரியார் திராவிடர்கழக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் உரையாற்றும்பொழுது இந்திய நடுவணரசைக்கண்டித்தும் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவோம் என்று பல நாட்களாக சொல்லிக்கொண்டு கிளிநொச்சியை பிடிக்க இந்திய இராணுவ அதிகாரிகளை உடனடியாக அனுப்பியதைப் பற்றி கண்டிக்காத தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களே ஈழத்தமிழர்களை ஆதரிப்போம் விடுதலைப்புலிகளை ஆதரிக்கமாட்டோம் என்று சொல்லுகிறீர்களே ஈழத்தமிழர்களின் ஒரே பாதுகாப்பு விடுதலைப்புலிகள்தான் என்று உலக நாடுகள் ஏற்றுக்கொண்டிருக்கும் பொழுது நீங்கள் ஏன் இப்படி குழப்புகிறீர்கள் ? நீங்கள் ஈழவிடுதலையை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா ? தமிழினத்தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு என்னதான் தீர்வு என்று இது வரை சொல்லியிருக்கிறீர்களா? ஈழப்பிரச்சினையில் செயலலிதாவின் நிலைப்பாடு எதிர்நிலைப்பாடு என்பது அனைவருக்கும் தெளிவாக தெரியும். உங்களின் நிலைப்பாடு என்னவென்று தெளிவாககூறமுடியுமா என்று தமிழக முதல்வரைக்கண்டித்து உரையாற்றினார். மேலும் இந்திய தேசியம் பேசும் காங்கிரசு பற்றாளர்களே காங்கிரசு கட்சி என்பது அன்னிபெசன்ட் என்ற ஆங்கிலேய பெண்மணியால் ஆங்கிலேயர்களுக்கு ஜால்ரா பொடுவதற்காகவும் பார்ப்பனியர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் திராவிடர்களை அடிமைப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி என்பது காங்கிரசு கட்சியின் வரலாற்றை திருப்பிப்பார்த்தால் தெரியும். காங்கிரசு கட்சி அலுவலகத்திற்க்குள் உடைகளோடு சென்றவன் அரை நிர்வாணமாகத்தானே இதுவரை வெளிவர இயலும். நீங்கள் தேசியவாதம் பேசுகிறீர்களா என்று காங்கிரசு கட்சிகளை தோலுறித்தும் தனது கண்டன உரையை சிறப்பாக பதிவு செய்தார்.

தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவையின் தோழர் இரா.வே.மனோகரன் , புரட்சிப்புலிகள் கிட்டுபாலா , தமிழியப்புரட்சி புலிகள் தோழர் நல்லுபாண்டியன் மற்றும் பலர் கண்டன உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பெரியார் திராவிடர்கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு , தோழர் க.மதன் , பால்.அறிவழகன் , வ.அகரன் , பு.இ.மு, , பு.தொ.மு , புரட்சிப்புலிகள் , தலித்திய சமூகநீதி உரிமைப் பேரவை , ம.தி.மு.க, பா.ம.க தோழர்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி : அகரன்

நிழற்படம் : பாலு நிழற்படக்கலையகம்

No comments: