Sunday, November 16, 2008

தமிழர்களுக்காக எப்பொழுதும் போராடும் ஒரே இயக்கம் பெரியார் தி.க. - நடிகர் விஜய் இரசிகர்கள்

ஈழத்தமிழரைக்கொன்று குவிக்கும் சிங்கள அரசைக்கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடிகர் விஜய் இரசிகர் மன்றத்தினர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி 1 ஆம் வாயில் அருகே தூத்துக்குடி விஜய் இரசிகர் மன்றத்தலைவர் பில்லா ஜெகன் தலைமையில் உண்ணாநிலைப்போராட்டத்தை தி.மு.க.வின் தூத்துக்குடி மாநகர செயலாளர் S.R.ஆனந்தசேகரன் துவக்கிவைத்தார். இதில் திரளான இரசிகர்கள் காலை 8 மணிமுதல் தொடங்கி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தி.மு.க.வினர் பலரும் கலந்துகொண்டனர்.

உண்ணாநிலை போராட்டம் என்பது பெரியார் கொள்கைக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இது தமிழுணர்வு போராட்டம் என்பதால் பெரியார் திராவிடர் கழகம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து மாநகரத்தலைவர் தோழர் அ.குமார் வாழ்த்துரை தெரிவித்தார். பின்னர் பேசிய கோவில்பட்டி விஜய் இரசிகர் மன்றத்தலைவர் தமிழர்களுக்கு எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் ஆட்சிகள் மாறினாலும் தமிழர்களுக்காக போராடும் ஒரே இயக்கம் பெரியார் திராவிடர்கழகம் மட்டுமே. அவர்கள் இந்நிகழ்ச்சியில் ஆதரவு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று உரையாற்றினார். நிகழ்வில் இராசபக்சேவை கண்டித்து இளைஞர்கள் முழக்கமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிற்றம்பலம்( தி.மு.க.) தூத்துக்குடி பெரியார் தி.க. நகர துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன் , மாவட்ட துணைச்செயலாளர் தோழர் க.மதன் , தமிழ்நாடு மாணவர் கழக தோழர் வ.அகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Friday, November 14, 2008

சேலம் ஏற்காடு பொதுமக்கள் சார்பாக ஈழத் தமிழர்களை பாதுகாக்க கோரியும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் அமைதி ஊர்வலம் - பொதுக்கூட்டம்

ஈழத் தமிழர்களை பாதுகாக்கக் கோரியும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் உள்ள சேலம் ஏற்காட்டில் உள்ள அனைத்து பொதுமக்கள் சார்பாக அமைதி ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நேற்று நடத்தப்பட்டுள்ளது.

ஈழத்தில் பாதிக்கப்படும் இரத்த உறவுகளான தமிழீழ மக்களை பாதுகாக்க வேண்டியும், அவர்களுக்கு மருத்துவ வசதியும் உணவு வசதியும் இருப்பிட வசதியும் செய்து தருவதோடு சிறிலங்கா அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டியும், மத்திய மாநில அரசுகள் இதற்கான துரித நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும், சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்த அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.



கொல்லாதே கொல்லாதே ஈழத் தமிழர்களை கொல்லாதே

சிங்கள அரசே அப்பாவி தமிழர்கள் மீது குண்டு மழை பொழியாதே

சிறிலங்கா அரசே போரை உடனே நிறுத்து

எங்கள் இரத்தம் எங்கள் இரத்தம் ஈழத் தமிழர் எங்கள் இரத்தம்

என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற இந்த அமைதி ஊர்வலம் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:30 நிமிடத்துக்கு தொடங்கி காந்தி பூங்கா காவல் நிலையம் லாங்லிபேட்டை ஜெரினா நகர் ஒண்டிக்கடை வழியாக அண்ணா சாலை சென்றடைந்து அங்கு எழுச்சியுடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் தொப்புள்கொடி உறவுகளான தமிழீழ மக்களை காக்க ஏற்காடு 67 கிராமங்களைச் சார்ந்த அனைத்து தரப்பு மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் அமைப்புக்கள், தோட்டத் தொழிலாளர் சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள், வியாபார சங்கங்கள், அனைத்து அரசியல் கட்சித் தோழர்கள், கட்டடத் தொழிலாளர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் பங்கேற்றதோடு ஏற்காடு பகுதி வியபாரிகள் நிகழ்ச்சி முடியும் வரை கடையப்பும் செய்தனர்.



அமைதி கூட்டத்திற்கான அனைத்து ஒருங்கிணைப்பு வேலைகளையும் கூட்ட ஏற்பாடுகளையும் ஏற்காடு பகுதி பெரியார் திராவிடர் கழகம் செய்திருந்தது.

நன்றி : http://www.puthinam.com/full.php?22Ln2cc3vO34dE6c302IRj4d30hb0be7E3e2HPB3b34GOe


http://www.tamilwin.com/view.php?22cWnB2035j0e2e2sG7L3b3T9EO4d0C2h2cceDpO3d4bgQH4b0dBLIce

Wednesday, November 12, 2008

இராசபக்சே கு பாடைகட்டி இறுதி ஊர்வலம்

இன்று காலை 10 மணியளவில் ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் பெரியார் தி.க.வின் தலைமை கழக உறுப்பினர் கோபி.இராம இளங்கோவன் தலைமையில் இராசபக்சே க்கு பாடை கட்டி மரண இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலம் எப்படி இருக்குமோ அதைப்போன்றே தோழர்கள் அனைவரும் அமைதியாக வெள்ளை வேட்டி மற்றும் கருப்பு சட்டை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த காவல்துறையினர் தோழர்கள் அனைவரையும் கைது செய்தனர். 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று கைதாகினர். அனைவரும் ஒரு மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதில் விடுதலைச்சிறுத்தைகள் , ஆதித்தமிழர் பேரவை , தமிழ்தேசியப்பொதுவுடைமைக்கட்சி , ம.தி.மு.க , புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் பல அமைப்பினர் கலந்துகொண்டனர்.

-அகரன்

Tuesday, November 11, 2008

கழகத்திற்கு புதிய உறுப்பினர்

தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர்கழக குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் தோன்றியுள்ளார்.

பெரியார் திராவிடர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் தோழர் க.மதன் - ரேவதி இணையர் அவர்களுக்கும் ஒரு ஆண் மகவு கடந்த காரிக்கிழமை (08.11.2008) அன்று பிறந்துள்ளார். இளைய தோழர் யாழ் திலீபன் அவர்களுக்கு தம்பி கிடைத்துள்ளார்.

பெரியார் திராவிடர்கழகம் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

-அகரன்

Friday, November 7, 2008

புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட தமிழுணர்வாளர்கள் விடுதலை

புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கம் கிராமத்தில் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ் அமைப்புக்கள் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் 01-11-2008 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அப்போது புதுச்சேரி உள்துறை அமைச்சர் மலையாளி வல்சராஜின் தூண்டுதலின் பேரில் அவருடைய கைக்கூலியான இளைஞர் காங்கிரசு தலைவர் பாண்டியன் தலைமையில் ரவுடிக் கும்பல் ஒன்று குடிபோதையில் அத்துமீறி உண்ணாவிரதப் பந்தலில் நுழைந்து பந்தல் மற்றும் ஒலிபெருக்கியை நாசம் செய்ததோடு மட்டுமல்லாமல் அப்போது பேசிக் கொண்டிருந்த புதுவை தமிழர் தேசிய இயக்க தலைவர் தோழர் அழகிரியின் சட்டையைப் பிடித்து அடிக்க வந்தனர். அதனைக் கேள்விப்பட்டு உடனடியாக புதுவை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் லோகு.. அய்யப்பன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தோழர். பாவாணன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது உடனடியாக அந்த வன்முறை ரவுடிக் கும்பல் சாலையின் மறுபுறம் சென்று காவல் துறையின் பாதுகாப்புடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல் துறையினர் இரு தரப்பினரையும் ஒரே விதமான சட்டப் பிரிவின் கீழ் கைது செய்வதாக கூறி கைது செய்தனர். ஆனால் மேற்குறிப்பிட்ட அந்த ரவுடிக் கும்பல் மீது எந்தவிதமான வழக்கும் பதியாமல் பிரச்சனையைக் கேள்விப்பட்டு வந்த புதுவை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் உள்ளிட்ட மூவர் மீது பிணையில் வெளிவராத சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். இதனை அறிந்ததும் மற்ற அமைப்புகளின் தோழர்கள் வெகுண்டெழுந்து கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தின் உள்ளே விடிய விடிய போராட்டம் நடத்தினர். இதனால் அதிர்ந்து போன காவல் துறையின் அனைத்து உயர் அதிகாரிகளும் வருவாய் துறை உயர் அதிகாரிகளும் புதுவை துணை ஆட்சியரும் பத்து முறைக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் பாண்டியன் ரவுடிக்கும்பல் மீது வழக்குப் பதிவதாக கூறிவிட்டு கோரிமேடு தன்வந்தரி நகர் காவல் நிலையத்தில் புதுவை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் உள்ளிட்ட மூவருக்காக போராடிய அனைத்து தோழர்களையும் கைது செய்து ஞாயிற்றுக் கிழமை விடியற் காலை 4.00 மணியளவில் புதுவை சிறையில் அடைத்தனர்.

பின்னர் 03-11-2008 திங்கள் மாலை லோகு. அய்யப்பன் உள்ளிட்ட மூவரை தவிர்த்து மற்றவர்களை பிணையில் விட்டனர். மேலும் லோகு. அய்யப்பன் உள்ளிட்ட மூவர் மீது பிணையில் வெளியில் வராத சட்டப்பிரிவுகளின் கீழ் மறுபடியும் இரண்டாம் முறையாக கைது செய்து சிறையில் வைத்தனர்.

பின்னர் 05-11-2008 அன்று மாலை பிணையில் வெளிவந்த புதுவை பெரியார் தி. க. தலைவர் லோகு. அய்யப்பன் உள்ளிட்ட மூவருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

ஊர்வலத்தில் புதுவை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தோழர் பாவாணன்இ மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர் செல்வன்இ பகுசன் சமாஜ் கட்சி தலைவர் தங்க. கலைமாறன்இ புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர்படை தலைவர் சி. மூர்த்திஇ மீனவ மக்கள் முன்னேற்றத் தலைவர் சக்திவேல்இ பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் முத்துஇ மதிமுக பிரமுகர்; கபிரியேல் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் கலந்து கொண்டனர். பெரியார் தி.க. தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். சிறைச்சாலையிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை காங்கிரசு மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுவை உள்துறை அமைச்சர் மலையாளி வல்சராஜ் தூண்டுதலின் பேரில் புதுவை காவல் துறை கண்காணிப்பாளர் மலையாளி சிவதாசன் தலைமையில் காவல் துறையினர் பல இடங்களிலும் ஊர்வலம் நகரின் உள் நுழையாதவாறு தடுக்கப் பார்த்தனர்.

இறுதியாக ஊர்வலம் பல தடைகளைத் தாண்டி புதுவை ராஜிவ் காந்தி சிலை சந்திப்பில் வந்த போது காவல் துறையினர் தங்களுடைய வாகனங்களையும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் கண்ணீர் புகை வீசும் வாகனங்களையும் சாலையின் குறுக்கே நிறுத்திஇ காவல்துறையினர் வரலாற்றில் முதல் முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பெரியார் சிலைக்கும் அம்பேத்கர் சிலைக்கும் சிங்காரவேலர் சிலைக்கும் மாலை அணிவிக்க அனுமதி மறுத்தனர்.

இதனால் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக வருவாய் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தலைவர்கள் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் சென்று பெரியார் சிலைக்கும் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தனர். இரு சக்கர வாகனங்களில் வந்த தோழர்கள் நகருக்குள் செல்லாமல் புறச் சாலை வழியாக சிங்காரவேலர் சிலைக்கு வந்தனர். பெரியார் சிலைக்கும் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்த தலைவர்கள் பின்னர் தோழர்களோடு சேர்ந்து சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து அரியாங்குப்பம் நகரில் உள்ள பெரியார் சிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இறுதியில் அரியாங்குப்பம் நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்களின் உரையோடு ஊர்வலம் நிறைவுபெற்றது.

- அகரன்

Tuesday, November 4, 2008

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கொளத்தூரில் கடையடைப்பு





---வ.அகரன்

Saturday, October 25, 2008

Pirabhakaran 'Returns' To India-tehelka

PC VINOJ KUMAR travels through Tiger territory in Tamil Nadu, to understand why M Karunanidhi's ministers have resigned from the Centre


Support A child poses in a LTTE post in Sri Lanka
Photo: AP

IN 2002, THEN chief minister Jayalalithaa arrested Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) founder Vaiko and other politicians for their support to Sri Lanka's Tamil rebels. Six years later, the situation is utterly reversed, with the public mood in Tamil Nadu swinging radically in favour of the rebels. Recent local surveys by two of the state's leading media houses, the New Indian Express and Tamil weekly Ananda Vikatan, have found overwhelming ground-level support for the Sri Lankan Tamil liberation movement and for rebel leader, Velupillai Pirabhakaran. With reports of increasing Tamil casualties in the island country, public sympathy for Pirabhakaran and his outfit, the Liberation Tigers of Tamil Eelam (LTTE), has only been strengthened.

In spiralling protests across the state last fortnight, effigies of Sri Lankan President Mahinda Rajapakse were burnt in many places, as were copies of the English daily, The Hindu, for its alleged pro-Sinhala stand; the paper's office even came under attack in Coimbatore. Students boycotted classes, lawyers stayed away from the courts and the Tamil film industry staged a massive rally in Rameswaram on October 19. Political parties, their eye on the upcoming Lok Sabha polls, were forced to take up the Eelam cause. State MPS belonging to the Dravida Munnetra Kazhagam (DMK), the Congress, the Pattali Makkal Katchi (PMK), the CPI, CPM, and MDMK threatened to resign en masse if the Centre failed to pressure Sri Lanka into calling a ceasefire. With the standoff threatening to bring down the UPA Government (which has 16 DMK, five PMK, 10 Congress and two MDMK rebel MPs), the Indian Government is in contact with Colombo to find a face-saving solution.


Anger An effigy of the Sri Lankan President is burnt
Photo: BALAJI

Meanwhile, in Salem district, about 375 km southwest of Chennai, LTTE supporters are celebrating in Kolathur. "Just because a member of a family has killed someone, you don't pull his pictures out of the family album. He still remains part of the family. Pirabhakaran is part of our families. We are proud of him, he is a freedom fighter," says Kolathur Mani, leader of the socio-political outfit, the Periyar Dravidar Kazhagam (PDK). Pirabhakaran's photos adorn the walls of many houses and shops in the Kolathur area's villages. Locals say if the LTTE chief were to contest the local assembly seat, he would win hands down.
The Kolathur town panchayat comprises about 10 villages, which together have a population of around 75,000 people. About 2,000 of Pirabhakaran's cadre trained in one such village, Kumbarapatti, in the 1980s. "The boys were here for about three years. The village people provided them food and shelter," says Balasubramaniam, who did small chores around the camp. "The LTTE boys were well-disciplined. Many had suffered under the Sinhalese army. There were boys from affluent families, who had lost all they had and who had seen their mothers and sisters raped before their eyes."
In these villages, it hardly matters that Pirabhakaran is an accused in the assassination of former prime minister Rajiv Gandhi, or that the LTTE is banned in India. Many have named their children after Pirabhakaran. Housing colonies have been given the names of LTTE martyrs: Suba Thamilchelvan and Dileepan. Last year, villagers collected over a tonne of rice for the Eelam Tamils when Thamizh Desiya Iyakkam leader Pazha Nedumaran appealed for relief materials. In Kumbarapatti stands a bus shelter built in memory of Ponammaan, the LTTE camp in-charge whose helpful ways earned him the villagers' love. "The LTTE had an old, battered Willys jeep, which they used to buy provisions from the Kolathur market. Ponammaan used to offer the jeep to help transport sick people to hospital," recalls local resident Dhandapani. The shelter was built in 1989, when Ponammaan died in Sri Lanka; two years later, the villagers fought back when Congressmen damaged the structure after Rajiv Gandhi's assassination. "They asked them if they had ever seen Rajiv or eaten with him. Ponammaan was in their midst for three years and had shared their joys and sorrows," says Mani.

IN 2006, NEARLY 500 schoolchildren from the area took out a procession protesting the Sri Lankan air attack that killed 60 children in an orphanage. "These protests are spontaneous because the Eelam Tamils are our brothers and sisters," says Balakrishnan, otherwise known as 'Tiger' Balu for his diehard espousal of the LTTE cause. His shop, the Tigers' Auto Electrical Works, has the LTTE logo on its signboard: a tiger's head ringed with bullets. "I am an LTTE supporter," declares medicine-seller Nallathambi. "My whole family admires Pirabhakaran." Madhu, who runs a saloon named after LTTE leader Dileepan, turns emotional. "I am prepared to give the Tigers any kind of support. We supported them before, and we will continue to do so." he says.

Kolathur remained a hotbed of LTTE activity even after Rajiv Gandhi's assassination in 1991. In 1993, Kiruban, an LTTE cadre who escaped from custody while being transported to the Trichy court, was said to have gone underground in Kolathur for a while before he slipped out of the country to Eelam via the sea route. The car he had hijacked to flee the police was found burnt near Kolathur. In 1994, PDK leader Mani was detained under the Terrorist and Disruptive Activities (Prevention) Act on charges of aiding the escape of an LTTE convict. He was arrested again in 1995 for his alleged links to the dramatic escape of 43 LTTE cadres from Vellore Fort through a 126ft-long underground tunnel they had dug. Villagers said some of the escapees hid in the Kolathur forests before they fled to Sri Lanka.
Till a couple of years ago, many in Kolathur received LTTE publications such as their monthly bulletin Erimalai. The magazines stopped after the war intensified in Sri Lanka. But people here kept themselves abreast of the happenings in Eelam through the Tamil Eelam Television, a two-hour daily broadcast put out by the LTTE. "The half-hour news bulletin gave an accurate account of the happenings in Eelam. But there have been no transmissions for the last six months," says TS Palanisamy, a Kolathur quarry owner. It is suspected that the Tigers' transmission tower has been damaged in the conflict. With locals alleging biased coverage of the war in the Indian media, many tune in to international radio stations instead. VCDs on the conflict are also available in some places.
With pro-LTTE passions running as high as they do here, none of Tamil Nadu's political parties would want to be seen lagging when it comes to a show of hands for Prabhakaran's army. What that means for the UPA, the Centre has only a few days more to test.

thanks : www.teheleka.com