ஈழத்தில் பாதிக்கப்படும் இரத்த உறவுகளான தமிழீழ மக்களை பாதுகாக்க வேண்டியும், அவர்களுக்கு மருத்துவ வசதியும் உணவு வசதியும் இருப்பிட வசதியும் செய்து தருவதோடு சிறிலங்கா அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டியும், மத்திய மாநில அரசுகள் இதற்கான துரித நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும், சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்த அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
கொல்லாதே கொல்லாதே ஈழத் தமிழர்களை கொல்லாதே
சிங்கள அரசே அப்பாவி தமிழர்கள் மீது குண்டு மழை பொழியாதே
சிறிலங்கா அரசே போரை உடனே நிறுத்து
எங்கள் இரத்தம் எங்கள் இரத்தம் ஈழத் தமிழர் எங்கள் இரத்தம்
என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற இந்த அமைதி ஊர்வலம் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:30 நிமிடத்துக்கு தொடங்கி காந்தி பூங்கா காவல் நிலையம் லாங்லிபேட்டை ஜெரினா நகர் ஒண்டிக்கடை வழியாக அண்ணா சாலை சென்றடைந்து அங்கு எழுச்சியுடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் தொப்புள்கொடி உறவுகளான தமிழீழ மக்களை காக்க ஏற்காடு 67 கிராமங்களைச் சார்ந்த அனைத்து தரப்பு மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் அமைப்புக்கள், தோட்டத் தொழிலாளர் சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள், வியாபார சங்கங்கள், அனைத்து அரசியல் கட்சித் தோழர்கள், கட்டடத் தொழிலாளர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் பங்கேற்றதோடு ஏற்காடு பகுதி வியபாரிகள் நிகழ்ச்சி முடியும் வரை கடையப்பும் செய்தனர்.
அமைதி கூட்டத்திற்கான அனைத்து ஒருங்கிணைப்பு வேலைகளையும் கூட்ட ஏற்பாடுகளையும் ஏற்காடு பகுதி பெரியார் திராவிடர் கழகம் செய்திருந்தது.
நன்றி : http://www.puthinam.com/full.php?22Ln2cc3vO34dE6c302IRj4d30hb0be7E3e2HPB3b34GOe
http://www.tamilwin.com/view.php?22cWnB2035j0e2e2sG7L3b3T9EO4d0C2h2cceDpO3d4bgQH4b0dBLIce
No comments:
Post a Comment