Friday, May 29, 2009

ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்தற்காகவும், பெரியார் திக பொதுச்செயலாளரை தே.பா.ச. கைது செய்த இந்திய அரசைக்கண்டித்து தூத்துக்குடியல் ஆர்ப்பாட்டம்


ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காகவும் பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை கு.இரமகிருட்டிணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த இந்திய அரசைக்கண்டித்தும் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

audio: http://download822.mediafire.com/015cthxmkzug/andmitdydoy/pdk28052009.mp3



இன்று(28.05.2009) மாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி 1 ஆம் நுழைவு வாயில் காந்திசிலை அருகில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் முன்னிலையில் ஆதித்தமிழர் பேரவையின் சு.க.சங்கர் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தினை தொடங்கிவைத்தார்.



புரட்சிகர இளைஞர் முன்னணியின் இரா.தமிழரசன், இந்தியப்பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆ.மோகன்ராசு ஆகியோர் கண்டன உரையாற்றிய பின்னர் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றினார்.



அவரது தனது உரையில் ஈழத்தமிழரையும் தமிழக மீனவர்களையும் கொன்ற இராசபக்சேவுக்கு ஆதரவாக ஐநாவில் ஓட்டளித்த இந்திய அரசையும் அதற்கு ஆதரவான கருணாநிதியையும் கண்டித்து உரையாற்றினார். தன் மகன்களுக்காக பதவி வாங்க விமானம் மூலம் தில்லி சென்று பேசும் கருணாநிதி இலட்சக்கணக்கான என் தமிழ் மக்கள் செத்துக்கொண்டிருப்பதை தடுக்க காகிதத்தில் எழுதி அனுப்புவதேன் என்று கருணாநிதியின் உண்மை உருவை மக்களுக்கு எடுத்துக்கூறினார்.



ஈழத்துக்கு ஆதரவாக செயல்படும் தமிழுணர்வாளர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைப்பதையும் ஈழமக்களை கொல்ல இந்தியா வாகனம் மூலம் அனுப்பிய கனரக ஆயுதங்களை தடுத்து நிறுத்திய பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் மேல் தேசிய பாதுகாப்பு சட்டத்தினை பாய்ச்சிய இந்திய அரசைக்கண்டித்தும் உரையாற்றினார்.



இந்நிகழ்வில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கத்தின் அருட்திரு பணி.சுந்தரிமைந்தன் அவர்கள் நிறைவுரையாற்றினார். பெரியார் திராவிடர் கழகத்தின் செ.செல்லத்துரை நன்றியுரையாற்றினார். நிகழ்வில் பெரியார் திக வின் சா.த.பிரபாகரன், கோ.அ.குமார், அறிவுபித்தன், வே.பால்ராசு, க.மதன், வ.அகரன், ரவிசங்கர், கனகராஜ், ஆதித்தமிழர் பேரவையின் வே.மனோகர்,கண்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் லெனின், சுஜித் மற்றும் திரளான தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.


இணையத்தில் செய்திகாண:
www.ibctamil.co.uk
மீனகம்

No comments: