பெரியார் எழுத்துப் பேச்சுகளைத் தொகுத்து பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடக் கூடாது என்று தி.க. தலைவர் கி.வீரமணி தொடர்ந்துள்ள வழக்கு ஜூலை 20 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை எடுத்த உடனே நீதிபதி தி.க. வழக்கறிஞர் வீரசேகரனைப் பார்த்து “உங்களுக்கு பரந்த சிந்தனையே (BROAD THINKING) இல்லையா?” என்று கேட்டார்.
வழக்கறிஞர் வீரசேகரன் - “பாரதியின் கவிதைகளில் திரிபுகள் வந்ததுபோல், பெரியார் கருத்துகளும் திரிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்கே - வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.
மீண்டும் நீதிபதி, “நான் கேட்ட கேள்விக்கு, பதில் இல்லையே! உங்களுக்கு பரந்த சிந்தனை இல்லையா?” என்று கேட்டார்.
‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு, நீதிமன்றம் விதித்த தடையைத் தொடர வேண்டும் என்று, தி.க. வழக்கறிஞர் கேட்டார். “தடையின் கெடு முடிந்துவிட்டது. இப்போது தடைவிதிக்க முடியாது; வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்; முதல் வழக்காக இதை விசாரிப்பேன்” என்று நீதிபதி கூறினார்.
கழக சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோ ஆஜரானார்கள்.
-----------------
No comments:
Post a Comment