பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்தியராஜ், இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் அருகே நடிகர் சத்தியராஜ் இந்த பேரணியை துவங்கி வைத்தார். சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்த பெண்கள் உள்பட பலர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
20 ஆண்டுகள் சிறையில் இருந்த மூவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது நாகரீகம் ஆகாது என்று பேரணியில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், மரண தண்டனைக்கு எதிராக காந்தியடிகள் சொன்னதற்கு மேலாக நான் ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. நியாயம் கிடைக்க வேண்டும். அந்த இளைஞன் வாழ்க்கையில் தண்டனை குறைக்கப்பட வேண்டும். நீதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆகவே நாங்கள் எங்களால் முடிந்த போராட்டங்களை செய்வோம் என்றார்.
[Show as slideshow]

View the
Original article
No comments:
Post a Comment