கோவையில் இராணுவ வாகனங்களை மறித்ததாக - தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழகத்தினரின் மீதான வழக்குகளுக்கு நிதி வழங்கும் விழாவும் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி, பெரியார் திராவிடர் கழகத்தில் தோழர்கள் இணைந்த நிகழ்வும் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாநாடு போல் பொதுக் கூட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்திருந்தனர். வழக் கறிஞர் குமாரதேவன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள் அமர்நாத், அரியலூர் பகுத்தறிவாளன், விடுதலை இராசேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் (பா.ம.க.), இயக்குனர் சீமான், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பேசினர். முன்னதாக தேனிசை செல்லப்பா குழுவினரின் எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக 4.30 மணியளவில் எம்.ஜி.ஆர். நகர் செல்வ மஹால் மண்டபத்தில் நடந்த இணைப்பு நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்டத் திலிருந்து 26 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்.
இவர்களில் வழக்கறிஞர் பகுத்தறி வாளன் தி.க.வில் இருந்தவர். மற்றவர்கள் புதிதாக கழகத்தில் இணைந்தவர்கள்.
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 4 தோழர்களும், வடசென்னையி லிருந்து 8 தோழர்களும், தர்மபுரி மாவட்டத்திலிருந்து இரண்டு தோழர் களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தி லிருந்து 10 தோழர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 7 தோழர்களும், திராவிடர்கழகத்திலிருந்து விலகி பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இது தவிர 18 தோழர்கள் புதிதாக கழகத்தில் இணைந்தனர்.
தோழர்களை வரவேற்றுப் பாராட்டி, வழக்கறிஞர் குமாரதேவன், வழக்கறிஞர் துரைசாமி, விடுதலை இராசேந்திரன், கொளத்தூர் மணி பேசினர்.
பெரியார் திராவிடர் கழகம் மட்டும் தான், பெரியார் கொள் கையைப் பரப்பிடவும், போராட்டக் குணம் கொண்டதாகவும் இருப்பதால் இந்தக் கழகத்தில் இணைவதாக இணைந்த தோழர்கள் தெரிவித்தனர்.
எழுச்சியுடன் நடந்த பொதுக் கூட்ட மேடையில் இணைந்த தோழர்கள் அனைவருக்கும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆடைகள் போர்த்தி பாராட்டினார்.
(இணைந்த தோழர்களின் பெயர், முகவரி, கூட்டச் செய்திகள் பற்றிய முழுமையான செய்தி அடுத்த இதழில்)
குடந்தை, மயிலாடுதுறை, டிதிருப் பரங்குன்றம், திருமானூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் தோழர்கள் தி.க.விலிருந்து விலகி கழகத்தில் இணைந்துள்ள செய்திகள் அடுத்த இதழில்.
- பெரியார் முழக்கம் 23.07.2009
No comments:
Post a Comment