அதேபோல், தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக செயலாளர் திருமதி சுதா பிள்ளை மற்றும் வணிகத் துறை செயலாளரான அவரது கணவர் கோபால் கிருஷ்ண பிள்ளை ஆகியோரும் மலையாளிகள்தான். இது மட்டும் அல்லாமல், சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய விசாரணை ஆணையத்தின் (என்.ஐ.ஏ.) முதல் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராதா டிவினோத் ராஜூவும் கேரளாவை சேர்ந்தவர்தான். அதோடு வேளாண்மை செயலாளர் டி.நந்தகுமார், சட்டத்துறை செயலாளர் டி.கே.விசுவநாதன், விமான போக்குவரத்துத் துறை செயலாளர் எம்.மாதவ நம்பியார், இஸ்ரோ தலைவரும், விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளருமான ஜி.மாதவன் நாயர் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதேபோல், கனிம வளர்துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன தலைவர் லீனா நாயர் ஆகியோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் . அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் அல்லாமல், அமைச்சர்கள் வட்டத்தை பார்த்தாலும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் இடம் பெற்றுள்ளனர். கேபினட் அமைச்சரவையில் 2-வது முறை ராணுவ அமைச்சராக ஏ.கே.அந்தோணி, வெளி நாட்டில் வாழும் இந்தியர் விவகாரங்கள் துறை அமைச்சராக வயலார் ரவி ஆகியோரும் இணை அமைச்சர் பதவிக்கு இரயில்வே துறையில் இ.அகமது, வேளாண்மை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் கே.வி.தாமஸ், உள்துறையில் முல்லப் பள்ளி ராமச்சந்திரன், வெளி விவகாரத் துறையில் சஷி தரூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் தொடர்புடைய எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோணி, விஜய் நம்பியார் (அய்.நா. அதிகாரி), அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் (இலங்கை ராணுவ ஆலோசகர்) ஆகிய அனைவருமே மலையாளிகள் தான்!-- பெரியார் முழக்கம்
No comments:
Post a Comment