Wednesday, June 24, 2009

பத்து வருடம் கழித்து நாங்கள் போராளியாக மாறுவோம்: கோவையில் சிறுவர்கள் முழக்கம்

கோவையில் தமிழர் ஆதரவு முன்னணி சார்பாக ஈழ ஆதரவாளர் விடுதலை இயக்க மாநாடு 21.6.09 அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறுவர்கள் பத்து வருடம் கழித்து நாங்கள் போராளியாக மாறுவோம் என்று கூறியது அனைத்து தமிழர்களின் உணர்வுகளை தட்டியெழுப்புவதாக இருந்தது.



கொளத்தூர் மணி, வழக்குரைஞர் ரஜினிகாந்த், புதுகோட்டை பாவாணன், திரைப்பட இயக்குநர்கள் சீமான்,ராம், ஆகியோர் பங்கேற்க அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்ட மாநாடு சிறப்பாக நடந்தது.

மாநாடு நடந்துகொண்டு இருக்கும் வேளையில் மளமளவென மேடை ஏறிய ஆத்தூரில் பயிலும் எட்டு வயது சிறுவன் நக்கீரனும்,அவரின் மூன்று வயது தங்கை இனியாவும் மைக் பிடித்து, "நமது தொப்புள் கொடி உறவுகளை அங்கு கொத்து கொத்தாக கொன்று ஒழித்தனர். நாம் கண்டுகொள்ளவில்லை இனி அப்படி இருந்துவிட கூடாது நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் தான் எதிரி இடைக்காலமாக வெற்றி பெற்று உள்ளான். ஆனாலும் நாம் சோர்ந்துவிடக்கூடாது.

இதுவரை ஈழ தமிழர்களுக்காக நடந்த போராட்டம் இனி உலக தமிழர்களுக்கான போராட்டமாக அமைந்துவிட்டது.நம் உறவுகளை காக்க, நமக்கென நாடு அமைய ஒவ்வொரு தமிழக தமிழர்களும் தங்கள் வருமானத்தில் இருந்து பத்து விழுக்காடு நிதியை ஒதுக்கி விடுதலை போராட்டத்திற்கு உதவ வேண்டும்.என் பங்காகவும்,நான் என் நண்பர்களிடம் பெற்ற வகையிலும் ஆறாயிரத்தூ இருநூற்றி பத்து ரூபாயை வழங்குகிறேன்.

'தமிழரின் தாயகம் தமிழ் ஈழ தாயகம்' "

என முழங்கி நிதியை பெரியார் திராவிடர்கழக தலைவர் கொளத்தூர் மணியிடமும், இயக்குநர் சீமானிடமும் கொடுக்க பலத்த கரவொலியுடன். வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும் என்று உணர்வாளர்கள் மத்தியில் இருந்து வீர விடுதலை முழக்கங்கள் முழங்கப்பட்டு அரங்கையே அதிர வைத்தது.

மேலும் சிறுவன் நக்கீரன் "இன்னும் பத்து வருடம் களைத்து நானும் என் தங்கையும் போராளியாக மாறபோகிறோம்" என உணர்வோடு கூறியது தமிழகத்தில் தமிழ் ஈழ ஆதரவு உணர்வு இன்னும் உயிரோடும்,உயிர்ப்போடும் உள்ளது என்பதை நிரூபித்தது. கோவையில் ஒலித்த ஒலி தேசம் கடந்த தமிழர்களை உசுப்பி உள்ளது உலக தமிழ் அரசு அமைய!


No comments: