Sunday, November 16, 2008

சேலத்தில் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம்




16.11.08 தமிழகம் முழுதும் நடிகர் விஜய் நற்பணி மன்றத்தினர் ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் படுகொலைகளை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர்.சென்னையில் விஜய் இருக்க மற்ற மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் இருந்தனர். சேலத்தில் சேலம் விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமையில் கிட்டத்தட்ட 8000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்க எழிச்சியோடு நடந்தது.

தமிழக வேளாண்மை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புதல்வன் சட்டமன்ற உறுப்பினர் ஆ.ராஜா உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். அவர் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பேச அடுத்து வந்து இருந்த பல்வேறு தமிழ் அமைப்புகள் ஈழ்ம் பற்றி பேசினர்.

புதியன பண்பாட்டு இயக்கத்தின் செந்தில்," ஒரு சிற்று எறும்பை கூட தொடர்ந்து அடித்தால் அது கொடுக்கை நிமிர்த்தி திருப்பி தாக்க முற்படும்,ஒரு புழுவை தாக்கினால் கூட அது பொறுக்காமல் தன் எதிர்ப்பை காட்டும் அப்படி இருக்க வீரம் செறிந்த தமிழர் இனத்தை பாசிச வெறியோடு சிங்கள அரசு தாக்கும் போது தவிர்க்க இயலாமல் தமிழர்கள் திருப்பி தாக்குகின்றனர். இது வீரம் செறிந்த தமிழ் ஈழத்தின் விடுதலை போராட்டம்.தன் இலக்கை அடையாமல் நிறுத்தாது" என்றார் எழிச்சியோடு.

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, " இங்கு நாம் இரண்டு மணி நேரம் மின் நிறுத்தம் ஏற்பட்டால் கூட உடனே போராடுகிறோம் அங்கோ 25 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தான் ஈழ தமிழர்கள் வாழ்கின்றனர். முதலில் அகிம்சை முறையில் இது போல் உண்ணாவிரதம் இருந்து போராடினார்கள். ஆனால் அங்கு துப்பாக்கி சூடு நடத்தி சிங்கள அரசு 400 தமிழர்களை கொன்றது.

அதன் பின் வேறு வகையான போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.அகிம்சை காந்தி தேசம் ஆயுதம் தர பௌத்தத்தின் சிங்கள அரசு தமிழர்களை கொன்று ஒழிக்கிறது. தற்போது நாம் கோருவது எல்லாம் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இந்திய அரசு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கைக்கு உணர்வோடு ஆதரவு தந்த விஜய்க்கும் அவர் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்". என்றார்.

இறுதியாக பேசிய மன்ற தலைவர் பார்த்திபன்," இந்தியாவில் பிறந்ததால் வெட்டியாக என் உயிர் போகும் என வருத்தப்படுகிறேன். அங்கு என் ஈழத்தில் பிறந்து இருந்தால் என் மக்களுக்காக குண்டு பட்டு என் உயிர் துறந்து இருப்பேன்" என்றார் உணர்ச்சி பொங்க!

குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி, மற்றும் பல அமைப்பினர் பங்கேற்க மிக இறப்பாக உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிந்தது. சினிமா ரசிகர்களாக இருந்த இளைஞர்கள் நடிகர் விஜயின் ஊக்கத்தால் ஈழ தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவு தந்து தமிழர்களாக உயர்ந்து நின்றனர்.

No comments: