[ |
இலங்கையில் ஜம்பத்தாண்டுகளுக்கு மேலாக சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறைக்கும், சிறிலங்கப் படையினரின் அத்துமீறல்களுக்கும், இலங்கையின் புத்த சமயத்தினரின் சர்வாதிகாரப் போக்குகளுக்கும் ஆளாகித் துன்புற்றுச் சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலைக்கு ஈழத்தமிழர் தள்ளப்பட்டிருக்கிறார்கள். |
அவர்களுடைய உரிமை வாழ்வுக்குக் குரல் கொடுக்கும் விதமாக, பெங்களூர் தமிழ்ச் சங்கம் நவம்பர் 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியது. நிகழ்ச்சியைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்.திரு.முத்துச்செல்வன் தலைமையில், சங்கச் செயலாளர் திரு.தாமோதரன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பெங்களூரில் உள்ள தமிழ் அமைப்புகளும்,அரசியல் கட்சியினரும், மாணவர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள். |
Sunday, November 16, 2008
ஈழத்தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment