Tuesday, August 26, 2008

பாலை குறுந்தகடு - தமிழ்ப்பாவலர் வ.ஐ.ச.செயபாலன்

தோழர்களே கடந்த 4ம் பக்கல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய துறையினரால் தமிழ் பாவலர் வ.ஐ.ச.செயபாலன் அவர்களின் பாலை குறுந்தகடு வெளியிடப் பட்டது. குறுந்தகட்டை பாலுமகேந்திரா வெளியிட்டுவைத்தார். பாடல்கள்பற்றியும் பாடல்களை பாடிய பாவலரின் துணைவியார் வாசுகி அம்மையாரின் குரல் வளம்பற்றியும் இயக்குநர் பாலுமகேந்திராவும் கவிஞர் மேத்தாவும் கவிஞர் நா முத்துக்குமாரும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் டாக்டர் வி.அரசுவும் பேசினார்கள். இசை இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் என்று சிலர் கருத்துரைத்தார்கள். இந்த தயாரிப்புக்கு இந்தியப் பணம் உரூவா 1,50,000 ஒன்றரை இலட்சம் உரூவா செலவாகிற்று. ஆனந்த விகடனில் பாலை விமர்சனக் குறிப்பு இடம்பெற்றுள்ளது. குறுந்தகட்டை நமது வலைப்பூ ஊடாக உலகத்தமிழருக்கு வழங்குகிறோம். பாடல்கள் பிடித்திருந்தால் உங்கள் அன்பளிப்பை தமிழ் பாவலர் வ.ஐ.ச.செயபாலன் அவர்களின் வங்கிக் கணக்கிற்க்கு அனுப்புங்கள் நன்றி.

இந்திய விலைப்படி உரூவா 100/-

தமிழகத்தோழர்கள் பணம் செலுத்தி குறுந்தகடுனை பெற்றுக்கொள்ளலாம்.


நன்றி.



பாலை குறுந்தகடு = வ.ஐ.ச.ஜெயபாலன்
அன்புக்குரிய தமிழ் இசை, கவிதை ஆர்வலர்களுக்கு,
நலம் இத்தோடு எனது பாலை இசைத் தொகுப்பு இணைத்துள்ளேன். யாரும் தரவறக்கம் செய்துகொள்ளலாம். மிகுந்த சிரமத்துக்கிடையில் நானும் எனது மனைவியும் கடன் பட்டு தயாரித்த இசைத் தொகுப்பு. உங்களுக்கு பாடல்கள் பிடித்திருந்தால் மட்டும் வசதிஉள்ளபோது உங்கள் அன்பளிப்பை எனது வங்கிக் கணக்கிற்க்கு அனுப்பவும். உங்கள் கரிசனை மேலும் இலக்கியப் பணிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்.
AC No: 0532 51 18328
Shanmugampillai Jayapalan
Postbanken, Norway

visjayapalan@gmail.com
00919941484255
அன்புடன்
.ஜெயபாலன்
பாடல்களை எழுத்துவடிவிலும் ஒலி வடிவிலும் தரவேற்றம் செய்துள்ளேன்

பாடல் - 1


புலரும் வேளையில் யன்னல் ஓரமாய்
கவிதை பாடுகின்ற தாரோ
பூக்கள் சிந்திடும் முல்லைப் பந்தரில்
பாக்கள் சூடுகின்றதாரோ - குயிலே


துயரம் தீயெனச் சுட்டபோதிலும்
சுடரும் பொன் உந்தன் வாழ்வு
பொழுது புலர்ந்தது எழுக கவிஞனே
என்று பாடுகின்றதாரோ - குயிலே


வசந்தம் உன்னிடம் சொன்ன சேதிகள்
எனக்கு சொல்லலாகாதா
கசந்த போர்க்களம் நாண மானிடம்
சேர்ந்து பாடக் கூடாதா - குயிலே


http://www.gmobil.net/paalai/01- pularum_Velayil.mp3

பாடல் - 2



கண்ணம்மா இந்த பனிகொட்டும் இரவினிலே
இலையற்ற தனிமரமாய் உன்னையே நினைத்திருந்தேன்

என்று உன் பூவிரல்கள் தீண்டிடுமோ என்று
ஏங்கிடும் வீணையைப் போல் துயருறுதே நெஞ்சம்



பூத்திடும் கனவினில் கானகங்கள் என்றும்
புலர்ந்திடும் வசந்தத்தின் கற்பனைகள்
தேற்றும் உன் காதலில் பாரதியின்
சிந்துகள் பாடிடும் ராத்திரிகள்
http://www.gmobil.net/paalai/02 - Track 2.mp3

பாடல் -3



வெண்பனி மீது பொன்மலர் சூடும்
செங்கதிரோனை வாழ்த்துகிறோம்
கண்பனி சூடி எம் நினைவோடு
ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம்

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே


பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று
பாசத்தில் வாடும் நெஞ்சங்களே
பனியையும் மீறி பசுமையில் நிமிரும்
பைன்மரம் போன்ற சிங்கங்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே



பூமியில் என்றும் அகதிகள் என்று
புழுதி மண் போல சுழலுவதோ
தாயகம் மீண்டு துயர்களை வென்று
தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே
http://www.gmobil.net/paalai/03 - Track 3.mp3

பாடல் - 4


மேலை அணைகளிலே கிழிந்து
மெலிந்த காவேரியாய்
ஏழைக் கவிமனசு ஒடிய
உன்மத்தம் கொண்டதென்ன


ஈழக்கரைகளிலே நலிந்து
ஏங்கிடும் அகதிகள் போல
வாழத்துடிக்குதடி நெஞ்சு வா
எனும் மந்திரச் சொல் கேட்டு


கண்ணில் மனசு உதிர உனது
காதலில் நான் எரிந்தேன்
உன்னில் உயிர் படர அதனை
உரித்துரித்தே எறிந்தாய்


ஐம்புல சிப்பியுள்ளே தைத்து
அறுத்திடும் விழிச்சுடரே
செம்புலப்பெயல் நீராய் நாங்கள்
சேர்ந்திடல் தர்மமடி
http://www.gmobil.net/paalai/04 - Track 4.mp3



பாடல் - 5




வெண்பனி கொட்டும் காலையில் நாங்கள்
பள்ளிக்குப் போகையிலே
சின்னமுயல் என் அருகினில் வந்து ஹாய்
என்று சொல்லியது

ஹாய் ஹாய் ஹாய் ஹாய்




சின்ன முயலே சின்ன முயலே
பள்ளிக்கு போகலையா
முயல்களின் பள்ளி புல்வெளி தானே
உனக்கிது தெரியலையா
ஐயையோ புரியலையா




புல்வெளி எங்கும் வெண்பனி போர்வை
சாப்பிட ஏதும் இல்லை
அம்மா தந்த ரொட்டியில் பாதி
தந்திட தடையும் இல்லை
எமக்கினி கவலை இல்லை
http://www.gmobil.net/paalai/05 - Track 5.mp3


பாடல் - 6


மாரி மழைக்கரத்தால்
பாய் விரிச்ச பச்சைப்புல்லு
பச்சைப்புல்லு சூடிக்கொண்டு
பவுசு காட்டும் வண்ணப்பூவு
சிட்டாகப் பறந்து வந்து
சிந்து பாடத் துடிக்குதடி
நீ எட்டாது போன பின்பும்
உன்னை நெஞ்சு நினைக்குதடி



கூதலாம் குழவிக் கூடு
குலைந்து போன வாடைக்காலம்
காதலாம் தங்கத் தோணி
கவிழ்ந்து போன வாழ்க்கைக் கோலம்
வண்டாகப் பறந்து வந்து
மலர்ச் சோலை நடுவினிலே
உன்னை எண்ணி உபவாசம்
இருக்கிறதே இன்பம் கண்ணே



நாளை ஒரு நாளையிலே
நடை வரம்பில் கோல மயில்
ஏழை என்னைக் காணக் கூடும்
இதயம் கொஞ்சம் நோகக் கூடும்
யார் மீதும் குற்றம் இல்லை
கோபம் கொள்ள ஞாயமில்லை
ஆலாய் விழுது விட்டு
அறுகாக வேர் பரப்பி
மூங்கிலாய்த் தோப்பாகி
வாழ வேண்டும் எந்தன் கண்ணே
http://www.gmobil.net/paalai/06 - Track 6.mp3

பாடல் - 7


பொன்னாய் உருகும் மாலையிலே - முடி
புனைந்து அரசாளும் சூரியனே



தென்றல் காற்றின் மோகனமாய் - ஒரு
சிறு குயில் அழைப்பது கேட்கலையா



வானவில் கிண்ணத்தில் மது ஏந்தும் -இள
வாசமலர்களின் கனவுகளோ
வண்ணங்களாலே விண் திரையில் - நீ
வார்க்கிறதெல்லாம் கவிதைகளோ
http://www.gmobil.net/paalai/07 - Track 7.mp3


பாடல் - 8


பயிரோ மழைக்கேங்கும் -கொடும்
பாலையோ நதியிடம் யாசிக்கும்



ஏழையின் காவியங்கள்
உயிர்த்திட உன்னிடம் கையேந்தும்



உயிரினில் இனித்திடவும்
உருக்கிடும் துயரெல்லாம்
அன்பே காதலால்
கருகிடவும்

யாழினை எடுத்தேனடா கண்ணா கண்ணா
இனி நதியென பெருகட்டும்
கவிதை என்றாய்

என் வாழ்க்கையின் தவப்பயனே -சொன்ன
மந்திர வார்த்தைகள் மறந்தனையோ

வானுக்குள் மதிபோல - அந்த
மதியினுள் சுடரும் செங்கதிர்போல

உன் யாழுக்குள் தேன்போல
என் ஊனுக்குள் உயிரானாய்
உள்ளத்தில் ஒளிர்கின்ற கவியானாய்
வீணுக்குள் தள்ளுவையோ - என்னை
விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ
http://www.gmobil.net/paalai/08 - Track 8.mp3

பாடல் -9


கள்ளெனக் கொட்டுதடி வள்ளி
கால வெளியினில் போதைநிலா
அள்ளுது வா வா என
அழைத்திடும் பூங்குயில் கவிமனசை



வாழ்வென்னும் இனிப்பையெல்லாம் அள்ளி
வார்க்குதே வசந்தத்தின் தேன் இரவு
மூழுதே மேனி எங்கும் தாபமாம்
இன்ப வேள்வியின் மோகனத்தீ



நினைவென்னும் நெருஞ்சி முள் பாலையிலே
நில்லென்று சொல்லி நீ போனதெங்கே
துணை வரும் நிலவுக்கே தெரியுமடி
என் நெஞ்சத்தில் நீயன்றி யாருமில்லை
http://www.gmobil.net/paalai/09 - Track 9.mp3

பாடல் - 10


இனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை
இனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை
இனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்
இனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்



சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு



ஜாதி மத பேதமின்றி
செந்தமிழர் கூடி
நீதி நெறியோடு என்றும்
வெற்றி வாகை சூடி
பாங்கொலிக்கும் பள்ளி
பாடும் கோவில் மணிகள்
மங்களமாய் எங்களது
மண்ணில் வாழ்வு எழுக



சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு
http://www.gmobil.net/paalai/10 - Track 10.mp3

No comments: