Friday, March 14, 2008

தமிழர் நலனுக்கெதிரான சக்திகள் யார்?- வே.ஆனைமுத்து & பால்பிரபாகரன்



கே.வி.கே.சாமி பிறந்த நாள் விழா & தமிழர் நலனுக்கெதிரான சக்திகள் யார்? விளக்கப்பொதுக்கூட்டம்.

2008 மார்ச் 10 ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி சீரணி அரங்கில் மாலை 6 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி பெரியார் தி.க. மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமை தாங்கினார். ஆழ்வை ஒன்றிய செயலாளர் நாத்திகன் இ.சேதுராமசாமி மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் இரா.யேசுதாசன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் தூத்துக்குடி பெரியார் தி.க. நகர துணைச்செயலாளர் செ.செல்லத்துரை , நகரதலைவர் கோ.அ.குமார், ஆழ்வை ப.முருகேசன் , மாவட்ட துணைத்தலைவர் வெ.பால்ராசு ஆகியோர் உரையாற்றினர்.

பின்பு பெரியார் தி.க. தலைமை கழக உறுப்பினர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் தமிழர் நலனுக்கான பிரச்சினைகளான



  1. இடஒதுக்கீடு

  2. தமிழ்வழிக்கல்வி

  3. தமிழில் வழிபாடு

  4. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆதல்

  5. நீதித்துறையிலும் ஆட்சித்துறையிலும் தமிழே ஆட்சி மொழி

  6. தூத்துக்குடி - கொழும்பு இடையிலான கப்பல் போக்குவரத்து

  7. தமிழ்நாட்டை வளமாக்கும் தமிழன் கால்வாய் திட்டம்

மேற்கண்ட அனைத்திற்கெல்லாம் எதிராக நின்று செயல்படும் பார்ப்பன கும்பல்களை அடையாளம் காட்டியும், பாசிச இந்துத்துவா சக்திகளே தமிழர்களுக்கெதிரான சக்திகள் என்றும் உரையாற்றினார்.


மேலும் எங்கள் வரிப்பணத்தில் வாங்கிய ஆயுதங்களை கொண்டு துப்பாக்கி தோட்டாக்களைக்கொண்டு எங்கள் தமிழ் சொந்தங்களை இலங்கையில் அழிப்பதற்கு இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்களையோ , குண்டுகளையோ கொடுக்காதே என்று இந்திய அரசை வலியுறுத்தினால் இது தீவிரவாதம் என்று சொல்லும் சுப்பிரமணியசாமி மற்றும் துக்ளக் சோ போன்றவர்களை கண்டித்துப்பேசினார்.


இறுதியாக மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் வே.ஆனைமுத்து அய்யா சிறப்புரையாற்றினார். திராவிடநாடு கிடைக்குமானால் கவர்னர் ஜெனரலாக தூத்தூக்குடி கே.வி.கே.சாமியைத்தான் நியமிப்போம் என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்ட கே.வி.கே.சாமியின் வரலாற்றினை நினைவுகூர்ந்தார். ஆழ்வார்திருநகரி & பெருங்குளம் போன்ற பகுதிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கக்கோட்டை உடைவதற்கு திராவிட இயக்கங்கள் ஆற்றிய பணிகளையும் தற்போது செயலலிதா தொடங்கி டிராஃபிக் இராமசாமி வரை தமிழர்களுக்கு செய்யும் துரோகங்களையும் தமிழருக்கெதிரான கருத்துப்பரப்பல்களையும் விளக்கி 2 மணி நேரம் சிறப்புரையாற்றினார்.


இறுதியில் தூத்துக்குடி பெரியார் தி.க. மாவட்ட செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் நன்றியுரையாற்றினார். நிகழ்வில் தூத்துக்குடி பெரியார் தி.க. நகர செயலாளர் பால்.அறிவழகன் , நெல்லை மாவட்ட செயலாளர் சி.ஆ.காசிராசன் , நெல்லை இராசா,பிரபு , தூத்துக்குடி பெரியார் தி.க. நகர துணைத்தலைவர் சா.த.பிரபாகரன் , மாவட்ட துணைச்செயலாளர் க.மதன் , குமாரசிங் & கழக தோழர்களும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.



செய்தி : வ.அகரன்


No comments: