தமிழக சிறையில் நீண்ட நாள் வாடிக்கொண்டிருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், இராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் பொய் வழக்கு போட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானி ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனித உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு தோழர் பெனடிக் தலைமையேற்றார். தவ்ஹீத் ஜமாத் பொறுப்பாளர் அகமது இக்பால் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் தமிழ் ஆர்வலர் ஞானசேகரன் மக்கள் உரிமைக்கூட்டமைப்பு துரை அரிமா, இ.பொ.க அ.மோகன்ராசு, கிறித்த வாழ்வுரிமை இயக்கம் பணி. சுந்தரி மைந்தன், தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ச்செல்வன், பீற்றர், பெரியார் திராவிடர் கழக பால்.பிரபாகரன், உழைக்கும் மக்கள் விடுதல இயக்க வெனி.இளங்குமரன், த.ஒ.வி.ஒ. தமிழ்மாந்தன், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நிகழ்வில் பெதிக மாவட்ட துணைத்தலைவர் வெ.பால்ராசு, மாவட்ட இணைச்செயலர் க.மதன், தமுமுக அபுபக்கர் சித்திக் மனித நேய மக்கள் கட்சி காஜா மைதீன், அ.இ.பெ.ம. சந்திரசேகர், மற்றும் திரளனா தோழர்கள் கலந்துகொண்டனர்.
ராஜீவ் வழக்கில் கைது செய்யட்டிருப்பவர்களை விடுதலை செய்யக்கோரியும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை அமுல்படுத்திவரும் அரச பயங்கரவாதத்தைக்கண்டித்தும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரியும் முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment