தமிழகத்திலுள்ள ஈழ ஏதிலிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப முயன்றதாக பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத்தலைவர் லோகு. அய்யப்பன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன் 1995-ல் ராவணன் பகுத்தறிவு இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். 2001-ல் ஜெயலலிதாவுடன், வீரமணி கூட்டணி அமைத்தபோது வெளியேறிய கொளத்தூர் மணி, கோவை.ராமகிருஷ்ணன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் பெரியார் திராவிடர் கழகத்தை உருவாக்கினர்.
இதற்கு கொளத்துர் மணி தலைவரானார். அப்போது பெரியார் திராவிடர் கழகத்துடன் தனது ராவணன் பகுத்தறிவு இயக்கத்தை லோகு.அய்யப்பன் இணைத்துக்கொண்டார்.
2005-ல் பிரான்சு நாட்டிற்கும், 2006-ல் இலங்கைக்கும் சென்று பலரை லோகு.அய்யப்பன் சந்தித்து வந்துள்ளார்.
இதன்பின் இயக்குனர் சீமானுடன் லோகு.அய்யப்பன் நெருங்கிப்பழகி வந்தார். இயக்குனர் சீமான் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது நாள்தோறும் இவரது வீட்டிலிருந்து உணவு வழங்கி லோகு.அய்யப்பன் தனது நட்பை வெளிப்படுத்தினார்.
செய்தி: மாலைமலர்
No comments:
Post a Comment