Thursday, July 9, 2009

கரம் நீட்டுங்கள்… கண்ணீரைத் துடையுங்கள்
கரம் நீட்டுங்கள்... கண்ணீரைத் துடையுங்கள்

புதிய ஆண்டு நம்பிக்கையைக் கொண்டு வரும் என்பதுதான் அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும். விடைபெற்ற ஆண்டு விட்டுச் சென்ற காயங்கள் கூட ஆறவில்லை. 6-1-2009 ஆம் நாள் இரவு 8:40 மணியளவில், செம்பூர் அணுசக்திநகர் அருகில் உள்ள சீத்தா கேம்ப் குடிசைப் பகுதி மக்கள், புத்தாண்டு தொடக்கத்தில் புத்தாடைகளோடு ஒருவரை ஒருவர் வாழ்த்துப் பரிமாறிக் கொண்டிருந்த மகிழ்ச்சியான அந்த நிமிடங்களில்தான், இடி விழுந்தது போல் யாரும் எதிர்பாராத கோர நிகழ்வு நடந்ததது. சீத்தாகேம்ப் குடிசைவாசிகள் மீது அப்படி என்னதான் கோபமோ.. கண் இமைக்கும் நேரத்தில் கண் எதிரில் குடிசைகள் எல்லாம் தீப்பற்றி எரிய தொடங்கியது. நெருப்பின் கோபம் தணிந்த போது சீத்தாகேம்ப் பகுதி முழுவதும் சாம்பல் காடாக மாறியிருந்தது.


உடைமைகளை மறந்து, உயிர் பிழைத்தால் போதும் என்று கதறிக் கொண்டு ஓடிய மக்கள்.. சுட்ட நெருப்பின் வலியில் துடித்த குழந்தைகள்..எரிந்து சாம்பலாகிப்போன விலைமதிப்புள்ள பொருட்கள்,, கரிக்கட்டையாய் உருமாறிப்போன மனித உடல்கள்.. வாழ்வின் மொத்த சேமிப்பையும் இழந்த நிலை, மரண ஓலம்,எங்கும் மரண ஓலம்.

இன்று.. தங்கள் அன்பிற்குரியவர்களை பறிகொடுத்துவிட்டு, அனாதைகளாய் நிற்கும் குழந்தைகள்.. கணவனை இழந்து நிற்கும் பெண்கள்.. பிள்ளைகளை இழந்து நிற்கும் பெற்றோர்கள், கல்மனதையும் கரைய வைக்கும் இந்தக் கண்ணீர்க் காட்சிகள் உள்ளத்தை உலுக்குகிறது.

என் ஒரே மகளின் திருமணத்திற்காக, குருவி கூடுகட்டுவது போல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த பணமெல்லாம் நொடிப்பொழுதில் எரிந்து சாம்பலாகிவிட்டதே, இனி நான் என்ன செய்வேன்? என்று அழுது நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுது புலம்பும்ஏழை விதைவைத் தாயின் இயலாமையே ஒட்டுமொத்த சீத்தாகேம்ப் குடிசைவாசிகளின் குரலாக ஒலிக்கிறது.

விழுப்புரம், கடலூர் பகுதிலிருந்து பிழைக்க வந்த கூலித் தொழிலாளத் தமிழர்கள் அதிகமாக வாழும் இந்த பகுதி இன்று மயானம் போல் காட்சியளிக்கிறது. பணம், பொருள், உயிர் என்று அனைத்தையும் இழந்து பரிதாப நிலையில் கைபிசைந்து நிற்கும் இந்த மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.

தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் இந்த மக்களின் கண்ணீர் துடைக்க, சமூக அக்கறை கொண்ட சில தொண்டு அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் அதே நிலை.

சீத்தாகேம்ப் பகுதி குடிசைவாசிகளின் இந்த துயரம் நிறைந்த கண்ணீர் வாழ்க்கையைப் படிக்கும் தங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்த பெருமான்களிடம் நாங்கள் கரம் குவித்து கண்ணீரோடு வேண்டிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

எங்களை கைதூக்கி விடுங்கள்,எங்கள் கண்ணீர துடைக்க உதவிகரம் நீட்டுங்கள் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்.

மா.கதிரவன் - +91 9321 4544 25, மின்னஞ்சல்:khathiravan@gmail.com

வங்கி கணக்கில் உடனடியாக செலுத்த A/c 2112155 00000 7349, M. Khathiravan, Mumbai. Chembur Branch, The Karur Vysya Bank.

No comments: