Sunday, February 8, 2009

இந்திராகாந்தி படுகொலையை மறைத்த ராஜீவ்காந்தி - விடுதலை க.இராசேந்திரன்

இந்திராகாந்தி படுகொலையை மறைத்த ராஜீவ்காந்தி - விடுதலை க.இராசேந்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2009, 11:21.03 AM GMT +05:30 ]
ஈழத்தமிழருக்காக தீக்குளித்த சீர்காழி இரவிச்சந்திரனின் உடலுக்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் வீரவணக்கம் செலுத்தினர். அப்போது பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உரையாற்றும்பொழுது இந்திராகாந்தி மரணத்திலுள்ள விடைதெரியா மர்மங்களை பட்டியலிட்டார். அவர் பேசும்பொழுது ,

இரவிச்சந்திரன் சார்ந்திருந்த அரசியல் கட்சித் தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் இல்லை என்று. அதே தலைவர் நாளை ஈழத்தில் சாவது தமிழர்கள் இல்லை என்று சொல்லலாம். ராஜீவ் காந்தியின் மரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனையாயிரம் தமிழர்களை கொல்ல வேண்டுமா? இந்திரா காந்தி காலத்தில்தான், விடுதலைப்புலிகளுக்கு பயிற்சிப் பட்டறை நிறுவப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

இந்திராகாந்தி சீக்கியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, விசாரணை செய்த தாக்கர் ஆணையம் ஒரு கருத்துரையை மட்டும் முன் வைத்தது. மரணத்திற்கு முன்பு குண்டு துளைக்காத ஆடை அணிந்து சென்றுகொண்டிருந்தார். ஆனால் அன்று மட்டும் குண்டு துளைக்காத ஆடை இல்லாமலேயே சென்றுள்ளார். இந்த ரகசியம் உதவியாளர் ஆ,.கே.தவான் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.இது எப்படி பாதுகாப்பாளராக இருந்த சீக்கியருக்கு தெரிந்தது. ஆகவே ஆர்.கே.தவானை விசாரிக்க வேண்டும் என்று அறிவித்தது.

இந்திராகாந்தி இறப்புக்கு பின் ஆட்சிக்கு வந்த ராஜீவ்காந்தி, தவானை விசாரிக்க மறுத்துவிட்டார். நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆணையம் அறிவித்தும் தவானை விசாரிக்காதது ஏன்? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதும், அந்த விசாரணை செய்யும் சட்டத்தையே திருப்பி விட்டார். அதன்பிறகு தவானை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆக்கியிருக்கிறார்கள்.

இந்த விசாரணையை யாருக்காக மூடி மறைத்தார். இலங்கையே நிறுத்தச் சொன்னாலும் இந்தியா, போரை நிறுத்துவதாக இல்லை. இதில் பல சூழ்ச்சிகள் இருக்கிறது. புலிகளுக்கு இன்று சர்வதேச தமிழன் தான் நிதி மற்றும் ஆயுத உதவி செய்கிறான். வரும் தேர்தலில் ஈழப்பிரச்சனையை முன் வைத்து சந்திப்போம். என்று உரையாற்றினார்.

நன்றி : தமிழ்வின்

No comments: