ஈழத்தமிழர்களை அன்றாடம் கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும் இந்திய அரசை கண்டித்தும் உண்ணாநிலைப்போராட்டம்
ஈழத்தமிழர்களை அன்றாடம் கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும் தொடர்ந்து ஆயுத உதவி செய்துவரும் இந்திய அரசை கண்டித்தும் கொளத்தூரில் 13.02.09 அன்று காலை 8.00மணி முதல் மாலை 6.00 மணிவரை கொளத்தூர் பேருந்து நிலையத்தில் ஒன்றிய அனைத்து நற்பணி மன்றங்களின் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப்போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு பா.ம.க ஒன்றிய செயலாளர் மாரப்பன் தலைமை தாங்கினார். பெரியார் தி.க மாவட்ட செயலாளர் டைகர் பாலன் துவக்கவுரையாற்றி துவக்கிவைத்தார் இப்போராட்டத்தை ஆதரித்து பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பா.ம.க மாவட்ட செயலாளர் அறிவழகன் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளின் மெத்தன போக்கை கண்டித்து கண்டன உரையாற்றினர், இப்போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட நற்பணி மன்றங்கள் கலந்துகொண்டன.
news source : http://meenagam.net/me/?p=1229





No comments:
Post a Comment