Tuesday, October 7, 2008

தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக பட்டுக்கோட்டையில் தமிழின ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில் காலை முதல் மாலை வரை தொடர்முழக்க ஆர்ப்பாட்டம்.

இன்று காலை 9 மணியளவில் அஞ்சல் நிலையம் முன்பாக அனைத்துக்கட்சிதோழர்களும் பொதுமக்களும் திரளாக ஒன்று கூடினர். காலை 10 மணியளவில் தமிழீழ ஆதரவாளர் மருத்துவர் மு.செல்லப்பன் தலைமையேற்க பழ.சக்திவேல், சி.பக்கிரிசாமி (இ.பொ.க), உஞ்சியரசன் (விடுதலைச்சிறுத்தைகள்) , வழக்குரைஞர் காமராசு(ம.தி.மு.க) , கு.பாரி( பெரியார் தி.க.) , ரெ.ச. இளவரசன் (பெரியார் தி.க) ஆகியோர் வரவேற்புரை ஆற்ற இரா.திருஞானம் (இ.பொ.க.(மா)) தமிழீழ விடுதலைக்கு ஆதரவான தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

உரையாற்றியவர்கள் :

அரங்க.குணசேகரன் (மனித உரிமைகள் கழகம்) ,

வழக்குரைஞர் பிரகாசம்,( தமிழின ஆதரவாளர்),

மருத்துவர்.சுப்பிரமணியம்( தமிழின ஆதரவாளர்),

"அரசு பிளாசா" திருநாவுக்கரசு(தமிழின ஆதரவாளர்),

கே.நமச்சிவாயம்(பா.ச.க)

சதா.சிவக்குமார்(ஆதி திராவிடர் பேரவை),

வீரையன் (தி.க)

திருமாறன்(ம.தி.மு.க)

இளந்தென்றல்(விடுதலைச்சிறுத்தைகள்)

வைகறை( தமிழ் தேசியப்பொதுவுடைமைக்கட்சி)

டி.பி.நாதம்(இ.பொ.க)

வி.டி.கோபு(இ.பொ.க)

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக விளக்கவுரையாற்றியவர்கள் :


தூத்துக்குடி பால்.பிரபாகரன்,
தலைமைக்கழக உறுப்பினர்,
பெரியார் திராவிடர் கழகம்.


புதுக்கோட்டை பாவாணன்,
தமிழர் கழகம்.

இயற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) இந்திய அரசாங்கமானது சிங்கள அரசாங்கத்துக்கு எவ்வித பொருளாதார உதவியோ இராணுவ பயிற்சியோ அளிக்கக்கூடாது.

2) தமிழீழ விடுதலைக்கான அரசியல் தீர்வினைக்காண வேண்டும்.

3) தமிழக மீனவர்களை தாக்கும் சிங்கள அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) இந்திய - இலங்கை கூட்டு ரோந்து நடவடிக்கையை நிறுத்தவேண்டும்.

5) ஈழத்தமிழர் பிரச்சினையில் நடுவணரசை நிர்ப்பந்திக்கும் வகையில் ஆளும் திமு.க. அரசானது அனைத்துக்கட்சிக்கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.


நன்றியுரை :

சூரப்பள்ளம் முத்துகிருட்டிணன்.

மாலை 6 மணியளவில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

பொதுமக்களும் அனைத்துக் கட்சியினரும் , கட்சிசாரா பிற அமைப்புத்தோழர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

No comments: