Friday, March 7, 2008

வெல்வோம் பெண்விடுதலையை பெரியாரிய வழியில்"- அகரன்

குடியரசுத்தலைவராக பெண் இருக்கும் இந்நாட்டில் தந்தை ஏற்காததால் தூத்துக்குடியில் பெண் குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்தக் கொடூரம், தேனி அல்லிநகரில் துப்புரவுத்தொழிலாளி அனுசுயாவை காவலர்கள் இழுத்துச் சென்றக் கொடூரம், தமிழகப் பெண் ஜெனிதாவை வரதட்சணைக்காக அமெரிக்காவில் வைத்துக்கொல்ல சதி, விழுப்புரத்தில் கிருஷ்ணவேணி என்ற 13 அகவை சிறுமி தேவதாசி ஆக்கப்பட்டக்கொடூரம், சத்தியமங்கலம் பகுதியில் வீரப்பன் வேட்டை என்றப் பெயரில் பழங்குடியின பெண்களை காமவேட்டையாடியக் காவல்துறை .... இவ்வாறு நாள்தோறூம் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இன்னும் வெளியே தெரியாத பெண் கொடுமைகள் அதிகம்.. தாழத்தப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் மிகவும் கொடூரம். வட இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் கொடுமைக்கு ஆளாகின்றன்னர்.

நமது தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்களின் தொண்டால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆசியா கண்டத்திலேயே பெண்களுக்கு என்று தொழிக்கல்வி பள்ளியை முதன்முதலில் தொடங்கியவர் தந்தை பெரியார். பெண் உரிமைகளுக்காக முதன் முதலில் பெண்களுக்கான மாநாடு நடத்தியதால் பெண்களால் "பெரியார்" என்ற பெயரை அடைந்தார் ஈ.வெ.ரா. அவர்கள். பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் பெண்ணே இவ்வுலகை படைக்கும் சக்தி என்ற உண்மையை எடுத்துரைத்தார்.

திருமணங்களில் நாய்பட்டைப்போன்ற பெண்ணை அடிமைப்படுத்தும் தாலி கட்டாமல் சுயமரியாதை திருமணங்களை நடத்தினார். தந்தை பெரியாரின் முயற்சியால் இப்பொழுது பெண்கள் கல்வி வேலை வாய்ப்பு போன்றவற்றில் முன்னேறி வருகின்றனர்.. பெண்களின் விடுதலை ஆண்களால் கிடைக்காது என்பதை அப்பொழுதே வலியுறுத்தினார் பெரியார்.

பெரியாரிய வழியில் மட்டுமே பெண்விடுதலை அடைய இயலும் என்ற உண்மையை பெண்கள் உணர்ந்து போராட்டக்களத்திற்கு உடனே பெண்கள் வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

" வெல்வோம் பெண்விடுதலையை பெரியாரிய வழியில்"
*********************************************************************************
பெண்ணிய போராளி தோழர் ஓவியாவின் கட்டுரைகள் படிக்க .. http://www.dravidar.org/oviya.php

No comments: