Showing posts with label வழக்கறிஞர்கள். Show all posts
Showing posts with label வழக்கறிஞர்கள். Show all posts

Thursday, February 19, 2009

இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியின் கொடும்பாவி தஞ்சையில் எரிப்பு

தஞ்சை பிரணாப் எரிப்பு 190209இந்திய பாராளுமன்றத்தில் நேற்று இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்த முடியாது என்று கூறிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி கொடும்பாவி மற்றும் உருவப்படத்தை தஞ்சை சட்டவாளர்கள் எரித்து போராட்டம் செய்துள்ளனர்.

இன்று (19.2.09) காலை 11.00 மணியளவில் தஞ்சாவூர் நீதிமன்ற வளாகம் அருகில் வழக்கறிஞர் சங்க செயலாளர் நல்லதுரை தலைமையில் இந்திய இலங்கை அரசிற்கு எதிராகவும் தமிழ் ஈழ விடுதலையை ஆதரித்தும் முழக்கங்கள் எழுப்பி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் உருவபொம்மையை எரித்த வழக்கறிஞர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

thanjai-19020901

தஞ்சை பிரணாப் எரிப்பு 190209thanjai-raja-03

sourcelink : http://meenagam.net/me/?p=1461