Friday, April 6, 2012

மும்பையில் பெரியாரியல் பயிலரங்கம் தோழர் பால்.பிரபாகரன் நடத்தினார்

மும்பையில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த தோழர்களுக்கு பெரியாரின் அர்பணிப்பும், சமுக பணிகளையும் இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த பெரியாரியல் பயிலரங்கம் நடத்தப்பட்டது ,

04/03/2012 அன்று தாராவி காமராஜர் பள்ளி யில் பெரியார் திராவிடர் கழக தலைமை கழக செயற்குழு உறுப்பினர் தோழர் பால் .பிரபாகரன் சிறப்பாக பயிலரங்கத்தை நடத்தினர் ,இதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் , பெரியார் - நேற்று ,இன்று ,நாளை என்ற தலைப்பில் தலைவர் பெரியார் இன்றைக்கு தேவை என சுமார் இரண்டு மணி நேரம் பயிலரங்கத்தை நடத்தினர் ,இறுதியில் கேள்வி -பதில் பகுதியும் நடத்து ,முழுமையா திராவிட இயக்கம் நடத்திய இன விடுதலையும் ,சமுகவிடுதளையும் கிடைத்தது ,சமுக நீதி கிடைத்திட ஜாதி அடையாளங்களை தொலைக்கவேண்டும் , கல்வி இல் சமசீர் வேண்டும் ,அறிவை முடக்குவது ஆரியம் அடிமை விலங்கை உடைப்பது பெரியாரியம் என பெரியாரின் தேவை நேற்று எப்படி இருதது ,இன்று எப்படி இயங்கிறது ,நாளை பெரியார் எப்படி தேவைபாடுவர் மிக அருமையா விலகினர் தோழர் பால் .பிரபாகரன் அவர்கள் ,

புதிய தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள் ,தோழர் பால்வண்ணன் அவரளின் சிறப்பான முயற்சியில் நடந்த இந்த பயிலரங்கத்தில் பெரியார் திராவிடர் கழக மும்பை பொறுப்பாளர் மா .கதிரவன் வரவேப்புரை அற்ற ஆசிரியர் ஜெயகண்டிபன் தலைமை தாங்கினார் ,நாடோடி தமிழன் ஜஸ்டின் ,மேட்டூர் ராஜா ,தூத்துக்குடி முத்து, இறைச .ராஜேந்திரன், தமிழ் நேசன் ,ஜார்ஜ் என தோழர்கள் கலந்து கொண்டனர் .








No comments: