Saturday, April 23, 2011

போர்க்குற்றவாளி மகிந்தவுக்கு துணைபோன இந்திய அரசே மன்னிப்பு கேள்: பெரியார் திக ஆர்ப்பாட்டம்

சிங்கள அரசுக்கு எதிரான ஐ.நா அறிக்கையின் எதிரொலியாக ஈழத்தில் சிங்கள அரசு நடத்திய கொடூரமான போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும், துணை நின்ற இந்திய அரசை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், இலங்கை மீதான இந்திய வெளியுறவு கொள்கைகளை மாற்ற கோரியும்,....

பன்னாட்டு விசாரணை குழு அமைக்க கோரியும், தமிழ்நாடு முழுவதும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் “பெரியார் திராவிடர் கழகம்” சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார் தலைமையில் பாமக தோழர் வியனரசு தொடங்கிவைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சி.ஆ.காசி ராசன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் முருகேசனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சுஜித் , தூத்துக்குடி பெரியார் திக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, துணைத்தலைவர் வே.பால்ராசு உரையாற்றினர்.

ஆர்ப்பாட்ட விளக்கவுரையினை இறுதியாக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றினார்.

நிகழ்வில் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் மதன், பால்.அறிவழகன், பாலசுப்பிரமணியன், சா.த.பிரபாகரன், ரவிசங்கர், அமிர்தராசு, அகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் புஇமு, தமிழ்ப்புலிகள் அமைப்பினரும் கலந்துகொண்டனர்..



சேலம் மாநகரில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



கோவையில் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.


பொள்ளாச்சியில் நகரச்செயலாளர் காசு.நாகராசன் தலைமையிலும், கரூரில் மாவட்டத்தலைவர் கு.தனபால் தலைமையிலும் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது.


போராட்டத்தில் மதிமுக, ஆதித்தமிழர் பேரவை, கொங்கு இளைஞர் பேரவை புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டு இந்திய அரசுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

















No comments: