Monday, February 9, 2009

முல்லைத்தீவை நோக்கி 14 வழக்கறிஞர்கள் படகில் பயணம்

இன்று நண்பகல் 12.30 மனியளவில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து மனித உரிமை பாதுகாப்ப மய்யத்தின் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் தலைமையில் 14 வழக்கறிஞர்கள் இந்திய தமிழக அரசின் கட்டுப்பாட்டை உடைத்துவிட்டு முல்லைத்தீவினை நோக்கி படகு பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழக நேரப்படி நண்பகல் 1.30 மணியளவில் 13 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருக்கின்றனர்.

அவர்களது விபரம் :

1 ) சுப.இராமச்சந்திரன் ,(தூத்துக்குடி)
2) முருகையன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் )
3) நடேசன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர்)
4 ) நெடுஞ்செழியன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )
5) முகமது பரூன் ஹக் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )
6) சின்னச்சாமி ( கரூர் )
7) லெட்சுமணன் ( கரூர் )
8 ) முருகேசன் ( கரூர் )
9) சுதாகர் ( கரூர் )
10 ) வேலுச்சாமி ( தூத்துக்குடி )
11 ) அரிகரன் ( தூத்துக்குடி )
12)பொன்ராசு ( தூத்துக்குடி )
13) இரகு (( தூத்துக்குடி ) மாணவர் திமுக மாவட்ட அமைப்பாளர் )
14 )

சிங்கள அரசுக்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் தூத்துக்குடி துறைமுகத்தினை 200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இப்பொழுது முற்றுகையிட்டு போராட்டம் செய்துகொண்டிருக்கின்றனர்.

No comments: