View the Original article
Thursday, September 29, 2011
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள்
1. கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரஷ்ய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (Site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.2. தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப் பணித் துறை) அணுமின் நிலையத்தி லிருந்து 2 கி.மீ. தூரத்திற்குள் அணுமின் கட்டிடங் களைத் தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ. சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization zone) இருக்கும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக் கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட் டுள்ளன. அரசின் உண்மை நிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.அ. aerb எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20000 பேருக்கு மேல் வசிக்கக் கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள் 10,000-த்திற்கு அதிகமான மக்கள் வாழும் ஊர்கள் இருக்கக் கூடாது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 3 கி.மீ. தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.ஆ. 10 கி.மீ. சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் தொகை இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியைவிட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ் கிறார்கள்.இ. 30 கி.மீ. சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக் கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 29 கி.மீ. தூரத்திற்குள் இருக்கிறது.ஈ. 20 கி.மீ. சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக் கூடாது என்று aerb சொன்னாலும், உலக பிரசித்திப் பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்கிறது.இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்தி லிருந்து 30 கி.மீ. சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிக மான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில்கூட நடக்காத காரியம் 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.3. அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளை யாடல்கள், உள்ளூர் கான்டிராக்டர்களின் கைங் கரியங்கள், ரஷ்யாவில் இருந்து தாறுமாறாகவும் தலை கீழாகவும் வந்த உதிரி பாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனு தினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்தபோது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதிகலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்த போதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?4. உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பகற்றி ஆலைகளில் இருந்து வெளி வரும் உப்பு, சேறு, ரசாயனங் களையும் கடலில் கொட்டி, ஊட்டச் சத்து மிகுந்த கடல் உணவையும் விஷமாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர் களின், விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும், அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்ச நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணுஅணுவாய் சிதைந்து போவோம்.5. பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையில் ஒரு மெலிதான நில நடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19 ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னக் குளம், அஞ்சு கிராமம், அழகப்பபுரம், மயிலாடி, சுவாமி தோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும், கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுஷிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக் கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.6. அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப் போது எச்சரித்து வருகிறார். ஆகஸ்டு 18, 2011 தேதியிட்ட ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப் பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.7. 2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னாள் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம்டஸ்ட்ராய் எக்ஸ்போர்ட் என்னும் ரஷ்ய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரஷ்யா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன் படிக்கைக்கு ஒப்புக் கொள்ள முடியாது. உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என ரஷ்யா கையை விரித்தது. 2008 ஆம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13 ஆவது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரஷ்யா. போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.8. அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சினை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணுஉலைகள் வருடத்திற்கு சுமார் 30 டன் யுரேனியத்தை உபயோகிக்கும், ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும்போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய விஷத்தை 24000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக் குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங் களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப் படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் விஷ உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீர் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நஞ்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படு கிறார்கள். மீனவ மக்களின், மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு விஷமாகும்போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணுஉலை யின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 ஐசோடோப்புகள், ஸ்ட்ராண்டியம், டீரிஷியம், டெலூரியம் போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படு வோம். நமது குழந்தைகள், பேரக் குழந்தைகள் இந்த விஷத்தை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.9. 1988 ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத் திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்தத் திட்டத்தின் துவக்க மதிப்பீடே 17000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006 ஆம் ஆண்டு இயங்கும் என்றும், 15500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001 ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6755 கோடி முதலீடு செய்ய, ரஷ்யா மீதமிருக்கும் தொகையை 4 சதவீதம் வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன்முறையாக எரி பொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரஷ்ய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 வருடங்கள் கழிந்த நிலையில் இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.10. நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணுஉலை களையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி சோனியா காந்தி பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 90 சதவீத மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக் கிறார்கள். ஸ்விட்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணுஉலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுஷிமா விபத்து நடந்த ஜப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்திவிட்டனர். 28 பழைய உலைகளை மூடிவிட்டனர்.நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பேனர்ஜி அரசு ஹரிப்பூர் என்னும் இடத்தில் ரஷ்ய உதவியுடன் கட்டப்படவிருந்த அணுஉலைத் திட்டத்தை நிராகரித்துவிட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதிகளிலும் அணுஉலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாமென்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.“கருப்பான, அழுக்கான தமிழர்கள்” என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன.இறுதியாக, ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற்காக மக்களா?ரஷ்யா, அமெரிக்க, பிரெஞ்சு நாட்டுக் கம்பெனிகளின் லாபம் முக்கியமா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா?அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.அணுமின் நிலையங்களுக்கு உலகம் முழுதும் எதிர்ப்புஜப்பான் நாட்டில் சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து ஃபுக்குஷிமா அணுமின் ஆலை வெடித்தது. அதன் பிறகு உலகம் முழுதும் அணுமின்நிலையங்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆனால், இந்தியாவும் சீனாவும் அணுமின் நிலையங்களையே உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.• உலகம் முழுதும் 432 அணுமின் நிலையங்கள் உள்ளன. ஆனால், உலக மின்சார உற்பத்தியில் இதன் பங்கு 15 சதவீதம் மட்டுமே.• தற்போது உலகில் 66 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 27 சீனாவில், 11 இந்தியாவில்.• அணு சக்திகளைப் பயன்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை 26.• அமெரிக்காவில் மொத்த மின்சார உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்களிப்பு 20 சதவீதம். ஆனால் ஒபாமா, அணுமின் நிலையத் திட்டங்களைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டுகிறார்.• 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடிவிட ஜெர்மன் முடிவு செய்துள்ளது.• இத்தாலியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மக்கள் அணுமின் நிலையத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.• 2034 ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக அணுமின் நிலையங்களை மூட சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.• ஜப்பான் நாடு – அணுமின் உற்பத்தியை சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொள்ளப் போவதாக கூறியுள்ளது.
View the Original article
View the Original article
Labels:
அணுமின்,
காரணங்கள்,
கூடங்குளம்,
கோருவதற்கான,
நிலையத்தை,
மூடக்
Monday, September 5, 2011
மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மூன்று தமிழர்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்ற மரண தண்டனை,இன அடிப்படையில் ஆனது என்றால்,மத்தியில் அஃப்சல் குருவிக்கு வழங்கப்பட்டு இருக்கிற மரண தண்டனை மத அடிப்படையில் ஆனது.இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் எல்லாம் செல்வந்தர்களுக்கு சாதகமானதாகவே இருக்கின்றன.பணம் படைத்தவனுக்குதான் நீதி; கை ஏந்துபவனோ நிர்க்கதியில் தான்.சமூகத்தில் கீழ்த்தட்டில் இருப்பவனைக் காக்க வேண்டிய சட்டமே.அவனை அழித்து,ஒழிக்கும் முயற்சியில் இறங்குகிறது.இன்றைக்கு மரண தண்டனைக் கைதிகளைப் பாருங்கள்….. அவர்கள் நசுக்கப்பட்ட இனத்தை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.மாறாக,ஒரு பணக்காரரை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?அல்லது இதுவரை எந்த ஒரு பணக்காரராவது தூக்குமேடை ஏறி இருப்பாரா?நமது சட்டங்கள் ஒரு வகையில் பண்ணையார் தத்துவத்தையே நியாயப்படுத்துகின்றன.ஒரு சிவில் வழக்கில் தனிநபர் ஒருவர் இன்னொரு தனி நபருடன் வாதாடலாம்.ஆனால் கிரிமினல் வழக்குகளிலோ தனிநபர் ஒருவருக்கு எதிராக,அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதாடுவார்.அதாவது,ஒவ்வொரு குற்ற வழக்கும் போலீசால் பதிவு செய்யப்பட்டு,அரசு தனக்கு எதிரானவரை எதிர்க்க வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கிறது.வழக்கில் ஒவ்வொரு நகர்வையும் போலீசுதான் தீர்மானிக்கிறார்கள்.வாக்குமூலம் பெறுவதிலேயே எவ்வளவு வன்முறைகளைப் பிரயோகிக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததுதானே?’அரிதிலும்,அரிதான’ குற்றங்களில் தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்கிறார்கள்.போலீசாரால் என்கவுன்ட்டர் என்ற பெயரில் பலர் சாகடிக்கப்படிகிறார்களே…..அதுவும் கூட ’அரிதிலும் அரிதானது’ தானே? ஆக சட்டத்துக்கு புறம்பாக போலீசார் கொலை செய்தால்,அது என்கவுன்ட்டர்கள்.அதையே நியாயப்படி செய்ய வேண்டும் என்றால்,அதற்குப்பெயர் மரண தண்டனை.இது தான் உங்கள் நீதி?பண்டைய கிரேக்க,எகிப்திய நாடுகளில் இருந்த அடிமைகள் அந்த நாட்டின் குடிமகன்களாக அங்கிகரிக்கப்படவில்லை.அவர்களின் உரிமையாளர்கள் மட்டுமே குடிகளாக அங்கிகரிக்கப்பட்டார்கள்.உரிமையாளர்களுக்கு மட்டுமேதான் சட்டம்,நீதி,நியாயம்,தீர்ப்பு எல்லாம்…………………அடிமைகளுக்கு எப்போதும் மரணம் ஒன்றுதான்.தண்டனையாகவும்,தீர்ப்பாகவும்,நியாயமாகவும்,நீதியாகவும் அவர்களுக்கே இருந்து வந்ததிருக்கிறது.இன்றைக்கு நிராகரிக்கப்பட்டு இருக்கிற கருனை மனுக்களைக் குறித்து நாம் எண்ணிப்பார்க்கையில்,ஒருவகையில் நாம் எல்லோரும் இந்த நாட்டில் அடிமைகள் தானோ?சாமன்யன் செய்த குற்றம் ஒன்றுக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் சட்டம் இன்னொறு குற்றம் செய்வது எப்போதும் சமமாகாது;நீதியும் ஆகாதுநன்றி:விகடன் குழுமம்
View the Original article
View the Original article
Labels:
அறிக்கை,
எதிரான,
எழுத்தாளர்கள்,
கலைஞர்கள்,
தண்டனைக்கு
Sunday, September 4, 2011
கொளத்தூர் மணி தலைமையில் சென்னையில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் சாட்சி புத்தகம் [படங்கள்]
கொளத்தூர் மணி தலைமையில் சென்னையில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் சாட்சி புத்தகம் [படங்கள்]
சென்னையில் கடந்த 04.09.11 அன்று 'முள்ளிவாய்க்கால் சாட்சி' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தக வெளியிட்டு விழா திரு அன்பரசன் தீனதயாளன் மற்றும் எழில் சுரேசு அவர்களின் திருமண நிகழ்வோடு சேர்ந்து நடைபெற்றது. நோர்வேயிலும் லண்டனிலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட இப்புத்தகத்தை தமிழகத்தில் மருத்துவர் ... மேலும்>>
தங்களையே அழித்துக்கொள்ளும் முறையை தொடர வேண்டாம்: பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
ஈழத்தமிழர் உரிமைப்பார்வையில் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க தமிழக மக்களும் தமிழக அரசும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழர் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதல்லாமல் மனிதமே அதிர்கிற வகையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரணதண்டனையை நிறைவேற்ற மைய அரசு ... மேலும்>>
மரணதண்டனையை ஒழிப்போம்! நூல் அறிமுகம்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணதண்டனை குறித்து கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கையும், விடுதலை இராசேந்திரன், தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரின் கட்டுரைகளும் அடங்கிய சிறுநூல். பெரியார் திராவிடர் கழக வெளியீடு. தொகுப்பு: விடுதலை க. இராசேந்திரன் நன்கொடை ரு 5.00 நூல்கள் கிடைக்குமிடங்கள் - பெரியார் படிப்பகம் பேருந்து ... மேலும்>>
பெரியார் திராவிடர் கழகப் பிரச்சாரக் கட்டமைமைப்பு நிதி: கொளத்தூர் மணி முக்கிய வேண்டுகோள்
பெரியாரியலுக்கு அடிப்படை ஆவணங்களான குடிஅரசு, புரட்சி, ரிவோல்ட், பகுத்தறிவு இதழ்களைத் தேடித் தேடி தொகுத்து குடி அரசு தொகுப்பு நூல்களாக வெளியிட்டோம். சட்டப் போராட்டம் நடத்தி பெரியாரின் கருத்துக் கருவூலங்களை மக்கள் சொத்தாகவும் மாற்றிவிட்டோம். நண்பர்களின் கணினிகள், ஆதரவாளர்களின் அச்சகங்கள், தாள் விற்பனை ... மேலும்>>
Subscribe to:
Posts (Atom)