Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Tuesday, July 10, 2012

இன்று(10.07.2012) இரவு 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பெரியார்திக தலைவர் கொளத்தூர் மணி பேசுகிறார்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்று இரவு (10.07.2012)  9 மணி அளவில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பெரியார் திக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனி படுகொலை தொடர்பாக பெரியார் திக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் பல அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பேசுகிறார்.

Sunday, June 17, 2012

ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]

[காணொளி] சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு வாசகர் வட்ட நிகழ்வில் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் விளக்கமளித்து உரையாற்றியுள்ளார்.




http://www.periyarthalam.com/2012/04/20/eelam-tamil-tamilar-dravidar-kolathurmani-periyardk/

Tuesday, June 12, 2012

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! - கொளத்தூர் மணி அறிக்கை

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று ... மேலும்>>

10 நாட்கள்: 80 ஊர்களில் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

10 நாட்கள்: 80 ஊர்களில் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்
சென்னை-காஞ்சிபுரம் மாவட்டக் கழகம்: சாதி தீண்டாமைக்கு எதிராகவும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கியும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கழகச் செயல் வீரர்கள் 10 நாள் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஜூன் 22 ஆம் தேதி சென்னை மந்தைவெளியில் ... மேலும்>>

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்
கேள்வி : மனு.... மனு... என்கிறோமே, அது அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை களை எழுதித் தருகிறோமே, அந்த மனு தானே! பதில்: அதுவும் மனு தான்; ஆனால், நாம் கூறுவது மனுதர்ம சா°திரம் பற்றி. கேள்வி : அது என்ன மனுதர்ம சா°திரம்? பதில் : ... மேலும்>>

களப் பணியில் கழகத் தோழர்கள்

களப் பணியில் கழகத் தோழர்கள்
பல்லடம் ஒன்றிய கழக முடிவுகள் 20.5.2012 அன்று பல்லடம் ஒன்றிய கழக அமைப்புக் கூட்டம் ஜி.ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணம், அய்ந்துநாட்கள், 14 பகுதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்லடம் ... மேலும்>>

பெண்ணின் பெயர் அடையாளத்தையும் பெயர்த்து எறியும் மனுதர்மம்

பெண்ணின் பெயர் அடையாளத்தையும்  பெயர்த்து எறியும் மனுதர்மம்
நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: திருமணமான ஒரு பெண், கணவனைச் சார்ந்து வாழ வேண்டும்; ‘சுயாதீனமாக’ அதாவது சுய புத்தியைப் பயன்படுத்தும் உரிமையே இல்லை என்கிறது பார்ப்பன ... மேலும்>>

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்
1919 - அது மட்டுமா? நாயர் லண்டனில் முடிவு எய்தியபோது, காங்கிர° சார்பில் சுயராஜ்யம் கேட்டு வாதாடவும், நாடாளுமன்ற குழுவின் முன்பு சாட்சியம் சொல்லவும் சென்றிருந்த, சி.பி.ராமசாமி அய்யர், சுரேந்திரநாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்தியமூர்த்தி, சரோஜினி (நாயுடு), லார்டு சின்ஹா ... மேலும்>>

மீண்டும் நுழைவுத் தேர்வா?

மீண்டும் நுழைவுத் தேர்வா?
கல்வித் துறையில் தமிழ்நாடு தனித்துவம் பெற்றது. சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்துவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. இந்திய அரசு 1976 ஆம் ஆண்டில் அவசர நிலை காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. ... மேலும்>>

‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. இன்றைய ... மேலும்>>

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’
நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: மனுதர்மக் காவலருக்கு புகழாரம்! காஞ்சிபுரம் மடத்தின் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி, மனுதர்மத்தையும் வர்ணபேதத்தையும் வெளிப்படையாக ஆதரித்தவர். அதை தெய்வத்தின் குரல் என்ற ... மேலும்>>
Page 1 of 15:1 2 3 4 » Last »

Wednesday, June 6, 2012

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்
1919 - இந்திய சீர்திருத்த விஷய மாக நாயர் கொடுக்கப் போகும் சாட்சியமானது, மிக முக்கியமானது என்று கருத்தறிவித்த, சர். தாம° பார்கோ என்ற நாடாளுமன்ற உறுப் பினரின் தூண்டுதலின்படி படுக்கையி லிருந்த நாயரிடம் சாட்சியம் வாங்க ஜாயிண்ட் பார்லிமெண்ட் கமிட்டி ... மேலும்>>

Monday, June 4, 2012

எது திராவிடம்…? – தமிழேந்தி

மார்ச் 2 ஆம் பக்கல் 2006 ஆம் ஆண்டில் புரட்சிப்பெரியார் முழக்கத்தில் எது திராவிடம்…? என்ற தலைப்பில் தோழர் தமிழேந்தி எழுதிய இப்பாவை தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் பெரியார் தளத்துக்கு தெரிவித்து வெளியிட சொன்னார். இந்த இதழை பெரியார் முழக்கம் பொறுப்பாளர் தோழர் செல்வா தேடி எடுத்து நமக்கு அனுப்பியுள்ளார்.


Tuesday, May 29, 2012

நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு



நாம் தமிழர் கட்சி – இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்!

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்]

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்]

Sunday, May 27, 2012

கடைக்கோடித்தமிழனின் விடுதலைக்கும் ஆயுதம் திராவிடமே: கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், அப்துல் சமத் உரை

திராவிட இயக்க நூற்றாண்டான இன்று திராவிடர் இயக்க போராட்டத்தால் முன்னேறிய பலர் திராவிடர் இயக்க செயல்பாட்டை மறந்துவிட்டும் மறைப்பதற்கும் முயற்சித்து வருகின்றனர். திராவிடம் தான் தமிழர் விடுதலைக்கு எதிரானதாகவும், ஈழத்தமிழர் அழிவுக்கு காரணமே திராவிடர் இயக்கம்தான் என்று மேடையில் பேசி இந்தியப் பார்ப்பனிய அரசுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தெளிவினையும் வரலாற்றையும் அளிக்கும் வகையில்




http://www.periyarthalam.com/2012/05/01/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/

Friday, May 25, 2012

[புரட்சிப்பெரியார் முழக்கம் 24.05.2012] இந்திய துரோகங்களை விளக்கி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உரை

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்]

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்]
ஈழத்தில் முள்ளி வாய்க்காலில் மே 16, 17, 18 தேதிகளில் ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களுக்கும், தமிழ் ஈழத்தில் ராணுவத்தால் மரணத்தைத் தழுவிய பல லட்சம் தமிழர்களுக்கும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு உருக்கத்துடனும் உணர்வலைகளுடனும் கடந்த 19 ஆம் தேதி ... மேலும்>>

தலையங்கம் நாடாளுமன்றத்தில் சாதி எதிர்ப்புக் குரல்!

தலையங்கம் நாடாளுமன்றத்தில் சாதி எதிர்ப்புக் குரல்!
“ஜனநாயகமும்-சாதி அமைப்பும், ஒன்றையொன்று சார்ந்து பயணிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஜனநாயகம், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதி அமைப்போ, சமூகத்தில் மேலானவர், கீழானவர் என்ற வேறுபாடுகளின் மீது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளில் ஏதேனும் ஒன்று சாகடிக்கப்பட வேண்டும். ... மேலும்>>

‘விவாக’ங்களை நிர்ணயிக்கும் மனுதர்மம்: நியாயப்படுத்தும் பார்ப்பன ஏடுகள்

‘விவாக’ங்களை நிர்ணயிக்கும் மனுதர்மம்: நியாயப்படுத்தும் பார்ப்பன ஏடுகள்
‘மனுதர்மம்’ இப்போது எங்கே இருக்கிறது? இப்படி ஒரு கேள்வி சிலரால் முன் வைக்கப்படுகிறது. அவர்கள் நாட்டின் நடப்புகளைப் புரிந்து கொண்டால், இந்தக் கேள்வியை கேட்க மாட்டார்கள். ‘மனுதர்மம்’ புதிய பதிப்புகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ‘தினமலர்’, ‘துக்ளக்’ போன்ற பத்திரிகைகள், அதன் உள்ளடக்கங் ... மேலும்>>

இந்திய துரோகங்களை விளக்கி கழகத் தலைவர் உரை; சலகண்டாபுரம் – தாரமங்கலத்தில் கழகக் கூட்டங்கள்

இந்திய துரோகங்களை விளக்கி கழகத் தலைவர் உரை; சலகண்டாபுரம் – தாரமங்கலத்தில் கழகக் கூட்டங்கள்
சேலம் (மேற்கு) மாவட்டக் கழகம் தீவிரமாக பரப்புரை இயக்கங்களை நடத்தி வருகிறது. பம்பரமாய் சுழலும் கழகத் தோழர்களின் செயல்பாடுகள். கடந்த இதழின் தொடர்ச்சி. சேலம் மேற்கு மாவட்டம் சலகண்டாபுரத்தில் 10.2.12 வெள்ளி மாலை 5 மணிக்கு கழகத்தின் சார்பாக மத்திய அரசின் தமிழின ... மேலும்>>

மனம் திறக்கிறார் நீதிபதி கே. சந்துரு சாதியமைப்புப் பற்றிய விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்

மனம் திறக்கிறார் நீதிபதி கே. சந்துரு சாதியமைப்புப் பற்றிய விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்
கிராம ஊராட்சிகளில் காந்தியடிகள் சொன்னதுபோல் கிராம ராஜ்யம் வாழ்கிறதா, அம்பேத்கர் சொன்னது போல சாதி ஆதிக்க சக்திகளின் ராஜ்யம் நிலவுகிறதா என உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கேள்வி எழுப்பினார். திருநெல்வேலியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் ஏப்.28 அன்று உள்ளாட்சி ... மேலும்>>

கழக ஏட்டுக்கு 100 சந்தாக்கள்: தென் சென்னை மாவட்டக் கழகம் வழங்கியது

கழக ஏட்டுக்கு 100 சந்தாக்கள்: தென் சென்னை மாவட்டக் கழகம் வழங்கியது
30.4.2012 அன்று காலை சென்னையில் மறைந்த கழகத் தோழர் பத்ரி நாராயணன் 8 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும், குடும்பத்தினரும் வீரவணக்கம் செலுத்தினர். அன்று மாலை இராயப்பேட்டை ... மேலும்>>

--
------------------------------
-------
எமது தகவலை எளிதில் பெற கீழ்க்காணும் குழுவில் இணையவும்..


[வீடியோ] ஏன் என்னை புறக்கணிக்கிறீர்கள்: திருமாவளவன் ஆதங்கம்

[வீடியோ] ஏன் என்னை புறக்கணிக்கிறீர்கள்: திருமாவளவன் ஆதங்கம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மய்ய ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்…” என்ற தலைப்பில் சென்னையில் (மே18) கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் “தமிழீழம் இந்திய அரசின் நிலைப்பாடும்” என்ற தலைப்பில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.


[video]இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: ஆனூர் செகதீசன், கு.இராமகிருட்டினன், விடுதலை க.இராசேந்திரன்

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: ஆனூர் செகதீசன், கு.இராமகிருட்டினன், விடுதலை க.இராசேந்திரன் உரை



Thursday, May 24, 2012

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: கொளத்தூர் மணி [Video]

[Video] இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: கொளத்தூர் மணி உரை


http://www.periyarthalam.com/2012/05/21/periyardk-voice-for-tamileelam-election-19052012/

Wednesday, May 23, 2012

ஈழம் விடுதலை அடையும் கொளத்தூர் மணி, வைகோவுடன் இணைந்து நானும் ஈழம் செல்வேன்: சத்தியராஜ்

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழக மக்களுக்காகவும் பல்லாண்டுகளாக தொடர்ந்து போராடும் பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திமுகவின் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் தங்கள் தார்மீக ஆதரவினை வழங்க வேண்டும், இவர்களின் போராட்டத்தால் ஈழம் விடுதலை அடையும் அப்பொழுது கொளத்தூர் மணி, வைகோ அவர்களுடன் சேர்ந்து நானும் தமிழீழம் செல்வேன் என்று சென்னை எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய “அய்.நாவே தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்து” உரிமை முழக்க பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் உரையாற்றியுள்ளார்.





http://www.periyarthalam.com/2012/05/20/sathyaraj-periyardk/

Saturday, April 23, 2011

போர்க்குற்றவாளி மகிந்தவுக்கு துணைபோன இந்திய அரசே மன்னிப்பு கேள்: பெரியார் திக ஆர்ப்பாட்டம்

சிங்கள அரசுக்கு எதிரான ஐ.நா அறிக்கையின் எதிரொலியாக ஈழத்தில் சிங்கள அரசு நடத்திய கொடூரமான போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும், துணை நின்ற இந்திய அரசை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், இலங்கை மீதான இந்திய வெளியுறவு கொள்கைகளை மாற்ற கோரியும்,....

பன்னாட்டு விசாரணை குழு அமைக்க கோரியும், தமிழ்நாடு முழுவதும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் “பெரியார் திராவிடர் கழகம்” சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார் தலைமையில் பாமக தோழர் வியனரசு தொடங்கிவைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சி.ஆ.காசி ராசன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் முருகேசனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சுஜித் , தூத்துக்குடி பெரியார் திக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, துணைத்தலைவர் வே.பால்ராசு உரையாற்றினர்.

ஆர்ப்பாட்ட விளக்கவுரையினை இறுதியாக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றினார்.

நிகழ்வில் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் மதன், பால்.அறிவழகன், பாலசுப்பிரமணியன், சா.த.பிரபாகரன், ரவிசங்கர், அமிர்தராசு, அகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் புஇமு, தமிழ்ப்புலிகள் அமைப்பினரும் கலந்துகொண்டனர்..



சேலம் மாநகரில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



கோவையில் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.


பொள்ளாச்சியில் நகரச்செயலாளர் காசு.நாகராசன் தலைமையிலும், கரூரில் மாவட்டத்தலைவர் கு.தனபால் தலைமையிலும் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது.


போராட்டத்தில் மதிமுக, ஆதித்தமிழர் பேரவை, கொங்கு இளைஞர் பேரவை புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டு இந்திய அரசுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

















Monday, January 24, 2011

தமிழருக்கான தேசிய சிந்தனைகள் மக்கள் மனதில் உதிக்கட்டும், மலரட்டும்: கொளத்தூர் மணி

முத்துக்குமார் இனவெழுச்சி சுடர்பயணம் இன்று நீலகிரியில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கொளத்தூர் மணி தனது உரையாற்றுகையில் " தமிழருக்கான தேசிய சிந்தனைகளும், தமிழ் தேசிய தேவையும் மக்கள் மனதில் இப்பயணத்தால் உதிக்கட்டும், வளரட்டும் என்று தெரிவித்துள்ளார்.





Tuesday, September 29, 2009

தந்தை பெரியார் 131 ஆவது பிறந்தநாள் விழா - பொதுக்கூட்டம், சூலூர், கோவை






கடந்த 22.09.09 அன்று மாலை 6 மணியளவில் சூலூரில் தந்தை பெரியார் 131 ஆவது பிறந்தநாள் விழா - பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும், இயக்குநர் சீமான் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.எஸ். கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக திருப்பூர் மாவட்டத் தலைவர் சு.துரைசாமி, ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம.இளங்கோவன், தலைமை செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி ஆகியோர் உரையாற்றினர்.



தலைமை உரை நிகழ்த்திய பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அவர்கள் பேசும் போது,
இன்று தந்தை பெரியார் அவர்களின் 131 ஆவது பிறந்தநாள் விழா நடத்திக் கொண்டிருக்கிறோம். பலர் சொல்லுகிறார்கள் இன்றைய காலகட்டத்தில் பெரியார் இல்லையே என்கிறார்கள். தந்தை பெரியார் நவீன மருத்துவ வசதிகள் இல்லாத காலகட்டத்திலும் 94 ஆண்டுகள் வாழ்ந்தார். தன் வாழ்க்கையையே தமிழ் சமூகத்திற்க்காக அர்ப்பணித்தார். நவீன மருத்துவ வசதிகள் இருந்திருந்தாலும் அவர் 131 ஆண்டுகள் இருந்திருக்க முடியுமா என்று சொல்ல முடியாது. ஆகவே அவர் இல்லையே என்று பேசுவதை விட அவர் கொள்கைகளை, இலட்சியங்களை, விட்டுச் சென்ற பணிகளை செய்வது தான் நாம் அவருக்கு பிறந்தநாள் விழா நடத்துவதன் சரியான பொருளாக அமையும். எவ்வளவு காலம் பெரியார் தேவையென்றால் சாதி ஒழியும் வரை, பெண்ணடிமைத்தனம் ஒழியும் வரை, சமத்துவ சமூகம் மலரும் வரை பெரியார் நமக்குத் தேவைப்படுகின்றார். இன்று ஈழத்திலே மூன்று இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அகதிகளாக, அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த நிலைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வந்து இளைஞர்களை சந்தித்து காங்கிரசை வலுப்படுத்தப் போகிறேன்.



அடுத்தமுறை ஆட்சியை பிடிக்கப் போகிறேன் என்று வந்தார். இன்றைய செய்தி என்னவென்றால் அவர் வந்து சென்று எந்தப் பலனும் இல்லை. இளைஞர்களை சேர்க்க முடியவில்லை என்பது தான். இங்கே உங்கள் கனவு என்றுமே பலிக்காது. ஏன் என்றால் இது பெரியார் பூமி. அவர் வாழ்ந்த மண். அவருக்குப் பிறகு தமிழர்களின் வீரம் மிக்க தலைவராக விளங்குகின்ற தம்பி பிரபாகரனை ஏற்றுக் கொண்ட மண். எனவே தான் சொல்லுகிறோம் உங்கள் கனவு பலிக்காது. என்று பேசினார்.



சிறப்புரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பேசும்போது, இன்று நாம் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் என்று பேசுகிறோம். இது எப்போது தொடங்கியது என்றால் விடுதலைப் புலிகள் போராடத் தொடங்கினார்களோ, ஜூலை கலவரம் 1983 ஆம் ஆண்டு தொடங்கியது. அதே ஆண்டு ஆகஸ்ட் 13 தமிழக மீனவர்களை முதன்முறையாக தாக்கினார்கள். அன்றிலிருந்து அவர்கள் சொல்லுகின்ற காரணம் விடுதலைப் புலிகள் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு ஆயுதங்கள், எரிபொருட்கள் கடத்துகிறார்கள் என்பது தான். ஆனால் இப்போதும் தாக்குவதற்கு என்ன காரணம் என்பதை நாம் இப்போது யோசிக்க வேண்டும். அவர்களுடைய கூற்றுப்படி புலிகள் இயக்கம் அழிந்தது, பிரபாகரன் மறைந்தார் என்கிறார்கள். தமிழக முதல்வரோ அங்கே சகஜ நிலை திரும்பிவிட்டது என்கிறார். ஆனால் இப்போதும் தாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதே இந்திய மீனவர்களை பாகிஸ்தானில் உள்ள சில ஆயுதக் குழுக்கள் தாக்கினார்கள். அதற்கு பாராளுமன்றத்திலே பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்கிறார்கள். தமிழக மீனவர்களில் ஐந்நூறு பேரை சுட்டுக் கொன்று, இப்போதும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இலங்கையின் அரச படைகளை கண்டிக்கக்கூட இந்தியா முன்வரவில்லை. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க யாரும் தயார் இல்லை. இந்த நாட்டில் நாம் தான் நம்மை இந்தியர் என்று கருதிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் நம்மைத் தமிழர்கள் என்று தான் பார்க்கிறார்கள். நாம் மட்டும் ஏன் நம்மை இந்தியர் என்று கருதிக்கொள்ள வேண்டும் என்பது தான் நாம் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் சிந்திக்க வேண்டிய செய்தி.
ஈழத்தில் முள்வேலிக்குள் மூன்று இலட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டிருப்பதைப் பற்றி பேசும் போது இங்கு நம் கண் முன்னால் தமிழ்நாட்டில் செங்கல்பபட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு இருப்பவர்கள் ஏதோ வழக்கில் இருப்பவர்கள் என்று நினைக்க வேண்டாம். வழக்கை முடித்தவர்கள், விடுதலையானவர்கள், பிணையில் இருப்பவர்கள் ஆகியோர் அடங்குவர். இவர்கள் எந்த விசாரணையும் இல்லாமல் ஆண்டுக் கணக்கில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எல்லா சிறப்புகளையும் தொடங்கி வைக்கும் கலைஞர் தான் இந்த சிறப்பு முகாம்களையும் தொடங்கினார். கொடுமைக்காரி ஜெயலலிதா என்று சொல்லப்படுகிற அந்த அம்மையார் கடந்த முறை 2001ல் ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பு முகாமில் உள்ளவர்களின் எண்ணிக்கையை 6 ஆக குறைத்தார். ஆனால் நம் தமிழினத் தலைவர் ஆட்சிக்கு வந்த பிறகு எண்ணிக்கை 100 ஆக உயர்த்தி விட்டார். ஈழத்தமிழர்கள் தான் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்று பார்த்தல் தமிழ்நாட்டு தமிழர்களும் சிறைச்சாலைகளில் உரிய தண்டனைக்காலம் முடிந்த பிறகும் கூட ஏதேதோ பிரிவுகளைக் காட்டி ஆண்டுக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்க்கெல்லாம் நாம் கேள்வி கேட்க வேண்டும். போராடத் துணிய வேண்டும். என்று பேசினார்.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக நாகர்கோவில் மாவட்டத்திலிருந்து முப்பது தோழர்கள் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து பெரியார் திராவிடர் கழகத்தில் இணைகிறார்கள். அதன் அடையாளமாக தோழர் பிலிஸ்து அவர்களும், தோழர் ரெஜின் ரோஸ் அவர்களும் பொதுக்கூட்ட மேடையில் கழகத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. மேலும் ஈழத்தமிழினப் படுகொலையைத் தடுக்கும் நோக்கில் இராணுவ வாகன மறியலில் ஈடுபட்டு சிறை சென்ற தோழர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இறுதியாக நாம் தமிழர் அமைப்பின் சீமான் உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்காக கடந்த இருபது நாட்களாக சூலூர் ஒன்றிய கழகத் தோழர்கள் சூ.இரா.பன்னீர்செல்வம், கலங்கல் வேலுச்சாமி, அகில் குமரவேல், முனியப்பன், திலீபன், ஆட்டோ தேவா, சண்முகசுந்தரம், சரவணகுமார், இருகூர் கோடிநாதன், திருநாவுக்கரசு, காளப்பட்டி ஜெயபிரகாசு, அம்பேத்கர், சிங்கநல்லூர் மூர்த்தி, பாலா, பல்லடம் வடிவேல், சின்னச்சாமி, மணி மற்றும் சூலூர் வீரமணி ஆகிய தோழர்கள் கடுமையாக உழைத்தனர்.


Thursday, September 10, 2009

முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?

ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க தமிழகத்திலுள்ள தூய சவேரியர் பள்ளியில் “முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.





நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (08.09.2009) அன்று மாலை 3.30 மணியளவில் தூத்துக்குடியிலுள்ள தூய சவேரியர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில் ஆரம்ப நிகழ்வாக இலங்கை அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பள்ளி மாணவர் ரமேஷ் என்பவர் இறைவணக்கப் பாடல் பாடினார். ஆசிரியர் கில்பர்ட் வரவேற்புரையாற்றி ஈழப்போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆசிரியர் காலின்ஸ் ஈழமக்கள் பிரச்சினை பற்றிய கவிதை ஒன்றை வாசித்தார்.

ஆசிரியர் ஹென்றி மற்றும் குழுவினர் ” தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை மனிதன் நினைக்கலாமா” பாடலின் வரிகளை சிறிது மாற்றி ஈழமக்களின் பிரச்சினையையும் உணர்வினையும் வெளிப்படுத்தும் வகையில் உணர்வுப்பூர்வமாக இசையமைத்து பாடினார்.

பின்னர் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தனது உரையில் பள்ளி மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை புரியும் வகையில் பழைய வரலாற்றினை எடுத்துக்கூறி ஈழம் தமிழரின் தாயகம் என்பதை தெளிவாக விளக்கப்படுத்தினார்.

விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கியது ஏன் என்றும் , அகிம்சை போராட்டம் என்றால் என்னவென்றும் காந்தி தேசத்துக்கே உண்ணாநிலைப்போராட்டம் என்றால் என்னவென்று எடுத்துக்காட்டிய தியாக தீபம் திலீபன் பற்றியும், தமிழீழத்தேசியத்தலைவரின் மனிதாபிமானம் பற்றியும், முள்வேலிக்குள் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் பற்றியும், பதுங்குகுழிக்குள் அமர்ந்து தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் பற்றியும் பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம் உரையாற்றினார்.

பின்னர் அப்பள்ளியின் தலைமையாசிரியர் நிறைவுரையாற்ற ஆசிரியர் மரியதாஸ் நன்றியுரையாற்றினார்.

Monday, August 24, 2009

முள்வேலிச்சிறையிலிருக்கும் மக்களை காக்கக்கோரி கண்ணைக்கட்டி வாகன ஓட்டும் பிரச்சாரம்

புலிகள் மீதான தடையை நீக்கக்கோரியும் முள்வேலியில் இருக்கும் தமிழர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்ப வலியுறுத்தியும் போர்குற்றவாளி இராஜபக்சேவை தண்டிக்கக்கோரியும்
பெரியார் திராவிடர் கழகத்தின் தூத்துக்குடி மாநகர செயலாளர் பால்.அறிவழகன் கரூர் நகரில் கண்ணைக்கட்டி வாகனம் ஓட்டி பிரச்சாரம்.

Thursday, August 13, 2009

முடிந்துவிட்டதா ஈழப்போர்....? - கொளத்தூர் மணி

முடிந்துவிட்டதா ஈழப்போர் ? நெல்லை தூத்துக்குடியில் விளக்கக்கூட்டம்

செய்திகளை வெளியிட்ட சங்கதி , மீனகம் தளங்களுக்கு நன்றி.

மீனகம் தளத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் முடிந்துவிட்டதா ஈழப்போர் உரையின் audio வெளியிடப்பட்டுள்ளது:

http://www.meenagam.org/?p=7674


தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் கடந்த சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் "முடிந்துவிட்டதா ஈழப்போர்..?" என்ற தலைப்பில் விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.




தூத்துக்குடியில் 08.08.2009 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் கழகப்பாடகர் தஞ்சை இராம.முத்துராமலிங்கம் தமிழின மற்றும் தமிழீழ எழுச்சிப்பாடல் பாட மேட்டூர் குமரப்பா தவில் வாசிக்க நிகழ்ச்சி தொடங்கியது.




பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி "முடிந்துவிட்டதா ஈழப்போர்...?" என்ற தலைப்பில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன், மாநகர துணைத்தலைவர் ச.ரவிசங்கர், மாநகர செயலாளர் பால்.அறிவழகன், மாநகர இணைச்செயலாளர் மு.கனகராசு, அறிவுபித்தன், மாவட்ட துணைச்செயலாளர் க.மதன், மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார், மாநகர பொருளாளர் வ.அகரன், மாவட்டப்பொருளாளர் செ.செல்லத்துரை, மாவட்ட அமைப்பாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் மற்றும் கழகத்தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.





இதைப்போல் 09.08.2009 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சந்தை திடலில் நெல்லை மாவட்டச்செயலாளர் சி.ஆ.காசிராசன் தலைமையில் "முடிந்துவிட்டதா ஈழப்போர்...?" விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெல்லை ராசா, தலைமைக்கழக உறுப்பினர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி பெரியார் திராவிடர் கழகத்தினர் இணைந்து சிறப்பாக நடத்தினர்.