Saturday, February 28, 2009

ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி வந்த பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி

thoothukudi_28_02_2009_002[படங்கள் இணைப்பு]தூத்துக்குடி மாநகருக்கு வருகைபுரிந்த நடுவண் அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு தூத்துக்குடி ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கருப்புக்கொடி காட்டப்பட்டு உருவப்படம் செருப்பாலும் , துடைப்பத்தாலும் அடிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. (more…)

28 February 2009
[விரிவு]



பிரணாப்புக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற வைகோ உள்ளிட்ட 150 பேர் கைது
[ சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009, 12:05.36 PM ] []
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் உட்பட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]



ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி வந்த பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி பலர் கைது

தூத்துக்குடியில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஈழம் என்பதை ஏற்றுக்கொண்டு ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரிலே பெரியார் திராவிடர் கழக தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன.108 ஹெக்டேர் பரப்பில் அமையும் இந்த அனல் மின் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி, எட்டயபுரம் சங்கரப்பேரி விலக்கு அருகே இன்று நடக்கிறது.

இதில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அங்கிருந்து தூத்துக்குடி சென்றார்.

தமிழர் விரோதப்போக்கையே கடைப்பிடித்து இந்திய நாடாளுமன்றத்திலும் இராஜபக்சேயின் குரலையே ஒலித்த பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி இராஜாஜி பூங்கா அருகில் மதியம் 2.30 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் , தமிழர் தேசிய இயக்கத்தின் தூத்துக்குடி தமிழ்நேயன் ஏற்பாட்டில் , பெரியார் திராவிடர் கழக பால்.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் பிரணாப் முகர்ஜியின் உருவப்படத்தினை செருப்பாலும் , துடைப்பத்தாலும் அடித்து நெருப்பால் எரித்தனர். பின்பு ஊர்வலமாக செல்ல முயன்ற அனைவரும் வி.வி.டி சிக்னல் அருகில் காவல்துறையால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் அனைவரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழர் தேசிய இயக்க சுக.மகாதேவன் , பெரியார் திராவிடர் கழக மாநகரத்தலைவர் கோ.அ.குமார் , தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் டி.பிரபு , மனித உரிமைக்கழக வழக்கறிஞர் அதிசயகுமார் , பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் சி.அம்புரோசு, மதிமுக தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜோயல், வழக்கறிஞர் நக்கீரன் , பெரியார் திராவிடர் கழக பால்ராசு சா.த.பிரபாகரன் , க.மதன், வ.அகரன் விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ, வரதராஜன், சிவகாசி மதிமுக எம்.எல்.ஏ ஞானதாஸ் , இந்திய பொதுவுடைமைக்கட்சியின் க.மோகன் , சந்தானம் , விடுதலைச்சிறுத்தைகள் மாநகரத்தலைவர் செந்தமிழ்பாண்டியன் மற்றும் திரளான தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டு கைதாகினார்கள்.

Tuesday, February 24, 2009

இலங்கை தூதரை கண்டித்து தமிழ் அமைப்புகள் கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

இலங்கை தூதரை கண்டித்து தமிழ் அமைப்புகள் கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்எழுகதிர் on February 24, 2009
பிரிவு: செய்திகள்

banglore_230209_01[வீடியோ இணைப்பு]இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடிய சிங்கள மாணவர்களையும், இலங்கை தூதரையும் கண்டித்து பெங்களூரில் தமிழ் அமைப்புகள் நேற்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடாத்தினர்கள்.

இலங்கையில் ஏராளமான அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதனை எதிர்த்து உலக தமிழர்கள் அனைவரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் இலங்கை அரசை கண்டித்து பெங்களூர் தமிழ்சங்கம் சார்பில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.


சிங்கள மாணவர்கள் முன்னால் உரையாற்றும் இயக்குநர் கணேசன்

சிங்கள மாணவர்கள் முன்னால் கறுப்புக்கொடியுடன் உரையாற்றும் இயக்குநர் கணேசன்


மேலும்>>>>



இலங்கை சுதந்திர தினம் கொண்டாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2009, 04:23.51 AM ] []
இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடிய சிங்கள மாணவர்களையும், இலங்கை தூதரையும் கண்டித்து பெங்களூரில் தமிழ் அமைப்புகள் நேற்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடாத்தினர்கள். [மேலும்]

Friday, February 20, 2009

இராஜீவ்காந்திக்கு மரணதண்டனை கொடுத்திருந்தால் பாராட்டுவோம். - கொளத்துார் மணி

புலிகள் இராஜீவ்காந்திக்கு மரணதண்டனை கொடுத்திருந்தால் பாராட்டுவோம். - கொளத்துார் மணி உரை


http://www.tamilkathir.com/news/1043/75//d,audio.aspx

தமிழகத்தில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகத்தினை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது

முதன்மைச்செய்தி
February 20th, 2009

salem_200209_01

[படங்கள் இணைப்பு]

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகள் புரிவதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் மத்திய வருமானவரித்துறை அலுவலகத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறை கைது செய்தனர். விரிவு… »


தமிழகத்தில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகத்தினை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2009, 07:45.24 AM ] []
ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகள் புரிவதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் மத்திய வருமானவரித்துறை அலுவலகத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறை கைது செய்தனர். [மேலும்]


சென்னை , சேலம் , கோவையில் வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது

தமிழகத்தில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகத்தினை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது
[ 2009-02-20 07:45:24 ]
ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகள் புரிவதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் மத்திய வருமானவரித்துறை அலுவலகத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறை கைது செய்தனர். [மேலும்]


ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகள் புரிவதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் மத்திய வருமானவரித்துறை அலுவலகத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

20 February 2009
[விரிவு


Thursday, February 19, 2009

இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியின் கொடும்பாவி தஞ்சையில் எரிப்பு

தஞ்சை பிரணாப் எரிப்பு 190209இந்திய பாராளுமன்றத்தில் நேற்று இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்த முடியாது என்று கூறிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி கொடும்பாவி மற்றும் உருவப்படத்தை தஞ்சை சட்டவாளர்கள் எரித்து போராட்டம் செய்துள்ளனர்.

இன்று (19.2.09) காலை 11.00 மணியளவில் தஞ்சாவூர் நீதிமன்ற வளாகம் அருகில் வழக்கறிஞர் சங்க செயலாளர் நல்லதுரை தலைமையில் இந்திய இலங்கை அரசிற்கு எதிராகவும் தமிழ் ஈழ விடுதலையை ஆதரித்தும் முழக்கங்கள் எழுப்பி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் உருவபொம்மையை எரித்த வழக்கறிஞர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

thanjai-19020901

தஞ்சை பிரணாப் எரிப்பு 190209thanjai-raja-03

sourcelink : http://meenagam.net/me/?p=1461

Wednesday, February 18, 2009

தூத்துக்குடியில் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்

http://meenagam.net/me/?p=1379

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dFj060ecGG773b4P9EO4d2g2h2cc2DpY3d436QV3b02ZLu3e





nellai_170209_seemaan[படங்கள் இணைப்பு]

திருநெல்வேலி பாளையங்கோட்டை சவகர் திடலில் இன்று மாலை 7 மணியளவில் நெல்லை வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிங்கள அரச பயங்கரவாதத்தைக்கண்டித்து ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் சீமான் , புதுக்கோட்டை பாவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மனித சங்கிலி தூத்துக்குடி[படங்கள் இணையப்பு]

தமிழ்நாட்டிலே அரசியல் காரணங்களால் சிலர் ஈழத்தமிழர் என்ற சொல்லை பயன்படுத்தாமல் இலங்கைத்தமிழர் என்ற அறிவுக்கு ஒவ்வாத சொல்லை பயன்படுத்தி வரும் நிலையில் தூத்துக்குடியில் மட்டும் பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்து ஈழத்தமிழர் பாதுக்காப்பு இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டுவருகின்றனர். இதன் சார்பாக இன்று மனிதச்சங்கிலி முன்னெடுக்கப்பட்டது. (more…)

18 February 2009
[விரிவு]


தூத்துக்குடியில் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனிதச்சங்கிலி
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 09:16.32 PM ] []
தமிழ்நாட்டிலே அரசியல் காரணங்களால் சிலர் ஈழத்தமிழர் என்ற சொல்லை பயன்படுத்தாமல் இலங்கைத்தமிழர் என்ற அறிவுக்கு ஒவ்வாத சொல்லை பயன்படுத்தி வரும் நிலையில் தூத்துக்குடியில் மட்டும் பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்து ஈழத்தமிழர் பாதுக்காப்பு இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டுவருகின்றனர். இதன் சார்பாக இன்று மனிதச்சங்கிலி முன்னெடுக்கப்பட்டது. [மேலும்]



நெல்லையில் ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 08:34.31 PM ] []
திருநெல்வேலி பாளையங்கோட்டை சவகர் திடலில் இன்று மாலை 7 மணியளவில் நெல்லை வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் சீமான் , புதுக்கோட்டை பாவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். [மேலும்]

Sunday, February 15, 2009

தோழமை இயக்க ஈழ ஆதரவு செய்தி தொகுப்புகள் 1

உணர்ச்சிப் பெருவெள்ளமான பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் "ஈழத்தமிழர் ஆதரவு அமைதிப் பேரணி"
[ 2009-02-15 18:31:20 ] []
பெங்களூர் தமிழ்சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு பேரணி தமிழர்களின் உணர்ச்சிப்பெருக்கால் ஆவேசப்பேரணியாக மாறியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு உண்டாகியது. [மேலும்]




thanjai_15_02_2009_002தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள கருணாநிதி நகரில் பொதுமக்கள் சார்பாக தமிழ் ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையை நிறுத்தக் கோரி உண்ணா விரதம் 15.2.2009 காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது. (more…)




காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் - புதுச்சேரி உண்ணாநிலைப்போராட்டத்தில் வெளியீடு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009, 04:33.43 PM ] []
ஈழத்தில் சிங்கள அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போரை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டியும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கிய ஆள், ஆயத, பண உதவிகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் புதுச்சேரி சாரம் பகுதியில் இன்று உண்ணாப்போராட்டம் நடந்தது. இந்நிகழ்வில் காங்கிரஸ் பற்றிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன. [மேலும்]



Saturday, February 14, 2009

மதுரையில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் பேரணி



சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை வழக்கறிஞர் சங்க கட்டிடத்தில் தென் மாவட்ட வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படிவரும் 16.02.09 மாலை 3 மணிக்கு மதுரை மாநகரில் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வில் பங்கேற்க தென்மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டுள்ளது .(அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது.)

தஞ்சாவூர்,கும்பகோணம் வழக்கறிஞர்கள் இரண்டு பேருந்துகள்,மகிழுந்து மற்றும் வாகனங்களில் 16.02.09 மதுரை மாநகரில் நடைபெறவுள்ள ஊர்வலத்திற்கு திங்கள் காலை 10 மணிக்கு புறப்படவுள்ளனர்.

கொளத்தூரில் சிங்கள அரசைக்கண்டித்து உண்ணாநிலைப்போராட்டம்

ஈழத்தமிழர்களை அன்றாடம் கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும் இந்திய அரசை கண்டித்தும் உண்ணாநிலைப்போராட்டம்

kolaththur_13_02_2009_005ஈழத்தமிழர்களை அன்றாடம் கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும் தொடர்ந்து ஆயுத உதவி செய்துவரும் இந்திய அரசை கண்டித்தும் கொளத்தூரில் 13.02.09 அன்று காலை 8.00மணி முதல் மாலை 6.00 மணிவரை கொளத்தூர் பேருந்து நிலையத்தில் ஒன்றிய அனைத்து நற்பணி மன்றங்களின் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப்போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு பா.ம.க ஒன்றிய செயலாளர் மாரப்பன் தலைமை தாங்கினார். பெரியார் தி.க மாவட்ட செயலாளர் டைகர் பாலன் துவக்கவுரையாற்றி துவக்கிவைத்தார் இப்போராட்டத்தை ஆதரித்து பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பா.ம.க மாவட்ட செயலாளர் அறிவழகன் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளின் மெத்தன போக்கை கண்டித்து கண்டன உரையாற்றினர், இப்போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட நற்பணி மன்றங்கள் கலந்துகொண்டன.

kolaththur_13_02_2009_001

kolaththur_13_02_2009_002

kolaththur_13_02_2009_003

kolaththur_13_02_2009_004

kolaththur_13_02_2009_005

news source : http://meenagam.net/me/?p=1229

Friday, February 13, 2009

Monday, February 9, 2009

முல்லைத்தீவை நோக்கி 14 வழக்கறிஞர்கள் படகில் பயணம்

இன்று நண்பகல் 12.30 மனியளவில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து மனித உரிமை பாதுகாப்ப மய்யத்தின் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் தலைமையில் 14 வழக்கறிஞர்கள் இந்திய தமிழக அரசின் கட்டுப்பாட்டை உடைத்துவிட்டு முல்லைத்தீவினை நோக்கி படகு பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழக நேரப்படி நண்பகல் 1.30 மணியளவில் 13 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருக்கின்றனர்.

அவர்களது விபரம் :

1 ) சுப.இராமச்சந்திரன் ,(தூத்துக்குடி)
2) முருகையன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் )
3) நடேசன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர்)
4 ) நெடுஞ்செழியன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )
5) முகமது பரூன் ஹக் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )
6) சின்னச்சாமி ( கரூர் )
7) லெட்சுமணன் ( கரூர் )
8 ) முருகேசன் ( கரூர் )
9) சுதாகர் ( கரூர் )
10 ) வேலுச்சாமி ( தூத்துக்குடி )
11 ) அரிகரன் ( தூத்துக்குடி )
12)பொன்ராசு ( தூத்துக்குடி )
13) இரகு (( தூத்துக்குடி ) மாணவர் திமுக மாவட்ட அமைப்பாளர் )
14 )

சிங்கள அரசுக்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் தூத்துக்குடி துறைமுகத்தினை 200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இப்பொழுது முற்றுகையிட்டு போராட்டம் செய்துகொண்டிருக்கின்றனர்.

Sunday, February 8, 2009

இந்திய அரசு வரி அலுவலகங்களை இழுத்து மூடுவோம் - தமிழர் ஒருங்கிணைப்பு

இந்திராகாந்தி படுகொலையை மறைத்த ராஜீவ்காந்தி - விடுதலை க.இராசேந்திரன்

இந்திராகாந்தி படுகொலையை மறைத்த ராஜீவ்காந்தி - விடுதலை க.இராசேந்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2009, 11:21.03 AM GMT +05:30 ]
ஈழத்தமிழருக்காக தீக்குளித்த சீர்காழி இரவிச்சந்திரனின் உடலுக்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் வீரவணக்கம் செலுத்தினர். அப்போது பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உரையாற்றும்பொழுது இந்திராகாந்தி மரணத்திலுள்ள விடைதெரியா மர்மங்களை பட்டியலிட்டார். அவர் பேசும்பொழுது ,

இரவிச்சந்திரன் சார்ந்திருந்த அரசியல் கட்சித் தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் இல்லை என்று. அதே தலைவர் நாளை ஈழத்தில் சாவது தமிழர்கள் இல்லை என்று சொல்லலாம். ராஜீவ் காந்தியின் மரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனையாயிரம் தமிழர்களை கொல்ல வேண்டுமா? இந்திரா காந்தி காலத்தில்தான், விடுதலைப்புலிகளுக்கு பயிற்சிப் பட்டறை நிறுவப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

இந்திராகாந்தி சீக்கியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, விசாரணை செய்த தாக்கர் ஆணையம் ஒரு கருத்துரையை மட்டும் முன் வைத்தது. மரணத்திற்கு முன்பு குண்டு துளைக்காத ஆடை அணிந்து சென்றுகொண்டிருந்தார். ஆனால் அன்று மட்டும் குண்டு துளைக்காத ஆடை இல்லாமலேயே சென்றுள்ளார். இந்த ரகசியம் உதவியாளர் ஆ,.கே.தவான் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.இது எப்படி பாதுகாப்பாளராக இருந்த சீக்கியருக்கு தெரிந்தது. ஆகவே ஆர்.கே.தவானை விசாரிக்க வேண்டும் என்று அறிவித்தது.

இந்திராகாந்தி இறப்புக்கு பின் ஆட்சிக்கு வந்த ராஜீவ்காந்தி, தவானை விசாரிக்க மறுத்துவிட்டார். நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆணையம் அறிவித்தும் தவானை விசாரிக்காதது ஏன்? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதும், அந்த விசாரணை செய்யும் சட்டத்தையே திருப்பி விட்டார். அதன்பிறகு தவானை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆக்கியிருக்கிறார்கள்.

இந்த விசாரணையை யாருக்காக மூடி மறைத்தார். இலங்கையே நிறுத்தச் சொன்னாலும் இந்தியா, போரை நிறுத்துவதாக இல்லை. இதில் பல சூழ்ச்சிகள் இருக்கிறது. புலிகளுக்கு இன்று சர்வதேச தமிழன் தான் நிதி மற்றும் ஆயுத உதவி செய்கிறான். வரும் தேர்தலில் ஈழப்பிரச்சனையை முன் வைத்து சந்திப்போம். என்று உரையாற்றினார்.

நன்றி : தமிழ்வின்

கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஈழத்தமிழர் இன அழிப்பைக்கண்டித்து உண்ணாநிலைப்போராட்டம்


ஈழத்தமிழர் படுகொலையைக்கண்டித்து பல்வேறு அமைப்புகளும் அரசியல்கட்சிகளும் போராடி வரும் நிலையில் ஈழத்தமிழர் இன அழிப்பைக்கண்டித்து கத்தோலிக்க திருச்சபையின் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது.

தென் தமிழகமான தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (08.02.2009) காலை 10.00 மணி முதல் மாலை 4 மணி வரை முதல் வாயில் காந்தி சிலை முன்பாக கத்தோலிக்க ஆயர் இல்ல மறைமாவட்ட முதன்மைக்குரு பேரட்திரு.ஆசுவால்ட் அடிகளார் தலைமையில் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மறைதிரு. சுந்தரிமைந்தன் அவர்கள் கவனித்தார்.

நிகழ்வில் சிறப்புரையாக பெரியார் திராவிடர் கழக தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன் ஈழ நிலைமைகளை தெளிவுபட விளக்கினார். ஆதித்தமிழர் பேரவை துணைப்பொதுச்செயலாளர் க.கண்ணன் , இளைஞரணி செயலாளர் வெ.மனோகர் , பெரியார் திக மாவட்டத்தலைவர் சி.அம்புரோசு , தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் பிரபு , வழக்கறிஞர் அதிசயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு உண்ணாநிலைப்போராட்டத்தினை வாழ்த்தி இந்திய - சிங்கள கூட்டு ஈழத்தமிழின அழிப்பைக்கண்டித்து பேசினார்கள்.

இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அறவழிப்போராட்டங்கள் நடைபெற்றது.