Tuesday, December 30, 2008

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல் தூத்துக்குடியில் கருத்தரங்கம்


இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல் என்ற தலைப்பில் தூத்துக்குடியில் மாலை 6 மணியளவில் மாநகராட்சி திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

மக்கள் உரிமைக்குழுவின் அமைப்பாளர் வழக்கறிஞர் தோழர் இ.அதிசயக்குமார் தலைமையேற்றார். பா.ம.க தோழர் அ.வியனரசு முன்னிலை வகித்தார். தோழர் சு.ப.இராமச்சந்திரன் சிறப்பாக இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்தினார்.

பெரியார் திராவிடர்கழக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் , ஆதித்தமிழர் பேரவை இரா.வே.மனோகர் , மீனவர் கூட்டமைப்பின் தமிழ்மாந்தன் , தமிழர் தேசிய இயக்க தோழர் சு.க.மகாதேவன் , ம.தி.மு.க வழக்கறிஞர் தோழர் நக்கீரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள்.

சிறப்புரையாக இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு ஈழ நிலவரங்கள் பற்றியும் இந்தியாவின் அனுகுமுறை பற்றியும் தெளிவாக விளக்கினார்.

பல்வேறு அமைப்புக்களும் , திரளான தமிழுணர்வாளர்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.

தமிழகம் வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கிற்கு கறுப்புக்கொடி: பெரியார் திராவிடர் கழகம்

தமிழகம் வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கிற்கு கறுப்புக்கொடி: பெரியார் திராவிடர் கழகம்


Friday, December 26, 2008

கலைஞர் அவர்களே ஈழவிடுதலைக்கு நீங்கள் ஆதரவா ? எதிர்ப்பா? - தோழர் பால்.பிரபாகரன்





புரட்சிகர தொழிலாளர் முன்னணி , புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் தூத்துக்குடியில் 26.12.2008 வெள்ளிக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர்களான பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி , தமிழ்தேசிய இயக்கப்பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோர் கைதைக்கண்டித்தும், உடனே விடுதலை செய்யக்கோரியும் , சிங்களக் கைக்கூலிகளை கைது செய்யக்கூறியும் தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன . புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.இ.மு தோழர்கள் சுஜித் , பாண்டியன் , திருக்குமரன் மற்றும் புரட்சிகர தொழிலாளர் முன்னணி தோழர்கள் பெரியார் பித்தன் , செந்தமிழ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.



சிறப்புரையாக பெரியார் திராவிடர்கழக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் உரையாற்றும்பொழுது இந்திய நடுவணரசைக்கண்டித்தும் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவோம் என்று பல நாட்களாக சொல்லிக்கொண்டு கிளிநொச்சியை பிடிக்க இந்திய இராணுவ அதிகாரிகளை உடனடியாக அனுப்பியதைப் பற்றி கண்டிக்காத தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களே ஈழத்தமிழர்களை ஆதரிப்போம் விடுதலைப்புலிகளை ஆதரிக்கமாட்டோம் என்று சொல்லுகிறீர்களே ஈழத்தமிழர்களின் ஒரே பாதுகாப்பு விடுதலைப்புலிகள்தான் என்று உலக நாடுகள் ஏற்றுக்கொண்டிருக்கும் பொழுது நீங்கள் ஏன் இப்படி குழப்புகிறீர்கள் ? நீங்கள் ஈழவிடுதலையை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா ? தமிழினத்தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு என்னதான் தீர்வு என்று இது வரை சொல்லியிருக்கிறீர்களா? ஈழப்பிரச்சினையில் செயலலிதாவின் நிலைப்பாடு எதிர்நிலைப்பாடு என்பது அனைவருக்கும் தெளிவாக தெரியும். உங்களின் நிலைப்பாடு என்னவென்று தெளிவாககூறமுடியுமா என்று தமிழக முதல்வரைக்கண்டித்து உரையாற்றினார். மேலும் இந்திய தேசியம் பேசும் காங்கிரசு பற்றாளர்களே காங்கிரசு கட்சி என்பது அன்னிபெசன்ட் என்ற ஆங்கிலேய பெண்மணியால் ஆங்கிலேயர்களுக்கு ஜால்ரா பொடுவதற்காகவும் பார்ப்பனியர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் திராவிடர்களை அடிமைப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி என்பது காங்கிரசு கட்சியின் வரலாற்றை திருப்பிப்பார்த்தால் தெரியும். காங்கிரசு கட்சி அலுவலகத்திற்க்குள் உடைகளோடு சென்றவன் அரை நிர்வாணமாகத்தானே இதுவரை வெளிவர இயலும். நீங்கள் தேசியவாதம் பேசுகிறீர்களா என்று காங்கிரசு கட்சிகளை தோலுறித்தும் தனது கண்டன உரையை சிறப்பாக பதிவு செய்தார்.

தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவையின் தோழர் இரா.வே.மனோகரன் , புரட்சிப்புலிகள் கிட்டுபாலா , தமிழியப்புரட்சி புலிகள் தோழர் நல்லுபாண்டியன் மற்றும் பலர் கண்டன உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பெரியார் திராவிடர்கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு , தோழர் க.மதன் , பால்.அறிவழகன் , வ.அகரன் , பு.இ.மு, , பு.தொ.மு , புரட்சிப்புலிகள் , தலித்திய சமூகநீதி உரிமைப் பேரவை , ம.தி.மு.க, பா.ம.க தோழர்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி : அகரன்

நிழற்படம் : பாலு நிழற்படக்கலையகம்

Wednesday, December 24, 2008

கொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்குஇன உணர்வாளர்கள் கொதிப்பு !

கொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்குஇன உணர்வாளர்கள் கொதிப்பு !


படியுங்கள் புரட்சிப்பெரியார் முழக்கம்

Monday, December 22, 2008

புதுவையில் பாடை கட்டி ஊர்வலம்

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் தா.செ. மணி இயக்குநர் சீமான் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பெ. மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சென்னையில் சீமான் காரை மேலும்







கொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஊர்வலம் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிங்கள காடையர்களின் குண்டு வீச்சால் படுகொலை செய்யப்படும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் கொளத்துர் மணி , இயக்குனர் சீமான் , பெ.மணியரசன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் மேலும்














மேலும்

பெரியார் திராவிடர் கழக செய்திகளைக்காண

வணக்கம் தோழர்களே பெரியார் திராவிடர் கழகத்தின் செய்திகளை www.periyardk.org இணையதளத்தில் காணலாம். இணையதள வடிவமைப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முழுமை பெற்றுவிடும்.

நன்றி

Sunday, December 21, 2008

தமிழுணர்வாளர்களை கைது செய்வதைக்கண்டித்து குறும்பூரில் ஆர்ப்பாட்டம்



தமிழுணர்வாளர்களை கைது செய்வதைக்கண்டித்து திருச்செந்தூர் குறும்பூரில் இன்று(21.12.2008) மாலை தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி யின் திருச்செந்தூர் பொறுப்பாளர் தோழர் தமிழ்மணி தலைமையேற்றார்.

மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் தோழர் சு.க.மகாதேவன் , துரைசிங் , ஞானசேகரன் , விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தோழர் கதிரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

தமிழுணர்வாளர்களை கைது செய்வதைக்கண்டித்து திருச்செந்தூர் குறும்பூரில் இன்று(21.12.2008) மாலை தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி யின் திருச்செந்தூர் பொறுப்பாளர் தோழர் தமிழ்மணி தலைமையேற்றார்.

மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் தோழர் சு.க.மகாதேவன் , துரைசிங் , ஞானசேகரன் , விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தோழர் கதிரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இறுதியாக பெரியார் திராவிடர்கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றினார்.


eezham aatharavu urai -1 - paul.prabakaran


eezham aatharavu urai -2 -


muzhakkam -

இந்நிகழ்வில் பல அமைப்புகளும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.

சென்னை: தலைவர் கொளத்தூர் மணி கைதைக்கண்டித்து பு.இ.மு ஆர்ப்பாட்டம்-இ



ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக பேசியதற்காக பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி , பெ.மணியரசன் , இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக் கைதை கண்டித்து போராடிய ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் தமிழக போலீஸ் கைது செய்தது. இக்கைதை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி
, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மகளிர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் கண்டன சுவரொட்டிகள் மூலம் அம்பலப்படுத்தியது.
கருணாநிதி அரசே !
* ஈழவிடுதலை ஆதரவாளர்களை கைது செய்யாதே !
* கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய் !
* சிங்கள கைக்கூலிகளை கைது செய் !
என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தின் ஒரு பகுதியாக சென்னையில் பேருந்துகளிலும் மற்றும் சென்னை உள்ளிட்ட திருவள்ளூர் , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரகணக்கான கண்டன சுவரொட்டிகள் பரப்புரை செய்தனர்.

ஏற்காடு - தலைவர் கொளத்தூர் மணி கைதைக்கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்



சிங்கள அரசு போரை நிறுத்த வேண்டியும் இனி மேலும் தமிழினப் படுகொலை தொடரக் கூடாதென்றும் மத்திய அரசு இப் பிரச்சனையில் உடனடியாக தலையிட வேண்டியும் ஏற்காடு பேருந்து நிலையத்தில் 21,12,2008 காலை 8 மணி முதல் இரவு 5 மணிவரை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது,இதில் நீலமலை தோட்டத் தொழிளாளர் தலைவர் திரு, வீ,க. நல்லமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் போக்குவரத்து தொழிளாளர் சம்மேளனம். சேவராய் தொழிளாளர் சம்மேளனம் ஆகியோர் கலந்து கொண்டனர்,



இதனைத் அடுத்து பெரியார் தி,க, ஏற்காடு ஒன்றியத்தின் சார்பில் ஒண்டிக்கடை அண்ணா சிலை அருகில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. தோழர் சீமான் , தோழர் பெ.மணியரசன் இவர்களை விடுதலை செய்யக் கோரியும் காங்கிரஸ் தங்கபாலு, இளங்கோவன் ஞானசேகர் இவர்களை கண்டித்து கண்டன உரையும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது, ஏற்காடு ஒன்றிய செயளர் இரா.உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.




விரைவில் செய்திகளை தோழர்கள் : www.periyardk.org என்ற தளத்திலும் காணலாம்.

தலைவர் கொளத்தூர் மணி கைதைக்கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்- ஈரோடு

தமிழகத்தின் பல இடங்களில் பெரியார் திராவிடர்கழகத்தலைவர் கொளத்தூர் தா.செ.மணி , தமிழ்தேசியபொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோரின் கைதினைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் .

ஈரோட்டில் மாவட்டத்தலைவர் இராம.இளங்கோவன் தலைமையில் 200 பேர் ஆர்ப்பாட்டம் . 60 க்கும் மேற்பட்டோர் கைது.


விரைவில் செய்திகளை தோழர்கள் : www.periyardk.org என்ற தளத்திலும் காணலாம்.

Saturday, December 20, 2008

கொளத்தூர் மணி கைதை தொடர்ந்து தமிழகத்தில் பதற்ற நிலை

1) சென்னையில் இன்று சத்திய மூர்த்தி பவன் அருகில் தமிழின துரோகிகள் ஈ.வி.கே.எசு. இளங்கோவன் , ஞானசேகரன் , தங்கபாலு கொடும்பாவி பெரியார் திராவிடர் கழகத்தினால் எரிப்பு.

2) தேனாம்பேட்டை காங்கிரசு பயங்கரவாத அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

3) ஈரோட்டில் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் கைதைக்கண்டித்து காவல் நிலையம் பொதுமக்களால் முற்றுகை.

4) சேலத்தில் பெண்கள் திரளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

5) கோவையில் சிறிலங்கன் வானூர்தி அலுவலகம் தமிழர்களால் தாக்கப்பட்டது.


இன்னும் பல பகுதிகளில் தலைவர் கொளத்தூர் மணி கைதைக்கண்டித்து தமிழர்களின் உணர்வு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.

Friday, December 19, 2008

ஈழத்தமிழர்களைக்காப்பாற்ற பிரணாப் முகர்ஜியை அனுப்பவதாக சொல்லிக்கொண்டு கிளிநொச்சியை பிடிக்க இராணுவ தளபதியை அனுப்பியது ஏன்? - தோழர் பால்.பிரபாகரன்


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கொடுத்ததற்காக பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் திரைப்பட இயக்குநர் தோழர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி 1 ஆம் நுழைவாயில் காந்தி சிலை முன்பாக இன்று(19.12.2008) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாநகர தலைவர் தோழர் கோ.அ.குமார் தலைமையேற்றார். ஆதித்தமிழர் பேரவை தோழர் இரா.வே.மனோகர் ஆர்ப்பாட்டதினை தொடங்கிவைத்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து பெரியார் தி.க.வின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.தமிழரசன், தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை தோழர் தவராசு பாண்டியன் , மக்கள் குடியுரிமை ஜனநாயகம் செ.பிரபாகர், மனித உரிமைப்பாதுகாப்பு மய்யம் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் ஆகியோர் தங்களது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.

தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தின் விளக்கவுரையாற்றினார். அவர் உரையாற்றும் பொழுது காங்கிரசு கட்சியின் வரலாற்றினையும் காங்கிரசு கட்சியானது ஆங்கிலேய பெண்மணி ஒருவரால் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவுபட கூறியும் காங்கிரசு கட்சியின் போலி தேசப்பற்றினையும் தமிழின விரோதப்போக்கையும், ஈழத்தில் அமைதி திரும்ப பிரணாப் முகர்ஜியினை விரைவில் அனுப்புவோம் என்று கூறிக்கொண்டு ஈழத்தில் தமிழர்களை அழிக்க சிங்கள இராணுவத்திற்கு ஆலோசனை சொல்ல இந்திய இராணுவ உயரதிகாரிகளை உடனடியாக சிறீலங்காவிற்கு அனுப்பியதைக் கண்டித்தும் காங்கிரசை திருப்திப்படுத்த தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியைக் கண்டித்தும் தெளிவுபட தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.













தொடர்ந்து நிறைவுரையாக மக்கள் உரிமைக்குழு வழக்கறிஞர் தோழர் அதிசயக்குமார் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோரைக்கண்டித்து வழக்கறிஞர்களாகிய எங்களுக்கே கருத்து சொல்ல உரிமை உண்டா என்று கேள்வி எழுப்பி தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார். இறுதியாக பெரியார் திராவிடர் கழக மாநகர துணைத் தலைவர் தோழர் சா.த.பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் பெரியார் தி.க தலைமைக்கழக உறுப்பினர் தோழர் நெல்லை சி.ஆ.காசிராசன் , தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச்செயலாளர் தோழர் க.மதன் , மாநகர செயலாளர் தோழர் பால்.அறிவழகன் , தமிழ்நாடு மாணவர் கழக தோழர் வ.அகரன் பெரியார் தி.க. தோழர்கள் ச.கா. பாலசுப்பிரமணியன் , அறிவுபித்தன் , சோசப் , நெல்லை இராசா, நெல்லை ஆறுமுகம் மற்றும் தலித்திய சமூக நீதி உரிமைப்பேரவை , புரட்சிகர இளைஞர் முன்னணி , ஆதித்தமிழர் பேரவை மற்றும் வழக்கறிஞர்களும் திரளாக கலந்துகொண்டனர்.



செய்தி : அகரன்

நிழற்படங்கள் : பாலு நிழற்படக்கலையகம்