Showing posts with label திராவிடம். Show all posts
Showing posts with label திராவிடம். Show all posts

Sunday, June 17, 2012

ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]

[காணொளி] சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு வாசகர் வட்ட நிகழ்வில் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் விளக்கமளித்து உரையாற்றியுள்ளார்.




http://www.periyarthalam.com/2012/04/20/eelam-tamil-tamilar-dravidar-kolathurmani-periyardk/

Tuesday, June 12, 2012

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! - கொளத்தூர் மணி அறிக்கை

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று ... மேலும்>>

10 நாட்கள்: 80 ஊர்களில் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

10 நாட்கள்: 80 ஊர்களில் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்
சென்னை-காஞ்சிபுரம் மாவட்டக் கழகம்: சாதி தீண்டாமைக்கு எதிராகவும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கியும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கழகச் செயல் வீரர்கள் 10 நாள் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஜூன் 22 ஆம் தேதி சென்னை மந்தைவெளியில் ... மேலும்>>

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்
கேள்வி : மனு.... மனு... என்கிறோமே, அது அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை களை எழுதித் தருகிறோமே, அந்த மனு தானே! பதில்: அதுவும் மனு தான்; ஆனால், நாம் கூறுவது மனுதர்ம சா°திரம் பற்றி. கேள்வி : அது என்ன மனுதர்ம சா°திரம்? பதில் : ... மேலும்>>

களப் பணியில் கழகத் தோழர்கள்

களப் பணியில் கழகத் தோழர்கள்
பல்லடம் ஒன்றிய கழக முடிவுகள் 20.5.2012 அன்று பல்லடம் ஒன்றிய கழக அமைப்புக் கூட்டம் ஜி.ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணம், அய்ந்துநாட்கள், 14 பகுதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்லடம் ... மேலும்>>

பெண்ணின் பெயர் அடையாளத்தையும் பெயர்த்து எறியும் மனுதர்மம்

பெண்ணின் பெயர் அடையாளத்தையும்  பெயர்த்து எறியும் மனுதர்மம்
நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: திருமணமான ஒரு பெண், கணவனைச் சார்ந்து வாழ வேண்டும்; ‘சுயாதீனமாக’ அதாவது சுய புத்தியைப் பயன்படுத்தும் உரிமையே இல்லை என்கிறது பார்ப்பன ... மேலும்>>

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்
1919 - அது மட்டுமா? நாயர் லண்டனில் முடிவு எய்தியபோது, காங்கிர° சார்பில் சுயராஜ்யம் கேட்டு வாதாடவும், நாடாளுமன்ற குழுவின் முன்பு சாட்சியம் சொல்லவும் சென்றிருந்த, சி.பி.ராமசாமி அய்யர், சுரேந்திரநாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்தியமூர்த்தி, சரோஜினி (நாயுடு), லார்டு சின்ஹா ... மேலும்>>

மீண்டும் நுழைவுத் தேர்வா?

மீண்டும் நுழைவுத் தேர்வா?
கல்வித் துறையில் தமிழ்நாடு தனித்துவம் பெற்றது. சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்துவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. இந்திய அரசு 1976 ஆம் ஆண்டில் அவசர நிலை காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. ... மேலும்>>

‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. இன்றைய ... மேலும்>>

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’
நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: மனுதர்மக் காவலருக்கு புகழாரம்! காஞ்சிபுரம் மடத்தின் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி, மனுதர்மத்தையும் வர்ணபேதத்தையும் வெளிப்படையாக ஆதரித்தவர். அதை தெய்வத்தின் குரல் என்ற ... மேலும்>>
Page 1 of 15:1 2 3 4 » Last »

Wednesday, June 6, 2012

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்
1919 - இந்திய சீர்திருத்த விஷய மாக நாயர் கொடுக்கப் போகும் சாட்சியமானது, மிக முக்கியமானது என்று கருத்தறிவித்த, சர். தாம° பார்கோ என்ற நாடாளுமன்ற உறுப் பினரின் தூண்டுதலின்படி படுக்கையி லிருந்த நாயரிடம் சாட்சியம் வாங்க ஜாயிண்ட் பார்லிமெண்ட் கமிட்டி ... மேலும்>>

Tuesday, May 29, 2012

நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு



நாம் தமிழர் கட்சி – இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்!

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்]

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்]

Friday, May 25, 2012

[வீடியோ] ஏன் என்னை புறக்கணிக்கிறீர்கள்: திருமாவளவன் ஆதங்கம்

[வீடியோ] ஏன் என்னை புறக்கணிக்கிறீர்கள்: திருமாவளவன் ஆதங்கம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மய்ய ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்…” என்ற தலைப்பில் சென்னையில் (மே18) கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் “தமிழீழம் இந்திய அரசின் நிலைப்பாடும்” என்ற தலைப்பில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.


Thursday, August 13, 2009

முடிந்துவிட்டதா ஈழப்போர்....? - கொளத்தூர் மணி

முடிந்துவிட்டதா ஈழப்போர் ? நெல்லை தூத்துக்குடியில் விளக்கக்கூட்டம்

செய்திகளை வெளியிட்ட சங்கதி , மீனகம் தளங்களுக்கு நன்றி.

மீனகம் தளத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் முடிந்துவிட்டதா ஈழப்போர் உரையின் audio வெளியிடப்பட்டுள்ளது:

http://www.meenagam.org/?p=7674


தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் கடந்த சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் "முடிந்துவிட்டதா ஈழப்போர்..?" என்ற தலைப்பில் விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.




தூத்துக்குடியில் 08.08.2009 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் கழகப்பாடகர் தஞ்சை இராம.முத்துராமலிங்கம் தமிழின மற்றும் தமிழீழ எழுச்சிப்பாடல் பாட மேட்டூர் குமரப்பா தவில் வாசிக்க நிகழ்ச்சி தொடங்கியது.




பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி "முடிந்துவிட்டதா ஈழப்போர்...?" என்ற தலைப்பில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன், மாநகர துணைத்தலைவர் ச.ரவிசங்கர், மாநகர செயலாளர் பால்.அறிவழகன், மாநகர இணைச்செயலாளர் மு.கனகராசு, அறிவுபித்தன், மாவட்ட துணைச்செயலாளர் க.மதன், மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார், மாநகர பொருளாளர் வ.அகரன், மாவட்டப்பொருளாளர் செ.செல்லத்துரை, மாவட்ட அமைப்பாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் மற்றும் கழகத்தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.





இதைப்போல் 09.08.2009 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சந்தை திடலில் நெல்லை மாவட்டச்செயலாளர் சி.ஆ.காசிராசன் தலைமையில் "முடிந்துவிட்டதா ஈழப்போர்...?" விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெல்லை ராசா, தலைமைக்கழக உறுப்பினர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி பெரியார் திராவிடர் கழகத்தினர் இணைந்து சிறப்பாக நடத்தினர்.

Monday, August 3, 2009

புதுச்சேரி - தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய தமிழக அரசை கண்டித்து வழக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம்

01.08.09 அன்று புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பாக “தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய தமிழக அரசை கண்டித்து வழக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம்” புதுவை பெரியார் திடலில் நடைபெற்றது. புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத்தலைவர் லோகு அய்யப்பன். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,இயக்குனர் சீமான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

லோகு அய்யப்பன் தனது உரையில் காங்கிரஸ் கட்சியின் தமிழின அழிப்புக்கு துணை போனதை கடுமையாக சாடினார். கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் உரையில் கலைஞரின் முன்பு ஆதரித்ததை பின்பு அதனை ஆதரிக்க மறுப்பது மட்டுமல்லாது அதனை எதிர்கவும் செய்யும் அவரின் செயலை தோலுரித்துகாட்டி பேசினார்

இயக்குநர் சீமான் தனது எழுச்சி உரையில் இனவாத சிங்கள அரசுக்கு துணை போகும் இந்திய அரசை கடுமையாக சாடினார். சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றுவதற்காக வடக்கில் வசந்தம் என்ற பெயரில் மிகப் பெரிய தமிழின அழிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது.. இதற்கு இந்திய அரசு துணை போகிறது. இதற்காக வேளாண் விஞ்ஞானி(?) சாமிநாதன் என்பவரை ஆலோசகராக நியமித்துள்ளது. சீமான் பேச்சினிடையே மழை பெய்தது. எனினும் கொட்டும் மழையிலும் சீமானின் பேச்சை எந்தவொரு சிறு சலசலப்பு எதுமின்றி மக்கள் கொட்டும் மழையிலும் முழுமையாக நனைந்தபடியே உரையை கேட்டு தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினர்.

முன்னதாக தேனிசை செல்லப்பாவால் இன உணர்வு பாடல்கள் எழுச்சியுடன் பாடப்பட்டன.