Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Sunday, March 17, 2013

[Photos] எரியட்டும் மக்கள் விரோத மனுசாஸ்திரம்! தமிழர் ஒற்றுமைக்கான “ஜாதி தீண்டாமை இழிவு ஒழிப்பு நெல்லை மண்டல மாநாடு”











Sunday, June 17, 2012

ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]

[காணொளி] சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு வாசகர் வட்ட நிகழ்வில் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் விளக்கமளித்து உரையாற்றியுள்ளார்.




http://www.periyarthalam.com/2012/04/20/eelam-tamil-tamilar-dravidar-kolathurmani-periyardk/

Tuesday, June 12, 2012

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! - கொளத்தூர் மணி அறிக்கை

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று ... மேலும்>>

10 நாட்கள்: 80 ஊர்களில் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

10 நாட்கள்: 80 ஊர்களில் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்
சென்னை-காஞ்சிபுரம் மாவட்டக் கழகம்: சாதி தீண்டாமைக்கு எதிராகவும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கியும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கழகச் செயல் வீரர்கள் 10 நாள் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஜூன் 22 ஆம் தேதி சென்னை மந்தைவெளியில் ... மேலும்>>

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்
கேள்வி : மனு.... மனு... என்கிறோமே, அது அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை களை எழுதித் தருகிறோமே, அந்த மனு தானே! பதில்: அதுவும் மனு தான்; ஆனால், நாம் கூறுவது மனுதர்ம சா°திரம் பற்றி. கேள்வி : அது என்ன மனுதர்ம சா°திரம்? பதில் : ... மேலும்>>

களப் பணியில் கழகத் தோழர்கள்

களப் பணியில் கழகத் தோழர்கள்
பல்லடம் ஒன்றிய கழக முடிவுகள் 20.5.2012 அன்று பல்லடம் ஒன்றிய கழக அமைப்புக் கூட்டம் ஜி.ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணம், அய்ந்துநாட்கள், 14 பகுதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்லடம் ... மேலும்>>

பெண்ணின் பெயர் அடையாளத்தையும் பெயர்த்து எறியும் மனுதர்மம்

பெண்ணின் பெயர் அடையாளத்தையும்  பெயர்த்து எறியும் மனுதர்மம்
நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: திருமணமான ஒரு பெண், கணவனைச் சார்ந்து வாழ வேண்டும்; ‘சுயாதீனமாக’ அதாவது சுய புத்தியைப் பயன்படுத்தும் உரிமையே இல்லை என்கிறது பார்ப்பன ... மேலும்>>

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்
1919 - அது மட்டுமா? நாயர் லண்டனில் முடிவு எய்தியபோது, காங்கிர° சார்பில் சுயராஜ்யம் கேட்டு வாதாடவும், நாடாளுமன்ற குழுவின் முன்பு சாட்சியம் சொல்லவும் சென்றிருந்த, சி.பி.ராமசாமி அய்யர், சுரேந்திரநாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்தியமூர்த்தி, சரோஜினி (நாயுடு), லார்டு சின்ஹா ... மேலும்>>

மீண்டும் நுழைவுத் தேர்வா?

மீண்டும் நுழைவுத் தேர்வா?
கல்வித் துறையில் தமிழ்நாடு தனித்துவம் பெற்றது. சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்துவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. இந்திய அரசு 1976 ஆம் ஆண்டில் அவசர நிலை காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. ... மேலும்>>

‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. இன்றைய ... மேலும்>>

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’
நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: மனுதர்மக் காவலருக்கு புகழாரம்! காஞ்சிபுரம் மடத்தின் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி, மனுதர்மத்தையும் வர்ணபேதத்தையும் வெளிப்படையாக ஆதரித்தவர். அதை தெய்வத்தின் குரல் என்ற ... மேலும்>>
Page 1 of 15:1 2 3 4 » Last »

Monday, June 4, 2012

எது திராவிடம்…? – தமிழேந்தி

மார்ச் 2 ஆம் பக்கல் 2006 ஆம் ஆண்டில் புரட்சிப்பெரியார் முழக்கத்தில் எது திராவிடம்…? என்ற தலைப்பில் தோழர் தமிழேந்தி எழுதிய இப்பாவை தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் பெரியார் தளத்துக்கு தெரிவித்து வெளியிட சொன்னார். இந்த இதழை பெரியார் முழக்கம் பொறுப்பாளர் தோழர் செல்வா தேடி எடுத்து நமக்கு அனுப்பியுள்ளார்.


Tuesday, May 29, 2012

நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு



நாம் தமிழர் கட்சி – இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்!

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்]

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்]

Wednesday, August 17, 2011

தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன்

Page 1 of 2:1 2 »

Tuesday, January 19, 2010

தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 46 பெரியார் திகவினர் கைது

தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 46 பெரியார் திகவினர் கைது




பாண்டிச்சேரியிலிருந்து மாகி செல்லும் தொடர்வண்டியை கோவை சந்திப்பு வழியாக இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த 46 பேர் பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more...

சூரிய கிரகணத்தின் பயத்தை போக்கிய விழிப்புணர்வு கூட்டம்

பெரியார்தளம் - திராவிடர்களின் செய்தி ஊடகம்
சூரிய கிரகணத்தின் பயத்தை போக்கிய விழிப்புணர்வு கூட்டம் PDF Print E-mail
Written by சென்னை தளம்
Tuesday, 19 January 2010 12:55

சூரிய கிரகணத்தின் பயத்தை போக்கும் விழிப்புணர்வு கூட்டம் 15.1.10 அன்று பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தியாகராயநகர் கிளையின் சார்பில் நடத்தப்பட்டது. பகல் 12 மணிக்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரொட்டி துண்டு, மாட்டுக்கறி வழங்கப்பட்டது, மாட்டுக்கறி சாப்பிடாதவர்களுக்கு ரொட்டியும் ஜாமும் தரப்பட்டது.

Last Updated on Tuesday, 19 January 2010 13:28
Read more...

Thursday, September 17, 2009

தந்தை பெரியார் 131வது பிறந்தநாள் நெல்லையில்

தந்தை பெரியாரின் 131வது பிறந்த நாளான இன்று திருநெல்வேலி பாளையங்கோட்டை தந்தை பெரியார் சிலைக்கு தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.



பாளையங்கோட்டை பெரியார் சிலையின் பராமரிப்பாளர்களான பெரியார் திராவிடர் கழகத்தின் தருண் வீடியோஸ் மற்றும் பெரியார் திகவின் நெல்லை மாவட்டச்செயலாளர் சி.ஆ.காசிராசன் , நெல்லை ராசா ஆகியோர் நேற்று இரவு தந்தை பெரியாரின் சிலைக்கு வண்ணம் பூசிவிட்டு நெல்லை முழுவதும் சுவரொட்டியை ஒட்டினார்கள்.

தூத்துக்குடியில் மாநகர செயலாளர் பால்.அறிவழகன் , மாவட்ட துணைச்செயலாளர் க.மதன் ஆகியோர் காலை 3 மணி வரை தூத்துக்குடி முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

சுவரொட்டியில் " தந்தை பெரியாரின் 131 வது பிறந்த நாளான இன்று பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் அடித்தளமக்களிடத்தில் கொண்டு செல்ல உறுதி ஏற்போம்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.


இன்று காலை 10 மணியளவில் பாளையங்கோட்டை பெரியார் சிலை மாலை அணிவகுப்பு நிகழ்வில் நெல்லை மாவட்டச்செயலாளர் சி.ஆ.காசிராசன், தூத்துக்குடி மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு,தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார் ,தூத்துக்குடி மாநகர துணைத்தலைவர் ரவிசங்கர்,தூத்துக்குடி மாநகர துணைச்செயலாளர் கனகராசு, தூத்துக்குடி மாநகர பொருளாளர் அகரன் , நெல்லை ராசா மற்றும் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.



Thursday, September 10, 2009

முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?

ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க தமிழகத்திலுள்ள தூய சவேரியர் பள்ளியில் “முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.





நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (08.09.2009) அன்று மாலை 3.30 மணியளவில் தூத்துக்குடியிலுள்ள தூய சவேரியர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில் ஆரம்ப நிகழ்வாக இலங்கை அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பள்ளி மாணவர் ரமேஷ் என்பவர் இறைவணக்கப் பாடல் பாடினார். ஆசிரியர் கில்பர்ட் வரவேற்புரையாற்றி ஈழப்போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆசிரியர் காலின்ஸ் ஈழமக்கள் பிரச்சினை பற்றிய கவிதை ஒன்றை வாசித்தார்.

ஆசிரியர் ஹென்றி மற்றும் குழுவினர் ” தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை மனிதன் நினைக்கலாமா” பாடலின் வரிகளை சிறிது மாற்றி ஈழமக்களின் பிரச்சினையையும் உணர்வினையும் வெளிப்படுத்தும் வகையில் உணர்வுப்பூர்வமாக இசையமைத்து பாடினார்.

பின்னர் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தனது உரையில் பள்ளி மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை புரியும் வகையில் பழைய வரலாற்றினை எடுத்துக்கூறி ஈழம் தமிழரின் தாயகம் என்பதை தெளிவாக விளக்கப்படுத்தினார்.

விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கியது ஏன் என்றும் , அகிம்சை போராட்டம் என்றால் என்னவென்றும் காந்தி தேசத்துக்கே உண்ணாநிலைப்போராட்டம் என்றால் என்னவென்று எடுத்துக்காட்டிய தியாக தீபம் திலீபன் பற்றியும், தமிழீழத்தேசியத்தலைவரின் மனிதாபிமானம் பற்றியும், முள்வேலிக்குள் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் பற்றியும், பதுங்குகுழிக்குள் அமர்ந்து தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் பற்றியும் பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம் உரையாற்றினார்.

பின்னர் அப்பள்ளியின் தலைமையாசிரியர் நிறைவுரையாற்ற ஆசிரியர் மரியதாஸ் நன்றியுரையாற்றினார்.

Monday, September 7, 2009

VIDEO - பெரியாரிய குடும்ப வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா


வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தவிழா காணொளி

இணையர்கள்:

ச.கோமதி - சி.ஆ.காசிராசன்

(நெல்லை மாவட்டச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்; மாவட்ட பொருளாளர்,தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்)
தலைமையேற்றவர் :
நெல்லை S.மகாலிங்கம்
(மாநிலத்தலைவர் , தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்)

விழாவினை நடத்திவைப்பவர் :
கொளத்தூர் தா.செ.மணி
(தலைவர் , பெரியார் திராவிடர் கழகம்)

இடம் : சோனா மகால், கோட்டூர் சாலை, பாளையங்கோட்டை.

நாள்: 06.09.2009 ஞாயிறு காலை 9.00 மணி


பெரியாரிய துணைநல ஒப்பந்த விழா - கொளத்தூர் மணி உரை


நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர்கள் தூத்துக்குடி பால்.பிரபாகரன், திண்டுக்கல் தாமரைக்கண்ணன், தோழர்கள் மேட்டூர் முத்துராசு, கொடுமுடி பாண்டி, மதுரை தோழர்கள் வெண்மணி, தமிழ்பித்தன், முருகேசன், சேகர், சின்ன உடைப்பு பெரியசாமி மற்றும் தூத்துக்குடி , திருநெல்வேலி தோழர்களும், ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

இணையர்களுடன் பெரியார் திராவிடர் கழகத்தலைவரும் தோழர்களும்
தலைமையேற்ற நெல்லை S.மகாலிங்கம்
(மாநிலத்தலைவர் , தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்)
பேராசிரியர் தொ.பரமசிவன்
( முன்னாள், தமிழ்துறை தலைவர் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)