Tuesday, May 22, 2018

தமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு வீரவணக்கம்


தமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு வீரவணக்கம்

முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவனத்தின் ச்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான போராட்டத்தில் தமிழக அரசின் காவல்துறையினரால் தோழர் தமிழரசன் கொல்லப்பட்டுள்ளார்.

புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் தமிழரசன் எப்பொழுதும் அமைதியான புன்சிரிப்புடன் தெளிவான சிந்தனையுடன்  இருப்பவர். தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களுக்கான போராட்டங்கள் அனைத்திலும் தோழர் தமிழரசனின் பங்கும் இருக்கும். தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியெங்கும் தெருமுனைக்கூட்டங்கள் போட்டு தமிழ் மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியதில் தோழர் தமிழரசனுக்கு பெரும்பங்குள்ளது.


தமிழீழத்தில் 2008 2009 கால கட்டத்தில் சிறீலங்கா அரசால் மக்களால் படுகொலைசெய்யப்பட்ட பொழுது தூத்துக்குடி முழுவதிலும் தெருமுனைக்கூட்டங்களை நடத்தி தமிழீழத்திற்கு ஆதரவாக மக்களிடத்தில் பரப்புரை செய்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழீழப்பொங்கல் தோழர் தமிழரசன் அவர்களாலேயே நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் நிழற்படங்கள் அனைத்து தமிழீழ ஆதரவு நாளிதழ்களிலும் இணையதளங்களிலும் வெளிவந்திருந்தது...

உழைக்கும் மக்களின் உரிமைக்காக தன் இறுதி வரை குரல்கொடுத்த தோழர் தமிழரசன் தமிழக அரசின் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் தற்செயலாக கொல்லப்பட்டார் என்பதை மனது ஏற்க மறுக்கிறது.









Photos: http://periyaarpaasarai.blogspot.in/2008/12/blog-post_26.html

No comments: